புனிதர்களை பெயர் வரிசையில் தேட

Translate

15 September 2020

புனித கன்னி மரியாவின் துயரங்கள்.செப்டம்பர் 15

செப்டம்பர் 15

புனித கன்னி மரியாவின் துயரங்கள்

விழாவைத் தொடங்கி வைத்த திருத்தந்தை
ஏழாம் பயஸ்:
1808 ஆம் ஆண்டில் ஒருநாள் திருத்தந்தை ஏழாம் பயஸ் திருத்தந்தையாக பணியாற்றிக் கொண்டிருந்தபோது, அலெக்ஸாண்டர் என்ற மன்னன் திருத்தந்தை ஏழாம் பயசை ஒருசில அரசியல் காரணங்களுக்காகக் கடத்திச் சென்று, வீட்டுச்சிறையில் வைத்தான். ஏறக்குறைய ஆறு ஆண்டுகள் திருத்தந்தை அவர்கள் வீட்டுச் சிறையில் இருந்தார். அக்காலத்தில் அவர் அனுபவித்த துன்பங்கள் ஏராளம். 1814 ஆம் ஆண்டு மார்ச் திங்கள் 17 ஆம் நாள்தான் மன்னன் அலெக்ஸாண்டர் திருத்தந்தை அவர்களை விடுதலை செய்து அனுப்பி வைத்தான். 

திருத்தந்தை அவர்கள் வீட்டுச் சிறையில் இருந்தபோது தான் அனுப்பவித்த துன்பங்கள், வேதனைகள் எல்லாவற்றையும் அன்னை மரியா தன்னுடைய வாழ்வில் அனுப்பவித்த துன்பங்களோடு சேர்த்து புனித கன்னி மரியாவின் துயரங்கள் என்று கொண்டாடப் பணித்தார். அவ்வாறு உருவானதுதான் புனித கன்னி மரியாவின் துயரங்கள் என்ற விழா. 

வரலாற்றுப் பின்னணி:

தொடக்கத்தில் இவ்விழாவனது செப்டம்பர் 18 ஆம் நாள் கொண்டாடப்பட்டு வந்தது; ஆனால் திருத்தந்தை பத்தாம் பயஸ்தான் இவ்விழாவை திருச்சிலுவையின் மாட்சி விழாவிற்கு அடுத்து கொண்டாடப் பணித்தார். ஆம், இன்று நாம் புனித கன்னி மரியாவின் துயரங்கள் விழாவைக் கொண்டாடுகின்றோம். மீட்புத் திட்டத்தில் அன்னை மரியா அனுபவித்த துன்பங்களை, ஆண்டவர் இயேசுவோடு அவர் பட்ட பாடுகளை இன்றைய நாளில் நாம் சிறப்பாக நினைவுகூர்ந்து பார்க்கின்றோம்.

ஒரு பிள்ளையின் வளர்ச்சியில் தாயானவள் முக்கியப்பங்கு ஆற்றுகிறாள். அதனால்தான் கவிஞன் ஒருவன் இவ்வாறு பாடினான்: “அம்மானா சும்மா இல்லடா, அவ இல்லனா யாரும் இல்லடா.” இது முற்றிலும் உண்மை. தாய்தான் ஒரு குழந்தையின் வளர்ப்பில், அதனுடைய முன்னேற்றத்தில் முக்கியப் பங்கு ஆற்றுகிறாள். அந்த வகையில் பார்க்கும்போது ஆண்டவர் இயேசுவின் வளர்ச்சியில், அவருடைய முழு மனித முன்னேற்றத்தில் மரியாவின் பங்கு மிக முக்கியமானது.

புனித கன்னி மரியாவின் ஏழு துயரங்கள்:

புனித கன்னி மரியா மீட்புத் திட்டத்தில் பங்குகொண்டதற்காக அனுபவித்த துன்பங்கள் ஏராளம். பல துன்பங்களை நாம் சொல்லிக்கொண்டே போனாலும் திருஅவை ஏழு என்று வரிசைப்படுத்தி இருக்கிறது. அவையாவன:

 1. சிமியோனின் இறைவாக்கு, 

2. குழந்தை இயேசுவை ஏரோது
 மன்னனிடமிருந்து காப்பாற்ற எகிப்துக்கு தூக்கிக்கொண்டு ஓடுதல்,

 3. இயேசு கோயிலில் காணாமல் போதல்,  

4. சிலுவை சுமந்துகொண்டு சென்ற இயேசுவை வழியில் சந்தித்தல்,

 5. இயேசு சிலுவையில் அறியப்படல்,

 6. இயேசுவைத் தன்னுடைய மடியில் சுமத்தல்,

 7. இயேசுவைக் கல்லறையில் அடக்கம் செய்தல். 

இயேசுவுக்காக, இறையாட்சிப் பணியில் பங்கெடுத்ததற்காக மரியா அனுபவித்த துன்பங்கள் இவை. இவற்றோடு  இன்னும் ஏராள துயரங்களை மரியா அனுபவித்தார். தன்னுடைய மகனை மக்கள் அனைவரும் பேய்பிடித்தவன், பெருந்தீனிக்காரன், பாவிகளின் நண்பன் என்று விமர்சனம் செய்யும்போது மரியா மிகுதியான துன்பங்களை அனுபவித்திருக்கலாம். ஆனாலும் அவர் கடவுளுக்காக எல்லாவற்றையும் ஏற்றுக்கொண்டார். அதனால்தான் கடவுள் அவரை இறைவனின் தாயாக உயர்த்துகிறார். 

நம்முடைய குடும்பங்களிலும் கூட பிள்ளைகளின் வளர்ச்சிக்காக, அவர்களின் முன்னேற்றத்திற்காக நம்முடைய தாய்மார்கள் அனுபவிக்கும் துன்பங்கள், சிலுவைகள் ஏராளம். எனவே அவர்களை இந்த நாளில் சிறப்பாக நினைவுகூர்ந்து பார்த்து, அவர்களுக்காக மன்றாடுவது இன்னும் பொருத்தமாக இருக்கும்.

தன் தாயைக் குறித்து எடிசன்:

மிகப்பெரிய அறிவியல் விஞ்ஞானியான தாமஸ் ஆல்வா எடிசன் தன்னுடைய தாயைக் குறித்துச் சொல்லும்போது சொல்வார், “சிறுவயதில் பள்ளிக்கூடத்தில் இருந்த ஆசிரியர்கள் என்னை ஒன்றுக்கும் உதவாதவன், மக்கு என்று சொல்லி,  வெளியே அனுப்பியபோது என்னுடைய தாய்தான் என்னை சிறப்பாக வளர்த்தெடுத்தார்; அறிவையும் ஆறுதலையும் தந்து என்னை ஒரு தலைசிறந்த விஞ்ஞானியாக உருவாக்கினார். அதற்காக அவர் பட்ட துயரங்கள்கள், துன்பங்கள் ஏராளம். அவர் மட்டும் இல்லையென்றால் நான் ஒன்றுமில்லை.”

ஆம், தாமஸ் ஆல்வா எடிசனுடைய முன்னேற்றத்தில் அவருடைய தாயானவர் முக்கியப் பங்காற்றியதுபோல இன்னும் எத்தனையோ மனிதர்களுடைய வளர்ச்சியில் தாயானவள் சிறப்பான ஓர் இடம் வகிக்கிறாள் என்று சொன்னால் அது மிகையாகாது. எனவே மீட்புத் திட்டத்தில் பல்வேறு துன்பங்களை அனுபவித்த மரியன்னையின் தியாகங்களை எண்ணிப் பார்ப்போம். அவரைப் போன்று இந்த மானுட சமுதாய முன்னேற்றத்திற்காக நாம் துன்பங்களைத் துணிவுடன் ஏற்க முன்வருவோம்.

நிறைவாக வியாகுல அன்னையால் நடந்த ஓர் அற்புதத்தை தியானித்துப் பார்த்து நிறைவுசெய்வோம். 

புனித சார்லஸ் பொரோமேயு வாழ்வில்: 

புனித சார்லஸ் பொரோமேயு மிலன் நகரில் ஆயராக இருந்தபோது நடந்த நிகழ்ச்சி. 1583 ஆம் ஆண்டு ஏப்ரல் 24 ஆம் நாள் சார்லஸ் பொரோமேயுவின் ஆளுகைக்கு உட்பட்ட ஒரு கோயிலிரல் இரண்டு விவசாயிகள் வழிபடச் சென்றார்கள். அவர்கள் வழிபட்டுக்கொண்டிருந்த போது புனித  கன்னி மரியாவின் திருவுருவத்திலிருந்து கண்ணீர் வழிந்துவந்தது. சிறிது நேரத்தில் அது இரத்தமாக மாறியது.

இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அந்த விவசாயிகள் இருவரும் ஓடிப்போய் அதை மக்களிடத்தில் சொன்னார்கள். மக்களும் அந்த அற்பத்தை வந்து பார்த்தார்கள். அப்படிப் பார்க்க வந்தவர்களில் ஒருவர் மரியாவின் கண்ணிலிருந்து வரும் இரத்தம் உண்மைதானா என்று சோதித்துப் பார்க்க விரும்பி, இறுதியில் அது உண்மையெனக் கண்டுகொண்டார். பின்னர் இச்செய்தி ஆயரின் செவிகளை எட்டியது. அவரும் கார்லோ பாஸ்கேப் என்பவரின் தலைமையில் ஒரு தனிக் குழுவை அமைத்து, அது உண்மைதானா என்று கண்டறியச் சொன்னார். அந்த குழுவும் தாங்கள் மேற்கொண்ட சோதனையின் முடிவில் அது உண்மையென அறிவித்தது. இதனால் ஆயர் அவர்கள் ‘வியாகுல அன்னைக்கு அந்த இடத்தில் கோயில் கட்டத் தொடங்கினார். இப்படித்தான்  வியாகுல அன்னையின் பக்தி படிப்படியாகப் பரவியது.

எனவே, வியாகுல அன்னையின் விழாவை அல்லது புனித கன்னி மரியாவின் துயரங்களை நினைவுகூரும் நாம் அந்த அன்னையைப் போன்று இறைவனுக்காகத் துன்பங்களைத் துணிவுடன் தாங்கிக்கொள்வோம், இறைவனின் வழியில் நடப்போம். அதன்வழியாக இறையருள் நிறைவாகப் பெறுவோம்.

- மறைத்திரு. மரிய அந்தோனிராஜ்
பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

† இன்றைய திருவிழா †
(செப்டம்பர் 15)

✠ அதிதூய வியாகுல அன்னை ✠
(Our Lady of Sorrows)

ஏற்கும் சமயம்:
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)

திருவிழா நாள்: செப்டம்பர் 15

பாதுகாவல்:
ஸ்லோவாக்கியா (Slovakia), ஹங்கேரி (Hungary), போலந்து (Poland), மால்ட்டா (Malta), மரியாளின் ஏழு வியாகுலங்கள் (Seven Sorrows of Mary), மிசிசிப்பி (Mississippi), ரோண்டா (Ronda), செபு (Cebu), டனவன் பஸ்டோஸ் (Tanawan Bustos), புலாகன் (Bulacan)

வியாகுல அன்னை என்பது கன்னி மரியாளுக்கு அளிக்கப்படும் பெயர்களில் ஒன்றாகும். மரியாள் தமது வாழ்வில் பட்ட துயரங்களின் நினைவாக இறைவனின் அன்னைக்கு இப்பெயர் வழங்கப்படுகின்றது. வியாகுல அன்னையாக கத்தோலிக்க கலையில் மரியாள் அதிகம் சித்தரிக்கப்படுகிறார்.

மரியாளின் ஏழு வியாகுலங்களை தியானிக்கும் பழக்கம் கத்தோலிக்க திருச்சபையில் உள்ளது. பொதுவாக, கத்தோலிக்க கலையில் வியாகுல அன்னையை துயரத்துடனும், கண்ணீருடனும் காட்சிப்படுத்துவர். ஏழு வாள் அவரது இதயத்தை ஊடுருவி இரத்தம் கொட்டுவது போலவும் சித்தரிப்பது வழக்கம். சிமியோனின் (Simeon) இறைவாக்கின் அடிப்படையில் இப்பக்தி முயற்சி துவங்கியது. வியாகுல அன்னை ஜெபமாலை, வியாகுல அன்னை மன்றாட்டுமாலை முதலியன இப்பக்தி முயற்சிகளில் அடங்கும்.

“தூய மரியாளின் துயரங்கள்” என்னும் பெயரில் மரியாளுக்கு கத்தோலிக்க திருச்சபையில் பிரதி செப்டம்பர் மாதம் 15ம் நாள் விழா எடுக்கப்படுகின்றது.

மரியாளின் ஏழு துயரங்கள்:
இவை துயர மறைபொருள்களிலிருந்து வேறுபட்டதாகும்.
1. சிமியோனின் இறைவாக்கு:
மரியாளும், இயேசுவின் வளர்ப்புத் தந்தையான சூசையப்பரும் குழந்தை இயேசுவை எருசலேம் திருக்கோவிலில் காணிக்கையாக ஒப்புக்கொடுக்கச் சென்றபோது, அங்கிருந்த சிமியோன் குழந்தை இயேசுவைக் கையில் ஏந்தி, “இதோ இக்குழந்தை இஸ்ரயேல் மக்களுள் பலரின் வீழ்ச்சிக்கும், எழுச்சிக்கும் காரணமாக இருக்கும்; எதிர்க்கப்படும் அடையாளமாக இருக்கும். இவ்வாறு பலருடைய எண்ணங்கள் வெளிப்படும். உமது உள்ளத்தையும் ஓர் வாள் ஊடுருவிப் பாயும்” (லூக்கா 2:34-35) என்று மரியாளிடம் சொல்லுகிறார். சிமியோனின் இவ்வார்த்தைகள் மரியாளின் உள்ளத்தில் மிகப்பெரிய வேதனையை ஏற்படுத்தியிருக்கும். ஏனென்றால், இயேசுவின் தாயாக இருப்பதால் துன்பங்கள் வரலாம் என மரியாளுக்கு தெரிந்திருக்கும். ஆனால் அது இவ்வளவு சீக்கிரமாக வரும் என்று அவர் எதிர்பார்த்திருக்க மாட்டார்.
(லூக்கா 2:25-35)

2. குழந்தையைத் தூக்கிக்கொண்டு எகிப்துக்குத் தப்பி ஓடுதல்:
ஞானிகள் தன்னை ஏமாற்றிவிட்டதை அறிந்த கொடுங்கோலன் ஏரோது, குழந்தை இயேசுவைக் கொல்வதற்குக் கட்டளையிடுகின்றான். இதனை கனவின் மூலமாகத் தெரிந்துகொண்ட சூசையப்பர், மரியாளையும் குழந்தை இயேசுவையும் தூக்கிக்கொண்டு எகிப்துக்கு ஓடுகிறார். பெத்லகேமிலிருந்து எகிப்து 600 கிலோமீட்டர் தூரம் இருக்கும். அவ்வளவு தூரத்தையும் பயத்தோடும், வேதனையோடும் கழித்த மரியாளுக்கு இது ஒரு வியாகுலம்தான்.
(மத்தேயு 2:13-14)

3. சிறுவன் இயேசு கோவிலில் காணாமல் போதல்:
தூய அல்போன்ஸ் லிகோரி கூறுவார், “மரியாள் அடைந்த வியாகுலங்களில் மிகவும் கொடியது இயேசு எருசலேம் திருக்கோவிலில் காணாமல் போனதுதான். ஏனென்றால், மற்ற வியாகுலங்களில் இயேசு மரியாளோடு உடன் இருப்பார். இதில் இயேசு மரியாளோடு இல்லை. தான் ஏதாவது தவறு செய்துவிட்டோமோ, அதனால்தான் இயேசு தன்னைவிட்டுப் பிரிந்துபோய்விட்டாரோ என மரியாள் நினைத்திருக்கக் கூடும். அது அவருக்கு மிகப்பெரிய வியாகுலமாக இருந்திருக்கும்”. தூய லிகோரி சொன்னது முற்றிலும் உண்மை. இயேசு கோவிலில் காணாமல் போனது மரியாளுக்கு மிகப்பெரிய வியாகுலம்தான்.
(லூக்கா 2:43- 47)

4. இயேசு சிலுவை சுமந்து செல்லுதல்:
கள்வர்களுக்கும், நாட்டைக் காட்டிக்கொடுத்தவர்களுக்கும் கொடுக்கப்படும் சிலுவைச் சாவு, ஒரு பாவமும் அறியாத தன்னுடைய மகனுக்குக் கொடுக்கப்பட்டதை நினைத்து மரியாள் மிகுந்த வேதனை அடைந்திருக்கலாம். அது அவருக்கு மிகப்பெரிய வியாகுலமாக அமைந்திருக்கும்.
(லூக்கா 23:27)

5. சிலுவையின் அடியில் துணை நின்றது:
ஒரு குற்றவாளியைப் போன்று சிலுவையில் தொங்கிக்கொண்டிருக்கும் தன் மகன் இயேசுவைப் பார்ப்பதற்கு மரியாளுக்கு வேதனையிலும் வேதனையாக இருந்திருக்கும். மூன்று ஆண்டுகள் உடனிருந்து இயேசு செய்த அற்புதங்களையும் அதிசயங்களையும் பார்த்த சீடர்கள் ஓடிப்போனது, இயேசுவிடமிருந்து எவ்வளவோ நன்மைகளையும் நலன்களையும் பெற்றுக்கொண்ட மக்கள் அவரைக் கைநெகிழ்ந்தது, இவற்றோடு சேர்த்து, தன் மகன் இப்படி வானத்திற்கும் பூமிக்கும் இடையில் அந்தரத்தில் தொங்கிக்கொண்டிருக்கிறாரே என்று மரியாள் மிகுந்த வேதனை அடைந்திருப்பார். அது அவருக்கு பெரிய வியாகுலமாக இருந்திருக்கும்.
(யோவான் 19:41,42)

6. இறந்த இயேசுவின் உடலை மடியில் கிடத்திவைத்தல்:
எருசலேம் திருக்கோவிலில் தன்னுடைய மகனைக் காணிக்கையாக ஒப்புக் கொடுத்தபோது சிமியோன் சொன்ன ‘உமது உள்ளத்தையும் ஒரு வாள் ஊடுருவும்’ என்ற வாக்கு இங்கே நிறைவேறி விட்டதை நினைத்து மரியாள் பெரிதும் வேதனைப் பட்டிருக்கக்கூடும். இறந்த மகனின் உடலை இப்படியா சுமந்திருப்பது என்று மரியாளுக்கு இந்நிகழ்வு பெரிய வியாகுலமாகவே இருந்திருக்கும்.
(யோவான் 19: 40)

7. இயேசுவை கல்லறையில் அடக்கம் செய்தல்:
இறந்த பெற்றோர்களை பிள்ளை அடக்கம் செய்யும் நிலைமாறி, இங்கே இறந்த தன்னுடைய மகனை தாயாகிய மரியாள் அடக்கம் செய்கிறார். உலகத்தில் இதைவிட கொடுமை என்ன இருந்திருக்கும்?  மரியாள் தனக்கு ஏற்பட்ட இப்படிப்பட்ட ஒரு வியாகுலத்தை பொறுமையோடு ஏற்றுக்கொள்கிறார்; எல்லாவற்றையும் இறைத் திருவுளமென தாழ்மையோடு ஏற்றுக்கொள்கிறார். மரியாளைப் பொறுத்தளவில் பாடுகள்தான் பரலோகத்திற்கான நுழைவாயில் என்பது ஆழமான விசுவாசமாக இருந்திருக்கும். அதானால் அவர் எல்லாத் துக்கங்களையும் பொறுமையோடு ஏற்றுக்கொண்டார்.
(யோவான் 19: 41-42)

இவை ஒவ்வொன்றின் நினைவாக தினமும், கிறிஸ்து கற்பித்த “பரலோக மந்திரம்” (Our Father) ஒருமுறையும், மற்றும் “அருள்நிறைந்த” (Hail Mary) “மங்கள மந்திரம்” ஏழு முறையும் செபிப்பது கத்தோலிக்கரிடையே வழக்கமாகும்.
September 15
Saint of the day:
Our Lady of Sorrows
 
Prayer:
The Story of Our Lady of Sorrows
For a while there were two feasts in honor of the Sorrowful Mother: one going back to the 15th century, the other to the 17th century. For a while both were celebrated by the universal Church: one on the Friday before Palm Sunday, the other in September.
The principal biblical references to Mary’s sorrows are in Luke 2:35 and John 19:26-27. The Lucan passage is Simeon’s prediction about a sword piercing Mary’s soul; the Johannine passage relates Jesus’ words from the cross to Mary and to the beloved disciple.
Many early Church writers interpret the sword as Mary’s sorrows, especially as she saw Jesus die on the cross. Thus, the two passages are brought together as prediction and fulfillment.
Saint Ambrose in particular sees Mary as a sorrowful yet powerful figure at the cross. Mary stood fearlessly at the cross while others fled. Mary looked on her Son’s wounds with pity, but saw in them the salvation of the world. As Jesus hung on the cross, Mary did not fear to be killed,

No comments:

Post a Comment