இன்றைய புனிதர் : (23-06-2020)
புனித. எத்தல்டிரேடா (St.Etheldreda)
இங்கிலாந்து நாட்டு பாதுகாவலர், துறவி
பிறப்பு
635
இறப்பு
23 ஜூன் 679
இவர் ஓர் அரசர் குடும்பத்தில் மகனாக பிறந்தார். இவரின் தாய் ஒஸ்டான்கிளியன்(Ostanglion) என்ற நாட்டின் அரசி அன்னா. இவரின் தந்தை ஸ்காட்லாந்து நாட்டின் அரசர் டோண்ட்பெர்த்(Tondberth). இவரின் இளம் வயதிலேயே இவர் தந்தை இறந்துவிட்டார். இதனால் இவரும், தாயும் "ஏலி"(Ely) என்ற தீவுக்கு சென்றார்கள். தனது 25 ஆம் வயதில் அரசியல் வாழ்வில் தன்னை ஈடுபடுத்த வற்புறுத்தப்பட்டார். இதனால் 15 ஆண்டுகள் அரசியலில் வாழ்ந்த இவர் வட உம்பிரியன்(North Umbrien) நாட்டை சேர்ந்த அரசருக்கு திருமணம் செய்துவைக்கப்பட்டார். திருமண வாழ்வில் ஈடுபாடு இல்லாத எத்தல்டிரேடா தன் கணவரை விட்டு பிரிந்தார். 12 ஆண்டுகள் தன் கணவரை பிரிந்து வாழ்ந்த அவர், துறவற வாழ்வில் ஈடுபட விரும்பி, ஓர் துறவற இல்லம் நோக்கி சென்றார். உம்பிரியன் நாட்டு ஆயர் வில்பரட்(Wilfried) அவர்களின் உதவியுடன் ஓர் துறவற இல்லத்தில் சேர்ந்தார். சில ஆண்டுகள் கழித்து தான் வாழ்ந்த ஏலி தீவின்மேல் அளவுக்கு அதிகமான நினைவு வரவே, தீவிற்கு திரும்பி சென்றார். அப்போது அவரின் கணவர் இறந்துவிடவே, தன் நாட்களை அத்தீவிலேயே கழித்தார். 673 ஆம் ஆண்டு ஏலி தீவில் இரண்டு துறவற இல்லங்களை கட்டினார். இதுவே சில ஆண்டுகள் கழித்து பெண்களுக்கென்று தொடங்கப்பட்ட முதல் துறவற இல்லமானது. இவரே அத்துறவற இல்லத்தின் முதல் துறவி என்ற பெயரையும் பெற்றார். தன்னைமுழுவதும் இறைவனுக்கு அர்ப்பணித்த எத்தல்டிரேடா, தான் தொடங்கிய இல்லத்திலேயே இறந்தார். இவர் இறந்தபிறகு இவரின் கணவர் புதைக்கப்பட்ட கல்லறையிலேயே அடக்கம் செய்யப்பட்டார். இறந்த 16 ஆண்டுகள் கழித்து இவரின் கல்லறையின் மேல் அத்துறவற இல்லத்தின் ஆலயம் கட்டப்பட்டது.
செபம்:
அன்பே உருவான இறைவா! உம்மீது தணியாத தாகம் கொண்டு வாழ்ந்து, மனிதர்களாக வாழ்ந்து, தங்களின் வாழ்க்கையால் புனிதராக வாழ்ந்தவர்களைப்போல், நாங்களும் உம்மீது நம்பிக்கை, விசுவாசம் கொண்டு, உம்மை எம் வாழ்வில் பிரதிபலிக்க உம் அருள் தாரும்.
---JDH---தெய்வீக குணமளிக்கும் இயேசு /திண்டுக்கல்.
Saint of the Day : (23-06-2020)
Saint Etheldreda
Sister of Saint Jurmin. Relative of King Anna of East Anglia, England. Princess. Widowed after three years marriage; rumor had it that the marriage was never consumated as Etheldrda had taken a vow of perpetual virginity. She married again for political reasons. Her new husband knew of her vow, but grew tired of living as brother and sister, and began to make advances on her; she refused him. He tried to bribe the local bishop, Saint Wilfrid of York, to release her from her vow; Wilfrid refused, and instead helped Audrey escape to a promontory called Colbert's Head. A high tide then came in - and stayed high for seven days; it kept her separated from her husband and was considered divine intervention. The young man gave up; the marriage was annulled, and Audrey took the veil. She spent a year with her neice, Saint Ebbe the Elder. Founded the great abbey of Ely, where she lived an austere life.
Etheldreda died of an enormous and unsightly tumor on her neck. She gratefully accepted this as Divine retribution for all the necklaces she had worn in her early years.
In the Middle Ages, a festival called Saint Audrey's Fair, was held at Ely on her feast day. The exceptional shodiness of the merchandise, especially the neckerchiefs, contributed to the English language the word tawdry, a corruption of Saint Audrey.
Born :
c.636
Died :
23 June 679 of natural causes
• body re-interred in 694; found incorrupt
• body re-interred in the Cathedral at Ely in 1106; found incorrupt
Patronage :
neck ailments
• throat ailments
• widows
• University of Cambridge
---JDH---Jesus the Divine Healer---
† இன்றைய புனிதர் †
(ஜூன் 23)
✠ புனிதர் எத்தெல்டிரெடா ✠
(St. Etheldreda)
அரசி/ இளவரசி/ மடாதிபதி:
(Queen/ Princess/ Abbess)
பிறப்பு: கி.பி. 636
எக்ஸ்னிங், ஸஃபோல்க்
(Exning, Suffolk)
இறப்பு: ஜூன் 23, 679
எலி, கேம்ப்ரிட்ஜ்ஷைர்
(Ely, Cambridgeshire)
ஏற்கும் சமயம்:
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)
கிழக்கு மரபுவழி திருச்சபை
(Eastern Orthodox Church)
ஆங்கிலிகன் சமூகம்
(Anglican Communion)
முக்கிய திருத்தலம்:
புனிதர் எத்தெல்டிரெடா ஆலயம், எளி பிளேஸ், ஹோல்போர்ன், லண்டன்; முன்பு எளி ஆலயம் (தற்போது அழிந்துவிட்டது)
(St Etheldreda's Church, Ely Place, Holborn, London; Originally Ely Cathedral (Now Destroyed)
பாதுகாவல்: தொண்டை நோய்கள்
நினைவுத் திருநாள்: ஜூன் 23
புனிதர் எத்தெல்டிரெடா, ஓர் அரசர் குடும்பத்தில் மகளாக பிறந்தவர். இவர் ஒரு “கிழக்கு ஆங்கிலியன் இளவரசியும்” (East Anglian Princess), “ஃபின்லாந்து” மற்றும் “நார்தும்ப்ரியன்” அரசியும் (Fenland and Northumbrian Queen), “எளி” என்ற இடத்திலுள்ள துறவு மடத்தின் (Abbess of Ely) மடாதிபதியும், “ஆங்கிலோ-சாக்சன்” (Anglo-Saxon Saint) புனிதருமாவார்.
“கிழக்கு ஆங்கில்ஸ்” (East Anglia) நாட்டின் அரசனான “அன்னா’வுக்கு” (Anna of East Anglia) பிறந்த நான்கு புனிதர்களான பெண்களில் ஒருவர்தான் எத்தெல்டிரெடா. இந்த சகோதரிகள் நால்வருமே இவ்வுலக சுக வாழ்வினை துறந்து துறவறம் பெற்றவர்களேயாவர்.
எத்தெல்டிரெடா, கி.பி. 652ம் ஆண்டு, தமது பதினாறாவது வயதிலேயே “தெற்கு ஜிர்வ்” (South Gyrwe) நாட்டின் இளவரசனான “டோன்ட்பெர்க்ட்” (Tondberct) என்பவரை முதல் திருமணம் செய்துகொண்டார். தாம் ஏற்கனவே தமது திருமணத்தின் முன்பே கன்னிமை காப்பதாக இறைவனிடம் எடுத்துக்கொண்ட பிரமாணிக்கத்தின்படி, தன் கணவன் தம்மை நிரந்தரமாக கன்னித்தன்மையுடன் ஏற்றுக்கொள்வதற்கு இணங்கச் செய்தார். திருமணமான மூன்றே வருடத்தில், கி.பி. 655ம் ஆண்டு, அவரது கணவர் “டோன்ட்பெர்க்ட்” (Tondberct) இறந்து போனார். தமது கணவர் தமக்கு பரிசாக தந்த “எலி” (Isle of Ely) எனும் வரலாற்றுப் பிராந்தியத்திற்குச் சென்றார்.
அதன்பின்னர் தொடர்ச்சியாக, கி.பி. 660ம் ஆண்டு, அவர் “எக்ஃபிரித்” (Ecgfrith of Northumbria) என்பவரை அரசியல் காரணங்களுக்காக மறுமணம் செய்துகொண்டார். கணவர் அரியணை எரிய சிறிது காலத்திலேயே, கி.பி. 670ம் ஆண்டு, எத்தெல்டிரெடா துறவறம் பெற்றார். எத்தெல்டிரெடாவின் இந்த நடவடிக்கை, அவரது கணவர் “எக்ஃபிரித்” மற்றும் “யோர்க்” மறைமாவட்ட ஆயர் (Bishop of York) “வில்ஃபிரிட்” (Wilfrid) ஆகியோரிடையேயான நீண்ட கால சண்டைக்கு வழி வகுத்தது.
ஆரம்பத்தில், எத்தெல்டிரெடா கன்னியாகவே வாழ சம்மதம் தெரிவித்திருந்த “எக்ஃபிரித்”, 672ம் ஆண்டு, தங்களது திருமணத்தை முறித்துக்கொள்ள விரும்பினார். அரசி நம்பவேண்டும் என்பதற்காக, வில்ஃபிரெட்டுக்கு லஞ்சம் கொடுத்து தமது செல்வாக்கை உபயோகிக்க முயற்சித்தார். இந்த தந்திரோபாயம் தோல்வியுற்றதும், மன்னர் தனது ராணியை வலுக்கட்டாயமாக கைப்பற்ற முயன்றார். எத்தெல்டிரெடா திரும்ப இரண்டு விசுவாசமுள்ள அருட்சகோதரியருடன் “எளி” (Ely) பறந்தார். தாம் கைப்பற்றப்படுவதை தவிர்க்க முடிந்தது. சிறிது காலத்தின் பின்னர் “எயோர்மென்பர்க்” (Eormenburg) என்ற பெண்ணை மறுமணம் செய்துகொண்ட “எக்ஃபிரித்” (Ecgfrith) கி.பி. 678ம் ஆண்டு, ஆயர் வில்ஃபிரிடை தமது நாட்டை விட்டு நாடுகடத்தினான். கி.பி. 673ம் ஆண்டு, எத்தெல்டிரெடா “எளி” (Ely) தீவில் ஒரு “இரட்டை துறவு மடம்” (Double Monastery) நிறுவினார். பிற்காலத்தில், 870ம் ஆண்டு, இவ்விரட்டை மடம் “டேனிஷ்” (Danish) எனும் மன்னனின் முற்றுகையின்போது முற்றிலும் தகர்க்கப்பட்டது.
No comments:
Post a Comment