இன்றைய புனிதர் :
(18-02-2020)
தூய சிமியோன் (பிப்ரவரி 18
“கோதுமை மணி மண்ணில் விழுந்து மடியாவிட்டால் அது அப்படியே இருக்கும். அது மடிந்தால்தான் மிகுந்த விளைச்சலை அளிக்கும் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்” (யோவா 12: 24)
வாழ்க்கை வரலாறு
இன்று நாம் விழாக் கொண்டாடும் சிமியோன், இயேசு பிறப்பதற்கு முன்பாக எட்டு ஆண்டுகளுக்கு முன்பாக, அதாவது கி.மு. 8 ஆம் ஆண்டில் பிறந்தார். இவர் இயேசுவின் வளர்ப்புத் தந்தை யோசேப்பின் சகோதரரான கிளயோப்பாவிற்கும், இயேசுவின் தாயான மரியாவின் சகோதரிக்கும் மகனாகப் பிறந்தார். அப்படிப் பார்க்கும்போது இவரை இயேசுவின் சகோதரர் என்றுதான் சொல்லவேண்டும். மேலும் எம்மாவு நோக்கிச் சென்ற இருவரில் ஒருவர் எனவும், ஆண்டவர் இயேசுவின் விண்ணேற்றத்திற்குப் பிறகு நிகந்த பெந்தகோஸ்தே நிகழ்வில் இவரும் இருந்தார் என்று நம்பப்படுகின்றது.
எருசலேமின் முதல் ஆயரான சின்ன யாக்கோபு கொல்லப்பட்டபோது, இவர் யூதர்களை மிகக் கடுமையாக விமர்சித்தார். சின்ன யாக்கோபின் மறைவிற்குப் பிறகு எருசலேமின் ஆயர் பொறுப்பானது காலியாக இருந்தது. அத்தகைய சூழ்நிலையில் எருசலேமின் ஆயராக யாரை நியமிக்கலாம் என்று திருத்தூதர்கள் கலந்தாலோசித்தபோது சிமியோனின் பெயரையே பரிந்துரைத்தார்கள். திருதூதர்கள் ஒருமனதாக சிமியோனைத் தேர்ந்தெடுத்து ஆயர் பதவியில் அமர்த்தியபோது, அவர் சிறப்பாகப் பணிகளைச் செய்து வந்தார். இதற்கிடையில் உரோமை அரசாங்கம் எருசலேமின்மீது படையெடுத்து வந்து, அதனை அழித்தொழிக்கத் திட்டம் தீட்டியது. இச்செய்தி ஆயர் சிமியோனுக்கு முன்கூட்டியே தெரிய வந்தது. எனவே அவர் இறைமக்களை அழைத்துக்கொண்டு யோர்தான் ஆற்றுக்கு அப்பால் இருக்கின்ற பெல்லா என்று பகுதியில் போய் தங்கினார். பிரச்சனைகளெல்லாம் ஓய்ந்தபிறகு, மீண்டுமாக அவர் இறைமக்களை அழைத்துகொண்டு வந்து எருசலேமில் குடிபெயர்ந்தார்.
சிலகாலம் எல்லாமும் அமைதியாகப் போய்க்கொண்டிருக்கிறதது. டிரேஜனின் ஆட்சிக்காலத்தில் பிரச்சனைகள் மீண்டுமாகத் தலைதூக்கத் தொடங்கியது. அவன் தாவீதின் வழிவந்தவர்களை கொன்றொழிக்கத் திட்டம் தீட்டினான். அப்போது ஆயர் சிமியோன், “நான் தாவீதின் வழிவந்தவர் மட்டும் கிடையாது, கிறிஸ்தவரும்கூட” என்று மிகத் துணிச்சலாகச் சொன்னார். இதனால் சினம்கொண்ட அரசன் அவரைப் பிடித்து சிறையில் அடைத்து சித்ரவதை செய்தான். அப்போதும் அவர் தன்னுடைய விசுவாசத்தில் மிக உறுதியாக இருந்தார். இதனால் வெகுண்டெழுந்த அரசன் அவரை சிலுவையில் அறைந்து கொன்றுபோட்டான். அப்போது அவருக்கு வயது 120. தன்னுடைய முதிர்ந்த வயதிலும் தளராத வசுவாசத்தோடு சிமியோன் இருப்பதைப் பார்த்துவிட்டு எல்லாரும் ஆச்சரியப்பட்டுப் போய் நின்றார்கள்
No comments:
Post a Comment