புனிதர்களை பெயர் வரிசையில் தேட

Translate

10 July 2020

அருளாளர் இம்மானுவேல்‌ ரூய்ஸ்(1804-1860) July 10

ஜூலை 10

அருளாளர் இம்மானுவேல்‌ ரூய்ஸ்
(1804-1860)

இவர் ஸ்பெயின் நாட்டிலுள்ள ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்தவர்.
சிறுவயதிலேயே கடவுள்மீது மிகுந்த பற்றுகொண்ட இவர், வளர்ந்து பெரியவரான போது, கடவுளுடைய அழைப்பை உணர்ந்தார். ஆதலால் இவர் புனித பிரான்சிஸ்கன் சபையில் சேர்ந்து, லெபனான் நாட்டில் இறைப்பணி செய்யத் தொடங்கினார்.

இவர் லெபனான் நாட்டில் இறைப்பணியைச் செய்து வந்த காலக்கட்டத்தில், கிறிஸ்தவர்களுக்கு எதிராக மிகுதியான வன்முறைகள் நடைபெற்றன. 

ஒருசமயம் இவர் இருந்த துறவுமடத்தில் நுழைந்த மூர் இனத்தவர், அதாவது வன்முறையாளர்கள், இவரையும் இவரோடு இருந்த ஆறு அருள்பணியாளர்களையும், மூன்று பொதுநிலையினரையும் கிறிஸ்துவை மறுதலித்துவிட்டுத் தங்களுடைய சமயத்தை ஏற்றுக்கொள்ளச் சொன்னார்கள்.

அதற்கு இவர்கள் மறுப்பு தெரிவித்ததால், வன்முறையாளர்கள் இவர்களைக் கொன்று போட்டார்கள்‌. இவ்வாறு இம்மானுவேல் ரூய்ஸூம், இவரோடு இருந்த 10 பேரும் ஆண்டவர் இயேசுவுக்காகத் தங்களுடைய இன்னுயிரைத் துறந்து,  அவருக்குச் சான்று பகர்ந்தார்கள்.

இவருக்கு 1926 ஆம் ஆண்டு அருளாளர் பட்டம் கொடுக்கப்பட்டது.

No comments:

Post a Comment