† இன்றைய புனிதர் †
(ஜூலை 18)
✠ உட்ரெச்ட் நகர் புனிதர் ஃபிரடெரிக் ✠
(St. Frederick of Utrecht)
உட்ரெச்ட் ஆயர்:
(Bishop of Utrecht)
பிறப்பு: கி.பி. 780
ஃபிரீஸ்லேண்ட்
(Friesland)
இறப்பு: ஜூலை 18, 838
“உட்ரெச்ட்”
(Utrecht)
ஏற்கும் சமயம்:
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)
கிழக்கு மரபுவழி திருச்சபை
(Eastern Orthodox Church)
நினைவுத் திருநாள்: ஜூலை 18
பாதுகாவல்: காது கேளாதோர்
புனிதர் ஃபிரடெரிக், கி.பி. 815/816 முதல் 834/838 வரை “உட்ரெச்ட்” ஆயராக (Bishop of Utrecht) சேவை செய்தவர் ஆவார். ரோமன் கத்தோலிக்கம் (Roman Catholic Church) மற்றும் கிழக்கு மரபுவழி (Eastern Orthodox Church) திருச்சபைகள் இவரை புனிதராக ஏற்கின்றன.
கி.பி. சுமார் 780ம் ஆண்டு, “நெதர்லாந்து” (Netherlands) நாட்டின் வடக்கிலுள்ள பிராந்தியமான “ஃபிரீஸ்லேண்ட்’ல்” (Friesland) பிறந்த இவர், “ஃபிரிசியன்” அரசனான “ராட்பௌட்” (Frisian King Radboud) என்பவரது பேரனாவார்.
தமது இளம் வயதில் “உட்ரெச்ட்” (Utrecht) நகரில் கல்வி கற்ற இவருக்கு, ஆயர் “ரிக்ஃபிரைட்” (Bishop Ricfried) உள்ளிட்ட மறைப்பணியாளர்கள் கல்வி கற்பித்தனர். அவரது படிப்பு முடிந்தபின் அவர் குருத்துவ அருட்பொழிவு செய்விக்கப்பட்டார். பின்னர், மறைமாவட்டத்தின் வடக்குப் பகுதியிலுள்ள மீதமுள்ள “பாகன் இனத்தவர்களை” (Heathens) கிறிஸ்தவர்களாக மனம் மாற்றுவதற்கான பொறுப்பு இவரிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆனால் மறைமாவட்டத்திற்கு வெளியே உள்ள பகுதிகளிலும் இப்பணியைச் செய்தார். இவர், “ஸீலேண்ட்” (Dutch province of Zeeland) எனும் டச்சுப் பிராந்தியத்தின் “வால்ச்சரன்” (Walcheren) எனும் முன்னாள் தீவில் மறைபோதகம் செய்ததாக தகவல்கள் உள்ளன. அத்துடன், புனிதர் “ஓடல்ஃபஸ்” (St. Odulfus) என்பவருடன் இணைந்து “ஸ்டாவோரேன்” (Stavoren) நகரிலும் அதன் சுற்றுப்புறங்களிலும் மறைபோதகம் செய்ததாக தகவல்கள் கூறுகின்றன.
“உட்ரெச்ட்” (Utrecht) மறைமாவட்ட ஆயர் “ரிக்ஃபிரைட்” (Bishop Ricfried) கி.பி. 815/816ம் ஆண்டு மரித்ததும், ஃபிரடெரிக் அப்பதவிக்கு தேர்வு செய்யப்பட்டார். அவர் தனது பக்தி மற்றும் அறிவாற்றலுக்காக அறியப்பட்டார். அவர், ஃபிரான்கிஷ் பெனடிக்டைன் (Frankish Benedictine monk) துறவியும், ஜெர்மனி நாட்டின் மெய்ன்ஸ் உயர்மரைமாவட்ட பேராயருமான “ரபானஸ் மௌரஸ்” (Rabanus Maurus) என்பவருடன் கடித தொடர்பு வைத்திருந்தார். 829ம் ஆண்டு, “மெயின்ஸ்” (Mainz) நகரில் நடந்த ஆலோசனை சபையில் அவரது அறிவு மற்றும் புரிந்துகொள்ளுதலையும் அவர் பாராட்டினார்.
ஃப்ரெட்ரிக் எப்படி மரித்தார் என்பதற்கான தெளிவான தகவல்கள் இல்லை. அவர் கொலை செய்யப்பட்டார் என்பது மட்டும் நிரூபிக்கப்பட்டது; ஆனால், யாரால் கொலை செய்யப்பட்டார், கொலைக்கான காரணம் ஆகியனபற்றி தெளிவான தகவல் இல்லை. கி.பி. 838ம் ஆண்டு, ஜூலை மாதம், 18ம் நாளன்று, திருப்பலி நிறைவேற்றிவிட்டு வருகையில் இரண்டு பேரால் குத்திக் கொலை செய்யப்பட்டார் என்று புராணம் கூறுகிறது.
கி.பி. 11 மற்றும் 12ம் நூற்றாண்டு எழுத்தாளர்கள் “ஆயர் ஓபெர்ட்” (Bishop Otbert of Liège) (பாஸியோ ஃப்ரெடிசி) மற்றும் ஆங்கிலேய வரலாற்று ஆசிரியர் “வில்லியம்” (William of Malmesbury) ஆகியோரின் கூற்றுப்படி, கொலைகாரர்களை ஏற்பாடு செய்து ஏவி விட்டது, பேரரசி ஜூடித் (Empress Judith) என்கிறது. காரணம், பேரரசியின் ஒழுக்கக்கேடான வாழ்க்கை முறையை ஃபிரடெரிக் தொடர்ந்து விமர்சித்து வந்ததே ஆகும்.
கொலை செய்யப்பட்ட ஃபிரடெரிக், “உட்ரெச்ட்” (Utrecht) நகரின் “தூய சல்வேடார்” ஆலயத்தில் (St. Salvator's Church) அடக்கம் செய்யப்பட்டார். இவர், காது கேளாதோரின் பாதுகாவலர் ஆவார்.
† Saint of the Day †
(July 18)
✠ St. Frederick of Utrecht ✠
Bishop of Utrecht and Martyr:
Born: 780 AD
Died: July 18, 838
Venerated in:
Roman Catholic Church
Eastern Orthodox Church
Feast: July 18
Frederick, was Bishop of Utrecht between 815/816 and 834/838 AD and is a saint of the Eastern Orthodox Church and Roman Catholic Church.
St. Frederick, the grandson of King Radbon of the Frisians, was educated by the clergy of the church of Utrecht, and later became a priest known for his great piety and learning. He was placed in charge of instructing catechumens and was eventually elected Bishop of Utrecht around the year 825.
The new bishop at once began to put his diocese in order and sent St. Odulf and other missionaries into the northern parts to dispel the paganism which still existed there. For himself, Frederick reserved the most difficult territory, Walcheren, an island belonging to the Netherlands which was rampant with incestuous marriages. He worked unceasingly to eradicate this evil and brought countless penitents back to God.
During this same period, Frederick was told of immoralities committed by Empress Judith. The saintly bishop went to the court with the purpose of admonishing her with charity but only succeeded in incurring the Empress’ ill will.
On July 18, 838, after Frederick had celebrated Mass and was about to make his thanksgiving in a side chapel, he was stabbed by two assassins. He died a few minutes later, reciting the psalm “I will praise the Lord in the land of the living.” One theory claims that the assassins were sent by the Empress in revenge; more likely, however, is that they were sent by some inhabitants of Walcheren who deeply resented the bishop’s evangelization efforts in their territory.
St. Frederick composed a prayer to the Blessed Trinity which for centuries was used in the Netherlands. The reputation of his sanctity appears in a poem in praise of his virtues by Blessed Rabanus Maurus, his contemporary.
Lessons:
1. Correcting others with charity is not something most people enjoy doing; however, we have our Lord’s admonition to do so in the Gospel of Matthew: “If your brother sins against you, go and tell him his fault...” Let us ask Christ for the grace to know when to speak and when to keep silent, and like St. Frederick, not to be afraid of possible retribution when we do speak the truth.
2. Paganism and incest sound like sins of the past that have no bearing today. While they may not worship gods of stone and wood, many today still worship the gods of fame, power, and wealth. Incest may not be as common, but unspeakable sins of the flesh are still rampant. Let us pray to St. Frederick for help in eradicating these evils from our lives and the lives of those around us.
No comments:
Post a Comment