புனிதர்களை பெயர் வரிசையில் தேட

Translate

10 October 2020

#ப்ரைட்லிங்டன்_நகர்ப்_புனித_ஜான் (1319-1379)அக்டோபர் 10

#ப்ரைட்லிங்டன்_நகர்ப்_புனித_ஜான் (1319-1379)

அக்டோபர் 10

இவர் (#St_John_of_Bridlington) இங்கிலாந்து நாட்டைச் சார்ந்தவர்.
தன்னுடைய உயர்கல்வியை ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் படித்து முடித்த இவர், 
புனித அகுஸ்தின் துறவற சபையில் சேர்ந்து துறவியானார்.

துறவு மடத்தில் பல்வேறு பொறுப்புகளை வகிக்க இவர், இறுதியில் பலருடைய வற்புறுத்தலின் பேரில் துறவு மடத்தின் தலைவரானார்.

புனிதத்திற்கும் தாழ்ச்சிக்கும் தாராள உள்ளத்திற்கும் எடுத்துக்காட்டாய் விளங்கிய இவர், மண்ணுலகில் வாழ்ந்த காலத்திலேயே பல்வேறு வல்ல செயல்களைச் செய்தார்.

ஹாட்டில்பூல் (Hartlepool) என்ற கடற்பகுதியில் ஜந்து பேர் பயணம் செய்து கொண்டிருக்கும்போது, கடலில் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்ட அவர்கள் இவரிடம் மன்றாட, எந்தவொரு ஆபத்தும் இன்றி அவர்கள் காப்பாற்றப்பட்டனர். 

இன்னொரு முறை இங்கிலாந்தை ஆண்டு வந்த ஐந்தாம் ஹென்றி என்ற மன்னர், அகின்கோர்ட் (Agincourt) என்ற இடத்திற்கு எதிராகப் போர்த்தொடுக்கச் செல்லும்போது இவருடைய உதவியை நாடியதால் போரில் அவருக்கு வெற்றி கிடைத்தது.

இப்படித் தாழ்ச்சிக்கும் புனிதத்திற்கும் எடுத்துக்காட்டாக விளங்கிய இவர், 1379 ஆம் ஆண்டு இறையடி சேர்ந்தார்.

கர்ப்பிணிப் பெண்கள் இவரிடம் வேண்டிக் கொண்டால் சுகப் பிரசவம் கிடைக்கும் என்றொரு நம்பிக்கை இருக்கிறது.

No comments:

Post a Comment