புனிதர்களை பெயர் வரிசையில் தேட

Translate

18 June 2020

ஸ்ஷோனவின் புனித எலிசபெத் (Elisabeth of Schönau)துறவி June 18

இன்றைய புனிதர்
2020-06-18
ஸ்ஷோனவின் புனித எலிசபெத் (Elisabeth of Schönau)
துறவி
பிறப்பு
1128
பிங்கன், ரைன்
இறப்பு
18 ஜூன் 1164
ஸ்ஷோனவ்

சிறுவயதிலிருந்தே இறைவனிடத்தில் மிகவும் பக்தி கொண்ட இவர், தம் 12ஆம் வயதிலேயே ஸ்ஷோனவ் என்ற ஊரிலிருந்த புனித ஆசீர்வாதப்பர் சபையில் சேர்ந்தார். தனது 18 ஆம் வயதில் வார்த்தைப்பாடுகளை கொடுத்து துறவியானார். குழந்தை பருவத்திலிருந்தே தன்னை இறைவனிடம் அர்ப்பணித்து வாழ்ந்தார். இவர் பிறந்த ஊரிலிருந்த அனைவரிடத்திலும், மிகவும் அன்பாகவும், இரக்கமுள்ளவராகவும் இருந்தார்.

இளம் வயதிலேயே துறவியான இவர் மன நோய்க்கு ஆளாக்கப்பட்டார். இதனால் மிகவும் பயத்துடனேயே எப்போதும் வாழ்ந்து வந்தார். 1152 ஆம் ஆண்டிலிருந்து எலிசபெத், இறைவன் தரும் அருளை காட்சியாக பெற்றார். அவ்வாறு பலமுறை இறைவனின் காட்சியை பெறும்போது, ஒருநாள் மிகுந்த அச்சம் இவரை ஆட்கொண்டது, அன்று அவரை சுற்றி பேரோளி ஒன்று வீசியது. அப்போது அவர் மிகச் சரளமாக, தடுமாற்றம் இல்லாமல் அன்னிய மொழியான இத்தாலி மொழியை பேசினார். இம்மொழியை அவர் எப்போதும் கற்றுக்கொண்டதே இல்லை. எலிசபெத்தின் உடன்பிறந்த அண்ணன் ஏக்பர்ட்(Egbert Schönau) துறவியாக இருந்தார். இவர் எலிசபெத் கடவுளிடமிருந்து பெற்ற ஒவ்வொரு தரிசனத்தையும் தன் கைப்பட எழுதி வைத்துள்ளார். தான் இறைவனிடம் இருந்து பெற்ற தரிசனங்களின் வழியாக இவர் ஏராளமான மக்களுக்கு நன்மை செய்து, வாழ்வில் ஒளியேற்றியுள்ளார்.


செபம்:
அதிசயம் செய்பவரே எம் தந்தையே! நீர் பல அதிசயங்களை உம் மக்களுக்கு செய்து, உம் மக்களை குணமாக்கினீர். வழிநடத்தினீர். எங்களின் வாழ்வில் நீர் செய்கின்ற அற்புதங்களை நாங்கள் உணர எமக்கு உமது அருளையும், ஞானத்தையும் தந்தருளும்.




இந்நாளில் நினைவுகூறப்படும் பிற புனிதர்கள்

திருக்காட்சியாளர் மாந்துவா நகர் ஓசன்னா Osanna von Mantua OP
பிறப்பு: 17 ஜனவரி 1449, மாந்துவா Mantua, இத்தாலி
இறப்பு: 18 ஜூன் 1505, இத்தாலி


பிராபாண்ட் நகர் மறைசாட்சி மரியா தொலோரோசா Maria Dolorosa von Brabant
பிறப்பு: 13 ஆம் நூற்றாண்டு, புரூசல் Brüssel, பெல்ஜியம்
இறப்பு: 18 ஜூன் 1290, பெல்ஜியம்


மறைசாட்சி மர்செலியானூஸ் மற்றும் மார்குஸ் Markus und Marcellianus
பிறப்பு: 3 ஆம் நூற்றாண்டு, உரோம், இத்தாலி
இறப்பு: 305, இத்தாலி

No comments:

Post a Comment