புனிதர்களை பெயர் வரிசையில் தேட

Translate

15 September 2020

ஜெனுவா நகர் திருக்காட்சியாளர் & தாதி கத்தரீனா Katharina von Genua September 15

இன்றைய புனிதர்
2020-09-15
ஜெனுவா நகர் திருக்காட்சியாளர் & தாதி கத்தரீனா Katharina von Genua
பிறப்பு
1447,
ஜெனுவா, இத்தாலி
இறப்பு
15 செப்டம்பர் 1510,
ஜெனுவா
புனிதர்பட்டம்: 1737, திருத்தந்தை 12 ஆம் கிளமென்ட்
பாதுகாவல்: ஜெனுவா நகர், மருத்துவமனைகள்

இவர் ஓர் உயர்குடியில் பிறந்தவர். தனது சிறுவயதிலிருந்தே துறவியாக வேண்டுமென்று மிக ஆசைக்கொண்டார். ஆனால் 1463 ஆம் ஆண்டு தனது 16 ஆம் வயதில் பத்ரீசியர் கியூலியானோ Patrizier Giuliano என்பவருக்கு திருமணம் செய்துவைக்கப்பட்டார். அதன்பிறகு இவர் தன் கணவருடன் சேர்ந்து வாழ்ந்தார். இவரால் தன் கணவருடன் சேர்ந்து வாழ்வதற்கு முடியாமல் மிகவும் துன்பப்பட்டார். குடும்பவாழ்வில் இருக்கும்போதும் கூட இவரின் மனம் இறைவனையே நாடிச் சென்றது. இறைவன் மீது கொண்ட அன்பால் 1474 ல் இறைவனின் காட்சியை முதன்முறையாக பெற்றார். இதனால் மிக மகிழ்ச்சி அடைந்தார் கத்தரீனா. இதற்கிடையில் அவரின் கணவரும் தன் சொத்துக்கள் அனைத்தையும் இழந்தார்.

கத்தரீனாவின் ஆன்மீக வாழ்வால் அவரின் கணவர் ஈர்க்கப்பட்டார். அவரும் இறைவனை நம்பி ஏற்றுக்கொண்டார். தானும் ஓர் துறவற இல்லத்தில் சேர்ந்து தொண்டாற்ற எண்ணினார். இதனால் கத்தரீனாவும் அவரிடமிருந்து பிரிந்து, நோயாளிகளை கவனிக்கும் பொறுப்பை ஏற்றார். அதன்பிறகு மீண்டும் மீண்டும் இறைவனின் தரிசனத்தை பெற்றார். பல ஆண்டுகள் உண்ணாநோன்பிருந்து செபித்து, திவ்ய நற்கருணை மட்டுமே உட்கொண்டு, உயிர் வாழ்ந்தார்


செபம்:
இரக்கத்தின் ஆண்டவரே! புனித கத்தரீனாவின் வழியாக, உம்மை நீர் இவ்வுலகிற்கு வெளிப்படுத்தினீர். அவரின் மூலம் நோயாளிகளை குணமாக்கினீர். உம்மீது அளவில்லா பற்றுக்கொண்டு வாழ்ந்த அவரின் முன்மாதிரியான வாழ்வை பின்பற்றி நாங்களும் வாழ, உம் வரம் தந்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.




இந்நாளில் நினைவுகூறப்படும் பிற புனிதர்கள்

• போமென் அரசி லூட்மிளா Ludmilla von Böhmen
பிறப்பு: 860, போமென் Böhmen
இறப்பு: 15 செப்டம்பர் 921, பிராக் Prag, செக் குடியரசு


• மறைசாட்சி மெலிட்டா Mellita
பிறப்பு: 2 ஆம் நூற்றாண்டு, பல்கேரியா
இறப்பு: 150, பிரேஸ்லாவ் Preslav, பல்கேரியா


• அரசி ஒரானா Oranna, மிஷினரி
பிறப்பு: 5 அல்லது 6 ஆம் நூற்றாண்டு(?). ஸ்காட்லாந்து
இறப்பு: 6 ஆம் நூற்றாண்டு(?)
பாதுகாவல்: தலைசுற்றல், காதுவலியிலிருந்து


• மெடிசி நகர் துறவி ரோலாண்ட் Roland von Medici
பிறப்பு: 14 ஆம் நூற்றாண்டு, ஃப்ளோரன்ஸ் Florenz, இத்தாலி
இறப்பு: 15 செப்டம்பர் 1386, பார்கோன் Bargone, இத்தாலி
பாதுகாவல்: தலைவலியிலிருந்து
*SAINT OF THE DAY* 

Feast Day: September 15

*St.Catherine of Genoa*
(1447-1510)

Going to confession one day was the turning point of Catherine’s life.When Catherine was born, many Italian nobles were supporting Renaissance artists and writers.The needs of the poor and the sick were often over shadowed by a hunger for luxury and self-indulgence.Catherine’s parents were members of the nobility in Genoa. At 13 she attempted to become a nun but failed because of her age. 

At 16 she married Julian, a nobleman who turned out to be selfish and unfaithful. For a while she tried to numb her disappointment by a life of selfish pleasure.One day in confession she had a new sense of her own sins and how much God loved her. She reformed her life and gave good example to Julian, who soon turned from his self-centered life of distraction. 

Julian’s spending, however, had ruined them financially. He and Catherine decided to live in the Pammatone, a large hospital in Genoa, and todedicate themselves to works of charity there. After Julian’s death in 1497, Catherine took over management of the hospital. She wrote about purgatory which, she said, begins on earth for souls open to God. Life with God in heaven is a continuation and perfection ofthe life with God begun on earth. Exhausted by her life of self-sacrifice,she died September 15, 1510, and was canonized in 1737.

No comments:

Post a Comment