புனிதர்களை பெயர் வரிசையில் தேட

Translate

07 July 2020

அருளாளர் மரிய ரொமேரோ மெனெசெஸ் ✠(Blessed María Romero Meneses July 7

† இன்றைய புனிதர் †
(ஜூலை 7)
✠ அருளாளர் மரிய ரொமேரோ மெனெசெஸ் ✠
(Blessed María Romero Meneses)

மறைப் பணியாளர்:
(Religious)

பிறப்பு: ஜனவரி 13, 1902
கிரனடா, நிகரகுவா
(Granada, Nicaragua)

இறப்பு: ஜூலை 7, 1977 (வயது 75)
லஸ் பெனிடஸ், லியோன், நிகரகுவா
(Las Peñitas, León, Nicaragua)

ஏற்கும் சமயம்:
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)

முக்திபேறு பட்டம்: ஏப்ரல் 14, 2002
திருத்தந்தை இரண்டாம் ஜான் பவுல்
(Pope John Paul II)

நினைவுத் திருநாள்: ஜூலை 7

அருளாளர் மரிய ரொமேரோ மெனெசெஸ், ஒரு “நிகரகுவா” (Nicaragua) குடியரசின் ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் அருட்சகோதரியும், “டான் பாஸ்கோவின் சலேசிய சகோதரிகள்” (Salesian Sisters of Don Bosco) சபையின் ஒப்புக்கொள்ளப்பட்ட உறுப்பினரும், “கோஸ்டா ரிகா’வின்” சமூக அப்போஸ்தலருமாவார். (Social Apostle of Costa Rica).

கி.பி. 1902ம் ஆண்டு, “நிகரகுவா” (Nicaragua) குடியரசில் நடுத்தர குடும்பத்தில் பிறந்த ரொமேரோ’வின் தந்தை பெயர் “ஃபெலிக்ஸ்” (Félix Romero Arana) ஆகும். தாயாரின் பெயர், “அனா” (Ana Meneses Blandon) ஆகும். இவர் தமது பெற்றோரின் எட்டு குழந்தைகளில் ஒருவர் ஆவார். பிறந்து ஒரு வாரத்திலேயே திருமுழுக்கு பெற்றார். 1904ம் ஆண்டு, ஜூலை மாதம், 23ம் தேதி, உறுதிப்பூசுதல் (Confirmation) அருட்சாதனம் பெற்ற இவர், 1909ம் ஆண்டு, டிசம்பர் மாதம், 8ம் தேதி, “புதுநன்மை” (First Communion) அருட்சாதனம் பெற்றார்.

கலையிலும் சங்கீதத்திலும் ஆர்வம் கொண்டு வளர்ந்ததால், இவருடைய பெற்றோர் இவருக்கு வயலின் மற்றும் பியானோ ஆகிய இசைக் கருவிகளை வாசிக்க கற்பித்தனர். பின்னர், “டான் பாஸ்கோவின் சலேசிய சகோதரிகள் பள்ளியில்” இணைந்து கல்வி கற்க ஆரம்பித்தார். எனினும் 1914ம் ஆண்டில் அவர் “வாதம் சம்பந்தமான காய்ச்சலால்” (Rheumatic Fever) நீண்ட காலம் பாதிப்படைந்தார். அக்காய்ச்சல், அவரது மீதமுள்ள வாழ்நாள் முழுதும் இருதய பாதிப்பை விட்டுச் சென்றது. ஆனால், அதிலிருந்து அவர் மீண்டபோது, அது இயற்கையிலேயே அற்புதமானதாக கருதப்பட்டது.

பூரண நம்பிக்கையுள்ள இப்பெண், 1915ம் ஆண்டு, டிசம்பர் மாதம், 8ம் நாளன்று, “கிறிஸ்தவர்களின் சகாய அன்னை மரியாளின் மகள்கள்” (Daughters of Mary Help of Christian) எனும் “மரியான் சமூகத்தில்” (Marian association) இணைந்தார். 1929ம் ஆண்டு, ஜனவரி மாதம், 6ம் தேதி, அவர் தமது இறுதி வார்த்தைப் பாட்டை ஏற்றார்.

1931ம் ஆண்டு, “கோஸ்டா ரிகா” (Costa Rica) தீவின் தலைநகரான “சேன் ஜோஸ்” (San Jose) சென்றார். இது இவரது இரண்டாவது தாய் நாடாக கருதப்படுகிறது. 1933ம் ஆண்டு, கலை மற்றும் சங்கீதம் ஆகியவற்றின் ஆசிரியையானார். அங்குள்ள பள்ளியில் பணக்கார குழந்தைகளுக்கு தட்டச்சு கற்றுக்கொடுத்தார். பெரும் எண்ணிக்கையிலுள்ள அவரது மாணவர்கள் அவரைப்போன்றே அவருடன் இணைந்து ஏழைகளுக்கு சேவை செய்தனர். அவரது கவனம் சமூக அபிவிருத்தியில் இருந்தது. 1945ம் ஆண்டு பொழுதுபோக்கு மையங்களைத் தொடங்கிய இவர், 1953ம் ஆண்டில் உணவு விநியோக மையங்களையும் தொடங்கினார். 1961ம் ஆண்டில் ஏழை சிறுமிகளுக்காக பள்ளி ஒன்றினை நிறுவினார். 1966ம் ஆண்டு, நோயுற்றோருக்காக மருந்தகம் ஒன்றினையும் நிறுவினார். 1973ம் ஆண்டு, ஏழை குடும்பங்களுக்காக ஏழு இல்லங்களை கட்டினார்.

1977ம் ஆண்டு, “லியோன்” (Leon) நகரிலுள்ள “சலேசிய அருட்சகோதரிகளின்” இல்லத்தில் (Salesian Sisters house) ஓய்வுக்காக அனுப்பப்பட்டிருந்த மரிய ரொமேரோ மெனெசெஸ் மாரடைப்பால் தாக்குண்டு மரணமடைந்தார்.

† Saint of the Day †
(July 7)

✠ Blessed María Romero Meneses ✠

Religious:

Born: January 13, 1902
Granada, Nicaragua

Died: July 7, 1977 (Age 74)
Las Peñitas, León, Nicaragua

Venerated in: Roman Catholic Church

Beatified: April 14, 2002
Pope John Paul II

Feast: July 7

Blessed María Romero Meneses was Nicaraguan Roman Catholic professed religious and a professed member from the Salesian Sisters of Don Bosco dubbed the "Social Apostle of Costa Rica".

Blessed Maria Romero Meneses was a modern-day social reformer who brought about a “revolution of charity” in Costa Rica.

She was born in Nicaragua in 1902, one of eight children who grew up in an upper-class family. Maria received a very good education at a school staffed by sisters in a religious community founded by St. John Bosco—they were known as the Daughters of Mary, Help of Christians.

When she was 12 years old, Maria fell sick with rheumatic fever and struggled all year to regain her health. She was completely paralyzed for six months but was patient and prayerful in her suffering, which she saw as a gift from God. Doctors reported that her heart was damaged from the sickness, but she appealed to Our Lady, Help of Christians, and received some sort of assurance that she would be healed.

When a friend from the school visited her, she said, “I know that the Blessed Virgin will cure me.” A few days later, she regained her health and returned to school, fully recovered.

A spiritual director helped her sort through and better understand the mystical experiences she was having, and she realized that she was being called to religious life. She joined the Daughters of Mary, Help of Christians—the nuns who staffed her school—and closely followed the spirituality of John Bosco.

In 1931, she was sent to Costa Rica, where she taught at a school for girls from wealthy families. She also went into the poor neighborhoods to teach the faith there, and to help people acquire practical skills for work. Her example moved students at the school, and many girls joined her work to improve the lives of the poor.

Maria began to understand her purpose in life—to encourage social development by helping wealthy people see how they could change the lives of poor people. She gathered resources and established recreational centers and food distribution organizations. In 1961, she opened a school for poor girls; a few years later, she opened a clinic and supported it by recruiting doctors and finding donations for medicine.

She had the vision to build a village for poor people that contained all they needed to flourish. In 1973, the first seven homes were built in a new development outside of the city named Centro San Josè—it grew to include a farm, a market, and a school where people could learn the faith and find job training. It also included a church dedicated to Our Lady, Help of Christians.

Maria knew that she was participating in God’s work, so she had every confidence that her efforts at social development would grow. She died of a heart attack on this date in 1977, and she is buried in the chapel in San Josè. She is the first Central American to be beatified, and her image is used here with permission from Catholic.org.

Bl. Maria Romero Meneses, you brought about a revolution of charity in Costa Rica in the 1970s—pray for us!

No comments:

Post a Comment