இன்றைய புனிதர்
2020-02-17
பிறப்பு
1200,
பதுவை இத்தாலி
இறப்பு
17 பிப்ரவரி 1285,
பதுவை இத்தாலி
இவர் ஓர் உயர்தர குடும்பத்தில் பிறந்தவர். 1220 ஆம் ஆண்டு புனித பிரான்சிஸ் அசிசியாரின் சபையில் சேர்ந்தார். பின்னர் பதுவை நகர் புனித அந்தோனியாரிடம் கல்வி பயின்றார். பெலூடி புனித பிரான்சிஸ்கன் சபையில் மிகச் சிறந்தவராக திகழ்ந்தார். இவர் தான் வாழும் போதே கடவுளின் அருளால் பல நோய்களை குணமாக்கினார். சிறப்பாக "புண்களை" குணமாக்குவதில் சிறப்பான வல்லமையைப் பெற்றிருந்தார். இவர் புனித அந்தோனியாரிடம் மிகுந்த நட்பு கொண்டிருந்தார். இதன் விளைவாக அந்தோனியார் இறந்தபிறகு அவரின் பெயரில் 1232 ஆம் ஆண்டு பதுவை நகரில் பேராலயம் ஒன்றை எழுப்பினார். அவர் இவ்வாலயத்தை கட்டிக்கொண்டிருக்கும் போதே கப்புச்சின் சபையின் மாநிலத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் பதுவை நகர் லூக்காஸ் என்று அழைக்கப்பட்டார்.
இவர் இறந்து 100 ஆண்டுகள் கழித்து 1382 ஆம் ஆண்டு பதுவை நகர் லூக்கா என்ற பெயரில் புனித அந்தோனியாரின் பேராலயத்திற்குள்ளேயே ஆலயம் ஒன்று கட்டப்பட்டது. 1927 ஆம் ஆண்டு மே மாதம் 18 ஆம் நாள் திருத்தந்தை 11 ஆம் பயஸ் திருநிலைப்படுத்தி பிரான்சிஸ்கன் சபையின் மறைப்போதகர் என்ற பெயரை அளித்தார்.
செபம்:
எல்லாம் வல்ல கடவுளே! சிறந்த மறைப்போதகரும் நோய்களை குணமாக்குபவரான லூக்காஸ் பெலூடி, உம் பணியை திறம்பட ஆற்ற அருளை வழங்கியுள்ளீர். அவர் எழுப்பிய புனித அந்தோனியாரின் பேராலயத்திற்கு வருகின்ற ஒவ்வொரு மக்களையும் நீர் நிறைவாக ஆசீர்வதியும். உம்மை அண்டி வரும் மக்களுக்கு அருளைப் பொழிந்து வாழ்வை வளமாக்கிட வரம் தருமாறு இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
இந்நாளில் நினைவுகூறப்படும் பிற புனிதர்கள்
1. இஸ்னி நகர் துறவி மங்கோல்டு Mangold von Isny
பிறப்பு : 11 ஆம் நூற்றாண்டு
இறப்பு : 1150, இஸ்னி, ஜெர்மனி
2. ராட்சேபூர்க் ஆயர் எவர்மோட் Evermod von Ratzeburg
பிறப்பு : 1200 பெல்ஜியம்
இறப்பு : 1278
3. மறைசாட்சி பிரான்சு ரெஜிஸ் கிளெட் Franz Regis Clet CM
பிறப்பு : 19 ஆகஸ்ட் 1748 கிரேனொபெல் Grenoble, பிரான்சு
இறப்பு : 17 பிப்ரவரி 1829 சீனா
முத்திபேறுபட்டம்: 27 மே 1900 திருத்தந்தை 13 ஆம் லியோ
No comments:
Post a Comment