இன்றைய புனிதர்:
(17-10-2020)
புனித அந்தியோக்கு இஞ்ஞாசியார் (ஆயர், இரத்த சாட்சி மற்றும் திருச்சபையின் தந்தையர்)
St. IGNATIUS OF ANTIOCH
நினைவுத்திருநாள் : அக்டோபர் 17
பிறப்பு: சுமார், கி.பி 35
இறப்பு: சுமார் கி.பி 108 உரோமை
புனிதர் பட்டம்: சட்ட உறுவாக்கத்துக்கு முன்
முக்கிய திருத்தலங்கள்: சான் கிலெமான்தே, உரோமை
திருவிழா: கிழக்கு மற்றும் சிரியன் கிறித்தவம்: அக்டோபர் 17 General Roman Calendar, 12th century to 1969: February 1 கிழக்கு மரபுவழி திருச்சபை மற்றும்காப்டிக் கிழக்கு மரபுவழி திருச்சபை: டிசம்பர் 20
புனித அந்தியோக்கு இஞ்ஞாசியார் (சுமார் கிபி 35 - கிபி 108), அல்லது தியோபோரஸ் அதாவது கடவுளை தாங்குபவர்) என கிரேக்க மொழியில் அறியப்படும் அந்தியோக்கு நகர இஞ்ஞாசியார், அந்தியோக்கியா நகரின் மூன்றாம் ஆயரும், திருச்சபையின் தந்தையரும், திருத்தூதர் யோவானின் சீடரும் ஆவார்.
இவரைக் கொல்ல உரோமைக்கு இட்டு சென்ற வழியில் இவர் பல கடிதங்களை எழுதியுள்ளார். இக்கடிதங்களின் மூலம் ஆதி கிறித்தவர்களின் விசுவாசம் மற்றும் நம்பிக்கையினைப் பற்றி அறிய முடிகின்றது. இவரின் கடிதங்களில் திருவருட்சாதனங்கள், ஆயர்களின் பணி முதலியவைப்பற்றி எழுதியுள்ளார். கத்தோலிக்க திருச்சபை என்னும் சொல்முறையை முதன்முதலாக எழுத்தில் பயன்படுத்தியவர் இவரே.
கிழக்கு மரபுவழி திருச்சபை மற்றும் காப்டிக் கிழக்கு மரபுவழி திருச்சபையில் இவரின் விழா நாள் திசம்பர் 20.கத்தோலிக்க திருச்சபையில் இவரின் விழா நாள் 17 அக்டோபர் ஆகும்.
---JDH---தெய்வீக குணமளிக்கும் இயேசு /திண்டுக்கல்.
Saint of the Day: (17-10-2020)
St. Ignatius of Antioch
He lived between the years 45 to 108 A.D. He was appointed as the Bishop of Antioch by St. Peter the Apostle and the first Pope of Christianity. He headed and guided the Antioch Diocese for about forty years. He was arrested for propagating Christian faith. When the king asked him who are you? he replied that he is the one taking God with him (Theophorus meaning God Bearer). The Emperor ordered to throw him to wild animals for their food at the Coliseum, as a punishment for propagating Christian faith. He wrote so many letters to various Churches for their guidance, as he was a disciple of the Apostles. He only used the word “Catholic” for mentioning the Christian church first, in a letter written by him. A tradition says that he was one of the children whom Jesus took in His arms and blessed.
Born :
c.50 in Syria
Died :
thrown to wild animals c.107 at Rome, Italy
• relics at Saint Peter's Basilica, Rome
Patronage :
against throat diseases
• Church in eastern Mediterranean
• Church in North Africa
---JDH---Jesus the Divine Healer---
No comments:
Post a Comment