புனிதர்களை பெயர் வரிசையில் தேட

Translate

27 July 2020

புனித அந்துசா (எட்டாம் நூற்றாண்டு)(ஜூலை 27)

புனித அந்துசா (எட்டாம் நூற்றாண்டு)

(ஜூலை 27)
இவர் சின்ன ஆசியாவிலுள்ள மேன்டினியா என்ற இடத்தில் பிறந்தவர்.

சிறுவயதிலேயே இவர் இறைவன் தன்னை அவருடைய பணிக்காக அழைப்பதை உணர்ந்ததும், எல்லாவற்றையும் விட்டுவிட்டுத் துறவியானார்.  பின்னாளில் இவர் அந்த துறவிமடத்தின் தலைவியாகவும் உயர்ந்தார்.

இறைவன்மீது மிகுந்த பற்றுகொண்டு வாழ்ந்து வந்த இவரிடம், ஐந்தாம் கான்ஸ்டன்டைன் என்ற மன்னன், "நீ இயேசுவின் உருவம் தாங்கிய படத்தையோ, திருவுருவத்தையோ வழிபடக்கூடாது" என்று சொன்னான்.

அதற்கு அவர் மறுப்பு தெரிவிக்கவே, அவன் இவரைக் கொடூரமாகச் சித்திரவதை செய்தான்.  இக்காட்சிகளை எல்லாம் மன்னனுடைய மனைவி மிகுந்த வேதனையோடு பார்த்துக்கொண்டு இருந்தார். அப்பொழுது இவர் அரசியிடம் "உமக்கு ஒரு பெண் குழந்தை பிறக்கும்" என்று முன்னறிவித்தார்.

குழந்தையில்லாத அவருக்கு ஓராண்டில் பெண் குழந்தை பிறந்ததும்,  மிகவும் மகிழ்ச்சி அடைந்த மன்னன் இவரை விடுதலை செய்தான். இதனால் இவர் முன்பு இருந்த துறவுமடத்திற்கு வந்தார். பின்னர் மன்னன் தனக்குப் பிறந்த பெண்குழந்தைக்கு  அந்துசா  என்ற பெயரைச் சூட்டினான்.

துறவி அந்துசாவோ தான் இறக்கும்வரை இறைவேண்டலிலும் நோன்பிலும் நிலைத்திருந்து, கிபி 759 ஆம் ஆண்டு இறையடி சேர்ந்தார்.

No comments:

Post a Comment