புனிதர்களை பெயர் வரிசையில் தேட

Translate

04 June 2013


9ஆம் வாரம்
புதன்
முதல் ஆண்டு

முதல் வாசகம்
 தோபித்துசாரா ஆகிய இருவரின் மன்றாட்டும் கடவுளின் மாட்சியுடைய திருமுன் கேட்கப்பட்டது.
தோபித்து நூலிலிருந்து வாசகம் 3: 1-11, 16-17
அந்நாள்களில் தோபித்து ஆகிய நான் மனம் வெதும்பி அழுது புலம்பினேன்தேம்பியவாறு மன்றாடத் தொடங்கினேன்:ஆண்டவரேநீர் நீதியுள்ளவர். உம் செயல்களெல்லாம் நேரியவைஉம் வழிகள் அனைத்திலும் இரக்கமும் உண்மையும் விளங்குகின்றன. நீரே உலகின் நடுவர்.
இப்பொழுதுஆண்டவரேஎன்னை நினைவுகூரும்என்னைக் கனிவுடன் கண்ணோக்கும். என் பாவங்களுக்காகவும் குற்றங்களுக்காகவும் என் மூதாதையருடைய பாவங்களுக்காகவும் என்னைத் தண்டியாதீர். என் மூதாதையர் உமக்கு எதிராகப் பாவம் செய்தார்கள். உம் கட்டளைகளை மீறினார்கள். எனவே நாங்கள் சூறையாடப்பட்டோம்நாடு கடத்தப்பட்டோம்சாவுக்கு ஆளானோம்.
வேற்று மக்களிடையே எங்களைச் சிதறடித்தீர்அவர்களுடைய பழிச்சொல்லுக்கும் நகைப்புக்கும் இகழ்ச்சிக்கும் எங்களை உள்ளாக்கினீர். என் பாவங்களுக்கு நீர் அளித்த தீர்ப்புகள் பலவும் உண்மைக்கு ஏற்றவை. நாங்கள் உம் கட்டளைகளின்படி ஒழுகவில்லைஉம் திருமுன் உண்மையைப் பின்பற்றி வாழவில்லை.
இப்பொழுதுஉம் விருப்பப்படி என்னை நடத்தும்என் உயிர் பிரிந்துவிடக் கட்டளையிடும். இவ்வாறு நான் மண்ணிலிருந்து மறைந்து மீண்டும் மண்ணாவேனாக. நான் வாழ்வதினும் சாவதே மேல்ஏனெனில் சற்றும் பொருந்தாத பழிச்சொற்களை நான் கேட்க நேர்ந்தது. ஆகவே கடுந்துயரில் மூழ்கியுள்ளேன். ஆண்டவரேஇத்துயரத்தினின்று நான் விடுதலை பெற ஆணையிடும்முடிவற்ற இடத்திற்கு என்னைப் போகவிடும்உமது முகத்தை என்னிடமிருந்து திருப்பிக்கொள்ளாதேயும்ஆண்டவரே! வாழ்வில் மிகுந்த துன்பங்களைக் காண்பதினும்இத்தகைய இகழ்ச்சிகளைக் கேட்பதினும் நான் சாவதே மேல்.'' அதே நாளில் மேதியா நாட்டின் எக்பத்தானா நகரில் வாழ்ந்து வந்த இரகுவேலின் மகள் சாராதன் தந்தையின் பணிப்பெண்களுள் ஒருத்தி தன்னைப் பழித்துரைத்ததைக் கேட்க நேரிட்டது. ஏனெனில் ஒருவர் இறந்தபின் ஒருவராக அவள் ஏழு ஆண்களை மணந்திருந்தாள். மனைவிகளுக்குரிய மரபுப்படி அவளுடைய கணவர்கள் அவளுடன் கூடிவாழுமுன் கொடிய அலகையான அசுமதேயு அவர்கள் எல்லாரையும் கொன்று விட்டது.
இதனால் அந்தப் பணிப்பெண் அவளிடம், “நீயே உன் கணவர்களைக் கொன்றவள். நீ கணவர்கள் எழுவரை மணந்திருந்தும் அவர்களுள் எவருடைய பெயரும் உனக்கு வழங்கவில்லை. உன் கணவர்கள் இறந்துவிட்டதற்காக எங்களை ஏன் தண்டிக்கிறாய்நீயும் அவர்களிடம் போ. உன் மகனையோ மகளையோ நாங்கள் என்றுமே காணவேண்டாம்” என்று பழித்துரைத்தாள். அன்று அவள் மனம் நொந்து அழுதாள்தன்னைத் தூக்கிலிட்டுக் கொள்ளும் நோக்குடன் தன் தந்தையின் மாடியறைக்குச் சென்றாள்.
ஆனால் மீண்டும் சிந்தித்து, “என் தந்தையை மக்கள் பழிக்கலாம்; ‘உனக்கு ஒரே அன்பு மகள் இருந்தாள்அவளும் தன் துயர் பொறுக்க இயலாமல் நான்றுகொண்டாள்’ என்று இகழலாம். இவ்வாறு என் தந்தை தமது முதுமையில் துயருற்று இறக்க நான் காரணம் ஆவேன். எனவே நான் நான்று கொள்ளமாட்டேன். மாறாக நான் சாகுமாறு ஆண்டவரை இரந்து வேண்டுவேன். அவ்வாறாயின் என் வாழ்நாளில் பழிச்சொற்களை இனி மேல் கேட்க வாய்ப்பு இராது” என்று தனக்குள் சொல்லிக்கொண்டாள்.
அதே நேரத்தில் சாரா பலகணியை நோக்கிக் கைகளை விரித்துப் பின்வருமாறு மன்றாடினாள்: இரக்கமுள்ள இறைவா போற்றி! என்றும் உம் திருப்பெயர் போற்றி! உம் செயல்களெல்லாம் உம்மை என்றும் போற்றுக!” அந்நேரமே தோபித்துசாரா ஆகிய இருவருடைய மன்றாட்டும் கடவுளின் மாட்சியுடைய திருமுன் கேட்கப்பட்டது. தோபித்து தம் கண்களினால் கடவுளின் ஒளியைக் காணும்பொருட்டு அவருடைய கண்களிலிருந்து வெண்புள்ளிகளை நீக்கவும்தம் மகன் தோபியாவுக்கு இரகுவேலின் மகள் சாராவை மணமுடித்துஅசுமதேயு என்னும் கொடிய அலகையை அவளிடமிருந்து விரட்டவும்இவ்வாறு அவர்கள் இருவருக்கும் நலம் அருள இரபேல் அனுப்பப்பட்டார். சாராவை அடைய மற்ற அனைவரையும் விட தோபியாவுக்கே முன்னுரிமை இருந்தது. தோபித்து முற்றத்திலிருந்து வீட்டிற்குள் வந்தார். அதே நேரத்தில் இரகுவேலின் மகள் சாராவும் மாடியிலிருந்து இறங்கி வந்தாள்.
இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்
திபா 25: 2-3. 4-5b. 6-7bஉ. 8-9 (பல்லவி: 1)
பல்லவி: ஆண்டவரேஉம்மை நோக்கிஎன் உள்ளத்தை உயர்த்துகின்றேன்.
என் கடவுளேஉம்மில் நம்பிக்கை கொள்கின்றேன்நான் வெட்கமுற விடாதேயும்என் பகைவர் என்னைக் கண்டு நகைக்க விடாதேயும். 3 உண்மையிலேயேஉம்மை நம்பும் எவரும் வெட்கமுறுவதில்லைகாரணமின்றித் துரோகம் செய்பவரோ வெட்கத்திற்கு உள்ளாவர். பல்லவி
ஆண்டவரேஉம் பாதைகளை நான் அறியச் செய்தருளும்உம் வழிகளை எனக்குக் கற்பித்தருளும். 5உமது உண்மை நெறியில் என்னை நடத்தி எனக்குக் கற்பித்தருளும்ஏனெனில்நீரே என் மீட்பராம் கடவுள். பல்லவி
ஆண்டவரேஉமது இரக்கத்தையும்உமது பேரன்பையும் நினைந்தருளும்ஏனெனில்அவை தொடக்கமுதல் உள்ளவையே. 7bஉ உமது பேரன்பிற்கேற்ப என்னை நினைத்தருளும்ஏனெனில்ஆண்டவரே நீரே நல்லவர். பல்லவி
ஆண்டவர் நல்லவர்நேர்மையுள்ளவர்ஆகையால்அவர் பாவிகளுக்கு நல்வழியைக் கற்பிக்கின்றார். 9 எளியோரை நேரிய வழியில் அவர் நடத்துகின்றார்எளியோர்க்குத் தமது வழியைக் கற்பிக்கின்றார். பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
யோவா 11: 25
அல்லேலூயாஅல்லேலூயா! உயிர்த்தெழுதலும் வாழ்வும் நானேஎன்னிடம் நம்பிக்கை கொள்பவர் இறப்பினும் வாழ்வார். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்
அவர் வாழ்வோரின் கடவுள்இறந்தோரின் கடவுள் அல்லர்.
மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 12: 18-27
அக்காலத்தில் உயிர்த்தெழுதல் இல்லை என்னும் கருத்துடைய சதுசேயர் இயேசுவை அணுகி, “போதகரேஒருவர் மகப்பேறின்றித் தம் மனைவியை விட்டுவிட்டு இறந்துபோனால்அவரைக் கொழுந்தனே மனைவியாக ஏற்றுக்கொண்டு சகோதரருக்கு வழிமரபு உருவாக்கவேண்டும் என்று மோசே நமக்கு எழுதி வைத்துள்ளார். சகோதரர் எழுவர் இருந்தனர். மூத்தவர் ஒரு பெண்ணை மணந்து மகப்பேறின்றி இறந்தார். இரண்டாமவர் அவரை மணந்து அவரும் மகப்பேறின்றி இறந்தார். மூன்றாமவருக்கும் அவ்வாறே நிகழ்ந்தது. ஏழு பேருக்கும் மகப்பேறு இல்லாமற்போயிற்று. அனைவருக்கும் கடைசியாக அப்பெண்ணும் இறந்தார்.
அவர்கள் உயிர்த்தெழும்போதுஅவர் அவர்களுள் யாருக்கு மனைவியாக இருப்பார்?
ஏனெனில் எழுவரும் அவரை மனைவியாகக் கொண்டிருந்தனரே!” என்று கேட்டனர்.
அதற்கு இயேசு அவர்களிடம், “உங்களுக்கு மறைநூலும் தெரியாதுகடவுளின் வல்லமையும் தெரியாது. இதனால்தான் தவறான கருத்தைக் கொண்டிருக்கிறீர்கள். இறந்து உயிர்த்தெழும்போது யாரும் திருமணம் செய்துகொள்வதில்லை.
மாறாகஅவர்கள் விண்ணகத் தூதரைப்போல் இருப்பார்கள். இறந்தோர் உயிருடன் எழுப்பப்படுவதைப் பற்றி மோசேயின் நூலில் முட்புதர் பற்றிய நிகழ்ச்சியில் இவ்வாறு வாசித்தது இல்லையா? ‘ஆபிரகாமின் கடவுள்ஈசாக்கின் கடவுள்யாக்கோபின் கடவுள் நானேஎன்று கடவுள் அவரிடம் சொன்னாரே! அவர் இறந்தோரின் கடவுள் அல்லமாறாகவாழ்வோரின் கடவுள். நீங்கள் தவறான கருத்துக் கொண்டிருக்கிறீர்கள்” என்று கூறினார்.
இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

சிந்தனை
வாழ்வோரின் கடவுள் அவர்.
முதல் வாசகத்தில் பார்ப்பது போல். அவர்களது மன்றாட்டை கேட்டு செவிசாய்த்தார்.
இறந்தோரின் கடவுள் இல்லை.
வாழ்வோரின் வேண்டுதலை கேட்டு செவிசாய்க்கும் அக்கரையுள்ள கடவுள்.
 

9ஆம் வாரம்

செவ்வாய்

முதல் ஆண்டு


முதல் வாசகம்
பார்வை இழந்ததைப் பற்றித் தோபித்து முறையிடவில்லை.தோபித்து நூலிலிருந்து வாசகம் 2: 9-14
தோபித்து கூறியது: அன்று இரவு குளித்துவிட்டு என் வீட்டு முற்றத்தின் சுவர் அருகில் படுத்து உறங்கினேன். வெப்பமாக இருந்ததால் என் முகத்தை மூடவில்லை. என் தலைக்குமேல் சுவரில் குருவிகள் இருந்தது எனக்குத் தெரியாது. அவற்றின் சூடான எச்சம் என் கண்களில் விழுந்தது. உடனே கண்களில் வெண் புள்ளிகள் தோன்றின. நலம் பெறுமாறு மருத்துவர்களிடம் சென்றேன். அவர்கள் எவ்வளவோ மருத்துவம் செய்தும் வெண் புள்ளிகளால் என் பார்வை குன்றிவந்தது. இறுதியாகப் பார்வையை முற்றும் இழந்தேன். நான் பார்வையற்றவனாக நான்கு ஆண்டுகள் வாழ்ந்தேன். என் உறவின் முறையார் அனைவரும் எனக்காக வருந்தினர். எலிமாய் செல்லும்வரை இரண்டு ஆண்டுகளாக அகிக்கார் என்னைப் பேணிவந்தான்.

அக்காலத்தில் என் மனைவி அன்னா பெண்களுக்குரிய கைவேலைகளில் ஈடுபட்டிருந்தாள். தன் கைவேலைப்பாடுகளை அவள் உரிமையாளர்களுக்கு அனுப்பிவைக்க, அவர்கள் அவளுக்குக் கூலி கொடுப்பார்கள். திசித்தர் மாதம் ஏழாம் நாள் தான் நெய்திருந்ததை உரிமையாளர்களுக்கு அவள் அனுப்பிவைத்தாள். அவர்கள் அவளுக்கு முழுக் கூலியுடன், விருந்து சமைக்க ஓர் ஆட்டுக்குட்டியையும் கொடுத்தார்கள். அவள் திரும்பி வந்தபொழுது ஆட்டுக்குட்டி கத்தத் தொடங்கியது. உடனே நான் அவளை அழைத்து, ``இந்த ஆட்டுக்குட்டி எங்கிருந்து வந்தது?� என்று கேட்டேன். �ஒரு வேளை இது திருடப்பட்டதோ? அப்படியானால் உரியவரிடம் இதைத் திருப்பிக்கொடுத்துவிடு; ஏனெனில் திருடிய எதையும் உண்ண நமக்கு உரிமை இல்லை� என்றேன். அதற்கு அவள் என்னிடம், �கூலிக்கு மேலாக இது எனக்கு அன்பளிப்பாகக் கொடுக்கப்பட்டது� என்றாள். இருப்பினும் நான் அவளை நம்பவில்லை. உரியவருக்கு அதைத் திருப்பிக் கொடுத்துவிடுமாறு வற்புறுத்தினேன். அவளது செயலைக் குறித்து நான் நாணினேன். அப்பொழுது அவள் மறுமொழியாக என்னிடம், �உம்முடைய தருமங்கள் எங்கே? நற்செயல்கள் எங்கே? உம்முடைய குணம் இப்பொழுது நன்றாகவே புலப்படுகிறது!� என்றாள்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.



பதிலுரைப் பாடல் 

திபா 112: 1-2. 7-8. 9 (பல்லவி: 7b)

பல்லவி: ஆண்டவரில் நம்பிக்கை கொள்வோர் இதயம் உறுதியாய் இருக்கும்.

1 ஆண்டவருக்கு அஞ்சி நடப்போர் பேறுபெற்றோர்; அவர்தம் கட்டளைகளில் அவர்கள் பெருமகிழ்வு அடைவர். 2 அவர்களது வழிமரபு பூவுலகில் வலிமை மிக்கதாய் இருக்கும்; நேர்மையுள்ளோரின் தலைமுறை ஆசிபெறும். பல்லவி

7 தீமையான செய்தி எதுவும் அவர்களை அச்சுறுத்தாது; ஆண்டவரில் நம்பிக்கை கொள்வதால் அவர்கள் இதயம் உறுதியாய் இருக்கும். 8 அவர்கள் நெஞ்சம் நிலையாய் இருக்கும்; அவர்களை அச்சம் மேற்கொள்ளாது; இறுதியில் தம் எதிரிகள் அழிவதை அவர்கள் காண்பது உறுதி. பல்லவி

9 அவர்கள் வாரி வழங்கினர்; ஏழைகளுக்கு ஈந்தனர்; அவர்களது நீதி என்றென்றும் நிலைத்திருக்கும்; அவர்களது வலிமை மாட்சியுடன் மேலோங்கும். பல்லவி



நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி 

எபே 1: 17-18 காண்க

அல்லேலூயா, அல்லேலூயா! கடவுளுடைய அழைப்பு உங்களுக்கு எத்தகைய எதிர்நோக்கைத் தந்துள்ளது என்று நீங்கள் அறியுமாறு நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் கடவுளும் மாட்சிமிகு தந்தையுமானவர் நம் அகக் கண்களுக்கு ஒளி தருவாராக. அல்லேலூயா.



நற்செய்தி வாசகம்

சீசருக்கு உரியவற்றைச் சீசருக்கும் கடவுளுக்கு உரியவற்றைக் கடவுளுக்கும் கொடுங்கள்.

மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 12: 13-17

அக்காலத்தில் பரிசேயர் இயேசுவை அவருடைய பேச்சில் சிக்க வைக்க ஏரோதியர் சிலரை அவரிடம் அனுப்பி வைத்தனர்.

அவர்கள் அவரிடம் வந்து, ``போதகரே, நீர் உண்மையுள்ளவர்; ஆள் பார்த்துச் செயல்படாதவர்; எவரையும் பொருட்படுத்தாமல் கடவுளின் நெறியை உண்மைக்கு ஏற்பக் கற்பிப்பவர் என்பது எங்களுக்குத் தெரியும். சீசருக்கு வரி செலுத்துவது முறையா, இல்லையா? நாங்கள் செலுத்தட்டுமா, வேண்டாமா?'' என்று கேட்டார்கள்.

அவர் அவர்களுடைய வெளிவேடத்தைப் புரிந்துகொண்டு, ``ஏன் என்னைச் சோதிக்கிறீர்கள்? என்னிடம் ஒரு தெனாரியம் கொண்டு வாருங்கள். நான் பார்க்க வேண்டும்'' என்றார். அவர்கள் அதைக் கொண்டுவந்தார்கள்.

இயேசு அவர்களிடம், ``இதில் பொறிக்கப்பட்டுள்ள உருவமும் எழுத்தும் யாருடையவை?'' என்று கேட்டார்.

அவர்கள் அவரிடம், ``சீசருடையவை'' என்றார்கள்.

அதற்கு இயேசு அவர்களை நோக்கி, ``சீசருக்கு உரியவற்றைச் சீசருக்கும் கடவுளுக்கு உரியவற்றைக் கடவுளுக்கும் கொடுங்கள்'' என்றார். அவர்கள் அவரைக் குறித்து வியப்படைந்தார்கள்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

03 June 2013

9ஆம் வாரம் திங்கள் 
முதல் ஆண்டு
 
 முதல் வாசகம் தோபித்து அரசனை விட, கடவுளுக்கு அஞ்சினார். 
தோபித்து நூலிலிருந்து வாசகம் 1: 1ய,2-3ய; 2: 1உ-8
தோபித்து தொபியேலின் மகன்; தோபித்து அசீரியர்களின் மன்னரான எனமேசரின் காலத்தில் திசிபேயிலிருந்து நாடு கடத்தப்பட்டார். தோபித்தாகிய நான் என் வாழ்நாளெல்லாம் உண்மையையும் நீதியையும் பின்பற்றி வாழ்ந்து வந்தேன். வாரங்களின் விழாவான பெந்தெகோஸ்து திருவிழாவின்பொழுது எனக்காக நல்லதொரு விருந்து தயாரிக்கப்பட்டது. நான் உணவு அருந்த அமர்ந்தேன். விருந்தின்போது எனக்குப் பலவகை உணவு பரிமாறப்பட்டது.
அப்பொழுது என் மகன் தோபியாவிடம், ``பிள்ளாய், நீ போய், நினிவேக்கு நாடு கடத்தப்பட்ட நம் உறவின் முறையாருள் கடவுளை முழு மனத்தோடு தேடும் ஏழை எவரையேனும் கண்டால், அவரை அழைத்து வா; அவர் என்னோடு உணவு அருந்தட்டும். நீ திரும்பி வரும் வரை நான் உனக்காகக் காத்திருப்பேன், மகனே'' என்று கூறினேன்.
தோபியா எங்கள் உறவின் முறையாருள் ஏழை ஒருவரைத் தேடிச் சென்றான். அவன் திரும்பி வந்து, ``அப்பா'' என்று அழைத்தான்.
நான், ``என்ன மகனே?'' என்றேன்.
அவன் மறுமொழியாக, ``அப்பா, நம் இனத்தாருள் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். அவரது சடலம் சந்தை வெளியில் எறியப்பட்டு அங்கேயே கிடக்கிறது'' என்றான். உடனே நான் எழுந்து, உணவைத் தொடாமலே வெளியேறி, தெருவிலிருந்து சடலத்தைத் தூக்கி வந்தேன்; கதிரவன் மறைந்த பின் அடக்கம் செய்யலாம் என்று அதை என் வீட்டின் ஓர் அறையில் வைத்தேன். வீடு திரும்பியதும் குளித்துவிட்டுத் துயருடன் உணவு அருந்தினேன். ``உங்கள் திருநாள்களைத் துயர நாள்களாகவும் பாடல்களையெல்லாம் புலம்பலாகவும் மாற்றுவேன்'' என்று பெத்தேலைக் குறித்து இறைவாக்கினர் ஆமோஸ் கூறிய சொற்களை நினைத்து அழுதேன்.
கதிரவன் மறைந்ததும் நான் வெளியே சென்று, குழி தோண்டிச் சடலத்தைப் புதைத்தேன். என் அண்டை வீட்டார், ``இவனுக்கு அச்சமே இல்லையா? இத்தகையதொரு செயலைச் செய்ததற்காகத்தானே ஏற்கெனவே இவனைக் கொல்லத் தேடினார்கள். இவனும் தப்பியோடினான். இருப்பினும் இறந்தவர்களை மீண்டும் அடக்கம் செய்கின்றானே'' என்று இழித்துரைத்தனர்.
இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
 
பதிலுரைப் பாடல்
திபா 112: 1-2. 3-4. 5-6 (பல்லவி: 1ய)
பல்லவி: ஆண்டவருக்கு அஞ்சி நடப்போர் பேறுபெற்றோர். அல்லது: அல்லேலூயா.
1 ஆண்டவருக்கு அஞ்சி நடப்போர் பேறுபெற்றோர்; அவர்தம் கட்டளைகளில் அவர்கள் பெருமகிழ்வு அடைவர். 2 அவர்களது வழிமரபு பூவுலகில் வலிமைமிக்கதாய் இருக்கும்; நேர்மையுள்ளோரின் தலைமுறை ஆசிபெறும். பல்லவி
3 சொத்தும் செல்வமும் அவர்களது இல்லத்தில் தங்கும்; அவர்களது நீதி என்றென்றும் நிலைத்திருக்கும். 4 இருளில் ஒளியென அவர்கள் நேர்மையுள்ளவரிடையே மிளிர்வர்; அருளும் இரக்கமும் நீதியும் உள்ளோராய் இருப்பர். பல்லவி
5 மனமிரங்கிக் கடன் கொடுக்கும் மனிதர் நன்மை அடைவர்; அவர்கள் தம் அலுவல்களில் நீதியுடன் செயல்படுவர். 6 எந்நாளும் அவர்கள் அசைவுறார்; நேர்மையுள்ளோர் மக்கள் மனத்தில் என்றும் வாழ்வர். பல்லவி
 
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
திவெ 1: 5யb
அல்லேலூயா, அல்லேலூயா! கிறிஸ்துவே நம்பிக்கைக்குரிய சாட்சி; இறந்தோருள் முதலில் உயிர்பெற்று எழுந்தவர்; மண்ணுலக அரசர்களுக்குத் தலைவர். இவர் நம்மீது அன்புகூர்ந்தார்; தமது சாவு வாயிலாக நம் பாவங்களிலிருந்து நம்மை விடுவித்தார். அல்லேலூயா.
 
நற்செய்தி வாசகம்
அன்பு மகனைப் பிடித்துக் கொன்று, திராட்சைத் தோட்டத்திற்கு வெளியே எறிந்துவிட்டார்கள்.
மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 12: 1-12
அக்காலத்தில் இயேசு உவமைகள் வாயிலாகப் பேசத் தொடங்கினார்: ``ஒருவர் ஒரு திராட்சைத் தோட்டம் போட்டுச் சுற்றிலும் வேலியடைத்து, பிழிவுக்குழி வெட்டி, ஒரு காவல் மாடமும் கட்டினார். பிறகு தோட்டத் தொழிலாளர்களிடம் அதைக் குத்தகைக்கு விட்டுவிட்டு நெடும் பயணம் மேற்கொண்டார்.
பருவ காலம் வந்ததும் அத்தோட்டத் தொழிலாளர்களிடமிருந்து திராட்சைப் பழங்களைப் பெற்று வருமாறு ஒரு பணியாளரை அவர் அனுப்பினார். ஆனால் அவர்கள் அவரைப் பிடித்து நையப்புடைத்து வெறுங்கையராய் அனுப்பினார்கள். மீண்டும் அவர் வேறொரு பணியாளரை அவர்களிடம் அனுப்ப, அவரையும் அவர்கள் தலையில் அடித்து அவமதித்தார்கள்.
அவர் மேலும் ஒருவரை அனுப்ப, அவரையும் கொலை செய்தார்கள்; அவர் வேறு பலரையும் அனுப்பினார். அவர்களுள் சிலரை நையப்புடைத்தார்கள்; சிலரைக் கொன்றார்கள்.
இன்னும் எஞ்சியிருந்தவர் ஒருவரே. அவர் அவருடைய அன்பு மகன். தம் மகனை அவர்கள் மதிப்பார்கள் என்று அவர் நினைத்துக்கொண்டு இறுதியாக அவரை அவர்களிடம் அனுப்பினார்.
அப்பொழுது அத்தோட்டத் தொழிலாளர்கள், `இவன்தான் சொத்துக்கு உரியவன்; வாருங்கள் நாம் இவனைக் கொன்றுபோடுவோம். அப்போது சொத்து நமக்கு உரியதாகும்' என்று தங்களிடையே பேசிக் கொண்டார்கள். அவ்வாறே அவரைப் பிடித்துக் கொன்று திராட்சைத் தோட்டத்திற்கு வெளியே எறிந்துவிட்டார்கள்.
திராட்சைத் தோட்ட உரிமையாளர் என்ன செய்வார்? அவர் வந்து அத்தொழிலாளர்களை ஒழித்துவிட்டுத் திராட்சைத் தோட்டத்தை வேறு ஆள்களிடம் ஒப்படைப்பார்.
`கட்டுவோர் புறக்கணித்த கல்லே கட்டடத்துக்கு மூலைக்கல் ஆயிற்று. ஆண்டவரால் நிகழ்ந்துள்ள இது நம் கண்களுக்கு வியப்பாயிற்று' என்னும் மறைநூல் வாக்கை நீங்கள் வாசித்தது இல்லையா?'' என்று அவர் கேட்டார்.
தங்களைக் குறித்தே அவர் இந்த உவமையைச் சொன்னார் என்பதை அவர்கள் உணர்ந்துகொண்டு அவரைப் பிடிக்க வழி தேடினார்கள்; ஆனால் மக்கள் கூட்டத்துக்கு அஞ்சினார்கள்; ஆகவே அவரை விட்டு அகன்றார்கள்.
இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
 

இயேசுவின் திருவுடல் திரு இரத்தப்பெருவிழா


திருப்பலி முன்னுரை
இன்று ஆண்டவர் இயேசு தம் திருவுடலையும்இரத்தத்தையும் நமக்குஉணவாகத் தரும் அவரது பேரன்பைப் பெருவிழாவாகக் கொண்டாடுகிறோம்.
இயேசுவின் திருவுடல் திரு இரத்தப்பெருவிழாவில் மகிழ்வோடு ஞாயிறுவழிபாட்டில் பங்கேற்க அணியமாகியிருக்கும் அன்புமக்கள் அனைவருக்கும்திருவிழாவின் அன்பு வாழ்த்தை உரியதாக்குகிறேன்.
நற்கருணை என்பது உறவின் சாட்சியமாகவும்உரையாடலின்சாத்தியமாகவும்உள்ளுணர்வுகளின் சங்கமமாகவும்உடன்படிக்கையின்சகாப்தமாகவும் திகழ்வதுதான் நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் உடலும்இரத்தமும் ஆகும்நாம் உழைக்க வில்லையேல் நமக்கு உணவில்லை.இதைத்தான் உழைக்க மனமில்லாதவன் எவரும் உண்ணலாகாது என்றுபுனித பவுல் அடிகளார் கூறுகிறார்இந்த உழைப்பு இறைவனின்உள்ளத்திலும் இதயத்திலும்மனித உள்ளமும்மனித இதயமும்குடிக்கொள்வதற்காக தயாரிக்கும் உழைப்புவாழ்வின் உணவாகநற்கருணை வடிவில் வந்த இயேசு நமது ஆன்ம தாகத்தையும்பசியையும்போக்குகிறார்நம்மைக் குணப்படுத்துகிறார்நம் வாழ்வைப் புதுப்பிக்கிறார்.விசுவாச வாழ்க்கையில் தொடர்ந்து முன்னேற ஆற்றல் தருகிறார்.நற்கருணை விருந்தில் நம்மீது இயேசு வைத்திருக்கும் அன்பின் ஆழஅகலத்தைப் புரிந்துக்கொள்ள வழிவகுக்கிறார்நம்மோடு நெருக்கமானஉறவுகொள்ள நற்கருணையில் வாழும் இயேசுவை ஆவலோடுவரவேற்போம்.
எனவேஇயேசுவின் உடலுக்காகஇரத்தத்துக்காக இன்று நன்றிசெலுத்துவோம்நமத உடலையும் இறைவனின் திருவுளத்தைநிறைவேற்றக் கையளிப்போம்நமது இரத்தத்தைச் சிந்தாவிட்டாலும்பிறர்வாழ தியாகங்கள் செய்ய முன்வருவோம்புதிய உடன்படிக்கையின் இந்தநினைவுத் திருப்பலியில் பங்கேற்கும் நாம்தகுந்த விதமாகஇத்திருப்பலியில் பங்கேற்று இறையாசீர் பெறுவோம் 
முதல் வாசகம்
"விண்ணுலகையும் மண்ணுலகையும் தோற்றுவித்த உன்னத கடவுள்ஆபிராமிற்கு ஆசி வழங்குவாராக! தொடக்கநூலில் இருந்து வாசகம் 14;18-20
18 அப்பொழுது சாலேம் அரசர் மெல்கிசெதேக்கு அப்பமும் திராட்சைஇரசமும் கொண்டு வந்தார்அவர் "உன்னத கடவுளின்அர்ச்சகராகஇருந்தார். 19 அவர் ஆபிராமை வாழ்த்தி, "விண்ணுலகையும்மண்ணுலகையும் தோற்றுவித்த உன்னத கடவுள் ஆபிராமிற்கு ஆசிவழங்குவாராக! 20 உன் எதிரிகளை உன்னிடம் ஒப்புவித்த உன்னத கடவுள்போற்றிபோற்றி!" என்றார்அப்பொழுது ஆபிராம் எல்லாவற்றிலிருந்தும்அவருக்குப் பத்தில் ஒரு பங்கைக் கொடுத்தார்
இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
இறைவா உமக்கு நன்றி

பதிலுரைப் பாடல்
பல்லவி: 'மெல்கிசெதேக்கின் முறைப்படி நீர் என்றென்றும் குருவே 
திருப்பாடல்கள் 110;1-4

ஆண்டவர் என் தலைவரிடம் 'நான் உம் பகைவரை உமக்குப்கால்மணையாக்கும்வரை நீர் என் வலப்பக்கம் வீற்றிரும்என்று உரைத்தார்.பல்லவி 

வலிமைமிகு உமது செங்கோலை ஆண்டவர் சீயோனிலிருந்துஒங்கச்செய்வார்உம் எதிரிகளிடையே ஆட்சி செலுத்தும்பல்லவி 

நீர் உமது படைக்குத் தலைமை தாங்கும் நாளில் தூய கோலத்துடன் உம்மக்கள் தம்மை உவந்தளிப்பர்;
வைகறை கருவுயிர்த்த பனியைப்போல உம் இளம் வீரர் உம்மைவந்தடைவர்பல்லவி 

4 '
மெல்கிசெதேக்கின் முறைப்படி நீர் என்றென்றும் குருவேஎன்று ஆண்டவர்ஆணையிட்டுச் சொன்னார்
அவர் தம் மனத்தை மாற்றிக் கொள்ளார்பல்லவி 

ஆண்டவரிடமிருந்து நான் எதைப் பெற்றுக்கொண்டேனோ அதையேஉங்களிடம் ஒப்படைக்கிறேன்
புனித பவுல் 1கொரிந்தியருக்கு எழுதிய நிருபத்திலிருந்து வாசகம்11;23-26
23 ஆண்டவரிடமிருந்து நான் எதைப் பெற்றுக்கொண்டேனோ அதையேஉங்களிடம் ஒப்படைக்கிறேன்அதாவதுஆண்டவராகிய இயேசுகாட்டிக்கொடுக்கப்பட்ட அந்த இரவில்அப்பத்தை எடுத்து, 24 கடவுளுக்குநன்றி செலுத்திஅதைப்பிட்டு, "இது உங்களுக்கான என் உடல்என்நினைவாக இவ்வாறு செய்யுங்கள்என்றார். 25 அப்படியே உணவுஅருந்தியபின் கிண்ணத்தையும் எடுத்து, "இந்தக் கிண்ணம் என் இரத்தத்தால்நிலைப்படுத்தப்படும் புதிய உடன்படிக்கைநீங்கள் இதிலிருந்து பருகும்போதெல்லாம் என் நினைவாக இவ்வாறு செய்யுங்கள்என்றார். 26 ஆதலால்நீங்கள் இந்த அப்பத்தை உண்டு கிண்ணத்திலிருந்து பருகும் போதெல்லாம்ஆண்டவருடைய சாவை அவர் வரும்வரை அறிவிக்கிறீர்கள்.
இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு
இறைவா உமக்கு நன்றி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
அல்லேலூயாஅல்லேலூயா!, "நீங்களே அவர்களுக்கு உணவுகொடுங்கள்என்றார்.அல்லேலூயா 
நற்செய்தி வாசகம்
புனித லூக்காஸ் எழுதிய நற்செய்தியில் இருந்து வாசகம் 9;11-17

11 திரளான மக்கள் யேசுவை பின் தொடர்ந்தனர்அவர்களை அவர்வரவேற்று இறையாட்சியைப் பற்றி அவர்களோடு பேசிகுணமாகவேண்டியவர்களைக் குணப்படுத்தினார். 12 பொழுது சாயத் தொடங்கவேபன்னிருவரும் அவரிடம் வந்து, "இவ்விடம் பாலைநிலம் ஆயிற்றே;சுற்றிலுமுள்ள ஊர்களுக்கும் பட்டிகளுக்கும் சென்று தங்கவும் உணவுவாங்கிக்கொள்ளவும் மக்கள் கூட்டத்தை அனுப்பிவிடும்என்றனர். 13 இயேசுஅவர்களிடம், "நீங்களே அவர்களுக்கு உணவு கொடுங்கள்என்றார்.அவர்கள், ";எங்களிடம் ஐந்து அப்பங்களும் இரண்டு மீன்களுமே உள்ளன.நாங்கள் போய் இத்தனை பேருக்கும் உணவு வாங்கி வந்தால்தான் முடியும்"என்றார்கள். 14 ஏனெனில் ஏறக்குறைய ஐயாயிரம் ஆண்கள் அங்குஇருந்தனர்இயேசு அவருடைய சீடர்களை நோக்கி, "இவர்களை ஐம்பதுஐம்பது பேராகப் பந்தியில் அமரச் செய்யுங்கள்என்றார். 15 அவர்சொன்னபடியே அனைவரையும் அவர்கள் பந்தியில் அமரச் செய்தார்கள். 16அவர் அந்த ஐந்து அப்பங்களையும் இரண்டு மீன்களையும் எடுத்து வானத்தைஅண்ணாந்து பார்த்துஅவற்றின் மீது ஆசிகூறிபிட்டுமக்களுக்குப்பரிமாறுவதற்காகச் சீடரிடம் கொடுத்தார். 17 அனைவரும் வயிறாரஉண்டனர்எஞ்சிய துண்டுகளைப் பன்னிரண்டு கூடைகள் நிறையஎடுத்தனர்.
இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
கிறிஸ்துவே உமக்கு புகழ்.

விசுவாசிகள் மன்றாட்டுகள்:
எருசலேமேஆண்டவரைப் போற்றுவாயாகசீயோனேஉன் கடவுளைப்புகழ்வாயாக!
பதில் ஆண்டவரே எங்கள் மன்றாட்டைத் தயவாய் கேட்டருளும்
“ எனது சதையை உண்டு எனது இரத்தத்தைக் குடிப்போர் என்னோடுஇணைந்திருப்பர் நானும் அவர்களோடு இணைந்திருப்பேன்” என்றுமொழிந்த எம் அன்பு இறைவா,
உம் திருச்சபையை வழிநடத்தும்எம் திருத்தந்தை பிரான்சிஸ்ஆயர்கள்,குருக்கள்கன்னியர் மற்றும் பொதுநிலையினர் அனைவரும் உம்நற்கருணை பிரசன்னத்திலேஉம் வார்த்தையிலே இணைந்திருந்து உம்திருச்சபையை சிறப்புற வழிநடத்தி செல்ல வேண்டுமென்று தயவாய்உம்மை மன்றாடுகிறோம்
அன்புத் தந்தையே இறைவா!
உம்மைப் போற்றுகிறோம்உமது திருவுடல்திருஇரத்தம் என்னும்கொடைகளுக்காக நன்றி கூறுகிறோம்எங்களை ஆசிர்வதித்தருளும்,உம்முடைய பிள்ளைகளாகிய நாமனைவரும் உமது திருமகனாம்இயேசுவின் திருவுடலாகிய நற்கருணைக்குரிய மாண்பையும் மதிப்பையும்உணர்ந்து வாழவும்இறைவார்த்தையாலும்நற்கருணையாலும் ஊட்டம்பெற்று உமது சாட்சிகளாக வாழ அருள் தர வேண்டுமென்று தயவாய் உம்மைமன்றாடுகின்றோம்
எனது சதை உண்மையான உணவுஎனது இரத்தம் உண்மையானபானம்” என்ற எம் தலைவனே,
எம் பங்கில் வசிக்கின்ற மக்கள் அனைவரும் உண்மையாகவேபாவங்களையும் உடல் உள்ள நோய்களையும் மன வேதனைகளையும் துன்பதுயரங்கள் அனைத்தையும் போக்குகின்றது என்பதனை உணர்ந்தவர்களாகஉம் நற்கருணை பிரசன்னத்தில் விசுவாசம் கொண்டவர்களாக சான்று பகரதயவாய் உம்மை மன்றாடுகிறோம்
வாழும் தந்தை என்னை அனுப்பினார் நானும் அவரால் வாழ்கிறேன்அதுபோல் என்னை உன்போரும் என்னால் வாழ்வர்” என்றுமொழிந்தவரே!
எம்பங்கில் உள்ள சிறுவர் சிறுமியர் இளையோர் பல்வேறுகுழுப்பொறுப்பாளர்கள்அனைவரும் உம்மால் தேர்ந்துகொள்ளப்பட்டவர்கள்;அனுப்பப்பட்டவர்கள் என்பதனை உணர்ந்தவர்களாக படிப்பிலும்நல்லொழுக்கத்திலும் விசுவாசத்திலும் உதவிபுரிபவர்களாகவும் தங்கள்பணிகளிலே பொறுப்பு மிக்கவர்களாகவும் வாழ்ந்தருள வேண்டுமென்றுதயவாய் உம்மை மன்றாடுகிறோம்
என்றென்றும் பேரன்பை நிலையாகக் கொண்டுள்ள தந்தையே!
பிரிவினைகளோடும்கசப்புணர்வுகளோடும்பழிவாங்கும்மனநிலையோடும்வேதனைகளோடும்விரக்தியோடும்கண்ணீரோடும்வாழும் கணவன் மனைவி அனைவர்மீதும் மனமிரங்கி அவர்களின் அன்புதூய்மையானதாகவும்நிலையானதாகவும் இருக்கவும்அவர்கள் தாங்கள்பெற்றுக்கொண்ட அழைப்பிற்கேற்ப பிரமாணிக்கமாய் வாழ்வதற்குவேண்டிய அருளை அளித்துக் காத்திடவேண்டுமென்று தயவாய் உம்மைமன்றாடுகின்றோம்
என்றென்றும் பேரன்பை நிலையாகக் கொண்டுள்ள தந்தையே!
நாங்கள் உமது வாக்கையும்நியமங்களையும் நீதி நெறிகளையும் நேரியமுறையில் நாம் கடைப்பிடித்துஅன்பிய சமூக வாழ்வு வாழ்வதற்குவேண்டிய அருளை அளித்துக் காத்திட வேண்டுமென்று இறைவா உம்மைமன்றாடுகின்றோம்.

இன்றைய சிந்தனை
உடலும்இரத்தமும்...
இயேசு துன்பங்கள் அனுபவித்துசிலுவையில் அறையப்பட்டு இறப்பதற்குமுன்னால் தம்மையே காணிக்கையாக்கிய நிகழ்ச்சியைத் திருச்சபைதொடர்ந்து கொண்டாடி வந்துள்ளதுஇதுவே நற்கருணைக் கொண்டாட்டம்என அழைக்கப்படுகிறதுஇயேசு இறுதி முறையாகத் தம் சீடர்களோடுஅமர்ந்து உணவருந்துகையில் அப்பத்தை எடுத்து அவர்களுக்குக் கொடுத்து, ''இது என் உடல்'' என்றும்இரசத்தை அவர்களுக்குக் கொடுத்து, ''இது என்இரத்தம்'' என்றும் கூறி அதை அவர்கள் அருந்தும்படிக் கொடுத்தார்இதுஇயேசு தம்மையே பலியாக்கியதைக் குறிக்கின்றதுநமக்காக வாழ்ந்தஇயேசு நமக்காக இறந்தது மட்டுமன்றிநம்மோடு என்றும் தங்கியிருப்பதன்அடையாளமாக நற்கருணைக் கொண்டாட்டத்தை நமக்குத் தந்துள்ளார்.இயேசுவின் உடலும் இரத்தமும் உண்மையாகவே நமக்குஉணவாக்கப்படுகிறது என்றால் அது நமக்கு அவர் தருகின்ற ஆன்மிகஉணவாக உள்ளதுநம்மில் கடவுளின் உயிர் குடிகொண்டிருப்பதற்குநற்கருணை அடையாளமும் காரணமுமாய் இருக்கிறது.
நற்கருணை என்பது ஒரு இயேசு நமக்காக எந்நாளும் இருக்கின்றார்என்பதை நாம் மீண்டும் மீண்டும் நினைவுகூர்கின்ற நிகழ்ச்சியாகும்அதேநேரத்தில் நற்கருணைக் கொண்டாட்டத்தின்போது நாம் கடவுளின்குடும்பமாக இணைகின்றோம்ஏன்நாமே கிறிஸ்துவின் உடலாகமாறுகின்றோம்ஆகவேநாம் உட்கொள்கின்ற அப்பமும் பருகுகின்றஇரசமும் இயேசுவோடு நம்மை இணைத்துகடவுளின் வாழ்வில் நம் வாழ்வுஇணைந்து ஒன்றிப்பதற்கும்அதன் வழியாக நாம் ஒருவர் ஒருவரோடுசகோதர அன்பில் இணைவதற்கும் வழியாகிறதுஇயேசுவை நம்பிவாழ்கின்ற மக்கள் இயேசுவில் வாழ்வு கண்டு மகிழ்வார்கள்அந்த வாழ்வுஅவர்களுடைய சிந்தனைசொல்செயல் அனைத்தையும் கடவுளிடம்ஈர்க்கின்றதுநற்கருணையில் இயேசு அருளடையாள முறையில்பிரசன்னமாகிறார் என்பது நம் நம்பிக்கைஅதாவது இயேசுவை நாம் நம்இதயத்தில் ஏற்றுஅவரோடு நம் வாழ்க்கையை ஒன்றித்து இணைகின்றபேறு நமக்கு அளிக்கப்படுகிறதுநமக்காகத் தம்மையே கையளித்தஇயேசுவைப் போல நாமும் ஒருவர் ஒருவருடைய வாழ்வு நலமடையவேண்டும் என்பதற்காக நம்மையே பலியாக்குவதற்கு நற்கருணை ஒருமுன் அடையாளமாகவும் அந்த பலி வாழ்வுக்கு நம்மைத் தூண்டுகின்றசக்தியாகவும் உள்ளதுஅன்பின் வெளிப்பாடு நற்கருணைஅதுவே நம்மைஅன்புக்குச் சாட்சிகளாக மாற்றிட வேண்டும்.

மன்றாட்டு:
இறைவாஉம் திருமகனை எங்களுக்கு உணவாக அளித்ததற்கு நன்றி!