புனிதர்களை பெயர் வரிசையில் தேட

Translate

15 February 2020

புனிதர்கள் ஃபாஸ்டினுஸ் மற்றும் ஜோவிட்டா பெப்ரவரி 15

† இன்றைய புனிதர் †
(ஃபெப்ரவரி 15)
புனிதர்கள் ஃபாஸ்டினுஸ் மற்றும் ஜோவிட்டா
படைப்பு முழுவதற்கும் அவர் தம் இரக்கத்தை வெளிப்படுத்தினார் (சீஞா 16:16)
ஃபாஸ்டினுஸ்  மற்றும் ஜோவிட்டார் இருவரும் இத்தாலியில் , லம்பார்தேயில் உள்ள ப்ரசியா என்னும் இடத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவர்கள் .உடன் பிறந்த சகோதரர்கள் . முதலாமவர் குருவாக இருந்தார் .இரண்டாமரோ திருத்தொண்டராக இருந்தார் .பாரம்பரியத் தகவல்களின்படி இருவருமே தீவிரமாக நற்செய்தியைப் போதித்து கிறிஸ்துவை மற்றவர்கள் அறியச் செய்வதில் முனைப்புக் காட்டினார்கள் என்பது தெரிகிறது.
கிறிஸ்தவர்களைக் கொன்றழித்து ஆனந்தம் அடைந்த அரசர்களை மகிழ்விக்க ஆளுநர்களும் கங்கனம் கட்டிச் செயல்பட்டார்கள் . அப்படியான  ஆளுநர்களுள் ஒருவரான ஜூலியன் இச்சகோதரர்கள் இருவரையும் கைது செய்தான் .துன்புறுத்தி குதூகலித்தான் .ப்ரசியாவிலிருந்து பிலான் நகருக்கும் அங்கிருந்து உரோமைக்கும் ,பிறகு நேப்பிள்ஸ் பகுதிக்கும் மீண்டும் ப்ரசியாவுக்கும் இருவரையும் கட்டி இழுத்துச் சென்றான்.

அப்போது யதார்த்தமாக அந்தப்பக்கமா வந்து பேரரசர் அட்ரியன் இருவரைப் பற்றியும் விசாரித்தான் .இதைக் குறித்து ,அப்போது பேரரசன் அட்ரியனுடன் ப்ரசியாவுக்கு வந்திருந்த புனித கலாசெருஸ் எழுதியுள்ளார் .இவர் ப்ரசியாவைத் தாய் மண்ணாகவும் ,பேரரசர் அட்ரியன் அரசவையில் அதிகாரியாகவும் இருந்தவர்.
விசாரணையின்போது சூரியனை வணங்கும்படி கட்டளை பிறப்பித்தான் பேரரசன் . அதை மறுத்து, "உலகிற்கு ஒளிதர சூரியனைப் படைத்த இறைவனைத் தவிர வேறொன்றையும் வணங்க மாட்டேன் " என்று ஃபாஸ்டினுஸ் துணிச்சலுடன் பதிலுரைத்தார்.

தாங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இடத்திற்கு முன்பாக இருந்த சிலை ஒளிரும் படி வடிவமைக்கப்பட்டிருந்ததைக் கவனித்த ஜோவிட்டா "விண்ணகத்திலிருந்து ஆட்சி செய்யும் இறைவனையே நாங்கள் வணங்குகிறோம் . அவரை சூரியனைப் படைத்தார். நீங்களும் இந்த சிலையும் கருகிப்போவீர்கள் .இதை வணங்கும் அனைவருக்கும் அவமானமே வந்து சேரும்" என்று ஒளிபடைத்த கண்ணினனாக முழங்கினார்.
உடனேயே அச்சிலை கறுத்துப்போனது. அங்கு நின்றிருந்த பூசாரிகளை அனுப்பி சிலையைச் சுத்தம் செய்யும்படி அரசன் கட்டளையிட்டான் . பயந்து நடுங்கி தயங்கியபடியே அவர்கள் சென்றார்கள் . சென்று அச்சிலையைத் தொட்டதும் அது சாம்பல் போல உதிர்ந்து விழுந்தது.
கோபத்தின் உச்சத்திற்குப் போன பேரரசன் பசியோடும் பட்டினியோடும் வளர்க்கப்பட்டிருந்த சிங்கங்களுக்கு  இரையாக்கு வதற்காக அதன் குகைகளுக்கு இருவரையும் இழுத்துச் செல்ல கட்டளையிட்டான் . அதன்படியே வீரர்கள் செய்தார்கள் . குகையின் கதவுகள் திறக்கப்பட்டன. சிங்கங்கள் பாய்ந்து வந்தன . பாய்ந்து வந்த சிங்கங்கள் அவர்கள் முன் மண்டியிட்டு பணிந்து நின்றன .இதை நேரில் பார்த்த புனித கலாசெருஸ் உண்மைக் கடவுளை நம்பித் தன்னோடு 12 ஆயிரம் மக்களைச் சேர்த்துத் திருமுழுக்குப் பெற்ற கிறிஸ்தவரானார்.
பிறகு இருவரையும் சிறையில் அடைத்து உணவும், நீரும் கொடுக்காது பட்டினி போட்டு கொல்லத் தயாரானார்கள் . சிறையில் இருந்தபோது வானதூதர்கள் வந்து இருவரையும் திடப்படுத்தினார்கள் . பயம் போக்கி மகிழ்ச்சி அளித்தார்கள் .அந்த அறை முழுவதும் நிறைந்திருந்த ஒளியைப் பார்த்த எண்ணற்றோர் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் ஆனார்கள் . நிறைவில் இருவரும் தலை வெட்டப்பட்டு மறைசாட்சி ஆனார்கள் .இது 120 ஆம் ஆண்டில் நடந்தது.
தங்கள் நாட்டின் முதன்மைப் பாதுகாவலராக வைத்த இவர்களிடம் மன்றாடுவதுடன் , இவர்களின் புனிதப் பொருள்களையும் ப்ரசியா மக்கள் பாதுகாத்து வருகிறார்கள்
.

ஒளிரும் இறைவனின் திரு முக தரிசனத்தை படைப்பு அனைத்திலும் தேடுவோர் அவை சொல்லும் வாழ்விற்கான இறை நற்செய்தியைக் கண்டுகொள்ள முடியும்.

No comments:

Post a Comment