புனிதர்களை பெயர் வரிசையில் தேட

Translate

10 July 2020

டென்மார்க்கின் புனித குன்ட், நார்வே புனித ஓலப், ஸ்வீடன் புனித எரிக், (அரசர்கள், மறைசாட்சிகள்)(Kund of Denmark, Olaf of Norway, Erich of Sweden July 10

இன்றைய புனிதர் : 
(10-07-2020) 

டென்மார்க்கின் புனித குன்ட், நார்வே புனித ஓலப், ஸ்வீடன் புனித எரிக், (அரசர்கள், மறைசாட்சிகள்)(Kund of Denmark, Olaf of Norway, Erich of Sweden
இறப்பு 29 ஜூலை 1030

இவர் 1015 ஆம் ஆண்டில் தனது 20 ஆம் வயதில் நார்வே நாட்டின் அரசராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் 1014 ஆம் ஆண்டில் தான் ஞானஸ்நானம் பெற்று கிறிஸ்தவ ரானார். இவர் அரசரான 15 ஆண்டுகள் கழித்து, மிகவும் செல்வம் இருந்ததால் ஏழைகளிடம் பகிர்ந்து கொடு த்தார். ஏராளமான ஏழை மக்களுக்கு வழிகாட்டினார். தன் முழு வாழ்வையும் ஏழை மக்களுக்காகவே அர்ப்ப ணித்தார். மிஷினரி வேலை செய்து, கிறிஸ்துவை பர ப்ப, பல நாடுகளிலிருந்து கிறிஸ்துவர்களையும், துற வற குழுமத்தினரையும் தன் நாட்டிற்கு அழைத்தார். பல ஆலயங்களை கட்டினார். பலரை மனந்திருப்பி ஞானஸ்நானம் பெற சொன்னார். இதனால் எதிர் திரு ச்சபை மக்களால் 1028 ஆம் ஆண்டு பதவியிலிருந்து நீக்கம் செய்யப்பட்டார். இவரின் உரிமைகள் அனை த்தும் பறிக்கப்பட்டது. பின்னர் அணுவணுவாக துன்பு றுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார். இவரின் கல்ல றை நார்வே நாட்டில் உள்ளது. இவரின் பெயரால் அந்நா ட்டில் பெரிய பெரிய பேராலயங்கள் கட்டப்பட்டுள்ளது.
எரிக் (Erich), ஸ்வீடன்
இறப்பு: 18 மே 1160, உப்சலா(Uppsala), ஸ்வீடன்
பாதுகாவல்: ஸ்வீடன் நாட்டின் பாதுகாவலர்
இவரும் மறைசாட்சியாளர் குன்ட் போலவே, ஆலய த்தில் திருப்பலி நேரத்தில் கொலை செய்யப்பட்டார். இவரும் தன் நாட்டில் மறைபரப்பு பணியை செய்து, மக்களை ஆன்மீகத்தில் வளர்த்தெடுத்தார். 1150 ஆம் ஆண்டில் ஸ்வீடன் நாட்டின் அரசராக இருந்தார். மறை ப்பணி செய்ததின் காரணமாக இவரும் கொலை செ ய்யப்பட்டார். ஸ்வீடன் நாட்டில் உப்சலா என்ற ஊரில் உள்ள பேராலயத்தில் இவரின் உடல் அடக்கம் செய்ய ப்பட்டது.
குன்ட் (Kund), டென்மார்க்
இறப்பு: 10 ஜூலை 1086
புனிதர்பட்டம்: 1100, திருத்தந்தை 2ஆம் பாஸ்கலீஸ் (Pope Paschalis II) 1080 ஆம் ஆண்டு இவர் டென்மார்க் நாட்டின் அரசராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் மிகுந்த விசு வாசம் கொண்டவர். கிறிஸ்துவை தன் நாடு முழுவதும் பரப்ப பெரும்பாடுபட்டவர். பல ஆலயங்களையும், துறவு மடங்களையும், பள்ளிகளையும் நாடு முழுவதும் கட்டினார். இவர் கிறிஸ்துவை பரப்பிய காரணத்தி ற்காகவே, இவரின் எதிரிகளால் திருப்பலியில் இருக்கும்போதே குத்திக் கொலை செய்யப்பட்டார்.

செபம்:
நிலை வாழ்வளிப்பவரே எம் இறைவா! உம்மீது கொண்ட தணியாத தாகத்தால் தங்கள் நாடுகளில் மறைபரப்பு பணியை செய்து கொலை செய்யப்பட்டா ர்கள். இன்றைய புனிதர்கள். இருப்பினும் இவர்களின் இறப்பினால் அந்நாடுகளில் கிறிஸ்தவம் பரவியது. உம் பெயரை அந்நாட்டு மக்களிடையே நிலைநாட்டி னார்கள். இன்று அந்நாடுகளில் மறைபரப்பு பணியை செய்யும் ஒவ்வொருவரையும் ஆசீர்வதித்து, பணியில் நிறைவு பெற உடனிருந்து வழிநடத்தியருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

---JDH---தெய்வீக குணமளிக்கும் இயேசு /திண்டுக்கல்.

Saint of the Day : (10-07-2020)

Saint Knud

Illegimate son of King Sweyn Estrithson of Denmark. Nephew of King Knud of England. King of Denmark as Knud IV c.1080. Married to Adela, sister of Count Roberts of Flanders (in modern Belgium. He spread the gospel through his kingdom, supported missionaries, and built churches. Tried and failed to conquer England to press his claim to the throne which he saw as his through his kinship to his uncle, King Knud. Following his defeat, he fled to the island of Fünen. Murdered with his brother and 17 followers while kneeling at an altar immediately following confession. Miracles reported at his tomb.

Born :
c.1043

Died :
murdered in 1086 in the church of Saint Alban on the island of Fünen, Denmark.

Canonized :
1101 by Pope Paschal II

Patronage :
Denmark

---JDH---Jesus the Divine Healer---

No comments:

Post a Comment