புனிதர்களை பெயர் வரிசையில் தேட

Translate

04 July 2020

புனிதர் ஆண்ட்ரூ ✠ ✠(St. Andrew of Crete) July 4

† இன்றைய புனிதர் †
(ஜூலை 4)

✠ புனிதர் ஆண்ட்ரூ ✠ ✠
(St. Andrew of Crete)
வணக்கத்துக்குரிய தந்தை, ஆயர், இறையியலாளர், மறையுரையாளர், கீர்த்தனை அல்லது ஆன்மீகப் பாடலாசிரியர்:
(Venerable Father, Bishop, Theologian, Homilist and Hymnographer)

பிறப்பு: கி.பி. 650
டமாஸ்கஸ்
(Damascus)

இறப்பு: ஜூலை 4, 712 அல்லது 726 அல்லது 740
மைட்டிலேன்
(Mytilene)

ஏற்கும் சமயம்:
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)
கிழக்கு மரபுவழி திருச்சபை
(Eastern Orthodox Church)

நினைவுத் திருநாள்: ஜூலை 4

“கிரேட் நகர ஆண்ட்ரூ” (Andrew of Crete) என்றும், “ஜெருசலேம் நகர ஆண்ட்ரூ” (Andrew of Jerusalem) என்றும் அழைக்கப்படும் இப்புனிதர், 7-8ம் நூற்றாண்டுகளில் வாழ்ந்திருந்த வணக்கத்துக்குரிய தந்தையும், ஆயரும், இறையியலாளரும், மறையுரையாளரும், கீர்த்தனை அல்லது ஆன்மீகப் பாடலாசிரியருமாவார். ரோமன் கத்தோலிக்க திருச்சபை (Roman Catholic Churches) மற்றும் கிழக்கு மரபுவழி திருச்சபைகள் (Eastern Orthodox Churches) இவரை புனிதராக ஏற்கின்றன.

சிரிய அரபு குடியரசின் (Syrian Arab Republic) தலைநகரான “டமாஸ்கஸ்” (Damascus) நகரில் பிறந்த ஆண்ட்ரூ, பிறந்ததுமுதல் ஏழு வயது வரை பேச இயலாத ஊமையாக இருந்தார். புதுநன்மை (Holy Communion) அருட்சாதனம் வாங்கியதுமே இவர் அதிசயித்தக்க விதமாக பேச ஆரம்பித்தார் என்று இவரது சரிதத்தை எழுதிய வரலாற்று ஆசிரியர்கள் (Hagiographers) கூறுகின்றனர்.

இவர் தமது இறையியல் வாழ்க்கையை (Ecclesiastical Career) ஜெருசலேம் (Jerusalem) அருகிலுள்ள “லாவ்ரா” (Lavra) எனும் “புனிதர் சப்பாஸ்” (St. Sabbas the Sanctified) என்பவரின் துறவு மடத்தில் தமது பதினான்கு வயதில், தொடங்கினார். அங்கே அவர் விரைவில் தனது மேலுள்ள துறவியரின் கவனத்தை ஈர்த்தார். ஜெருசலேம் நகரின் தலைமை ஆயரான (Patriarchate of Jerusalem) “தியோடோர்” (Theodore) என்பவர், இவரை அர்ச்.திருத்தொண்டராக (Archdeacon) அருட்பொழிவு செய்வித்து, ரோமப் பேரரசின் தலைநகரான “கான்ஸ்டண்டிநோபில்” (Constantinople) நகரில் 680–681 ஆண்டுகளில் நடந்த “கான்ஸ்டான்டிநோபிள் மூன்றாம் கவுன்சிலில்” (Sixth Ecumenical Council) தமது பிரதிநிதியாகப் பங்குபெற அனுப்பினார். இந்த கவுன்சிலானது, மதங்களுக்கு எதிரான “மோனோடேலிடிஸம்" (Heresy of Monothelitism) கொள்கைகளுக்கெதிரானது என்று, பேரரசன் “நான்காம் கான்ஸ்டன்டைன்” (Emperor Constantine Pogonatus) என்று அழைத்தார்.

“கான்ஸ்டான்டிநோபிள் மூன்றாம் கவுன்சில்” (Sixth Ecumenical Council) முடிவுற்ற சிறிது காலத்திலேயே ஜெருசலேமிலிருந்து கான்ஸ்டான்டிநோபிள் நகருக்கு திரும்ப வரவழைக்கப்பட்ட இவர், முன்னாள் கிரேக்க மரபுவழி திருச்சபைகளின் (Great Church of Hagia Sophia) பேராலயத்தின் அர்ச்.திருத்தொண்டராக அருட்பொழிவு செய்விக்கப்பட்டார். இறுதியில் ஆண்ட்ரூ, கிரேக்க தீவுகளில் மிகப்பெரிய மற்றும் அதிக மக்கள்தொகை கொண்ட “கிரேட்” (Crete) தீவின் தலைநகரான “கோர்டினா” (Gortyna) நகரின் ஆயரவையில் (Metropolitan see) நியமிக்கப்பட்டார்.

இவர், மதங்களுக்கு எதிரான “மோனோடேலிடிஸம்" (Heresy of Monothelitism) கொள்கைகளுக்கெதிரானவராயினும், கி.பி. 712ம் ஆண்டு நடந்த ஆலோசனை சபையில் (Conciliabulum) கலந்துகொண்டார். இந்த ஆலோசனை சபையில் “எகுமென்சியல்” சபையின் (Ecumenical Council) தீர்மானங்கள் அகற்றப்பட்டன. ஆனால் அடுத்த வருடத்தில் அவர் மனந்திரும்பி மரபுவழி திருச்சபைக்கு திரும்பினார். அதன்பின்னர், அவர் பிரசங்கங்கள் நிகழ்த்துவதிலும், பாடல்கள் இயற்றுவதிலும் தம்மை ஈடுபடுத்திக்கொண்டார். ஒரு பிரசங்கியாக, அவருடைய சொற்பொழிவுகள் அவற்றின் கண்ணியமான மற்றும் ஒத்திசைவான சொற்றொடருக்காக அறியப்படுகிறது, இதற்காக அவர் பைசண்டைன் சகாப்தத்தின் (Byzantine epoch) முன்னணி திருச்சபை எழுத்தாளர்களில் ஒருவராக கருதப்படுகிறார்.

திருச்சபை சரித்திர ஆசிரியர்களிடையே அவருடைய மரணத்தின் தேதிக்கு சமமான கருத்து இல்லை. “கான்ஸ்டண்டிநோபில்” (Constantinople) நகரிலிருந்து திருச்சபை பணிகளுக்காய் “கிரேட்” (Crete) தீவு திரும்பும் வழியில், “மைடெலின்” (Mytilene) தீவில் இவர் மரித்தார்.

† Saint of the Day †
(July 4)

✠ St. Andrew of Crete ✠

Venerable Father, Bishop, Theologian, Homilist and Hymnographer:

Born: 650 AD
Damascus

Died: July 4, 712 or 726 or 740
Mytilene

Venerated in:
Catholic Church
Orthodox Church
Eastern Catholicism

Feast: July 4

Saint Andrew of Crete, also known as Andrew of Jerusalem, was an 8th-century bishop, theologian, homilist, and hymnographer. He is venerated as a saint by Eastern Orthodox and Roman Catholic Christians.

Among Eastern Christians he is best known as the author of the “Great Cannon,” a lengthy prayer service traditionally offered as a penitential practice during Lent. He is also venerated as a saint in the Roman Catholic Church, where he is better known for his writings on the Blessed Virgin Mary.

He should not be confused with a different “Saint Andrew of Crete,” celebrated on Oct. 17, who suffered martyrdom while defending the veneration of icons during the eighth century.

The author of the “Great Cannon” was born in the Syrian city of Damascus in the mid-seventh century. He is said to have remained mute for the first seven years of his life, gaining the power of speech at age seven after the reception of Holy Communion.

Devoted to God from that time on, Andrew went to Jerusalem and entered the Monastery of Saint Sava when he was 15 years old. He went on to serve as a cleric of the Jerusalem Patriarchate and was sent as a representative to the Sixth Ecumenical Council in Constantinople (680-681).

The council took up the Monothelite controversy, a disagreement as to whether Christ had both a divine and a human will (as the Church teaches), or only a divine will. Though the question may seem abstract to modern ears, it was an important point, bearing on the reality of Jesus' full humanity.

In 685 Andrew returned to Constantinople, where he did charitable work for orphans and the poor and served as a deacon in the great Hagia Sophia church. Around the year 700, he became archbishop of the city of Gortyna, on the island of Crete.

In 712, during a resurgence of the Monothelite heresy, Andrew was forced to attend an illegitimate gathering in which the Byzantine emperor Philippicus Bardanes tried to reverse the decisions of the Sixth Council. Andrew's coerced attendance was questioned, but forgiven, by the reigning Pope Constantine.

Little is known about the rest of the archbishop's life, which ended peacefully, probably in 740. While his participation in the historic Sixth Council is important, St. Andrew of Crete’s legacy has more to do with his outstanding sermons and liturgical hymns, reflective of a deep interior life of faith.

The Great Canon, his most ambitious known work, takes around three hours to chant. It incorporates more than 200 full-body prostrations along with its many litanies, odes, and refrains. Surveying the Old and New Testaments, it stresses the urgency of repentance and conversion.

The service begins: “Where shall I begin to lament the deeds of my wretched life? What first-fruit shall I offer, O Christ, for my present lamentation? But in Thy compassion grant me release from my falls.”

“Come, wretched soul, with your flesh, confess to the Creator of all. In future refrain from your former brutishness, and offer to God tears in repentance.”

Interspersed throughout, is the Great Canon’s defining plea: “Have mercy on me, O God, have mercy on me!”

No comments:

Post a Comment