புனிதர்களை பெயர் வரிசையில் தேட

Translate

27 September 2020

✠ புனிதர் வின்சென்ட் தே பவுல் ✠(St. Vincent de Paul). September 27

† இன்றைய புனிதர் †
(செப்டம்பர் 27)

✠ புனிதர் வின்சென்ட் தே பவுல் ✠
(St. Vincent de Paul)

குரு, சபை நிறுவனர்:
(Priest and founder)

பிறப்பு: ஏப்ரல் 24, 1581
குயேன், காஸ்கனி, ஃபிரான்ஸ் அரசு
(Guyenne and Gascony, Kingdom of France)
இறப்பு: செப்டம்பர் 27, 1660 (வயது 79)
பாரிஸ், ஃபிரான்ஸ் அரசு
(Paris, Kingdom of France)

ஏற்கும் சமயம்: 
கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)
ஆங்கிலிக்கன் ஒன்றியம்
(Anglican Communion)

முக்திபேறு பட்டம்: ஆகஸ்ட் 13, 1729
திருத்தந்தை 13ம் பெனடிக்ட்
(Pope Benedict XIII)

புனிதர் பட்டம்: ஜூன் 16, 1737
திருத்தந்தை 12ம் கிளமென்ட்
(Pope Clement XII)

முக்கிய திருத்தலங்கள்: 
புனித வின்சென்ட் தெ பவுல் சிற்றாலயம், 
(St. Vincent de Paul Chapel)
95, ரியூ டி செவ்ரெஸ், பாரிஸ், ஃபிரான்ஸ்
(95, Rue de Sèvres, Paris, France)

நினைவுத் திருவிழா: செப்டம்பர் 27

பாதுகாவல்: 
தொண்டு நிறுவனங்கள்; மருத்துவமனைகள்; குதிரைகள்; மருத்துவமனைகள்; தொழுநோய்; தொலைந்து போன பொருட்கள்; மடகாஸ்கர் (Madagascar); கைதிகள்; ரிச்மோன்ட் (Richmond); வர்ஜீனியா (Virginia); ஆன்மீக உதவி; புனித வின்சென்ட் தெ பவுல் சபைகள்; தன்னார்வலர்கள்; தூய இருதய பேராலய தயாரிப்பு (Sacred Heart Cathedral Preparatory); Vincentian Service Corps.

புனிதர் வின்சென்ட் தே பவுல், ஏழைகளுக்கு தொண்டு செய்வதற்காக தம்மையே அர்ப்பணித்துக்கொண்ட ஒரு ஃபிரெஞ்ச் கத்தோலிக்க திருச்சபையின் குரு ஆவார். இவர் கத்தோலிக்க திருச்சபையிலும், ஆங்கிலிக்கன் ஒன்றியத்திலும் புனிதராக போற்றப்படுகிறார். இவருக்கு 1737ம் ஆண்டு, புனிதர் பட்டம் வழங்கப்பட்டது. இவர் தமது இரக்கம், மனத்தாழ்ச்சி, தாராள குணம் ஆகியவற்றிற்கு புகழ்பெற்றவர் ஆவார். மேலும், இவர் “டிரம்பெட்” எனும் இசைக் கருவிகளின் பெரிய தூதர் (Great Apostle of Trumpets) என்றும் அழைக்கப்படுகிறார். ஐக்கிய அரசு நாடுகளில் (UK) ஆண்டுதோறும் ஆகஸ்ட் மாதம் பத்தாம் நாள், தூய வின்சென்ட் தினத்தை தேசிய விடுமுறை நாளாக அனுசரிக்கின்றனர்.

வாழ்க்கை குறிப்பு :
புனித வின்சென்ட் ஃபிரான்ஸ் நாட்டில் காஸ்கனியின் பாவ்ய் பகுதியில், விவசாயக் குடும்பத்தில் 1581ம் ஆண்டு பிறந்தார். இவரது தந்தை பெயர் “ஜீன்” (Jean) ஆகும். தாயாரின் பெயர், “பெட்ரான்ட்” (Bertrande de Moras de Paul) ஆகும். இவருக்கு “ஜீன்” (Jean), “பெர்னார்ட்” (Bernard), “கேயான்” (Gayon) என்று மூன்று சகோதரர்களும், “மேரி மற்றும் மேரி-கிளாடின்” (Marie and Marie-Claudine) என்று இரண்டு சகோதரிகளும் இருந்தனர்.

ஃபிரான்சின், “டாக்சில்” (Dax) கலை, இலக்கியம் கற்ற இவர், 1597ம் ஆண்டு, “டௌலோஸ் பல்கலையில்” (University of Toulouse) இறையியல் படிப்பை தொடங்கினார். 1600ம் ஆண்டு, செப்டம்பர் மாதம், 23ம் தேதி, தமது பத்தொன்பது வயதில் குருத்துவ அருட்பொழிவு பெற்றார். அக்காலத்தில் குருத்துவ அருட்பொழிவு பெற குறைந்தபட்ச வயது இருபத்துநான்கு ஆகும். ஆனால், வின்சென்டின் பங்குத்தந்தை நியமனத்தை எதிர்த்து ரோம நீதிமன்றத்தில் (Court of Rome) வழக்கு தொடரப்பட்டது. வழக்கை எதிர்க்க விரும்பாத வின்சென்ட், பங்குத்தந்தை நியமன பதவி விலகினார். டௌலோஸிலேயே தங்கி தமது கல்வியை தொடர்ந்தார். இறையியலில் இளநிலை பட்டம் பெற்றார். 1605ம் ஆண்டு, மார்செய்ல் பகுதிக்கு திரும்பும் வழியில் “பார்பரி” (Barbary pirates) கடற்கொள்ளையரால் பிடித்துச்செல்லப்பட்டு, துனீசியா (Tunis) பகுதியில் அடிமையாக விற்கப்பட்டார்.

முதலில் ஒரு மீனவ எஜமானிடம் விற்கப்பட்ட வின்சென்ட், மீனவ பணிகள் இவருக்கு பொருந்தாமையால் மருத்துவர் ஒருவருக்கு விற்கப்பட்டார். ஒரு பயணத்தின்போது இவரது எஜமான் மரணமடைந்தார். பின்னர், மீண்டுமொருமுறை வின்சென்ட் விற்கப்பட்டார். இம்முறை இவரை வாங்கிய எஜமான் ஒரு முன்னாள் ஃபிரான்சிஸ்கன் சபையைச் சார்ந்த கத்தோலிக்க குரு ஆவார். ஃபிரான்ஸ் நாட்டின் “நைஸ்”( Nice) எனும் பிராந்தியத்தைச் சேர்ந்த இவரது பெயர், “கில்லாம் கௌடியர்” (Guillaume Gautier) ஆகும். முன்னர் ஒருமுறை இஸ்லாமியர்களிடம் அடிமையாக பிடிபட்டிருந்த இவர், அடிமைத் தளையிளிருந்து விடுபடுவதற்காக இஸ்லாம் மதத்தை தழுவினார். இவர் அங்கிருந்த மலைப் பகுதிகளில் தமது மூன்று மனைவியருடன் வசித்துவந்தார். கத்தோலிக்க விசுவாசம் பற்றின தகவல்களை வின்சென்ட் மூலம் அறிந்துகொண்ட அவரது இரண்டாம் மனைவி, அவரை மீண்டும் கிறிஸ்தவ மறையை தழுவ வற்புறுத்தினார். இதனால் மனம் மாறிய அவர்கள் அனைவரும் பத்து மாதங்கள் பொருத்திருந்தனர். பின்னர் சிறு படகு ஒன்றின் மூலம் அங்கிருந்து தப்பித்து, ஃபிரான்ஸ் நாட்டின் “ஐகேஸ் மோர்டேஸ்” (Aigues-Mortes) பகுதியில் 1607ம் ஆண்டு, ஜூன் மாதம், 28ம் தேதி இறங்கினார்கள்.

ஃபிரான்சுக்கு திரும்பியதும், ரோம் சென்ற வின்சென்ட், தனது படிப்பைத் தொடர்ந்தார். 1609ம் ஆண்டு, ஒரு பணி நிமித்தம் அரசர் 4ம் ஹென்றியிடம் ஃபிரான்ஸ் அனுப்பப்பட்டார். அங்கு அவர் மார்கரெட் டி வலோயிசின் குருவாக பணியாற்றினார். சிறிது காலம் க்ளிச்சியின் பங்கு குருவாக இருந்துவிட்டு, 1612ம் ஆண்டு முதல் புகழ்பெற்ற கான்டி குடும்பத்துக்கு குருவாக பணியாற்றினார். இவர் டி கான்டி சீமாட்டியின் ஒப்புரவாளராகவும், ஆன்ம இயக்குனராகவும் இருந்தார்; மேலும் அந்த சீமாட்டியின் உதவியோடு, பண்ணையில் பணிபுரிந்த விவசாயிகளுக்கு இயேசுவைப் பற்றி போதித்தார்.

1622ம் ஆண்டு, வின்சென்ட் தே பவுல் போர் கப்பலில் குருவாக நியமிக்கப்பட்டார்; அங்கு இவர் போர் கைதிகளுக்கும் நற்செய்தி பணியாற்றினார்.

1625ம் ஆண்டு, வின்சென்ட் மறைப்பணி சபை என்ற துறவற சபையை நிறுவினர். மறைபரப்பு பணியை மேற்கொள்ளும் இச்சபையின் குருக்கள் பொதுவாக வின்சென்டியர்கள் அல்லது லாசரிஸ்டுகள் என்று அழைக்கப்படுகின்றனர். 1633ல் லூயிஸ் தே மரிலாக்கின் வழிகாட்டுதலோடு, பிறரன்பு புதல்விகள் என்ற பெண்களுக்கான துறவற சபையை இவர் நிறுவினார். இவர் ஜான்செனிச பேதகத்திற்கு எதிராகவும் போராடினார். (பேதகம் என்பதற்கு தவறான கிறிஸ்தவ போதனை என்பது பொருள்).

பிறரன்பு பணிகளில் அதிக ஆர்வம் காட்டிய வின்சென்ட் தே பவுல், 1660ம் ஆண்டு, செப்டம்பர் மாதம், 27ம் தேதி மரணம் அடைந்தார். வின்சென்ட் தே பவுலின் கருணை, பணிவு, தாராள குணம் ஆகியவை அவருக்கு புகழைத் தேடித் தந்திருக்கின்றன.

† Saint of the Day †
(September 27)

✠ St. Vincent de Paul ✠

Priest and Founder:

Born: April 24, 1581
Saint-Vincent-de-Paul, Guyenne and Gascony, Kingdom of France

Died: September 27, 1660 (Aged 79)
Paris, Kingdom of France

Venerated in:
Catholic Church
Anglican Communion

Beatified: August 13, 1729
Pope Benedict XIII

Canonized: June 16, 1737
Pope Clement XII

Major Shrines:
St. Vincent de Paul Chapel, 95, Rue de Sèvres, Paris, France

Feast: September 27

Patronage:
Charities, Horses, Hospitals, Leprosy, Lost articles, Madagascar, Prisoners, Richmond, Virginia, Spiritual help, Saint Vincent de Paul Societies, Sacred Heart Cathedral Preparatory, Vincentian Service Corps, Volunteers

Saint Vincent de Paul was a French Roman Catholic priest who dedicated himself to serving the poor. He is venerated as a saint in the Catholic Church and the Anglican Communion. He was canonized in 1737. He was renowned for his compassion, humility and generosity.

St Vincent de Paul was born in 1581 in the village of Pouy, in the Province of Guyenne and Gascony, the Kingdom of France, to peasant farmers, father Jean and mother Bertrande de Moras de Paul. There was a stream named the "Paul" in the vicinity and it is believed that this might have been the derivation of the family name. He wrote the name as one word – Depaul, possibly to avoid the inference that he was of noble birth, but none of his correspondents did so. He had three brothers – Jean, Bernard and Gayon, and two sisters – Marie and Marie-Claudine. He was the third child. At an early age, he showed a talent for reading and writing but during his childhood, he herded his family's livestock. At 15, his father sent him to seminary, managing to pay for it by selling the family’s oxen.

Vincent's interest in the priesthood at that time was large with the intent to establish a successful career and obtain a benefice, with which he could retire early and support the family.

He was ordained on 23 September 1600, at the age of nineteen, in Château-l'Évêque, near Périgueux. This was against the regulations established by the Council of Trent which required a minimum of 24 years of age for ordination, so when he was appointed parish priest in Tile, the appointment was appealed in the Court of Rome. Rather than respond to a lawsuit in which he would probably not have prevailed, he resigned from the position and continued his studies. On 12 October 1604, he received his Bachelor of Theology from the University of Toulouse. Later he received a Licentiate in Canon Law from the University of Paris.

In 1617, Vincent contacted the Daughters of Charity and they then introduced him to poor families. Vincent then brought them food and comfort. He organized these wealthy women of Paris to collect funds for missionary projects, found hospitals, and gather relief funds for the victims of war and to ransom 1,200 galley slaves from North Africa. From this participation of women would eventually come, with the help of Louise de Marillac, the Daughters of Charity of Saint Vincent de Paul (French: Filles de la Charité), a Society of Apostolic Life for women within the Catholic Church.

In 1622 Vincent was appointed chaplain to the galleys. After working for some time in Paris among imprisoned galley-slaves, he returned to be the superior of what is now known as the Congregation of the Mission, or the "Vincentians" (in France known as "Lazaristes"). These priests, with vows of poverty, chastity, obedience, and stability, were to devote themselves entirely to the people in smaller towns and villages.

Vincent was zealous in conducting retreats for clergy at a time when there was great laxity, abuse, and ignorance among them. He was a pioneer in clerical training and was instrumental in establishing seminaries. He spent twenty-eight years serving as the spiritual director of the Convent of St. Mary of Angels.

Vincent died in Paris on 27 September 1660.

The Society of Saint Vincent de Paul:
Vincent is the patron of all works of charity. A number of organizations specifically inspired by his work and teaching and which claim Vincent as their founder or patron saint are grouped in a loose federation known as the Vincentian Family. The 1996 publication The Vincentian Family Tree presents an overview of related communities from a genealogical perspective.

Among these organizations is the Society of Saint Vincent de Paul, a charitable organization dedicated to the service of the poor, established in 1833 by French university students, led by the Blessed Frederic Ozanam. The society is today present in 132 countries.

No comments:

Post a Comment