புனிதர்களை பெயர் வரிசையில் தேட

Translate

23 June 2020

புனித தாமஸ் கார்னெட் (1575-1608) June 23

ஜூன் 23 

புனித தாமஸ் கார்னெட் (1575-1608)

இவர் இங்கிலாந்து நாட்டில் உள்ள சௌத்வார்க் என்ற இடத்தில் பிறந்தவர்.
இவருக்குப் பதினாறு வயது நடக்கும்பொழுது இறையழைத்தலை உணர்ந்தார். ஆதலால் இவர் முதலில்  பிரான்ஸ் நாட்டிலும், அதன்பின்னர் ஸ்பெயின் நாட்டிலும் குருத்துவப் படிப்புப் படித்து, 1599ஆம் ஆண்டு அருள் பணியாளராக அருள்பொழிவு செய்யப்பட்டார். 

இதன்பிறகு இவர் ஆறு ஆண்டுகள் இங்கிலாந்து நாட்டில் ஆன்மாக்களை மீட்டெடுக்கும் பணியை மிகச் சிறப்பாக செய்து வந்தார். இப்படிப்பட்ட சூழ்நிலையில் இங்கிலாந்து அரசாங்கம், இவர் வெடிமருந்து தயாரிக்கிறார் என்று பொய்யான வழக்குப் பதிவு செய்து, இவரைக் கைதுசெய்து சிறையில் அடைத்துச் சித்திரவதை செய்தது.

ஏறக்குறைய ஓராண்டு சிறைத்தண்டனையை அனுபவித்து வந்த இவர், அதன்பிறகு நிரபராதி என்று விடுதலை செய்யப்பட்டார். 

இதன்பிறகு இவர் இயேசு சபையில் சேர்ந்து குருத்துவ பணியைச் செய்து வந்தார். இந்நேரத்தில் இங்கிலாந்துத் திருஅவை இவரைக் கத்தோலிக்கத் திருஅவையை புறக்கணித்துவிட்டு, இங்கிலாந்துத் திருஅவையை  ஏற்றுக்கொள்ளச் சொன்னது. அதற்கு அவர் மறுப்பு தெரிவித்ததால், 1608 ஆம் ஆண்டு இவர் கொல்லப்பட்டார்.

இவருக்கு 1970 ஆம் ஆண்டு புனிதர் பட்டம் கொடுக்கப்பட்டது.

No comments:

Post a Comment