புனிதர்களை பெயர் வரிசையில் தேட

Translate

17 October 2020

புனித_ருடால்ஃப் (1032-1066)அக்டோபர் 17

புனித_ருடால்ஃப் (1032-1066)

அக்டோபர் 17

இவர் (#St_Rudolph_Of_Gubbio) இத்தாலியைச் சார்ந்தவர். 
புனித பீட்டர் தமியானின் சீடராக இருந்த இவர், அவருடைய போதனையால் தொடப்பட்டு, தன்னுடைய உடைமைகளையெல்லாம் விற்று ஏழைகளுக்குக் கொடுத்துவிட்டு, புனித பெனடிக்ட் சபையில் துறவியாகச் சேர்ந்தார்.

குருவாக அருள்பொழிவு செய்யப்பட்ட பின் இவர் இறைவேண்டலுக்கும் ஒறுத்தல் முயற்சிகளுக்கும் மிகுந்த முக்கியத்துவம் கொடுத்து வாழ்ந்து வந்தார்.

இப்படி இருக்கையில் 1061 ஆம் ஆண்டு இவர், மிகக் குறைந்த வயதிலேயே இத்தாலியில் உள்ள குப்பியோ நகரின் ஆயராக உயர்த்தப்பட்டார்.

இதற்குப் பின்பு இவர் இறைப்பணியோடு மக்கள் பணியையும் மிகச் சிறப்பான முறையில் செய்தார். குறிப்பாக இவர் ஏழைகளுக்கு வாரி வாரி வழங்கி, தன்னலமில்லாமல் சேவை செய்தார். இப்படிப்பட்டவர் 1066 ஆம் ஆண்டு இறையடி சேர்ந்தார்.

No comments:

Post a Comment