புனிதர்களை பெயர் வரிசையில் தேட

Translate

04 July 2020

சிரேன் நகர்ப் புனித தியோடர்(மூன்றாம் நூற்றாண்டு) July 4

ஜூலை 04

சிரேன் நகர்ப் புனித தியோடர்
(மூன்றாம் நூற்றாண்டு)

இவர் ஆப்பிரிக்கக் கண்டத்தில் இருக்கும் லிபியா என்ற நாட்டில்  உள்ள சிரேன் என்ற ஊரைச் சார்ந்தவர்.
மிகச்சிறந்த எழுத்தாளரான இவர்,சிரேன் நகரின் ஆயரானார். இவர் தன்னுடைய கடின உழைப்பால் அச்சகங்கள் இல்லாத அந்தக் காலத்தில் திருவிவிலியத்தையும், திருஅவையின் ஒரு சில முக்கியமான நூல்களையும் பிரதி எடுத்தார். மட்டுமல்லாமல், தான் பிரதி எடுத்த நூல்களைப் பலருக்கும் வாசிக்கக் கொடுத்து அவர்களைக் கிறிஸ்துவின்மீது நம்பிக்கை கொள்ளச் செய்தார்.

இவருடைய காலத்தில்தான் திருஅவைக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருந்த தியோகிளசியன் என்பவன் உரோமையை ஆண்டு வந்தான். அவன் தன்னுடைய ஆளுகைக்கு உட்பட்ட பகுதிகளில், யாரெல்லாம் உரோமைக் கடவுளை வழிபடாமல் கிறிஸ்துவை வழிபட்டு வந்தார்களோ, அவர்களைப் பிடித்துச் சித்திரவதை செய்து வந்தான்.

இந்நிலையில் ஆயர் தியோடர் தன்னுடைய எழுத்துப் பணியால் பலரையும் கிறிஸ்துவுக்குள் கொண்டு வருவதை அறிந்து, சிரேனில் ஆளுநராக இருந்த டிக்னியானுஸ் என்பவன் மூலம் ஆயரைக் கைது செய்து,  உரோமைக் கடவுளுக்குப் பலி செலுத்தச் சொன்னான்.

ஆயர் தியோடரோ கிறிஸ்துவைத் தவிர வேறு யாரையும் வழிபடுவதில்லை என்று தன்னுடைய நம்பிக்கையில் உறுதியாக இருந்தார்.  இதனால் ஆளுநர் இவரையும் இவரால் மனமாற்றம் அடைந்த சிப்ரில்லா, லூசியா, ஆரோ ஆகியோரையும் தலை வெட்டி கொன்று போட்டான்.

No comments:

Post a Comment