புனிதர்களை பெயர் வரிசையில் தேட

Translate

19 March 2013

மார்ச்சு 19
புனித யோசேப்பு - தூய கன்னி மரியாவின் கணவர் பெருவிழா

முதல் வாசகம்
 உன் வழித்தோன்றலை உனக்குப்பின் நான் உயர்த்திஅவனது அரசை நிலைநாட்டுவேன்.
சாமுவேல் இரண்டாம் நூலிலிருந்து வாசகம் 7: 4-5,12-14,16
அந்நாள்களில் ஆண்டவரின் வார்த்தை நாத்தானுக்கு அருளப்பட்டது: ``நீ சென்றுஎன் ஊழியன் தாவீதிடம் ஆண்டவர் இவ்வாறு கூறுவதாகச் சொல்: உன் வாழ்நாள்கள் நிறைவுபெற்று நீ உன் மூதாதையரோடு துயில்கொள்ளும் போதுஉனக்குப் பிறக்கும் உன் வழித்தோன்றலை உனக்குப்பின் நான் உயர்த்திஅவனது அரசை நான் நிலைநாட்டுவேன். எனது பெயருக்காகக் கோவில் கட்டவிருப்பவன் அவனே. அவனது அரசை நான் என்றும் நிலைநிறுத்துவேன். நான் அவனுக்குத் தந்தையாக இருப்பேன். அவன் எனக்கு மகனாக இருப்பான். என் முன்பாக உனது குடும்பமும் உனது அரசும் என்றும் உறுதியாய் இருக்கும்! உனது அரியணை என்றுமே நிலைத்திருக்கும்!''
இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்
திபா 89: 1-2. 3-4. 26,28 (பல்லவி: 36)
பல்லவி: அவனது வழிமரபு என்றென்றும் நிலைத்திருக்கும்.
ஆண்டவரின் பேரன்பைப் பற்றி நான் என்றும் பாடுவேன்நீர் உண்மையுள்ளவர் எனத் தலைமுறைதோறும் என் நாவால் அறிவிப்பேன். 2 உமது பேரன்பு என்றென்றும் நிலைத்துள்ளது என்று அறிவிப்பேன்உமது உண்மை வானைப் போல் உறுதியானது. பல்லவி
நீர் உரைத்தது: `நான் தேர்ந்து கொண்டவனோடு உடன்படிக்கை செய்துகொண்டேன்என் ஊழியன் தாவீதுக்கு ஆணையிட்டு நான் கூறியது: 4 உன் வழிமரபை என்றென்றும் நிலைக்கச் செய்வேன்உன் அரியணையைத் தலைமுறை தலைமுறையாக நிலைத்திருக்கச் செய்வேன்'. பல்லவி
26 `நீரே என் தந்தைஎன் இறைவன்என் மீட்பின் பாறைஎன்று அவன் என்னை அழைப்பான். 28 அவன்மீது கொண்ட பேரன்பு என்றும் நிலைக்குமாறு செய்வேன்அவனோடு நான் செய்துகொண்ட உடன்படிக்கையும் எப்பொழுதும் நிலைத்திருக்கும். பல்லவி

இரண்டாம் வாசகம்
 எதிர்நோக்குக்கு இடம் இல்லாததுபோல் தோன்றினும்அவர் எதிர்நோக்கினார்.
திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 4: 13, 16-18, 22
சகோதரர் சகோதரிகளேஉலகமே அவருக்கு உரிமைச் சொத்தாகும் என்னும் வாக்குறுதி ஆபிரகாமுக்கோ அவருடைய வழிமரபினர்களுக்கோ திருச்சட்டத்தைக் கடைப்பிடித்ததால் கிடைக்கவில்லைநம்பிக்கை கொண்டு கடவுளுக்கு ஏற்புடையவர் ஆனதால்தான் அவ்வாக்குறுதி கிடைத்தது.
ஆகவே கடவுளின் அருள்செயலால் நம்பிக்கை வாக்குறுதியின் அடிப்படையாயிற்று. இவ்வாறு வாக்குறுதி ஆபிரகாமின் வழிவந்தவர்கள் எல்லாருக்கும் - திருச்சட்டத்திற்கு உட்பட்டோருக்கு மட்டுமல்லஅவரைப் போலக் கடவுள்மீது நம்பிக்கை கொண்டோருக்கும் - உரியது என்பது உறுதியாயிற்று.
ஆபிரகாம் நம் அனைவருக்கும் தந்தை. ஏனெனில் ``எண்ணற்ற மக்களினங்களுக்கு உம்மை நான் தந்தையாக்குகிறேன்'' என்று மறைநூலில் எழுதியுள்ளது. ஆம்இறந்தவர்களை வாழ்விப்பவரும் இல்லாததைத் தம் வார்த்தையால் இருக்கச் செய்பவருமாகிய கடவுள்மீது நம்பிக்கை கொண்டு அவர் முன்னிலையில் ஆபிரகாம் நம் தந்தையானார். ``உன் வழிமரபினர் எண்ணற்றவராய் இருப்பர்''என்றும் அவருக்குச் சொல்லப்பட்டது. இக்கூற்று நிறைவேறும் என்னும் எதிர்நோக்குக்கு இடம் இல்லாதது போல் தோன்றினும்அவர் எதிர்நோக்கினார்தயங்காமல் நம்பினார். ஆகவே அவர் பல மக்களினங்களுக்குத் தந்தையானார். ``அதை ஆண்டவர் அவருக்கு நீதியாகக் கருதினார்.''
இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
திபா 84: 4 அல்லேலூயாஅல்லேலூயா!
ஆண்டவரேஉமது இல்லத்தில் தங்கியிருப்போர் நற்பேறுபெற்றோர்அவர்கள் எந்நாளும் உம்மைப் புகழ்ந்து கொண்டேயிருப்பார்கள். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்
 ஆண்டவரின் தூதர் தமக்குப் பணித்தவாறே யோசேப்பு நடந்துகொண்டார்.
+மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 16, 18-21, 24
யாக்கோபின் மகன் மரியாவின் கணவர் யோசேப்பு. மரியாவிடம் பிறந்தவரே கிறிஸ்து என்னும் இயேசு.
இயேசு கிறிஸ்துவின் பிறப்பையொட்டிய நிகழ்ச்சிகள்: அவருடைய தாய் மரியாவுக்கும் யோசேப்புக்கும் திருமண ஒப்பந்தம் செய்யப் பட்டிருந்தது. அவர்கள் கூடி வாழுமுன் மரியா கருவுற்றிருந்தது தெரிய வந்தது. அவர் தூய ஆவியால் கருவுற்றிருந்தார். அவர் கணவர் யோசேப்பு நேர்மையாளர். அவர் மரியாவை இகழ்ச்சிக்கு உள்ளாக்க விரும்பாமல் மறைவாக விலக்கிவிடத் திட்டமிட்டார்.
அவர் இவ்வாறு சிந்தித்துக் கொண்டிருக்கும்போது ஆண்டவரின் தூதர் அவருக்குக் கனவில் தோன்றி, ``யோசேப்பேதாவீதின் மகனேஉம் மனைவி மரியாவை ஏற்றுக்கொள்ள அஞ்ச வேண்டாம். ஏனெனில் அவர் கருவுற்றிருப்பது தூய ஆவியால்தான். அவர் ஒரு மகனைப் பெற்றெடுப்பார். அவருக்கு இயேசு எனப் பெயரிடுவீர். ஏனெனில் அவர் தம் மக்களை அவர்களுடைய பாவங்களிலிருந்து மீட்பார்'' என்றார். யோசேப்பு தூக்கத்திலிருந்து விழித்தெழுந்து ஆண்டவரின் தூதர் தமக்குப் பணித்தவாறே தம் மனைவியை ஏற்றுக் கொண்டார்.
இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

அல்லது
உன் தந்தையும் நானும் உன்னை மிகுந்த கவலையோடு தேடிக்கொண்டிருந்தோமே.
+லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 2: 41-51
அக்காலத்தில் ஆண்டுதோறும் இயேசுவின் பெற்றோர் பாஸ்கா விழாவைக் கொண்டாட எருசலேமுக்குப் போவார்கள்;இயேசுவுக்குப் பன்னிரண்டு வயது ஆனபோதுவழக்கப்படி விழாவைக் கொண்டாட எருசலேம் சென்றனர்.
விழா நாள்கள் முடிந்து அவர்கள் திரும்பியபோதுசிறுவன் இயேசு எருசலேமில் தங்கிவிட்டார். இது அவருடைய பெற்றோருக்குத் தெரியாதுபயணிகள் கூட்டத்தில் அவர் இருப்பார் என்று எண்ணினர். ஒரு நாள் பயணம் முடிந்த பின்பு உறவினரிடையேயும் அறிமுகமானவர்களிடையேயும் அவரைத் தேடினர்அவரைக் காணாததால் அவரைத் தேடிக்கொண்டு எருசலேமுக்குத் திரும்பிச் சென்றார்கள். மூன்று நாள்களுக்குப்பின் அவரைக் கோவிலில் கண்டார்கள். அங்கே அவர் போதகர்கள் நடுவில் அமர்ந்து அவர்கள் சொல்வதைக் கேட்டுக் கொண்டும் அவர்களிடம் கேள்விகளை எழுப்பிக்கொண்டும் இருந்தார். அவற்றைக் கேட்ட அனைவரும் அவருடைய புரிந்துகொள்ளும் திறனையும் அவர் அளித்த பதில்களையும் கண்டு மலைத்துப் போயினர்.
அவருடைய பெற்றோரும் அவரைக் கண்டு வியப்பில் ஆழ்ந்தனர். அப்பொழுது அவருடைய தாய் அவரை நோக்கி, ``மகனேஏன் இப்படிச் செய்தாய்இதோ பார்உன் தந்தையும் நானும் உன்னை மிகுந்த கவலையோடு தேடிக்கொண்டிருந்தோமே'' என்றார்.
அவர் அவர்களிடம், ``நீங்கள் ஏன் என்னைத் தேடினீர்கள்நான் என் தந்தையின் அலுவல்களில் ஈடுபட்டிருக்க வேண்டும் என்பது உங்களுக்குத் தெரியாதா?'' என்றார். அவர் சொன்னதை அவர்கள் புரிந்துகொள்ளவில்லை. பின்பு அவர் அவர்களுடன் சென்று நாசரேத்தை அடைந்து அவர்களுக்குப் பணிந்து நடந்தார்.
இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

சிந்தனை
2012-03-19
ஆழ்ந்த அமைதியில் இறைசெய்தியைக் கேட்டுசந்தேகங்களை கேட்டு தெளிவு பெற்றுஅமைதியில் பணிந்து நடப்பதுவே அழகு.
தூய யோசேப்பு இதனையே வெளிப்படுத்தினார். இறுதியில் பணிந்த மனத்துடன் இறைத் திருவுளத்தை ஏற்று கடைப்படிப்பதுவே நமது வாழ்வு.
வாழ்வு முழுவதும் கேள்விகளைக் கேட்டுக் கொண்டேநம்பிக்கையின்மையில் வாழ்வது வாழ்வாகாது.
இந்த தத்துவம் கிறிஸ்தவத்திற்கு மட்டும் அல்லஇல்லறமோதுறவறமோ எந்த நிலையை தேர்வு செய்தாலும்அந்த வாழ்வினில் சந்தேகம் கொண்டு இறைவன் அழைத்திருக்கிறாரா இல்லையாஇவர் தான் இவள் தான் என் வாழ்க்கை துணையா என்று கேள்வி கேட்டுக் கொண்டே காலத்தை கடக்காமல்தேர்வு செய்த வாழ்வில் இறுதி மட்டும் உறுதியுடனே பயணம் செய்து வாழ்வை நிறைவு செய்ய முற்படுவதுவே வாழ்வாகும்.
2013-03-19
இன்றைக்கு பகட்டான வாழ்வு என்பது தன்னை பிரபலியமாக்கும் என நினைத்து, உணவு உடை நடை என எல்லா காரியங்களிலும் பகட்டையும் பந்தாவையும் முன் வைத்து பவனி வருவதைப் பார்க்கின்றோம். இதனால் இவர்க்ள அடைந்தது என்னயென்று ஆராயும் போது பகட்டு இன்றைக்கு காழுகர்களையும், திருடர்களையும், பொய் பேசி திரிபவர்களையும், வேலையே செய்யாது வெட்டியாக திரிபவர்களையும், ஏமாற்றுபவர்களையும் உருவாக்கியுள்ளது என்றால் அது மிகையாகுமா?
குழந்தையாய் இருப்பவர்களையும் இத்தகைய வாழ்வுக்கு இன்று அவாகளது விருப்பம் இல்லாமலேயே பெற்றோர் தள்ளி வருகிறார்கள் என்பது பரிதாபத்திற்குரியமாகிறது.
என்று மறையும் இந்த பகட்டு மோகம்? புனிதர் வளனார் வாழ்வு நமக்கு பாடமாகட்டும்.

No comments:

Post a Comment