புனிதர்களை பெயர் வரிசையில் தேட

Translate

17 October 2020

சித்திரைக்குள்ளர் புனிதர் ஜான் ✠(St. John the Dwarf). அக்டோபர் 17

† இன்றைய புனிதர் †
(அக்டோபர் 17)

✠ சித்திரைக்குள்ளர் புனிதர் ஜான் ✠
(St. John the Dwarf)

எகிப்திய பாலைவனத் தந்தை:
(Egyptian Desert Father)
பிறப்பு: கி.பி. 339
தீப்ஸ், எகிப்து (Thebes, Egypt)

இறப்பு: கி.பி. 405
மவுன்ட் கொல்ஸிம், எகிப்து
(Mount Colzim, Egypt)

ஏற்கும் சமயம்:
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)
கிழக்கு மரபுவழி திருச்சபைகள்
(Eastern Orthodox Churches)
ஓரியண்டல் மரபுவழி திருச்சபைகள்
(Oriental Orthodox Churches)

நினைவுத் திருநாள்: அக்டோபர் 17

“புனிதர் ஜான் கொலாபஸ்” (Saint John Colobus) என்றும், “தந்தை சித்திரைக்குள்ளர் ஜான்” (Abba John the Dwarf) என்றும் பலவித பெயர்களில் அழைக்கப்படும் இப்புனிதர் “சித்திரைக்குள்ளர் ஜான்” (John the Dwarf), ஆதி கிறிஸ்தவ திருச்சபையின் பாலைவனத்து தந்தை (Egyptian Desert Father) ஆவார்.

ஜான், எகிப்து (Egypt) நாட்டின் தீப்ஸ் (Thebes)  நகரில், ஏழை கிறிஸ்தவ  பெற்றோருக்குப் பிறந்தவர் ஆவார். பதினெட்டு வயதில், அவர் மூத்த சகோதரருடன், “ஸ்கேட்டிஸ்” பாலைவனத்திற்கு (Desert of Scetes) குடிபெயர்ந்தார். அங்கே, அவர் புனிதர் “பம்போவின்” (Saint Pambo) சீடராகவும், புனிதர் பிஷோயின் (Saint Pishoy) ஒரு நல்ல நண்பராகவும் ஆனார். அங்கே, கடின எளிய வாழ்க்கையை வாழ்ந்த அவர், அங்கே சுற்றிலுமுள்ள துறவியர்க்கு தமது வாழ்க்கை முறையை கற்றுக்கொடுத்தார். அவர்களுள், ரோமன் அரச ஆசானும், பாலைவனத்து தந்தையுமான புனிதர் “பெரிய அர்சேனியசும்” (St. Arsenius the Great) ஒருவர் ஆவார்.

புனிதர் “பம்போ” (Saint Pambo) அங்கிருந்து புறப்பட்டதன் பின்னர், திருத்தந்தை “தியோபிலஸ்”, (Pope Theophilus) ஜானுக்கு குருத்துவ அருட்பொழிவு செய்வித்தார். பின்னர், சுற்றுவட்டாரத்திலுமுள்ள “கீழ்படியும் மரங்களினூடே” (Tree of Obedience) தாம் நிறுவிய துறவு மடத்தின் மடாதிபதியானார். கி.பி. 395ம் ஆண்டு, வட ஆபிரிக்காவின் பெர்பெர் (Berbers) இனத்தவர்கள், “ஸ்கேட்டிஸ்” பாலைவனத்தை (Desert of Scetes) முற்றுகையிட்டபோது, ஜான் அங்கிருந்து “நைட்ரியன்” பாலைவனத்திலிருந்து (Nitrian Desert) வெளியேறி, ஓடிப்போன அவர், தற்போதைய சூயஸ் (Suez) நகரத்திற்கு அருகே கொல்சிம் (Mount Colzim) மலைக்குச் சென்றார். மீதமுள்ள வாழ்நாளை அங்கேயே கழித்த அவர், அங்கேயே மரித்துப்போனார்.

515ம் ஆண்டு, புனித ஜானுடைய உடலின் மீதங்கள், “நைட்ரியன்” (Nitrian Desert) பாலைவனத்திற்கு மாற்றப்பட்டன.

புராணங்களின்படி, ஜான் கீழ்படிதலுக்கு மிகவும் பெயர் போனவர். அவரது கீழ்ப்படிதலைப் பற்றி மிகவும் பிரபலமான கதை ஒன்று உண்டு. ஒரு நாள் புனிதர் பாம்போ, அருட்தந்தை ஜானிடம் ஒரு உலர்ந்த மரக் குற்றியைக் கொடுத்து, அதனை நட்டு, நீரூற்றி வளர்க்குமாறு கட்டளையிட்டார். அதனை நட்டுவைத்த ஜான், தினமும் இரண்டுமுறை, தாங்கள் வசிக்குமிடத்திலிருந்து பன்னிரெண்டு மைல் தூரம் நடந்து சென்று தண்ணீர் எடுத்துவந்து அதற்கு ஊற்றினார். மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, மரத்தின் குற்றி துளிர்த்து முளைத்து, ஒரு பழம் தரும் மரமாக வளர்ந்தது. புனிதர் பாம்போ, இந்த மரத்தின் சில பழங்களை எடுத்துச் சென்று, சுற்றிலுமுள்ள துரவியருக்குக் கொடுத்து, "எடுத்துக் கொள்ளுங்கள், கீழ்ப்படிதலின் கனியை சாப்பிடுங்கள்” என்று கூறி கொடுத்தார். கி.பி. 402ம் ஆண்டு, எகிப்தில் இருந்த போஸ்டுமியன் (Postumian), மடாலயத்தின் முற்றத்தில் வளர்ந்த இந்த மரத்தை காட்டினார், அதில் அவர் தளிர்கள் மற்றும் பச்சை இலைகள் ஆகியவற்றைக் கண்டார்.
† Saint of the Day †
(October 17)

✠ St. John the Dwarf ✠

Egyptian Desert Father:

Born: 339 AD
Thebes, Egypt

Died: 405 AD
Mount Colzim, Egypt

Venerated in:
Roman Catholic Church
Eastern Orthodox Churches
Oriental Orthodox Churches

Feast: October 17

Saint John the Dwarf, also called Saint John Colobus, Saint John Kolobos of Abba John the Dwarf, was an Egyptian Desert Father of the early Christian church.

Countless stories are told about hundreds of hermits and hermitages that hallowed the deserts of Egypt in the earliest Christian centuries. Some of these stories are likely folklore. Usually, they ring true. Always, they edify.

One of the best-known of the fifth-century desert saints was a man called “John Kolobos;” that is, John the Little, of John the Dwarf. He was a young man when he entered the monastic wilderness of Skete in northern Egypt. There he would pass his whole life in prayer and manual labor.

Little John had a beautiful simplicity of character. On his arrival, he was assigned to an old, experienced hermit as a tutor. The tutor straightway gave John a walking stick. “Plant this in the ground,” he ordered, “and water it every day.” The command was a test as well as a task. John obeyed at once, without question or delay. Even though the river from which he fetched the water was at a distance, he watered the stick dutifully every day. In the third year, the walking stick put forth buds and flowers and fruit. John had passed the test. His tutor collected the fruit and distributed it among his companions. “Take,” he told them, “and eat the fruit of obedience.”

(Although this sounds like folklore, there is a record, dating from 402 AD, that refers to a certain tree in the monastery yard as John’s walking stick comes to life.)

It is not surprising that such a simple soul would be single-minded in his service of God. Divine things were his only interest. He cared nothing for the “news” of the day. (Here is something for us gossips to ponder; and, even more, the media people!) In fact, his focus was so intense that he was often absent-minded about worldly things. Once, for instance, a man on a camel came to his cell to pick up John’s basket making tools and transfer them elsewhere, according to an agreement. But, between the door and his bench, John forgot his messenger and his message. This happened three times. Finally, he hammered the caller’s purpose into his mind by repeating to himself: “The camel; my tools.” So the caller on the camel finally did get the equipment. On the other hand, John once spent a whole night and day without break discussing spiritual matters with another monk.

Around that time, a hitherto reputable young Egyptian woman named Paesia fell into unworthy ways. St. John’s monks begged him to try to bring her back to God. He called at Paesia’s home and gently expressed his concern for her She asked why he was weeping. “How can I not weep,” he replied, “while I see Satan in possession of your heart?”

Poesia was deeply touched. “Will you show me the route to repentance?” she asked. John bade her come back to the desert with him. En route, they had to stop overnight. As he slept in the dark wasteland he dreamt that he saw Paesia going up to heaven, and he heard a voice that said, “God has already considered her repentance perfect.” When he awoke and went to the place where she had been sleeping, he found that she had indeed died.

Towards the end of St. John’s life, Berbers from the west raided the monastic fastness of Skete. John and his followers fled east across the Nile to the desert made famous by St. Anthony, the pioneer Egyptian monk. It was there that John, too, drew his last breath.

When they saw that his death was imminent, St. John’s disciples asked him to give them one final spiritual lesson.

Still too humble to want to be thought an expert, he simply said, “I have never followed my own will; nor did I ever teach another what I had not practised myself.”

There were spiritual giants in the ancient deserts of Egypt. One of the tallest of these giants was St. John the dwarf.

No comments:

Post a Comment