புனிதர்களை பெயர் வரிசையில் தேட

Translate

04 July 2020

புனித எலிசபெத் ( St. Elizabeth of Portugal ) July 4

இன்றைய புனிதர் :
(04-07-2020)

புனித எலிசபெத் 
( St. Elizabeth of Portugal )
அரசி/ விதவை/ 3ம் சபை உறுப்பினர் :

பிறப்பு : 1271
அராகன் அரசு

இறப்பு : ஜூலை 4, 1336
போர்ச்சுகீசிய அரசு

புனிதர் பட்டம் : மே 25, 1625
திருத்தந்தை எட்டாம் உர்பன் - ரோம்

நினைவுத் திருநாள் : ஜூலை 4

புனித எலிசபெத், ஸ்பெயின் நாட்டு மன்னன் 3ம் பீட்டரின் மகள். ஸ்பெயின் மொழியில் எலிசபெத்தின் பெயர் இசபெல்லா. ஹங்கேரி நாட்டு அரசி புனித எலிசபெத்தின் பேத்தி. இவர் இளமை முதல் ஆழமான பக்தியிலும் தவமுயற்சிகளிலும் வளர்ந்தார்.
12ம் வயதில் போர்த்துக்கல் மன்னன் டென்னிசுக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டார். மன்னன் தன் வாழ்வை கீழ்த்தரமாக வாழ்ந்தார். இவருக்கு கான்ஸ்டன்ஸ் (Constance) என்ற பெயரில் ஒரு மகள் இருந்தார். அவர், காஸ்டினால் அரசன் நான்காம் ஃபெர்டினான் (Ferdinand IV of Castile) என்பவரை மணந்தார்.
அஃபோன்சோ (Afonso) என்ற பெயரில் ஒரு மகன் இருந்தார். இவர், பின்னாளில் போர்ச்சுகல் நாட்டின் நான்காம் அஃபோன்சோ மன்னராக வந்தார். (King Afonso IV of Portugal)
எலிசபெத் இத்தகைய சூழ்நிலையிலும் தன் ஆன்மீக வாழ்வில் மிகுந்த உறுதியும் ஆர்வமும் காட்டினார். அதிகாலையில் தினந்தோறும் கட்டளை செபத்தில் உள்ள செபத்தை செபித்து வந்தார். உண்ணா நோன்பையும், ஒறுத்தல் முயற்சிகளையும் பெருக்கிக் கொண்டே போனார். தம்முடைய கணவர் முன்கோபியாகவும், முரடராகவும் நடந்து கொண்டாலும், தன்னுடைய விசுவாசம் நிறைந்த செபத்தின் மூலம் தன்னுடைய 40 ஆண்டு காலத் திருமண வாழ்வில் இவர் வெற்றி கண்டார். 
கணவனை முற்றிலும் இறைவன் பக்கம் மனம் மாறிட வழிவகுத்தார். மனமாறிய கணவர் 12 ஆண்டுகள் இறை விசுவாசத்தில் வாழ்ந்து இறந்தார்.
எலிசபெத் தன் கணவரின் இறப்பிற்குப் பின் கிளாரம்மாள் துறவு மடம் சென்று அசிசியாரின் 3ம் சபை உறுப்பினராக வாழ்ந்தார். ஏழைகளை பேணுவதில் தன் நேரத்தையும், மிகுந்த பணத்தையும் செலவழித்தார். நோயுற்றவர்களுக்காக தன்னை அர்ப்பணித்து பணியாற்றினார். இவரின் கணவர் உயிருடன் வாழ்ந்தபோது, முரடாக இருந்தபோது ஒரு முறை வயிற்று பசியுடன் இருந்த ஏழை ஒருவர் அரண்மனைக்கு வந்தார். அவருக்கு ரொட்டி கொடுக்க கூடை நிறைய எடுத்து சென்றார். இதைக் கண்ட முரட்டுக் கணவர், அவரை வழிமறித்து, கூடையை பார்த்தார். அப்போது கூடையிலிருந்த 2 ரொட்டித்துண்டுகள் ரோஜா மலர்களாக மாறி காட்சியளித்தது.
அனைத்திற்கும் மேலாக இவர் ஓர் "அமைதி விரும்பி" என்றே அழைக்கப்பட்டார். 5 முறை மிகக் கடுமையான சூழலில் அமைதியை நாட்டில் நிலைநாட்டினார். அமைதியை நிலைநாட்ட கருதி முறையாக எடுத்த நீண்ட அரிய பயணம், அவரது உயிரை வாங்கியது. 1323 ல் தன் மகன் அல்போன்சோ தன் தந்தையின் வப்பாட்டியின் மகனுடன் போர் தொடுத்தபோது, எலிசபெத்தின் குறுக்கீட்டால் அமைதி ஏற்பட்டது. 13 ஆண்டுகளுக்கு பின்னர், தாம் தங்கியிருந்த மடத்திலிருந்து வெளியேறி, ஸ்பெயினுக்கு பயணமாகி, அல்போன்சோவுக்கு அவரின் மைத்துனர் காஸ்டில் நாட்டு மன்னருக்கும் இடையே அமைதியை நிலைநாட்டினர். தம் உடன்பிறந்தவரும், ஆரம்கான் நாட்டு மன்னனுமான 2 ஆம் ஜேம்சுக்கும் தம் இன்னோரு உறவினரும் காஸ்டில் மன்னனுமான 4 ஆம் பெர்னாண்டுக்கும் இடையிலும் அமைதியை உண்டு பண்ணினார்.
தன் கணவரை இறைவன் பக்கம் திருப்பியதும் இறைவனுடன் ஒப்புரவு செய்து வைத்ததும், எலிசபெத்தின் மிகப் பெரிய சாதனை. கணவர் சாவு படுக்கையிலிருக்கும் போதுதான். அவரை மனந்திருப்பினார். கடைசிவரை கணவரை அருமை பெருமையாக கவனித்துக் கொண்டார். "அமைதியை ஆண்டவனின் கட்டளையாக கருதி நிலைநாட்ட வேண்டும். நான் அமைதியை விட்டு செல்கிறேன். என் அமைதியையே உங்களுக்கு அளிக்கிறேன்" என்றார் நம் ஆண்டவர். அதாவது நான் உங்களைவிட்டு பிரியும்போது அமைதியில்தான் உங்களைக் காணவேண்டும் என்பது பொருள். ஆண்டவர் வரும்போது விரும்பி எதிர்பார்ப்பேன் என்று சொல்லி சென்றதும் அமைதியே, அமைதி விரும்பியாக இரு; அப்போது எங்கும் அமைதி மயமாக திகழும், கடவுளின் திருச்சபை அமைதியில்தான் நிறுவப்பட்டது" என்ற புனித கிளிசொலொகு அருளப்பரின் (Chrisologu John) வார்த்தையை தன் வாழ்வாக வாழ்ந்தார்.

செபம் :
ஏழைகளின் நண்பனே எம் இறைவா! 
ஏழைகளின் மேல் பாசம் வைத்து, தன் வாழ்வையே அவர்களுக்காக கொடுத்து, உம்மில் நம்பிக்கையும், விசுவாசமும் கொண்டு வாழ்ந்து, பலரின் வாழ்வில் ஒளியேற்றிய புனித எலிசபெத்தைபோல, நாங்களும் ஏழைகளின் நண்பர்களாக வாழ வரம் தாரும். 
ஆமென்.

---JDH---தெய்வீக குணமளிக்கும் இயேசு /திண்டுக்கல்.
Saint of the Day : (04-07-2020)

St. Elizabeth of Portugal

She was born in the year 1271 as the daughter of King Pedro-III of Aragon and Constantia. Her great-aunt was St. Elizabeth of Hungary, for whom this Elizabeth was named. She married King Denis of Portugal at the age of 12 years. But their marriage was celebrated in 1288 when Denis was 26 years and Elizabeth was 17 years. They had two children a daughter named Constance and son named Alfonso. The son Alfonso later became king Alfonso of Portugal and daughter married king Ferdinand-IV of Castile. She was very religious and used to attend Mass every day. One of the servants of Elizabeth gave false information to the King Denis connecting Elizabeth with another of her servant. The king ordered the servant who is said to have illegal connection with Queen Elizabeth to go and meet a lime burner but the lime burner has already been instructed by the king to burn him in the barn. The innocent servant went to meet the lime burner identified by the King but on the way he entered a church to attend the Mass, since he was in the habit of regularly attending mass daily and on that day he also sat for the second mass and delayed meeting the lime burner. In the meantime the king sent the servant, who gave the wrong information, to meet the lime burner to ascertain as to whether the other servant was burned and killed. The second servant went straight to meet the lime burner as ordered by the king to ascertain the truth, but the lime burner thinking that the second servant, who was sent to ascertain the fact of killing of the first servant is the one to be killed and immediately burned and killed him. The first servant, who was good and innocent, escaped death miraculously by attending the mass. Then the king Denis knew the truth and became very loyal to Elizabeth. Elizabeth was very devoted to the poor and sick people. She went to Spain in 1304 and arbitrated between king Fernando-IV of Castile and her brother James-II of Aragon. She also made peace between her husband king Denis and her son Alfonso, by going in between the armies of the two factions by mounting on a mule. She acted as peace maker between nations and between the members of her own royal family. After the death of her husband Denis, she retired in the Monastery of the Poor Clare nuns. Later she joined the Third Order of Francis devoting her life fully to the poor and the sick. She was well known for her paying dowries for poor girls, for educating poor children and for distributing small gifts often to others. She took the habit of Franciscan Tertiary and continued her charitable works. She died on July 4, 1336 in the castle of Estremoz.
St. Elizabeth was beatified in 1526. She was canonized by pope Urban-VIII on May 25, 1625.She is the patron saint of charitable societies, charitable works, difficult marriages, falsely accused people, victims of Jealousy and victims of unfaithfulness.

---JDH---Jesus the Divine Healer---

No comments:

Post a Comment