புனிதர்களை பெயர் வரிசையில் தேட

Translate

17 February 2020

புனிதர் கிளாடி டி லா கொலொம்பியெர் பெப்ரவரி 15

† இன்றைய புனிதர் †
(ஃபெப்ரவரி 15)

 (St. Claude de la Colombiere)

✠ புனிதர் கிளாடி டி லா கொலொம்பியெர் ✠

ஒருவருக்கொருவர் நன்மை செய்து பரிவு காட்டுங்கள் (எபே 4:32)
பெர்ட்ரன்ட் லா கொலம்பியர் மற்றும் மார்க்கிரேட் காய்ன்டட் ஆகியோரின் மூன்றாவது குழந்தையாக 1641, பிப்ரவரி இரண்டாம் தேதி பிறந்தவர் க்ளாத்ததெ லா கொலம்பியர் .பிரான்ஸ் நாட்டின் தெற்குப் பகுதியில் பிறந்த இவர், வியன்னாவிற்கு இடம் பெயர்ந்த பெற்றோருடன் சென்று அங்கே தொடக்கக் கல்வியைப் பயின்றார் .லயோன் சென்று மெய்யியல் கற்றார்.

அந்த நாட்களில் இறைவனின் அழைத்தலை உணர்ந்து இயேசு சபையில் சேர முடிவு செய்தார் .17 வயதில் அவிங்கோனில் நவதுறவி பயிற்சியை ஆரம்பித்தார். பயிற்சிக்குப் பிறகு முதல் வார்த்தைப்பாடு கொடுத்தார் .தொடர்ந்து ஜந்து ஆண்டுகள் ஆசிரியராகப் பணியாற்றினார் .1666 இல் பாரிஸ் சென்று இறையியல் படிப்பை முடித்து குருவாகத் திருநிலைப்படுத்தப்பட்டு லயோன் திரும்பினார்.

முழுநேர மறையுரையாளராக, வழிகாட்டியாக ,பல்வேறு வகைகளில் மறைப்பணியாற்றினார். இறையியலில் கருத்தாழ மிக்க மறையுரைகளை வழங்கினார் . நற்செய்தியின் மதிப்பீடுகளை உள்வாங்கி அதனை மக்களுக்கு ஏற்ற வகையில் வெளிப்படுத்தி அனைவரின் உள்ளங்களையும் வசீகரித்தார் .கடவுள் எந்த அளவுக்குதத் தம் மக்களைப் பாதுகாக்கிறார் அன்பு செய்கிறார் என்பதை மக்கள் உணரச் செய்தார்.

1675 ,பிப்ரவரி இரண்டாம் தேதி நித்திய வார்த்தைப்பாடு கொடுத்து பிறகு பாரே-லெ மோனியால் கல்லூரியின் அதிபராக நியமனம் பெற்றார் .எல்லாரும் சரியான தேர்வு என்று கூறி க்ளாத்தெவைப் புகழ்ந்தார்கள் .இக் கல்லூரிக்கு அருகிலேயே கன்னியர் மடம் ஒன்று இருந்தது .அந்த மடத்தில் அருள்சகோதரி மார்க்கிரேட் மேரி அலகாக் இருந்தார் .இவருக்கு திரு இருதய ஆண்டவர் காட்சி கொடுத்து தமது இருதயத்தைத் திறந்து காட்டினார் . பல்வேறு செய்திகளையும் வெளிப்படுத்தினார். யாரிடம் இதைக் கூறுவது என்று தெரியாமல் மார்க்கிரேட் தவித்து செபித்து வந்தார்.

ஆண்டவர் க்ளாத்தெவுக்கு அறிவுறுத்தி அம்மடத்திற்கு அனுப்பினார் .இருவரும் சந்தித்து உரையாடினார். 'ஆண்டவர் இயேசு கிறிஸ்து என் மன்றாட்டைக் கேட்டருளிளார் ' என்று மார்க்கிரேட் ஆனந்தம் அடைந்தார் .திரு இருதய ஆண்டவர் தமக்குக் கூறிய நற்செய்திகளையும் திருஇருதய பக்தி பரவ ஆண்டவர் விரும்புகிறார் என்பதையும் க்ளாத்தெயிடம் கூறினார். அதை ஆண்டவரின் காட்சி வெளிப்பாடுதான் என்பதை அவரும் நம்பினார் அதன் பிறகு ,அனைத்தையும் எழுதும்படி மார்க்கிரேட்டிடம் கேட்டுக்கொண்டார்.

ஒன்றரை ஆண்டுகள் பாரே-இல் வேலை செய்துவிட்டு லண்டன் சென்றார். அங்கிருந்த டச்ச மக்களுக்கு மறையுரை ஆற்றும் கடினமான பணி இவருக்கு வழங்கப்பட்டது. புனித ஜேம்ஸ் அரண்மனையில் தங்கினார். அரண்மனையில் இருந்த ஆலயத்தில் திருப்பலி நிறைவேற்றியதுடன் ,பலருக்கும் ஆன்ம வழிகாட்டியாகவும் திகழ்ந்தார். நேரிடையாகவும் கடிதம் வழியாகவும் இப்பணியை நிறைவுடன் செய்தார்.

திருச்சபையை விட்டுச் சென்ற பலர் மனமாற்றம் வேண்டி இவரிடம் வந்து பழைய இயல்புகளைக் களைந்துவிட்டு புதிய இயல்புகளை அணிந்து கொண்டார்கள். இதைப் பற்றி குறிப்பிடும் போது, "இங்கு வந்ததில் இருந்து, நான் கண்டு மகிழ்ந்த கடவுளின் இரக்கத்தைப் பற்றி பெரிய புத்தகமே எழுதலாம் "என்றார்.

பருவ நிலையில் தாக்குதல்களுக்கு ஈடு கொடுக்க முடியாது க்ளாத்தெ அடிக்கடி நோயுற்றார் .திடீரென 1678 ஆம் ஆண்டு தவறான தகவலின்படி கைது செய்யப்பட்டு மூன்று வாரங்கள் சிறையில் அடைக்கப்பட்டார். அப்போது உடல்நிலை மேலும் மோசமானது .1681 இல் பாரேவிற்கு வந்தவர்  1682 பிப்ரவரி 15 ஆம் நாள் மரணமடைந்தார். இவரைப் பற்றிக் குறிப்பிட்ட மார்க்கிரேட் மேரி ,"அன்பின் நற்செய்தி வழியாக ,கிறிஸ்து வெளிப்படுத்திய இரக்கத்தின் வழியாக, ஆன்மாக்களைக் கடவுளிடம் கொண்டு வந்து சேர்த்தவர் "என்றார் .1929, ஜூன் 16 அன்று திருத்தந்தை 11 ஆம் பக்தி நாதரால் அருளாளர் நிலைக்கு உயர்ந்த க்ளாத்தெ 1992 மே மாதம் 31-ஆம் தேதி திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுல் வழியாக புனித நிலைக்கு உயர்ந்தார்.

இறையழைத்தல் பெற நம்மால் இயன்ற நலமான உதவிகளைச் செய்யும் போது நாமும் அருளில் நிறைகிறோம்.

No comments:

Post a Comment