புனிதர்களை பெயர் வரிசையில் தேட

Translate

18 February 2020

புனித ஆன்கெல்பெர்ட் Angelbert

இன்றைய புனிதர்
2020-02-18
புனித ஆன்கெல்பெர்ட் Angelbert

பிறப்பு
750
இறப்பு
18 பிப்ரவரி 814,
ரிக்குயர் Riquier, பிரான்சு

இவர் பிரெஞ்சு நாட்டை பாதுகாக்கும் போர்படையில் பணிபுரிந்தவர். அப்போது டெனிஸ் Danes என்பவன் பிரெஞ்சு நாட்டின் ஆற்றங்கரை ஒன்றில் தங்கி, அந்நாட்டிற்கு எதிராகப் போர் புரிந்தான். அவனை எதிர்த்து ஆன்கெல்பெர்ட் போரிட வேண்டியிருந்தது. அச்சமயத்தில் அவர் புனித ரிக்குயர் என்ற புனிதரின் கல்லறைக்குச் சென்று இப்போரில்தான் டெனிஸ்சிற்கு எதிராக வெற்றிபெற்றால் தான் ஓர் துறவியாகிறேன் என்று செபித்தார். பிறகு இடி, மின்னல் புயல் என்று பாராமல் திடீரென்று டெனிஸ் படையெடுத்தான். ஆன்கெல்பெர்ட் அவனை எதிர்த்து போரிட்டு தன் படையுடன் வெற்றி பெற்றார்.

அவர் பெற்ற வெற்றியானது, அந்நாட்டை எவ்விதத்திலும் பாதிக்காமல் காப்பாற்றப்பட்டது. இதன் விளைவாக கடவுள் இவரின் மன்றாட்டை ஏற்று வெற்றிப் பெறச் செய்ததால் செயிண்ட் ரிக்குயிர் அவர்களின் துறவற இல்லத்திற்குச் சென்று துறவியானார். பின்னர் அச்சபையின் மடாதிபதி பொறுப்பையும் ஏற்று மிகச் சிறப்பாக அச்சபையை வழிநடத்தினார். இவர் தன் வாழ்நாள் முழுவதும் இடைவிடாது இரவும் பகலும் செபம் செய்து திருப்பாடல்களைப்பாடி இறைவனை போற்றி புகழ்ந்து இறைவழியில் தன் சபையை வழிநடத்தினார்.

அதன்பிறகு இவர் 24 மணிநேரமும் துறவிகள் கட்டாயமாக செபம் செய்ய வேண்டுமென்பதை வலியுறுத்தினார். கடுமையான விதிமுறை கடைப்பிடிக்கச் செய்தார். புனித கன்னிமரியாள், சூசையப்பர் இவர்களின் செப வாழ்வை வாழ தன் சபைத் துறவிகளிடத்தில் வலியுறுத்தினார். இவர் இறந்தபிறகு ஏறக்குறைய 100 ஆண்டுகள் கழித்தும் இவரின் உடல் அழியாமல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.


செபம்:
உலகம் முழுவதையும் படைத்து பராமரித்தாளும் எம் இறைவா! தான் செய்த பணியின் வழியாக தன்னை முழுவதும் உமக்கு அர்ப்பணமாக்கிய புனித ஆன்கெல்பெர்ட்டை நினைத்து உமக்கு நன்றி கூறுகின்றோம். அவர் வாழ்ந்த ஆன்மீக வாழ்வை நாங்கள் பின்பற்றி சொல் செயல் சிந்தனைகளில் என்றும் உம்மோடு இணைந்து வாழ வரம் தாரும்.




இந்நாளில் நினைவுகூறப்படும் பிற புனிதர்கள்

துறவி ப்ரா அங்கெலிக்கா Fra Angelico
பிறப்பு : 1387 விச்சியோ டீ முகெல்லா Vicchiodi Mugello, இத்தாலி
இறப்பு : 1455 உரோம், இத்தாலி
பாதுகாவல் : கத்தோலிக்க கலைஞர்கள்

No comments:

Post a Comment