புனிதர்களை பெயர் வரிசையில் தேட

Translate

12 February 2020

துறவி ஹீம்பலீனா Humbelina OSB 2020-02-12

இன்றைய புனிதர்
2020-02-12
துறவி ஹீம்பலீனா Humbelina OSB

பிறப்பு
11 ஆம் நூற்றாண்டு,
பிரான்சு
இறப்பு
1130,
ஜூலி-சுர்-சார்சே Jully-sur-Sarce

இவர் கிளேர்வாக்ஸ் Clairvaux நகரைச் சேர்ந்த்த புனித பெர்னார்டு Bernhard அவர்களின் சகோதரி. இவர் தன் இளம் வயதிலேயே தன் குடும்பத்தை விட்டு வெளியேறி, துறவற மடத்தில் வாழ்ந்து வந்தார். பின்னர் தன்னை முழுவதுமாக இறைவனுக்கு அர்ப்பணித்து துறவியானார். மேலும் இவரைப்பற்றிய வரலாறு, அதிகம் கொடுக்கப்படவில்லை. இவர் தனது இறுதிவரை துறவியாகவே வாழ்ந்து இறந்தார் என்று சொல்லப்படுகின்றது. இவர் புனித பெனடிக்ட் துறவற சபையில் தலைமை பொறுப்பில் ஈடுபட்டார் என்றும் கூறப்படுகின்றது. இவரது கல்லறையின் மேல் சிறிய கெபி ஒன்று கட்டப்பட்டு வணக்கம் செலுத்தப்படுகின்றது. இவர் துறவிகளின் முன்மாதிரி என்று சொல்லப்பட்டார்


செபம்:
அன்புத் தந்தையே! வாழ்வது நானல்ல, என்னில் வாழ்வது கிறிஸ்துவே என்று தன்னை இறுதிவரை உமக்காக அர்ப்பணித்து வாழ்ந்த புனித ஹிம்பலீனாவை எமக்குக் கொடையாகக் கொடுத்தமைக்காக உமக்கு நன்றி கூறுகின்றோம். அவரின் வேண்டுதலால் துறவிகள் ஒவ்வொருவரும் மற்றவர்களுக்கு சிறந்ததோர் எடுத்துக்காட்டான வாழ்வை வாழ உதவி செய்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்




இந்நாளில் நினைவுகூறப்படும் பிற புனிதர்கள்

லூடானுஸ்
பிறப்பு : 12 ஆம் நூற்றாண்டு, ஸ்காட்லாந்து (?)
இறப்பு : 12 பிப்ரவரி 1202, எல்சாஸ் Elsaß, பிரான்சு

No comments:

Post a Comment