ஜூலை 18
புனித புரூனோ
இவர் இத்தாலியில் உள்ள அஸ்டி என்ற இடத்தில் பிறந்தவர். சிறுவயதிலேயே கடவுள்மீது மிகுந்த பற்றுகொண்டு இவர், இறைவன் தன்னைத் தனது பணிக்காக அழைப்பதை உணர்ந்ததும், புனித பெனடிக்ட் சபையில் சேர்ந்து துறவியானார்.
இவருக்கு 30 வயது நடக்கும்பொழுது, அப்பொழுது திருத்தந்தையாக இருந்த இரண்டாம் கிரகோரி இவரிடமிருந்த ஞானத்தைக் கண்டு, இவரை செக்னி என்ற இடத்தின் ஆயராகத் திருப்பொழிவு செய்தார்.
சிறிதுகாலத்திற்கு ஆயர் பணியைச் சிறப்பாக செய்த இவர், 'ஆயர் பணிக்குத் நான் எந்த விதத்திலும் தகுதி இல்லாதவன்' என்பதை உணர்ந்து, அப்பதவியை ராஜினமா செய்துவிட்டு, முன்பிருந்த துறவு மடத்திற்குச் சென்று, ஒரு துறவியாக வாழ்ந்து வந்தார்.
இதற்குப் பின்பு இவர் துறவு மடத்தின் தலைவராகவும், வத்திக்கானில் உள்ள நூலகத்தின் நூலகராகவும் உயர்த்தப்பட்டார். தான் ஒவ்வொரு முறையும் பதவி உயர்த்தப்பட்டபோதெல்லாம், இவர் மிகவும் தாழ்ச்சியோடு நடந்து கொண்டார்.
இவர் நற்கருணையைக் குறித்து எழுதிய எழுத்துக்களெல்லாம் இன்றைக்கும் எல்லாராலும் வியந்து பாராட்டப்படுகிறது. இவருக்கு 1183 ஆம் ஆண்டு புனிதர் பட்டம் கொடுக்கப்பட்டது.
No comments:
Post a Comment