ஜூலை 07
புனித ஹம்ஸ்பிரே லாரன்ஸ் (1572-1591)
இவர் இங்கிலாந்து நாட்டிலுள்ள ஹம்ஸ்பியர் என்ற இடத்தில் பிறந்தவர்.
இவருடைய பெற்றோர் புராட்டஸ்டன்ட் திருஅவையைச் சார்ந்தவர்கள். இவர் இங்கிலாந்து நாட்டில் மறைப்பணி ஆற்றிவந்த இயேசு சபை அருள்பணியாளர்களின் எடுத்துக்காட்டான வாழ்வால் தொடப்பட்டு, கத்தோலிக்கத் திருஅவைக்கு மாறினார்.
இதற்குப் பிறகு இவர் திருவிவிலியத்தை ஆழமாக வாசிப்பதும், தான் வாசித்ததை மக்களுக்கு எடுத்துச் சொல்வதுமாக இருந்தார்.
இந்நிலையில், இவர் அப்போது இங்கிலாந்து நாட்டை ஆண்டு வந்த முதலாம் எலிசபெத் என்ற அரசியினுடைய துன்மாதிரியான வாழ்க்கையை நேரடியாகவே சுட்டிக்காட்டினார். இதனால் இவர் கைது செய்யப்பட்டு, தூக்கிலிடப்பட்டுக் கொல்லப்பட்டார்.
இவர் இறக்கும்போது இவருக்கு வயது வெறும் 19 தான். இவருக்குத் திருத்தந்தை பதினோறாம் பயஸ், 1929ஆம் ஆண்டு புனிதர் பட்டம் கொடுத்தார்.
No comments:
Post a Comment