புனிதர்களை பெயர் வரிசையில் தேட

Translate

02 September 2020

புனித சாலமோன் தெ கிளெர்க்(1745-1792)(செப்டம்பர் 02)

புனித சாலமோன் தெ கிளெர்க்
(1745-1792)

(செப்டம்பர் 02)
இவர் பிரான்ஸ் நாட்டைச் சார்ந்தவர். இவரது தந்தை ஒரு வணிகர். 

தனக்குப் பின் தன்னுடைய தொழிலை தன் மகன் தொடர்வார் என்று இவரது தந்தை நினைத்திருக்க, இவர் தன் தந்தை எதிர்பார்த்ததற்கு மாறாக, 'The Brothers of Christian School' என்ற துறவற சபையில் சேர்ந்தார்.

துறவற வாழ்வில் இவர் இறைப்பற்றிற்கும் இறைவேண்டலுக்கும் மிகப்பெரிய எடுத்துக்காட்டாக விளங்கினார்.

இதற்குப் பிறகு இவர் பிரான்ஸ் நாடு முழுவதும் சென்று பள்ளிகளில் மாணவர்களுக்கு நல்ல முறையில் பாடம் கற்றுத் தந்தார். தன்னுடைய துறவறசபையிலும் இவர் நவ துறவிகளுக்குப் பயிற்சியாளராகவும், சபையில் பொருளராகவும் பணியாற்றி வந்தார்.

1792 ஆம் ஆண்டு பிரான்ஸ் நாட்டில் புரட்சி வெடித்தது.‌ இப்புரட்சியின் போது திருஅவைக்கு எதிரான கலகம் ஏற்பட்டது. இதில் பல குருக்களும் துறவிகளும் கொல்லப்பட்டார்கள். அப்படி கொல்லப்பட்டவர்களில் இவரும் ஒருவர்.

இவ்வாறு இவர் ஒரு நல்லாசிரியராகவும் ஆண்டவருடைய வார்த்தையை நல்லமுறையில் அறிவித்த நற்செய்திப் பணியாளராகவும் இருந்து ஆண்டவருக்கு சான்று பகர்ந்தார்.

No comments:

Post a Comment