புனிதர்களை பெயர் வரிசையில் தேட

Translate

02 September 2020

✠ அருளாளர் ஜான் ஃபிரான்சிஸ் புர்ட் மற்றும் தோழர்கள்✠(Blessed John Francis Burté and Companions)செப்டம்பர் 2

† இன்றைய புனிதர் †
(செப்டம்பர் 2)

✠ அருளாளர் ஜான் ஃபிரான்சிஸ் புர்ட் மற்றும் தோழர்கள்✠
(Blessed John Francis Burté and Companions)
மறைசாட்சிகள்:
(Martyres)

பிறப்பு: ----

இறப்பு: செப்டம்பர் 2, 1792

ஏற்கும் சமயம்:
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)

நினைவுத் திருநாள்: செப்டம்பர் 2

இந்த குருக்கள் ஃபிரெஞ்ச் புரட்சியால் பாதிக்கப்பட்டவர்கள் ஆவர். மறைசாட்சியாக மரித்த இவர்கள் அனைவரும் வெவ்வேறு காலகட்டங்களில் மரித்திருந்தாலும், இவர்களது ஒரே சிந்தனை, இலட்சியம் மற்றும் கொள்கையால் திருச்சபையின் நினைவில் நிற்கின்றனர். கி.பி. 1791ம் ஆண்டு, பிரெஞ்ச் தேசத்தின் சிவில் அரசியலமைப்பானது, கிறிஸ்தவ குருக்களை கிறிஸ்தவ விசுவாசத்திற்கு மாறாக சத்திய பிரமாணம் எடுத்துக்கொள்ள வலியுறுத்தியது. ஆனால், இதனை மறுதலித்த குருக்கள் அனைவரும் தூக்கிலடப்பட்டனர்.

தமது பதினாறு வயதினிலேயே ஃபிரான்சிஸ்கன் சபையில் குருத்துவம் பெற்ற ஜான் ஃபிரான்சிஸ் புர்ட்டே, இளம் துறவியருக்கு இறையியல் கற்பித்தார். பின்னர், கைது செய்யப்பட்டு அங்குள்ள கார்மேல் சபையின் பள்ளியில் சிறை வைக்கப்படும்வரை, பாரிஸ் நகரின் பழம்பெரும் துறவியர் மடத்தின் பாதுகாவலராக இருந்தார்.

கி.பி. 1739ம் ஆண்டு, ஸ்விட்சர்லாந்து (Switzerland) நாட்டில் பிறந்த “அபொல்லினரிஸ்” (Appolinaris of Posat) என்பவர் “கபுச்சின்” (Capuchins) சபையில் இணைந்தார். இவர், மறைபோதனை, ஒப்புரவு, அருட்பணியாளர்களுக்கு கற்பித்தல் ஆகியவற்றில் புகழ் பெற்று சிறந்து விளங்கினார். தூரகிழக்கு நாடுகளுக்கு மறைப்பணியாளராக செல்வதற்காக நியமிக்கப்பட்டிருந்த இவர், அதற்கான ஆயத்த பணிகளில் ஈடுபட்டிருந்தார். பாரிஸ் நகரில் “கீழ்த்திசை மொழிகளை” (Oriental languages) கற்றுக்கொண்டிருக்கையில் ஃபிரெஞ்ச் புரட்சி வெடித்தது. கிறிஸ்தவ விசுவாசத்திற்கு மாறாக சத்திய பிரமாணம் எடுத்துக்கொள்ள மறுத்த இவர் உடனடியாக கைது செய்யப்பட்டு கார்மேல் சபையின் பள்ளியில் சிறை வைக்கப்பட்டார்.

“மூன்றாம் நிலை சபையின்” (Third Order Regular) உறுப்பினரான குருவானவர் “செவெரின் கிரௌல்ட்” (Severin Girault) என்பவர், பாரிஸ் நகரில் அருட்சகோதரியர் குழுவொன்றிற்கு குருவாக இருந்தார். இவரும் கைது செய்யப்பட்டு கார்மேல் சபையின் பள்ளியில் அடைக்கப்பட்டார். கார்மேல் பள்ளியில் நடந்த வதையில், முதல் நபராக கொல்லப்பட்டவரும் இவரேயாவார்.

மேற்கண்ட மூவருடன், பல்வேறு ஆயர்கள், மறைப்பணியாளர்கள், மறைமாவட்ட குருக்கள், உள்ளிட்ட 182 பேர், கி.பி. 1792ம் ஆண்டு, செப்டம்பர் மாதம் இரண்டாம் தேதி, பாரிஸ் நகரிலுள்ள கார்மேல் சபையின் பள்ளியில், படுகொலை செய்யப்பட்டனர். 1926ம் ஆண்டு, அவர்கள் அருளாலர்களாக அருட்பொழிவு செய்விக்கப்பட்டனர்.

கி.பி. 1737ம் ஆண்டு பிறந்த பிரான்சிஸ்கன் மறைப்பணியாளர் “ஜான் பாப்டிஸ்ட் ட்ரிகுரி” (John Baptist Triquerie), மூன்று நகரங்களில் இருந்த “எளிய கிளாரா” (Poor Clare monasteries) துறவற மடங்களில் குருவாகவும், ஒப்புரவாளராகவும், பணியாற்றினார். கிறிஸ்தவ விசுவாசத்திற்கு மாறாக சத்திய பிரமாணம் எடுத்துக்கொள்ள மறுத்த காரணத்திற்காக இவர் கைது செய்யப்பட்டார். இவரும், இவருடன் மறைமாவட்ட குருக்கள் பதின்மூன்று பேரும், கி.பி. 1794ம் ஆண்டு, ஜனவரி மாதம் 21ம் தேதி, “லாவல்” (Laval) நகரில் மறைசாட்சியாக கொல்லப்பட்டனர். அவர்களனைவரும் 1955ம் ஆண்டு, அருளாளர்களாக அருட்பொழிவு செய்விக்கப்பட்டனர்.

† Saint of the Day †
(September 2)

✠ Blessed John Francis Burté and Companions ✠

Martyres:

Born: ----

Died: September 2, 1792, And January 21, 1794

Venerated in:
Roman Catholic Church

Feast: September 2

Practically every page in the history of the French Revolution is stained with blood. What is known in history as the Carmelite Massacre of 1792, added nearly 200 victims to this noble company of martyrs? They were all priests, secular and religious, who refused to take the schismatic oath and had been imprisoned in the church attached to the Carmelite monastery in Paris. Among these priests were a Conventual, a Capuchin, and a member of the Third Order Regular.  These priests were victims of the French Revolution.

Though their martyrdom spans a period of several years, they stand together in the Church’s memory because they all gave their lives for the same principle. The Civil Constitution of the Clergy (1791) required all priests to take an oath which amounted to a denial of the faith. Each of these men refused and was executed.

John Francis Burte was born in the town of Rambervillers in Lorraine. At the age of 16, he joined the Franciscans at Nancy and there he also pronounced his solemn vows. In due time he has ordained a priest and for some time taught theology to the younger members of the order. He was at one time also superior of his convent.

After Pope Clement XIV, formerly a Conventual friar had ordered the merging of the province of the Franciscans, to which John Francis belonged, with the Conventuals, Father John Francis was placed in charge of the large convent in Paris and encouraged his brethren to practice the strict observance of the rule. His zeal for souls was outstanding, and he zealously guarded the rights of the Church in this troubled period of history.

When the French Revolution broke out, he was reported for permitting his priests to exercise their functions after they refused to take the infamous oath required by the government, and which was a virtual denial of their Faith. He was arrested and held captive with other priests in the convent of the Carmelites. His constancy in refusing to take the sacrilegious oath won for him a cruel martyrdom on September 2, 1792.

Acquiring a reputation as an excellent preacher, confessor, and instructor of clerics, Apollinaris of Posat was preparing to go East as a missionary.  He was in Paris studying Oriental languages when the French Revolution began. Refusing the oath, he was swiftly arrested and detained in the Carmelite convent. Born John James Morel before his entrance into religion, he was born near Fribourg in Switzerland in 1739 and received his education from the Jesuits. In 1762 he joined the Capuchins in Zug and before long became a prominent preacher, a much-sought confessor, and an eminent instructor of the young clerics of the order.  He impressed on their minds the truth that piety and learning are the two eyes of a priest, and humility was a dominating virtue in his life.  He suffered a cruel martyrdom on September 2, 1792.

Severin Girault, a member of the Third Order Regular, was a chaplain for a group of sisters in Paris. Imprisoned with the others, he was the first to die in the slaughter at the convent, a priest of the Third Order Regular, formerly George Girault, his undaunted courage merited the grace to be numbered among these martyrs of Christ. He was born at Rouen in Normandy, and early in life joined the Third Order Regular of St. Francis. Because of his eminent mental gifts, he was chosen a superior of his order. In the exercise of his priestly duties, he displayed a marked zeal for souls, and as chaplain of the convent of St. Elizabeth in Paris he was a prudent director in the ways of religious perfection.

He was also summoned to take the civil oath, and upon his refusal to do this he was seized and confined in the Carmelite convent where so many other confessors of Christ were being detained. On September 2, while he was saying his Office in the convent garden, the raving assassins made him the first victim of their cruel slaughter.

These three members of the Franciscan Order, together with 182 other servants of God who suffered martyrdom at this time, were solemnly beatified by Pope Pius XI, and the Franciscan Order was granted permission to celebrate their feast annually with an Office and special Mass.

These three plus 182 others—including several bishops and many religious and diocesan priests—were massacred at the Carmelite house in Paris on September 2, 1792. They were beatified in 1926,.John Baptist Triquerie, born in 1737, entered the Conventual Franciscans. He was chaplain and confessor of Poor Clare monasteries in three cities before he was arrested for refusing to take the oath. He and 13 diocesan priests were guillotined in Laval on January 21, 1794. He was beatified in 1955.

“Liberty, Equality, Fraternity” was the motto of the French Revolution. If individuals have “inalienable rights,” as the Declaration of Independence states, these must come not from the agreement of society (which can be very fragile/ mutable/ mercurial/ fickle/ ephemeral/ illusory) but directly from God, which the Declaration also declares with certitude and religious conviction to be the case for the United States.  At least we started out that way.

“The upheaval which occurred in France toward the close of the 18th century wrought havoc in all things sacred and profane and vented its fury against the Church and her ministers. Unscrupulous men came to power who concealed their hatred for the Church under the deceptive guise of philosophy…. It seemed that the times of the early persecutions had returned. The Church, a spotless bride of Christ, became resplendent with bright new crowns of martyrdom” (Acts of Martyrdom).

No comments:

Post a Comment