† இன்றைய புனிதர் †
(ஃபெப்ரவரி 15)
✠ புனிதர் தியடோசியஸ் ஃப்ளோரென்டினி ✠
(St. Theodosius Florentini)
கபுச்சின் துறவி/ சபை நிறுவனர்:
(Capuchin monk and a founder)
பிறப்பு: மே 23, 1808
முன்ஸ்டர், கிரிசன்ஸ், ஸ்விட்சர்லாந்து
(Münster, in the Grisons, Switzerland)
இறப்பு: ஃபெப்ரவரி 15, 1865
ஹைடன், அப்பென்செல், ஸ்விட்சர்லாந்து
(Heiden, in Appenzell, Switzerland)
ஏற்கும் சமயம்:
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)
நினைவுத் திருநாள்: ஃபெப்ரவரி 15
புனிதர் தியடோசியஸ் ஃப்ளோரென்டினி, ஸ்விட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த ஒரு கப்புசின் சபை துறவியாவார். இவர், கத்தோலிக்க சபைகளையும் கல்வி நிறுவனங்களையும் நிறுவியவராவார்.
1825ம் ஆண்டு, அக்டோபர் மாதம், 22ம் நாள், தனது 17 வயதிலேயே கப்புச்சின் சபையில் சேர்ந்த இவர், 1830ம் ஆண்டு, குருத்துவம் பெற்று, குருவானார். உடனடியாக புதுமுக துறவியரின் தலைமைப் பொறுப்பேற்ற (Novice Master) இவர், தத்துவம் மற்றும் இறையியல் கற்பிக்க தொடங்கினார். “படேன்” (Baden) எனும் வரலாற்று ஜெர்மன் பகுதியின் பாதுகாவலராக பொறுப்பேற்றார். 1845ம் ஆண்டு, “ச்சூர்” (Chur) எனும் பங்கின் பங்குத் தந்தையும், சிரேஷ்டருமானார். 1857ம் ஆண்டு, (Definitor) என்ற பதவியை வகித்த இவர், 1860ம் ஆண்டு, “ச்சூர்” மறைமாவட்டத்தின் (Diocese of Chur) தலைமைக் குருவாகவும் (Vicar-General) பதவி வகித்தார்.
1847ம் ஆண்டு, ஸ்விட்சர்லாந்தில் நடந்த “சொண்டேர்பன்ட்” (The Sonderbund War) சிவில் யுத்தத்தின் பின்னர், தீவிர அரசியல் (Radical party) கட்சி, கத்தோலிக்க உணர்வுகளை எதிர்த்தது. திருச்சபையின் பாதுகாப்பின் விளைவாக, தந்தை தியடோசியஸ் 1841ம் ஆண்டு, “அல்சேஸி”ற்கு (Alsace) ஓடிப்போனார். அதே வருடம் ஆகஸ்ட் மாதம் அவர் திரும்ப வந்தார். அவர், ஹோலி கிராஸ்/ தூய திருச்சிலுவை ஃபிரான்சிஸ்கன் சகோதரியரின் கல்வி நிறுவனத்தை நிறுவினார். 1844ம் ஆண்டு, அக்டோபர் மாதம், 16ம் நாள், “அல்டார்ஃப்” (Altorf) எனுமிடத்திலுள்ள கபுச்சின் தேவாலயத்தில், முதல் மூன்று அருட்சகோதரியர் மூன்றாம் நிலை தூய ஃபிரான்சிஸ் சபையின் (Third Order of St. Francis) சீருடைகளைப் பெற்றுக்கொண்டனர். கிறிஸ்துவில் ஆத்துமாக்களை ஜெயிப்பதற்காக, தங்கள் வாழ்க்கை முறையிலிருந்து எதையும் தடுக்கக்கூடிய எந்த ஒன்றையும் செய்யாமலிருக்க அவர்களது அமைப்பு சட்டங்கள், அனைவரையும் தங்களைக் கட்டிக்கொள்ளும்படி கட்டளையிட்டிருந்தன. இந்த அடித்தளத்திலிருந்து, கற்பிக்கும் சகோதரிகளின் சபை, “மென்ஸிங்கன்” (Menzingen) எனுமிடத்திலுள்ள அவர்களுடைய தலைமை இல்லத்தில் வளர்ந்தது.
பின்னர், தந்தை தியடோசியஸ், “இன்ஜென்பால்” (Ingenbohl) எனுமிடத்தில், “கருணையின் சகோதரியர்” (Sisters of Mercy) சபையை நிறுவினார். இரு சபையினரும் கல்விப் பணியில் தீவிரமாக ஈடுபட்டிருந்தனர். கருணையின் சகோதரிகள், ஏழைகளுக்கும் நோய்வாய்பட்டவர்களுக்கும் இல்லங்களை உருவாக்கினர். தனியார் மருத்துவ சேவைகளை மேற்கொண்டனர்.
இதற்கிடையில் தந்தை தியடோசியஸ், ஒரு பள்ளி ஆசிரியராக தன்னையும் பரபரப்பாக வைத்திருந்தார். அவர் “வோல்க்ஸ்குலேன்” (Volksschulen) பள்ளிகளில் மேற்பார்வையிடும் பணிகளையும் செய்தார். இது ஏழைகளுக்கு மட்டுமல்லாமல் மற்றவர்களும் கலந்துகொண்டனர். அவர் தொடர்ச்சியான பள்ளிகளை ஊக்குவித்தார். மற்றும், பயிற்சியாளர்களுக்கும், பணியாளர்களுக்கும் தொழில்நுட்ப அறிவுரைகளுக்கு ஆதரவாக இருந்தார். அவர் புதிதாக (Maria-Hilf zu Schwyz) எனப்படும் இயேசுசபை கல்லூரி ஒன்றை நிறுவினார். புதிய கத்தோலிக்க வாழ்க்கையைத் தூண்டுவதற்காக அவர் மத குருக்களுக்காக பிரபலமான பணிகளையும் தியானங்களையும் தொடங்கினார்.
சுவிஸ் ஆயர்களின் வருடாந்த மாநாட்டின் நிறுவனம் உருவாவதற்கு, இவரது முயற்சிகளே காரணமாக இருந்தது. சுவிஸ் கத்தோலிக்கர்களின் கத்தோலிக்க உணர்வுகளை வலுப்படுத்தவும், சமூக வேலைகளை ஒழுங்கமைக்கவும், “பக்தி சபையை” (Pius Society) நிறுவினார்.
சிறுவர்கள், பயிற்சி பெற்றவர்கள், புறக்கணிக்கப்பட்ட சிறுவர்கள், மற்றும் வெளியேற்றப்பட்ட கைதிகள் போன்ற உதவியற்ற மற்றும் சார்ந்து இருக்கும் கவனிப்பு மற்றும் ஆய்வுகளின் மீது அவர் மிகவும் ஆர்வமாக இருந்தார். தொழில் சம்பந்தமான கேள்விகளுக்கு, 1863ம் ஆண்டு, பிராங்க்ஃபோர்ட்டில் தமது உரையில் அவர் தம்மை வெளிப்படுத்தினார். தொழிற்துறை, தொழிற்சங்கங்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு கடன் தரும் வங்கிகள் ஆகியவற்றை கிறிஸ்தவ மயமாக்க கோருகையில், அவர் பின்வருமாறு கூறினார்:
"முன்பு, மடாலயங்கள் தொழிற்சாலைகளாக மாறியது; இப்போது தொழிற்சாலைகள் மடாலயங்களாக மாறும்; இலாபங்கள் தொழிலாளர்களுடன் பகிர்ந்து கொள்ளப்பட வேண்டும்".
இந்த யோசனையை நிறைவேற்றுவதற்காகம், தொழிற்சாலைகள் நிறுவப்பட்டன. ஆனால் அவை நிறுவியவர்களிடையே வணிக திறமையின்மை காரணமாக அவை தோல்வியடைந்தன. தந்தை தியடோசியஸ், (Ingenbohl) எனுமிடத்தில், புத்தகங்கள் அச்சிடும் மற்றும் புத்தக-கட்டு அமைப்பு ஒன்றையும், புத்தகங்கள் விநியோகத்திற்கான ஒரு சமுதாயத்தையும் நிறுவினார்.
தந்தை தியடோசியஸ், பலரின் வாழ்வில் ஆன்மீக வழிகாட்டியாக திகழ்ந்தார். அத்துடன் பல குடும்பங்களில் அப்போஸ்தல வாழ்வை அறிமுகப்படுத்தினார். அத்துடன் பள்ளிகளிலும் மருத்துவ மனைகளிலும் பல தொழிற்சாலைகளிலும் ஆன்மீக வழிகாட்டியாகப் பணியாற்றினார்.
இவர் கைவிடப்பட்டவர்களுக்கென்று பல இல்லங்களை நிறுவினார். அதன்பிறகு ஆண்களுக்கென சில மருத்துவப் பயிற்சி பெறும் இல்லங்களை நிறுவினார். இடைவிடாமல் பணியாற்றி பல அச்சிடும் நிறுவனங்களையும், நூலகங்களையும், தொழிற்சாலைகளையும் நிறுவினார். இவர் பல பள்ளிகளை ஒருங்கிணைக்கும் பணியை சிறப்பாக ஆற்றினார். இவர் "மக்களின் மறைப்பரப்பு பணியாளர்" என்றழைக்கப்பட்டார்.
No comments:
Post a Comment