புனிதர்களை பெயர் வரிசையில் தேட

Translate

27 September 2020

✠ புனிதர் எல்ஸீர் ✠(St. Elzéar of Sabran). September 27

† இன்றைய புனிதர் †
(செப்டம்பர் 27)

✠ புனிதர் எல்ஸீர் ✠
(St. Elzéar of Sabran)
ஃபிரான்சிஸ்கன் சபை துறவி:
(Tertiary of the Franciscan Order)

பிறப்பு: கி.பி. 1285
செயின்ட்-ஜீன்-டி-ராபியன்ஸ் கோட்டை, ப்ரோவென்ஸ், தெற்கு பிரான்சில் உள்ள கப்ரீரெஸ்-டி'ஐகிஸ்
(The Castle of Saint-Jean-de-Robians, Near Cabrières-d'Aigues in Provence, Southern France)

இறப்பு: செப்டம்பர் 27, 1323
பாரிஸ், ஃபிரான்ஸ்
(Paris, France)

ஏற்கும் சமயம்:
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)

நினைவுத் திருநாள்: செப்டம்பர் 27

புனிதர் எல்ஸீர், ஒரு ஃபிரான்சிஸ்கன் சபை துறவியும், ஆட்சியாளரும், தூதரும், இராணுவ தலைவருமாவார்.

கி.பி. 1285ம் ஆண்டு, தென்ஃபிரான்ஸின் (Southern France) “ப்ரோவென்ஸ்” (Provence) மாகாணத்தின் “செயின்ட்-ஜீன்-டி-ராபியன்ஸ் கோட்டையில்” (The Castle of Saint-Jean-de-Robians) பிறந்த எல்ஸீர், தமது இளமை காலத்தில், “மார்சேயில்” (Marseille) நகரிலுள்ள “புனிதர் விக்டர் மடாலயத்திலே” (Abbey of St. Victor), அதன் மடாதிபதியான (Abbot) தமது மாமன் வில்லியம் (William of Sabran) என்பவரது மேற்பார்வையின் கீழே, கிறிஸ்தவ விசுவாசத்திலும், அறிவியலிலும் முழுமையான பயிற்சி பெற்றார்.

அவர் பொருத்தமான வயதை எட்டியபோது, “நேபிள்ஸ் அரசன் இரண்டாம் சார்லசின்” (King Charles II of Naples) விருப்பத்தை ஏற்று, “டெல்ஃபின்” (Delphine of Glandèves) எனும் இளம்பெண்ணை திருமணம் செய்துகொண்டார். (டெல்ஃபின், பின்னாளில் முக்திபேறு பட்டம் பெற்றவர் ஆவார்). சிறுமியாக, கன்னிமைக்காக சத்தியப் பிரமாணம் ஏற்றிருந்த டெல்ஃபின், தங்களது திருமண நாளின் இரவு, தன்னுடைய புதிய கணவரிடம், தாம் கன்னிமைக்காக தனிப்பட்ட உறுதிமொழியை ஏற்றிருந்ததாக அறிவுறுத்தினார். அப்போதிருந்த ஆன்மீக சட்டங்களின்படி, டெல்ஃபின் ஏற்றிருந்த உறுதிமொழி பிரமாணங்களை கைவிடச் செய்யும் உரிமைகள் தமக்கிருந்தும், எல்ஸீர், தமது மனைவி ஏற்றிருந்த உறுதிமொழி பிரமாணங்களுக்கு மதிப்பளித்து, அவர் கன்னியாகவே வாழ அனுமதிக்க முடிவு செய்தார். அத்துடன், தமது மனைவி ஏற்றிருந்த உறுதிமொழி பிரமாணங்களை உதாரணமாகக்கொண்டு, தாமும் கன்னிமைக்கான உறுதிமொழி ஏற்றார். இருவரும் இணைந்து, புனிதர் ஃபிரான்சிஸின் மூன்றாம் நிலை சபையில் (Third Order of Saint Francis) சேர்ந்தனர்.

எல்ஸீர் மற்றும் டெல்ஃபின் இருவரும், சிற்றின்பங்களை ஒழித்த திருமண வாழ்க்கை வாழ்ந்தனர். அவர்களது வாழ்க்கையில், செப நடைமுறைகளும், இல்லாதோர்க்கு உதவும் நல்லெண்ணங்களுமே மேலோங்கியிருந்தன. இருபது வயதான எல்ஸீர், “அன்சுயிஸ்” (Ansouis) நகரிலிருந்து, தென்கிழக்கு ஃபிரான்சிலுள்ள “புய்மேச்செல்” (Puimichel) நகருக்கு தமது மனைவியுடன் மிகுந்த தனிமையான வாழ்க்கை வாழச் சென்றார். அவருடைய ஊழியர்களை ஒழுக்க நெறிகளுக்கு உட்படுத்தினார். அது அவருடைய குடும்பத்தை கிறிஸ்தவ நன்னெறியின் முன்மாதிரியாக மாற்றியது.

கி.பி. 1309ம் ஆண்டு, தமது தந்தையின் மரணத்தின் பின்னர், அவர் இத்தாலியில்
தனது புதிய பாதையில் சென்றார். அங்கே அவர் தமது நாட்டினரின் நம்பிக்கை மற்றும் ஆதரவைப் பெற்றார். அவர்கள் நார்மன் (Norman) வெற்றியாளர்களை இழிவாகக் கருதினார்கள். 1312ம் ஆண்டு, நேபிள்ஸ் நாட்டின் அரசன் ராபர்ட்டின் (King Robert of Naples) படைத் தலைவராக ரோம் நகருக்கு அணிவகுத்துச் சென்றார். அந்த நகரிலிருந்து பேரரசர் “ஏழாம் ஹென்றியை” (Emperor Henry VII) வெளியேற்றுவதற்கு உதவி செய்ய அணிதிரண்டனர். போருக்குப் பிறகு புரோவென்ஸுக்கு (Provence) திரும்பிய அவர், மறுபடியும் தமது பக்தியான குடும்பத்தை அமைத்தார். அதில் கத்தோலிக்க விசுவாசத்தின் பக்தி மற்றும் விசுவாசமான நடைமுறைகள் அவரது வீட்டின் அனைத்து உறுப்பினர்களிடமும் எதிர்பார்க்கப்பட்டது.

கி.பி. 1317ம் ஆண்டு, அரசன் ராபர்ட்டின் (King Robert) மகனான கோமகன் சார்லசின் (Duke Charles) ஆசிரியராகப் பொறுப்பேற்க எல்ஸீர் நேபிள்ஸுக்குச் சென்றார். பின்னர், சார்லஸ் சிசிலி இராச்சியத்தின் (Kingdom of Sicily) விகார் ஜெனரல் (Vicar General) ஆனபோது, எல்ஸீர் சார்லசின் கோட்டை ஆளுநராகப் (Castellan) பொறுப்பேற்றார். கி.பி. 1323ம் ஆண்டு, சார்லசின் திருமணத்திற்கு “வலோயிஸ் இல்லத்தின்” (House of Valois) உறுப்பினரான “மேரீயின்” (Marie of Valois) ஆதரவைப் பெறுவதற்காகவும், தார்மீக அல்லது அறிவார்ந்த அறிவுரைகளை வழங்குவதற்கான வீரமிக்க நல்லொழுக்கங்களாலான ஒரு உலக நீதிமன்றத்தை உருவாக்குவதற்காகவும் “ஃபிரான்ஸ் அரசனிடம்” (King of France) தூதராக அனுப்பப்பட்டார். அந்தப் பதவியில் பணிபுரிந்துகொண்டிருந்தபோது, தாம் கொண்ட பணிகளை முடித்துவிட்ட நிலையில், அவர் மரித்துவிட்டார்.

அவரது ஆதிக்க எல்லைக்கு திருப்பி அனுப்பப்பட்ட அவரது உடல், “ஆப்ட்”, வௌக்லுஸ்” (Apt, Vaucluse) நகரிலுள்ள “இளம் துறவியர் தேவாலயத்தில்” (Church of the Friars Minor), ஃபிரான்சிஸ்கன் சீருடையில் அடக்கம் செய்யப்பட்டது.


† Saint of the Day †
(September 27)

✠ St. Elzéar of Sabran ✠

Tertiary of the Franciscan Order:

Born: 1285 AD
The Castle of Saint-Jean-de-Robians, Near Cabrières-d'Aigues in Provence, Southern France

Died: September 27, 1323
Paris, France

Venerated in: Roman Catholic Church

Feast: September 27

Biographical selection:
Elzear of Sabran was born in Saint-Jean de Robians in Provence, France. He was the son of the Count of Ariano from the Kingdom of Naples, Italy. His mother consecrated him to God as soon as he was born and raised him with good customs. He was well educated in the eternal and human sciences, as well as in the exercise of weapons. He became an outstanding knight and a champion in the tournaments. He married Delphine of Glandèves. By common agreement, they lived a life of continence. Both belonged to the Third Order of St. Francis.

When his father died in 1309, he inherited the County of Ariano and went to Italy to assume the government. With John, the brother of the King of Naples, he commanded an army against Emperor Henry VII, who led the anti-papist Ghibelline party in Italy. After two battles, Elzear defeated the German sovereign, who died soon afterwards in 1313. As a reward for his victories, Count Elzear received many honours and prizes. 

King Robert of Naples chose him to be head of the Council of the Kingdom of Naples. As a judge, he acted with supreme severity against the guilty, be they corrupt nobles or the lawless bandits who infested the whole Kingdom and often condemned them to death. But he always took great care of the souls of those men, providing them with all spiritual assistance possible and asking the priests to remain with them from the moment of condemnation until the hour of death. He was also chosen to be the tutor of Prince Charles, heir to the throne. 

After four years of separation, Delphine joined him from France and found her husband among the brilliant courtiers wearing magnificent clothes. She feared that during this period of separation Elzear had forgotten his duties of religion and became worldly. He sensed her thoughts, and when the two were alone together, he opened his habit and revealed his hair-shirt underneath. He always remained faithful to the Franciscan spirit. 

God granted Count Elzear the grace of an unalterable serenity. His face was always tranquil, communicating peace. Once he revealed to his wife that it was continuous meditation on Our Lord’s Passion that gave him this gift. 

In addition to being a skilful warrior and politician, he was also an adept diplomat. He was sent to Paris as a representative of King Robert to ask the hand of the daughter of the Count of Valois for the Prince Heir of Naples. During this mission, he became seriously ill and died on September 27, 1325. 

He was buried in the Franciscan habit in the church of the Minor Conventuals at Apt. Many miracles were worked through his intercession. He was canonized 44 years later by Pope Urban V. His wife, Countess Delphine, was still alive. 

Comments:
We are given a picture of St. Elzear as a saint who was principally a warrior, a winner of battles and tournaments, a governor of his provinces, and a judge. 

In that epoch war was preponderantly an ensemble of individual fights, knight against knight, and soldier against soldier. No one could be weak to fight. In today’s wars, a feeble man can be behind a machine gun and do a lot of damage. In that time, men of war had to be courageous, strong, and skilful in martial deeds. This was St. Elzear. He did not abandon the world with platitudes of hatred for war and love for peace. All his life he engaged in war or exercises preparing for it. Doing this, he became a saint. St. Elzear attained sanctity practising the heroic virtues that shine in the life of a warrior.

Since he was from a very noble family, the Sabran family, he inherited the fief of his father and became Count d’Ariano in Naples. At that time, the Kingdom of Naples was governed by French Princes. So he also became a saint through the wise governance of his fief. Contrary to the images of saints normally put forth by sentimental piety, which is also a little progressivism, St. Elzear lived the normal life of a noble at court, which at the time implied among other things, wearing magnificent clothes. 

As a reward for his military conquests, the King of Naples made St. Elzear head of the Council of the Kingdom. To be charged with handing down Justice is a difficult mission. The fair-minded judge often has to rule against the great, powerful, and wealthy in favour of the small and poor. This kind of judge raises the scorn and anger of many important persons. St. Elzear was a judge who acted before God, making no compromises with men. He combated the corrupt nobles, but also the bandits. 

You know that in Italy there is an organized drove of bandits – in Sicily and Calabria, it is called the Mafia and in Naples the Camorra. At that time similar groups of bandits were probably in existence and found in St. Elzear and implacable enemy. But as a perfect Catholic, his behaviour was entirely balanced: he condemned the guilty to death for the necessity of the common good, but then he took exquisite care of their souls, trying to save them by all possible means. Death for the body, yes; but life for the soul.

One would say that a man with such extraordinary qualities to direct a fief and distribute justice, a prince in the court and a lion in the war, would be a pretentious man, quick to anger, stern and arrogant. But he was not that at all. He was most affable and serene with a pacific physiognomy. Here we have a harmonic contrast characteristic of a soul that lives in sanctifying grace. 

Another contrast in his life appears in another episode from the selection. St. Elzear held an important position at court; he was a noble in the fullest sense of the word who carried out with dignity his duties as a courtier. Therefore, he dressed in magnificent clothes. 

When his wife joined him in Naples after four years she was surprised by the magnificence of his clothes and company and feared that he had become worldly. When they were by themselves, he opened his fine outer clothing a bit and showed her the discipline that he wore under it. That is to say, he remained the same penitent, detached person he had been before. He wore those magnificent garments to properly fulfil his noble duties and uphold the situation he occupied at court. It is another contrast that is the fruit of grace. 

The life of St. Elzear is very rich in contrasts and examples for those who do not have a religious vocation but are called to live in the world as laypeople. 

Let us ask him for confidence in the power of grace, and balance to live our vocation with the needed dignity, brilliance and nobility while maintaining a detached spirit. Like him, we should do everything for the glory of God, and not for ourselves.
~ Late Prof. Plinio Corrêa de Oliveira

No comments:

Post a Comment