புனிதர்களை பெயர் வரிசையில் தேட

Translate

27 July 2020

முத்திபேறுபெற்ற ரூடோல்ப் அக்வாவிவா (St.Rudolf Akvaviva)குரு July 27

இன்றைய புனிதர் :
(27-07-2020)

முத்திபேறுபெற்ற ரூடோல்ப் அக்வாவிவா (St.Rudolf Akvaviva)
குரு
பிறப்பு 
1550
இத்தாலி
    
இறப்பு 
25 ஜூலை 1583
சால்சட் தீவு(Salset), இந்தியா
முத்திபேறுபட்டம்: 03 ஏப்ரல் 1803 திருத்தந்தை 13ஆம் சிங்கராயர்(Leo XIII)

இவர் ஓர் பிரபு குலத்தில் பிறந்தவர். இவரின் பெற்றோர்கள் ஏழைகளுக்கும், நோயாளிகளுக்கும் ஏராளமான உதவிகளை செய்தனர். இதனால் ரூடோல்ப்பும் அப்பணியில் கவரப்பட்டு, ஏழைகளுக்கென்று தன் வாழ்வை அர்ப்பணித்தார். சமூகப்பணிகளிலும், ஆலயப்பணிகளிலும் தன் நேரங்களைக் கழித்தார். சிறுவயதிலிருந்தே பூசைஉதவி செய்வதற்கு தவறமாட்டார். ஞானக்காரியங்களில் அக்கறையோடு ஈடுபட்டார். தான் ஓர் குருவாக வேண்டுமென்று ஆசைக்கொண்டு, இயேசு சபையில் சேர்ந்தார். 1578 ஆம் ஆண்டு குருப்பட்டம் பெற்றார். சில நாட்கள் இத்தாலியில் பணிசெய்தபின் இந்தியாவிற்கு அனுப்பப்பட்டார். அங்கு ஓரளவு மக்களை தெரிந்துகொண்டபின், இந்திய கலாச்சாரத்தால் கவரப்பட்டார். இதனால் அம்மக்களுக்கு ஏதாவது உதவிகள் செய்ய வேண்டுமென்று ஆசைகொண்டார். அப்போது கோவாவில் இருந்த புனித பவுல் கல்லூரியில் கற்று கொடுக்கும் பணியில் ஈடுபட்டார். 

இவர் சாதி, மதம் பாராமல் அனைத்து தர மக்களையும் ஒன்றிணைத்து கிறிஸ்துவைப்பற்றி போதித்தார். அப்போது இந்தியாவை ஆட்சி செய்த முகமதிய அரசனிடம் மிகுந்த நட்புறவு கொண்டிருந்தார். அரசனின் அன்பையும், நன்மதிப்பையும் பெற்று, தொடர்ந்து அரசவையிலும், நாடு முழுவதிலும் நற்செய்தியை போதித்தார். பின்னர் இயேசு சபை குருக்களால் சால்செட் தீவுக்கு அனுப்பப்பட்டார். அத்தீவில் பணிசெய்யும்போது இந்து மக்களிடமிருந்து பலவிதமான எதிர்ப்புகளை சந்தித்தார். பல இந்துக்களும் ஒன்று சேர்ந்து ஆலயங்களையும் பள்ளிக்கூடங்களையும் இடித்து தரைமட்டமாக்கினார்கள். அச்சமயத்தில் ஆலயத்தில் திருப்பலி நிறைவேற்றிகொண்டிருக்கும் வேளையில் ஆலயம் இடிக்கப்பட்டு அம்மக்களோடு சேர்ந்து ரூடோல்ப் அவர்களும் இறந்து போனார். 

செபம்:
இரக்கமே உருவான எம் தலைவா! இன்றும் இந்திய மண்ணில் கிறிஸ்துவ மக்களுக்கு எதிராக விளைவிக்கப்படும் துன்பங்களை நீர் கண்ணோக்கியருளும். நீரே அம்மக்களின் பாதுகாப்பாகவும், அவர்களுக்கு அரணும், கோட்டையுமாய் இருந்து, காத்து வழிநடத்தியருள் வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

---JDH---தெய்வீக குணமளிக்கும் இயேசு /திண்டுக்கல்.

Saint of the Day : (27-07-2020)

Blessed Rudolf Aquaviva

Blessed Aquaviva and his Companions were Jesuit priests. He was the son of the Duke of Atri,  related to the family of St. Aloysius Gonzaga, and nephew of Claud Aquaviva, the fifth general of the Jesuits. He was admitted at the age of eighteen, in 1568, and after being ordained priest at Lisbon was sent to Goa, in India. Father Aquaviva was one of the two chosen for the mission at Fatehpur Sikri, near Agra, and he worked till 1583 in strenuous efforts to convert Akbar and his subjects, but had no success. He was then put in charge of the Salsette mission, north of Bombay. He and four companions, Father Pacheco, Father Berno, Father Francisco and Brother Aranha, together with other Christians, set out for Cuncolim, the heart of Hindu opposition in that mission, intending to choose there a piece of ground for a church and to plant a cross thereon. They were met with armed force by the villagers. Blessed Rudolf and Blessed Alfonso were killed praying for their murderers, and the other two priests were likewise slain outright. Blessed Francis was left for dead, but found living the next day; he was given a chance to venerate an idol, and on refusing was tied to a tree and shot with arrows. It was not till 1741 that Pope Benedict XIV declared the martyrdom proved, and even then the formal beatification did not take place till 1893. Their feast day is July 27th.

---JDH---Jesus the Divine Healer---

No comments:

Post a Comment