புனிதர்களை பெயர் வரிசையில் தேட

Translate

14 September 2020

✠ கொலோன் நகர் புனிதர் மட்டெர்னஸ் ✠(St. Maternus of Cologne)செப்டம்பர் 14

† இன்றைய புனிதர் †
(செப்டம்பர் 14)

✠ கொலோன் நகர் புனிதர் மட்டெர்னஸ் ✠
(St. Maternus of Cologne)
“டிரையர்” மற்றும் “கொலோன்” மறைமாவட்டங்களின் ஆயர்:
(Bishop of Trier and Cologne)

பிறப்பு: ----

இறப்பு: நான்காம் நூற்றாண்டு

ஏற்கும் சமயம்:
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)
கிழக்கு மரபுவழி திருச்சபை
(Eastern Orthodox Church)

நினைவுத் திருநாள்: செப்டம்பர் 14

“மட்டெர்னஸ்” (Maternus) என்றும், “இரண்டாம் மட்டெர்னஸ்” (Maternus II) என்றும் அழைக்கப்படும் இவர், ஒரு கத்தோலிக்க புனிதராவார். இவர், “டிரையர்” (Trier) மறை மாவட்டத்தின் மூன்றாம் ஆயரும், “கொலோன்” (Cologne) மறை மாவட்டத்தின் முதலாம் ஆயருமாவார். “டோன்கெரென்” (Tongeren) மற்றும் “கொலோன்” (Cologne) மறைமாவட்டங்கள் இவரால் தோற்றுவிக்கப்பட்டதாகும். 

இவர், டிரையர் (Trier) மறைமாவட்டத்தின் முதலாம் ஆயரான புனிதர் “யூச்சரியஸ்” (Saint Eucharius) அவர்களை பின்பற்றியவர் ஆவார்.

ஒருமுறை, நமது முதலாம் திருத்தந்தை புனிதர் பேதுரு அவர்கள், புனித யூச்சரியஸ் அவர்களையும், அவருடன் “வலேரியஸ்” (Valerius) என்ற திருத்தொண்டரையும், துணைத் திருத்தொண்டரான மட்டெர்னசையும் “கௌல்” (Gaul) என்ற இடத்துக்கு மறை போதனை செய்வதற்காக அனுப்பினார். அவர்கள், கிழக்கு ஃபிரான்ஸின் கலாச்சார மற்றும் வரலாற்றுப் பிராந்தியமான “அல்சாக்” (Alsace) எனும் பிராந்தியத்திலுள்ள “ரைன்” (Rhine) மற்றும் “எல்லேலும்” (Ellelum) ஆகிய இடங்களுக்கு வந்து சேர்ந்தபோது, மட்டெர்னஸ் இறந்து போனார். அவருடன் துணைக்கு சென்ற இருவரும் உடனடியாக திரும்பி, திருத்தந்தை பேதுரு அவர்களிடம் மரித்துப் போன மட்டெர்னசை உயிர்ப்பித்துத் தருமாறு மன்றாடினார்கள். புனிதர் பேதுரு அவர்களும், உடனடியாக தமது ஊழியர்களை புனிதர் யூச்சரியஸ் அவர்களுடன் அனுப்பி வைத்தார். நாற்பது நாட்கள் கல்லரையிலிருந்த மட்டெர்னஸ் உயிர்த்தெழுந்தார். பின்னர், பெரிய எண்ணிக்கையில் பிற இனத்தவர்கள் மனமாற்றம் செய்விக்கப்பட்டனர்.

“அல்சாக்” பிராந்தியங்களில் பல ஆலயங்களை நிறுவிய இம்மூவரும், அங்கிருந்து கிளம்பி, “டிரையர்” (Trier) சென்றனர். அங்கே, அதி வேகமாக மறை பரப்புப் பணிகள் நடந்தன. யூச்சரியஸ், அங்கேயே தமது மறைபரப்புப் பணிகளின் தலைமை இல்லத்தை அமைத்துக்கொண்டார்.

சுமார் இருபத்தைந்து வருடங்கள் ஆயராக பணியாற்றிய யூச்சரியஸ், டிசம்பர் மாதம் 8ம் தேதி மரித்துப்போனார். சுமார் பதினைந்து வருடங்கள் “வலேரியஸுக்கு” (Valerius) உதவியாக இருந்த மட்டெர்னஸ், அவரையும் தாண்டி “டிரையர்” மாகாணத்தின் ஆயராக பதவியேற்று சுமார் நாற்பது வருடங்கள் பணியாற்றினார். “வலேரியஸுக்கு” (Valerius) உதவியாக இருந்த காலத்திலேயே “கொலோன்” (Cologne” மற்றும் ““டோன்கெரென்” (Tongeren) ஆகிய இரு மறைமாவட்டங்களைத் தோற்றுவித்தார்.

மட்டெர்னஸ், கொலோன் நகர் ஆயர்களில் மிகச் சிறந்த முதல் வரலாற்று ஆயர் என்ற பெருமையை பெற்றவர். 313ம் ஆண்டு ரோம் நகரில் நடந்த ஆயர்கள் கூட்டத்தில் முதன்முதலில் பங்கெடுத்தவர். நற்செய்தியை பரப்புவதில் அதிக ஈடுபாடு காட்டினார். நற்செய்தியை நிலைநாட்ட பெரும்பாடுபட்டார். பல இன்னல்களை அடைந்தார். ரோமில், புனித பேதுருவிற்குப் பிறகு, நற்செய்தியை பரப்புவதில், அதிகம் ஆர்வம் காட்டியவர் இவர் என்று கூறப்படுகின்றது.

† Saint of the Day †
(September 14)

✠ St. Maternus of Cologne ✠

Bishop of Trier and Cologne and Founder of the diocese of Tongeren:

Born: 285 AD

Died: September 14, 315

Venerated in:
Roman Catholic Church
Eastern Orthodox Church

Feast: September 14

Maternus, also known as Maternus II, was a Roman-Catholic saint and allegedly the third Bishop of Trier, the first known Bishop of Cologne, and founder of the Diocese of Tongeren.

According to Eusebius, the real Bishop Maternus was active during the period of the Donatist controversy. In May 313, Maternus and other bishops were summoned to Rome by Emperor Constantine to consult regarding the status of Bishop Caecilianus of Carthage. While a legend grew in Trier concerning Maternus, a popular cult developed in Cologne.

According to legend, he was a follower of Saint Eucharius, the first bishop of Trier. Eucharius was sent to Gaul by Saint Peter as bishop, together with the deacon Valerius and the subdeacon Maternus, to preach the Gospel. They came to the Rhine and to Ellelum in Alsace, where Maternus died. His two companions hastened back to St. Peter and begged him to restore the dead man to life. St. Peter gave his pastoral staff to Eucharius, and, upon being touched with it, Maternus, who had been in his grave for forty days, returned to life. The Gentiles were then converted in large numbers. After founding many churches the three companions went to Trier where the work of evangelization progressed so rapidly that Eucharius chose that city for his episcopal residence. Among other miracles related in the legend, he raised a dead person to life. An angel announced to him his approaching death and pointed out Valerius as his successor. Eucharius died on December 8, having been a bishop for twenty-five years, and was interred in the church of St. John outside the city.

Maternus assisted Valerius for fifteen years and then succeeded him as bishop of Trier for the next forty years. While assisting Valerius, he had already founded the dioceses of Cologne and Tongeren. He also founded a church on the site of a Roman temple which later became Cologne Cathedral. The staff of Saint Peter, with which he had been raised to life, was preserved in Cologne till the end of the tenth century when the upper half was presented to Trier and was afterwards taken to Prague by Emperor Charles IV.

The legend is from the ninth century and appears to have been intended to attest to the ancient establishment of the see of Trier, and therefore seniority over other dioceses in Germany.

No comments:

Post a Comment