புனிதர்களை பெயர் வரிசையில் தேட

Translate

14 September 2020

✠ எருசலேம் நகர புனிதர் ஆல்பர்ட் ✠(St. Albert Jerusalem)செப்டம்பர் 14

† இன்றைய புனிதர் †
(செப்டம்பர் 14)

✠ எருசலேம் நகர புனிதர் ஆல்பர்ட் ✠
(St. Albert Jerusalem)
ஆயர்:
(Bishop)

பிறப்பு: கி.பி. 1149
குவால்டியெரி, இத்தாலி
(Gualtieri, Italy)

இறப்பு: செப்டம்பர் 14, 1214
அக்ரெ, எருசலேம் அரசு
(Acre, Kingdom of Jerusalem)

ஏற்கும் சமயம்: 
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)

நினைவுத் திருநாள்: செப்டம்பர் 14

கத்தோலிக்க நியதிகளின் வழக்குரைஞரான ஆல்பர்ட், கி.பி. 1204 முதல் தமது மரணம் வரை எருசலேமின் முதுபெரும் இலத்தீன் தலைவராக பணியாற்றினார். 

இத்தாலி நாட்டின் “குவால்டியெரி” (Gualtieri) எனுமிடத்தின் ஓர் உன்னத குடும்பத்தில் பிறந்த இவர், சட்டமும் இறையியலும் பயின்றார். திருச்சிலுவை (Holy Cross) சபையில் குருவானார். கி.பி. 1184ம் ஆண்டில் இத்தாலி நாட்டிலுள்ள போப்பியோ (Bobbio) என்ற மறை மாவட்டத்திற்கு ஆயராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 

பின்னர் கி.பி. 1205ம் ஆண்டு எருசலேமில் உள்ள கிறிஸ்தவ மக்களின் பொறுப்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அங்கு அம்மக்களின் நலன்களுக்காக அயராது உழைத்தார். அந்நாட்டில் கிறிஸ்தவ மக்கள் அரசரின் கீழ் அடிமைகளாக அமர்த்தப்பட்டிருந்தனர். கி.பி. 1187ம் ஆண்டு, பேரரசரிடமிருந்து அம்மக்களை விடுவித்து, விடுதலை வாழ்வை வழங்கினார். அன்றிலிருந்து எருசலேம் கிறிஸ்தவர்கள் அமைதியாக வாழ்ந்தனர். 

சில ஆண்டுகளில் மீண்டும் அம்மக்கள் முஸ்லீம்களின் கைகளில் அகப்பட்டனர். ஆல்பர்ட் அம்மக்களை மீண்டும் முஸ்லீம்களிடமிருந்து விடுவித்து சுதந்திரத்துடன் அமைதியாக வாழ வழிவகுத்தார்.

தூய ரோம பேரரசர் “பிரடெரிக் பப்பரோஸ்ஸா” (Holy Roman Emperor Frederick Barbarossa) என்பவர் திருச்சபையில் கலகம் ஏற்படுத்தினார். அப்போதிலிருந்து ஆல்பர்ட், அரசனிடம் தொடர்பு கொண்டார். பேரரசருக்கும் திருத்தந்தை “மூன்றாம் கிளமெண்ட்டிற்கும்” (Pope Clement III) இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் இவர்கள் இருவரின் நடுவிலும் சமாதானப் புறாவாக ஆல்பர்ட் இருந்தார். பேரரசரை அன்பான, அமைதியான மனிதனாக மாற்றினார்.

ஆல்பர்ட் பிறகு தன் இருப்பிடத்தை அக்கோ (Akko) என்ற இடத்திற்கு மாற்றினார். அங்கு கார்மேல் என்றழைக்கப்பட்ட மலை ஒன்று இருந்தது. அம்மலையில் துறவற மடங்களைக் கட்டினார். துறவிகள் தனித்தனி குகைகளிலும், செல்களிலும் தங்கி செப வாழ்வில் ஈடுபட ஏற்பாடு செய்தார். கி.பி. 1209ம் ஆண்டு துறவியர்கள் கடைபிடிக்க ஒழுங்குகளை எழுதினார். அவ்விதங்களின்படி, துறவிகளை வாழ ஊக்கமூட்டினார். கடுமையான விரதமிருந்து செபிக்க தூண்டினார். இறைச்சி உண்பதை குறைத்தார். அமைதியை கடைபிடித்து வாழ வற்புறுத்தினார். மிக மிகக் கடுமையான ஒழுங்குகளை கடைபிடிக்க துறவிகளை தூண்டினார்.

கி.பி. 1254ம் ஆண்டு திருத்தந்தை 4ம் இன்னொசெண்ட் அவர்கள், இவர் எழுதிய ஒழுங்குகளை, கார்மேல் சபைத்துறவிகள் கடைபிடித்து வாழ, அதிகாரப்பூர்வமாக அனுமதி அளித்தார். பின்னர் ஆல்பர்ட் பாலஸ்தீனாவில் நடைபெற்ற லேடெரன் என்றழைக்கப்பட்ட பொது சங்கக் கூட்டத்தில் கலந்துகொள்ள அழைக்கப்பட்டார். அப்போது அங்கிருந்தவர்களில் சிலர், இவருக்கெதிராக சதித்திட்டங்களை தீட்டினர். அவர்களின் சதித்திட்டத்தால் அக்கூட்டத்திலேயே கொலை செய்யப்பட்டார். உயிருக்கு போராடியபோது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கிருந்து வெளியேறியபின் புனித திருச்சிலுவை திருநாளன்று இறைவனடி சேர்ந்தார்.

† Saint of the Day †
(September 14)

✠ St. Albert of Jerusalem ✠

Patriarch of Jerusalem:

Born: Gualtieri, Italy

Died: September 14, 1214
Acre, Kingdom of Jerusalem

Venerated in: Roman Catholic Church

Feast: September 14

Saint Albert of Jerusalem was a canon lawyer. He was Bishop of Bobbio and Bishop of Vercelli and served as mediator and diplomat under Pope Clement III. Innocent III appointed him Patriarch of Jerusalem in 1204 or 1205. In Jerusalem, he contributed the Carmelite Rule of St. Albert to the newly-founded Carmelite Order. He is honoured as a saint in the Roman Catholic Church.

St. Albert of Jerusalem was born Albert Avogadro in Castel Gualtieri in Emilia, Italy, about 1149, probably to a noble family. He was educated in theology and law and was an outstanding ecclesiastical figure in the era in which the Holy See faced opposition from Emperor Frederick I Barbarossa. Serving as a mediator in the dispute between the emperor and Pope Clement III, Albert was made an imperial prince, a sign of favour from Barbarossa. In 1184 he was appointed as the bishop of Bobbio, Italy, and soon after he was named to the See of Vercelli, where he governed for twenty years. It was during this period of service that he served as a mediator between the pope and emperor and undertook diplomatic missions of national and international importance—with rare prudence and firmness.  In 1191, he celebrated a diocesan synod which proved of great value for its disciplinary provisions which continued to serve as a model until modern times. He was also involved in a large amount of legislative work for various religious orders: he wrote the statutes for the canons of Biella and was among the advisers who drew up the Rule of the Humiliates.  In 1194, the affected peace between Pavia and Milan and, five years later, between Parma and Piacenza. 

In 1205, at the age of 54, Albert was appointed the Patriarch of Jerusalem, a post established in 1099 when Jerusalem became a Latin kingdom in the control of Christian crusaders. The position was open not only to persecution but to martyrdom at the hands of the Muslims. Albert accepted and he proved himself not only diplomatic but winning in his ways. The Muslims of the area respected him for his sanctity and his intelligence.  He arrived in Palestine early in 1206 and took up residence in Acre (now called Akko) because, at that time, Jerusalem was occupied by the Saracens (ever since 1187 when they captured it). He was involved in various peace initiatives, not only among Christians but also between the Christians and non-Christians, and he carried out his duties with great energy.   

He also became involved in a concern that assured his place in religious history. Overlooking the city and bay of Acre is the holy mountain called Carmel. At that time, a group of holy hermits lived on Mount Carmel in separate caves and cells. In 1209, Albert was approached by St. Brocard, the prior or superior of the group of hermits, who asked him to draw up a rule of life for them—a rule that would constitute the beginning of the Carmelite Order. The Carmelite Rule of St. Albert of Jerusalem, the shortest of the rules of consecrated life in existence, composed almost exclusively of Scriptural precepts, was given to the Brothers of the Most Blessed Virgin of Mount Carmel. The approval was the first recognition by the Church of this group of men, who, the Pontiff said, “imitated the sublime examples of Our Lord, the Blessed Virgin Mary, and the Prophet Elijah.”  The Rule included severe fasts, perpetual abstinence from meat, silence, and seclusions. Friars, nuns, and laypeople in the Carmelite Order all over the world are very familiar with the Rule—which, over the centuries, has been read, reflected on, and interpreted in many different ways. The flexible nature of the Rule gives great scope for living it out in the monastery or the active apostolic life. 

The Rule is directed to "Brother B.", held by tradition to be St. Brocard, the head of the hermits living in the spirit of Elijah near the prophet's spring on Mount Carmel. On January 30, 1226, Pope Honorius III approved it as their rule of life in the bull, “Ut Vivendi Norman.”  About 20 years later, on October 1, 1247, Pope Innocent IV, approved the Rule. The Rule states that it is fundamental for a Carmelite to "live a life in allegiance to Jesus Christ, to be pure in heart and stout in conscience, and to be unswerving in the service of the Master." To live a life of allegiance to Jesus Christ, the Carmelites bind themselves especially to: 

☞  Develop the contemplative dimension of their life, in an open dialogue with God
☞  Live a life full of charity
☞  Meditate day and night on the Word of the Lord
☞  Pray together and/or alone several times a day
☞  Celebrate the Eucharist every day
☞  Do manual work, as St. Paul the Apostle did
☞  Purify themselves of every trace of evil
☞  Live in poverty, placing in common what little they may have
☞  Love the Church and all people
☞  Confirm their will to that of God, seeking the will of God in faith, in dialogue, and through discernment.

On September 14, 1214, at the age of 63, Albert was assassinated in the Church of St. John of Acre during a procession on the Feast of the Exaltation of the Cross. His assassin was the disgruntled former Director of the Hospital of the Holy Spirit, whom Albert had rebuked for wrongdoing and ultimately demoted. Albert was stabbed three times and died in his liturgical vestments. As he was dying, he asked for forgiveness for his murderer. 

Albert's writings still bring a message to today's world. The words of Scripture seem to flow almost unconsciously from his pen; he was so steeped in the Word of God that it penetrated his very thinking. Albert can also be an inspiration to those in leadership roles, especially within the Church. He did not impose all his own ideas on the group of hermits who came to him but instead listened to what they told him about their way of life, and then adapted it and gave it structure. In the instructions he gave to the first Carmelites, he is careful not to be too demanding or rigid.  He stressed the importance of common sense in interpreting what had to be done. This openness and flexibility give a great "human feel" to the Carmelite Rule.

Prayer to St. Albert: Lord God, through St. Albert of Jerusalem, you have given us a Rule of life, according to your Gospel, to help us attain perfect love. May we always live in allegiance to Jesus Christ and serve faithfully until death Him who lives and reigns with you and the Holy Spirit, one God, forever and ever. Amen!

No comments:

Post a Comment