புனிதர்களை பெயர் வரிசையில் தேட

Translate

22 June 2020

புனித நோலா பவுலீனுஸ் (St. Nola Paulinus)ஆயர் June 22

இன்றைய புனிதர் :
(22-06-2020)

புனித நோலா பவுலீனுஸ் (St. Nola Paulinus)
ஆயர்
பிறப்பு 
355
போர்தோ(Portho), பிரான்ஸ்
    
இறப்பு 
22 ஜூன் 431

இவர் பிரான்ஸ் நாட்டில் ஓர் உயர்குடியில் தோன்றியவர். இவர் தமது 25 ஆம் வயதிலேயே திறமைமிக்க பேச்சாளராகவும், கவிஞராகவும் விளங்கினார். அரச அவைக்கு மக்களின் பிரதிநிதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். வலண்டீனியன் என்ற அரசன் இவரை கம்பாஞ்ஞா(Companiya) மாநிலத்திற்கு ஆளுநராக நியமித்தார். இவர் மெய்மறையில் சேர்வதற்கு முன்னரே, திரேசியா என்ற ஒரு கிறிஸ்துவ பெண்ணை திருமணம் செய்து கொண்டார். 

இவர் 385 ஆம் ஆண்டு திருமுழுக்கு பெற்றார். அந்த ஆண்டில் அவரது ஒரே மகன் குழந்தை பருவத்திலேயே இறந்துவிட்டான். இதனால் நோலா பவுலீனுசும், அவரது மனைவி திரேசாவும் ஸ்பெயின் நாட்டிற்கு சென்றனர். அங்கே பார்சலோனா நாட்டு மக்கள் அவருடைய பக்தியை அறிந்து, குருத்துவத்தை தேர்ந்து கொள்ள தூண்டினர். அவரின் மனைவியும் இதற்கு சம்மதம் தெரிவித்தார். இருவரும் தங்களது உடைமைகள் அனைத்தையும் விற்றுவிட்டு, ஏழைகளுக்கு பகிர்ந்துகொடுத்தனர். 

பின்னர் பவுலீனூஸ் குருத்துவத்தை தெரிந்து கொண்டார். இதனால் அவரின் மனைவி மிலான் நாட்டிற்கு சென்று, அங்கு ஆயர் அம்புரோசை சந்தித்து, அவரின் அறிவுரைப்படி திரேசியாவும் ஓர் துறவற மடத்திற்கு சென்றார். துறவறத்தில் 20 ஆண்டுகள் திருப்பணியை திறம்பட செய்தார். பவுலீனுஸ் பேய்களை ஓட்டும் வல்லமை பெற்றிருந்தார். இவரை போல ஒரு புனிதத்துவ வாழ்வை எவராலும் வாழ முடியாது என்று புனித அகஸ்டின், புனித ஜெரோம், புனித அம்புரோஸ் ஆகியோர் தங்களின் வரலாற்றில் குறிப்பிட்டுள்ளனர். புனித மார்ட்டின் இவரை, இயேசுவின் நல்லாயன் இவரே என்று குறிப்பிட்டுள்ளார். 


செபம்:
அதிசயமானவரே எம் இறைவா! நீர் புனித பவுலீனுசை திருமண வாழ்வில் ஈடுபடுத்தியபின், உம் குருத்துவ வாழ்விற்கு தேர்ந்தெடுத்துள்ளீர். உமது புனிதத்துவ வாழ்வை அவரின் வழியாக இவ்வுலகிற்கு வெளிப்படுத்தியுள்ளீர். இதோ இன்றைய நாளில் திருமணம் செய்த ஒவ்வொருவரையும் உம் பதம் சமர்ப்பிக்கின்றோம். குடும்ப வாழ்வில் ஒருவரையொருவர் புரிந்து, சந்தோசத்துடனும், சமாதானத்துடனும் வாழ, நீர் அருள் தந்து காத்திடுமாறு இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

---JDH---தெய்வீக குணமளிக்கும் இயேசு /திண்டுக்கல்.

Saint of the Day : (22-06-2020)

Saint Paulinus of Nola

Friend of Saint Augustine of Hippo and Saint Nicetas of Remesiana, and mentioned for his holiness by at least six of his contemporary saints.

Distinguished lawyer. Held several public offices in the Empire, then retired from public ministry with his wife, Therasia, first to Bordeaux, France where they were baptized, and then to Therasia's estate in Spain. After the death of their only son at the age of only a few weeks, the couple decided to spend the rest of their lives devoted to God. They gave away most of their estates and dedicated themselves to increasing their holiness.

Paulinus was ordained, then he and Therasia moved to Nola, Italy, gave away the rest of their property, and dedicated themselves to helping the poor. Paulinus was chosen bishop of Nola by popular demand, and he governed the diocese for more than 21 years while living in his own home as a monk and continuing to aid the poor. His writings contain one of the earliest examples of a Christian wedding song.
Born :
c.354 at Burdigala, Gaul (modern Bordeaux, France)

Died :
22 June 431 of natural causes

---JDH---Jesus the Divine Healer---



† இன்றைய புனிதர் †
(ஜூன் 22)

✠ புனிதர் பௌலினஸ் ✠
(St. Paulinus of Nola)

நோலா மறைமாவட்ட ஆயர்/ ஒப்புரவாளர்:
(Bishop of Nola and Confessor)

பிறப்பு: கி.பி. 354
போர்டியூக்ஸ், கல்லியா லூக்டெனேன்சிஸ், மேற்கு ரோம பேரரசு
(Bordeaux, Gallia Lugdunensis, Western Roman Empire) 

இறப்பு: ஜூன் 22, 431
நோலா, கம்பானியா, இத்தாலி, மேற்கு ரோம பேரரசு
(Nola in Campania, the Praetorian prefecture of Italy, Western Roman Empire)

ஏற்கும் சமயம்:
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)
கிழக்கு மரபுவழி திருச்சபை
(Eastern Orthodox Church)

நினைவுத் திருநாள்: ஜூன் 22

“போன்டியஸ் மெரோபியஸ் ஏன்ஸியஸ் பௌலினஸ்” (Pontius Meropius Anicius Paulinus) எனும் இயற்பெயர் கொண்ட புனிதர் பௌலினஸ், ஒரு ரோம மொழி கவிஞரும், எழுத்தாளரும், ‘செனட்சபை” (Senator) உறுப்பினரும், துணைத் தூதரக பதவிகளைப் பெற்றவரும், “காம்பானிய” (Governor of Campania) ஆளுநருமாவார். ஆனால், “பேரரசர் கிரேஷியனி’ன்” (Emperor Gratian) படுகொலைக்குப் பின்னர், தமது ஸ்பேனிஷ் மனைவி “தெரேஷியா’வின்” (Therasia) செல்வாக்கினால் இவர் தமது எதிர்கால தொழில்-வாழ்க்கை முறையை கைவிட்டார். கிறிஸ்தவராக மனம் மாறி திருமுழுக்கு பெற்றார். தமது மனைவி “தெரேஷியா’வின்” (Therasia) மரணத்தின் பிறகு நோலா (Nola) மறைமாவட்டத்தின் ஆயராக நியமிக்கபட்டார்.

தமது முன்னோடியான “புனிதர் ஃபெலிக்சை” (St. Felix) கௌரவிக்கும் வகையிலும், பேரரசு முழுதுமிருந்த கிறிஸ்தவ தலைவர்களை கௌரவுக்கும் வகையிலும் கவிதைகள் எழுதத் தொடங்கினார். பாரம்பரியப்படி, கிறிஸ்தவ தேவாலயங்களில் ஆராதனைகளின்போது, மணியடிக்கும் முறையை அறிமுகப்படுத்திய பெருமை இவரையே சேரும். இவர், திருத்தந்தை “முதலாம் போனிஃபேஸ்” (Pope Boniface I) அவர்களின் தேர்தலிலிருந்த சர்ச்சைகளை நீக்குவதற்கு உதவினார்.

தமது சொத்து சுகங்களை துறப்பதை பகிரங்கமாக அறிவித்தது, தமது சந்நியாச மற்றும் பண்பாட்டு வாழ்க்கைக்கு ஆதரவாக அமைந்ததுடன், புனிதர்கள் “அகஸ்தின்” (Augustine), “ஜெரோம்” (Jerome), “மார்ட்டின்” (Martin) மற்றும் “அம்புரோஸ்” (Ambrose) உள்ளிட்ட இவரது சமகால கிறிஸ்தவ துறவியரிடையே ஒரு முன்மாதிரியாகவும் அமைந்தது.

“போன்டியஸ்”, தென்மேற்கு ஃபிரான்ஸ் நாட்டின் “போர்டியூக்ஸ்” (Bordeaux) எனுமிடத்தில் கி.பி. 352ம் ஆண்டு பிறந்தவர் ஆவார். குறிப்பிடத்தக்க செனட்டரிய குடும்பமொன்றைச் சேர்ந்த இவருடைய குடும்பத்தினருக்கு ஃபிரான்ஸின் “அக்குய்டைன்” (Aquitaine Province), வடக்கு ஸ்பெயின் (Northern Spain) மற்றும் தெற்கு இத்தாலி (Southern Italy) ஆகிய பிராந்தியங்களில் சொத்துக்களும் தோட்டங்களும் இருந்தன. “போர்டியூக்ஸ்” (Bordeaux) நகரில் கல்வி கற்ற இவரது ஆசிரியர், கவிஞர் “ஒசொனியஸ்” (Poet Ausonius) ஆனார். அவரே இவரது நண்பருமானார். தமது சிறு வயதில், நேப்பில்ஸ் (Naples) அருகே, “நோலா” (Nola) நகரிலுள்ள “புனிதர் ஃபெலிக்ஸ்” (St Felix) திருத்தலத்திற்கு அடிக்கடி சென்று வருவார். 

இவரது வாழ்க்கை, ஒரு சாதாரண இளைஞனாக நெடுநாள் நீடிக்கவில்லை. கி.பி. 375ம் ஆண்டு, பேரரசர் “வலென்டீனியனி’ன்” (Valentinian) பின்னர் பதவிக்கு வந்த அவரது சொந்த மகன் “பேரரசர் க்ரேஷியன்” (Emperor Gratian), “போன்டியசை” ரோம தூதரக அதிகாரியாக நியமித்தார். அத்துடன், இத்தாலியின் தென் பிராந்தியமான “கம்பானியாவின்” (Campania) ஆளுநராகவும் நியமித்தார்.

கி.பி. 383ம் ஆண்டு, ஃபிரான்ஸ் நாட்டின் “லியோன்” (Lyon) எனுமிடத்தில் “பேரரசர் க்ரேஷியன்” வஞ்சகமாக படுகொலை செய்யப்பட்டார். அதே நேரத்தில், பௌலினஸ் “அம்புரோஸின்” (Ambrose) பள்ளிக்குச் செல்லுவதற்காக “மிலன்” (Milan) சென்றிருந்தார். 384ம் ஆண்டு சொந்த ஊர் திரும்பிய பௌலினஸ், “பார்சிலோனாவைச்” (Barcelona) சேர்ந்த பிரபுத்துவ கிறிஸ்துவ குடும்பத்தைச் சேர்ந்த ஸ்பேனிஷ் பெண்ணான “தெரேஷியாவை” (Therasia) திருமணம் செய்துகொண்டார். அவரது சகோதரரை கொலை செய்துவிடுவதாகவும், அவரது சொத்துக்களை பறிமுதல் செய்துவிடுவதாகவும் இவர் பயமுறுத்தப்பட்டார்.

“போர்டியூக்ஸ்” ஆயர் “டெல்ஃபினஸ்” (Bishop Delphinus of Bordeaux) என்பவரிடம் திருமுழுக்கு பெற்ற பௌலினஸ், கி.பி. 390ம் ஆண்டு தமது மனைவி தெரேஷியாவுடன் ஸ்பெயின் பயணித்தார். அங்கே, பிறந்து எட்டு நாட்களே ஆன தங்களது ஒரே குழந்தையை தொலைத்தனர். மனம் வெறுத்துப்போன அவர்கள், இவ்வுலக வாழ்வினை வெறுத்து ஒதுங்கிய மத வாழ்க்கை வாழ முடிவு செய்தனர்.

கி.பி. 393 அல்லது 394ம் ஆண்டில் கிறிஸ்து பிறப்பு திருநாளன்று, பௌலினஸின் சில எதிர்ப்பிற்குப் பிறகு, அவர் உள்ளூர் கிறிஸ்தவ சபைகள் (Presbyter) உறுப்பினராக “பார்சிலோனாவின்” ஆயர் (Bishop of Barcelona) “லம்பியஸ்” (Lampius) என்பவரால் அருட்பொழிவு செய்யப்பட்டார்.

பௌலினஸ், பார்சிலோனாவிலேயே தங்குவதற்கு மறுத்துவிட்டார். அவரும் அவரது மனைவியும் ஸ்பெயின் நாட்டிலிருந்து கிளம்பி “கம்போனியாவிலுள்ள” (Campania) “நோலா” (Nola) சென்றனர். அவர் தமது மரணம் வரை அங்கேயே தங்கியிருந்தார்.

தமது மன மாற்றத்தின் மதிப்பினை புனிதர் ஃபெலிக்ஸ் அவர்களுக்கே தந்த பௌலினஸ், வருடா வருடம் அவரை கௌரவிக்கும் வகையில் கவிதை எழுதினர். அவரும் அவரது மனைவியும் இணைந்து புனிதர் ஃபெலிக்சை நினைவுகூறும் ஒரு தேவாலயத்தை மீண்டும் கட்டியெழுப்பினார்கள்.

கி.பி. 408 மற்றும் 410 ஆகிய ஆண்டுகளுக்கிடையே தெரசியா மரணமடைந்தார். அதன் குறுகிய காலத்தின் பின்னர், ஆயராக அருட்பொழிவு செய்யப்பட்ட பௌலினஸ், 410ம் ஆண்டு “நோலா” (Nola) மறைமாவட்டத்தை தேர்வு செய்தார். அங்கே அவர் இருபது ஆண்டுகள் சேவையாற்றினார். கி.பி. 431ம் ஆண்டு, ஜூன் மாதம், 22ம் நாளன்று, “நோலா” (Nola) நகரில் பௌலினஸ் மரணமடைந்தார்.

No comments:

Post a Comment