புனிதர்களை பெயர் வரிசையில் தேட

Translate

18 July 2020

​புனித அன்ஸ்வெர் (St.Answer of Ratzeburg)மறைசாட்சி July 18

இன்றைய புனிதர் :
(18-07-2020)

​புனித அன்ஸ்வெர் (St.Answer of Ratzeburg)
மறைசாட்சி

பிறப்பு 
--
    
இறப்பு 
1066

அன்ஸ்வெர் 11 ஆம் நூற்றாண்டில் ராட்சபெர்க் என்ற ஊரிலிருந்த புனித பெனடிக்ட் துறவற சபையில் துறவியாக வாழ்ந்தார். இவர் துறவியான பிறகு மிஷினரியாக சலேசியன் நாட்டிற்கு வந்தார். மறைபரப்பு பணியின்போது, ஒரு சில முரடர்களால் இவர் கொல்லப்பட்டார். இவர் கொல்லப்பட்டார் என்ற செய்தியை அறிந்த ராட்சபெர்க் மக்கள், இவரின் உடலை கொண்டு வந்து ராட்சபெர்கில் அடக்கம் செய்தனர். அன்றிலிருந்து இவரின் கல்லறையில் ஏராளமான மக்கள் வணக்கம் செலுத்தி வருகின்றனர். இவரின் பெயரில் அவ்வூரில் பெரிய சிலுவை ஒன்று வைக்கப்பட்டுள்ளது. அச்சிலுவையின் முன் செபிக்கும்போது, பல்வேறு பலன்களை மக்கள் பெற்றுவருகின்றனர்.


செபம்:
அன்பான இறைவா! மறைபரப்பு பணியை செய்ததால் மறைசாட்சியாக தன் உயிரை நீத்தார் அன்ஸ்வெர். இவரைப்போல இன்று மரிக்கும் ஒவ்வொருவரையும் நீர் நிறைவாக ஆசீர்வதித்து உம் வான்வீட்டில் சேர்த்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

---JDH---தெய்வீக குணமளிக்கும் இயேசு /திண்டுக்கல்.
Saint of the Day : (18-07-2020)

Saint ANSUERUS. 

Abbot and martyr; b. Mecklenburg, Germany, c. 1040; d. Ratzeburg, Germany, July 15, 1066. He entered the benedictine monastery of Sankt Georg in Ratzeburg, where he was noted for his learning and piety and became abbot while still young. He devoted himself to the conversion of the Slavs and preached the gospel to the pagans still living around Ratzeburg. In 1066, together with about 30 companions, he was stoned by pagan Wends. He begged his executioners to kill him last so that his companions would not apostatize and so that he could comfort them. His body was first interred in the crypt at Sankt Georg; but when a blind man was restored to sight at the tomb, Bishop Evermond (d. 1178) had the martyr's remains translated to the cathedral of Ratzeburg. The relics perished during the disorders of the Reformation period. Canonization was granted with papal approval by Abp. adalbert of bremen. Ansuerus was included in the Schleswig and Ratzeburg Breviaries, but since the Reformation he is remembered only in monastic martyrologies. His memorials are a cross near Ratzeburg and a painting in the cathedral there.

---JDH---Jesus the Divine Healer---

No comments:

Post a Comment