புனிதர்களை பெயர் வரிசையில் தேட

Translate

07 July 2020

புனித.வில்லிபால்டு (St.Willibald)ஆயர் July 7

2020-07-07
புனித.வில்லிபால்டு (St.Willibald)
ஆயர்
பிறப்பு
22 அக்டோபர் 700
தென் இங்கிலாந்து
இறப்பு
7 ஜூலை 787
ஐஷ்டாட்(Eichstatt) , ஜெர்மனி
பாதுகாவல்: ஐஷ்டாட் நகரின் பாதுகாவலர்

வில்லிபால்டு தென் இங்கிலாந்து நாட்டில் ரிச்சர்டு என்பவரின் மகனாக பிறந்தார். 720 ஆம் ஆண்டு தந்தை ரிச்சர்டு, உடன் பிறந்த சகோதரர் உன்னிபால்டும்(Wunibald) உரோம் நகரை நோக்கி திருப்பயணம் மேற்கொண்டனர். அப்போதுதான் இவரின் தந்தை லக்கா(Lucca) என்னுமிடத்தில் இறந்துவிட்டார். அப்போது வில்லிபால்டு உரோம் நகரிலேயே தங்கினார். இரண்டரை ஆண்டுகள் கழித்து இவர் பாலஸ்தீன மற்றும் கொன்ஸ்டாண்டீனோபிள் நோக்கி பயணம் மேற்கொண்டார். 729 ஆம் ஆண்டு அங்கிருந்து மீண்டும் இத்தாலி நாட்டிற்கு வந்தடைந்தார். அப்போதுதான் இவர் புனித பெனடிக்ட் துறவற சபையில் சேர்ந்தார்.

739 ஆம் ஆண்டு திருத்தந்தை 3ஆம் கிரகோரி அவர்களால் குருவாக திருநிலைப்படுத்தப்பட்டார். பின்னர் தன்னுடன் குருப்பட்டம் பெற்ற போனிபாஸ் என்பவருடன் சேர்ந்து ஜெர்மனி நாட்டிற்கு அனுப்பப்பட்டார். அங்கு அப்போஸ்தலர் பணியை சிறப்பாக செய்தபின் 741 ல் ஆயராக திருநிலைப்படுத்தப்பட்டார். ஆயரான பிறகும் கூட தனது மிஷனரி பணியை பவேரியா மறைமாநிலம் முழுவதிலும் சிறப்பாக செய்தார். 741- 787 ஆம் ஆண்டு வரை ஐஷ்டாட் என்ற மறைமாநிலத்தில் ஆயராக பணியாற்றினார். இவர் ஐஷ்டாட் மறைமாநிலத்தின் முதல் ஆயர் என்ற பெருமையை பெற்றார். இவர் 8 ஆம் நூற்றாண்டில் இவரின் பெயரால் ஐஷ்டாட்டில் பேராலயம் ஒன்றை எழுப்பினார். இவ்வாலயத்தில்தான் வில்லிபால்டு அவர்களின் கால்கள் வைக்கப்பட்டுள்ளது. உரோமில் உள்ள புனித பேதுரு பேராலயத்தில் இவரின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

1745 ஆம் ஆண்டு இவரின் 1000 ஆம் வருட ஜூபிலியை முன்னிட்டு, இவரது கல்லறையை பேதுரு பேராலயத்திலிருந்து ஐஷ்டாட்டிற்கு மாற்றப்பட்டது. இவர் வாழும்போதே ஆலயத்தில் பாடப்படும் பாடற்குழுவிற்கென ஓர் அழகிய மேடையை அமைத்தார். அவர் திருப்பலி ஆற்றும் போதெல்லாம், ஐஷ்டாட்டில் வாழும் ஒவ்வொருவரும் புனிதர்களே" என்று தவறாமல் கூறிவருவார்.


செபம்:
திருச்சபையை வழிநடத்துபவரே எம் இறைவா! திருச்சபையின் மீது கொண்ட ஆர்வத்தால், நாடு விட்டு நாடு வந்து உம் பணியை ஆற்றினார் புனித வில்லிபால்டு. இன்றும் அவரை போல உம் பணியை ஆற்றிவரும். ஒவ்வொரு உள்ளங்களையும் ஆசீர்வதியும். திறம்பட பணிபுரிய நல்ல உடல் உள்ள நலன்களை தந்தருள வேண்டுமென்று இறைவா உம்மை வேண்டுகின்றோம்.




இந்நாளில் நினைவுகூறப்படும் பிற புனிதர்கள்

துறவி எத்தல்பூர்கா Ethelburga
பிறப்பு: 6 ஆம் நூற்றாண்டு, எஸ்செக்ஸ் Essex, இங்கிலாந்து
இறப்பு: 645, பாரேமவ்டியர்ஸ் Faremoutiers, பிரான்சு
பாதுகாவல்: கர்ப்பிணிப் பெண்கள்

No comments:

Post a Comment