புனிதர்களை பெயர் வரிசையில் தேட

Translate

10 October 2020

✠ புனிதர் டேனியல் கம்போனி ✠ ✠(St. Daniele Comboni)அக்டோபர் 10

† இன்றைய புனிதர் †
(அக்டோபர் 10)

✠ புனிதர் டேனியல் கம்போனி ✠ ✠
(St. Daniele Comboni)
ஆயர்/ மத்திய ஆபிரிக்காவின் தலைமை குரு:
Bishop and Vicar Apostolic of Central Africa:

பிறப்பு: மார்ச் 15, 1831
லிமோன் சுல் கார்டா, ப்ரேசியா, லொம்பார்டி-வேநீஷியா அரசு
(Limone sul Garda, Brescia, Kingdom of Lombardy-Venetia)

இறப்பு: அக்டோபர் 10, 1881 (வயது 50)
கார்ட்டூம், சூடான்
(Khartoum, Sudan)

ஏற்கும் சமயம்:
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)

முக்திபேறு பட்டம்: மார்ச் 17, 1996
திருத்தந்தை இரண்டாம் ஜான் பவுல்
(Pope John Paul II)

புனிதர் பட்டம்: அக்டோபர் 5, 2003
திருத்தந்தை இரண்டாம் ஜான் பவுல்
(Pope John Paul II)

நினைவுத் திருவிழா: அக்டோபர் 10

பாதுகாவல்:
மறைப்பணியாளர்கள் (Missionaries)
உதவித் தொழிலாளர்கள் (Aid workers)
கம்போனி மிஷனரி சகோதரிகள் (Comboni Missionary Sisters)
இயேசுவின் திருஇருதய கம்போனி மிஷனரிகள் (Comboni Missionaries of the Heart of Jesus)

புனிதர் டேனியல் கம்போனி, ஆபிரிக்காவில் மறைப்பணியாற்றிய ஒரு இத்தாலி நாட்டு ரோமன் கத்தோலிக்க ஆயரும் (Italian Roman Catholic Bishop), “இயேசுவின் திருஇருதய கம்போனி மிஷனரிகள்” (Comboni Missionaries of the Heart of Jesus) மற்றும் “கம்போனி மிஷனரி சகோதரிகள்” (Comboni Missionary Sisters) ஆகிய இரண்டு மறைப்பணி சமூகங்களை நிருவியவருமாவார். வெரோனா (Verona) நகரிலுள்ள வணக்கத்துக்குரிய நிக்கோலா மஸ்ஸாவின் (Venerable Nicola Mazza) கீழ் கல்வி பயின்ற இவர், அங்கே பன்மொழியியலாளரானார். 1849ம் ஆண்டு, ஆபிரிக்க கண்டத்தில் மறைப்பணியில் சேருவதாக உறுதியேற்ற இவர், 1857ம் ஆண்டு சூடானுக்கு (Sudan) பயணித்தார்.

ஆபிரிக்காவின் பல்வேறு பகுதிகளில் வாழும் பாதிக்கப்பட்ட ஏழை மக்களின்பால் ஐரோப்பிய கண்ட மக்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக கம்போனி கடும் பிரயத்தன முயற்சிகளில் ஈடுபட்டார். ஏழை மக்கள் மற்றும் நோயுற்ற மக்களுக்கு உதவும் தமது திட்டங்களுக்கு நிதி திரட்டுவதற்காக, 1865ம் ஆண்டு ஆரம்பம் முதல், மத்திய  1865ம் ஆண்டு வரை, லண்டன் மற்றும் பாரிஸ் போன்ற அநேக இடங்களுக்கு ஐரோப்பா முழுவதிலும் பயணம் மேற்கொண்டார். 1877ம் ஆண்டில் ஒரு ஆயராக நியமிக்கப்பட்ட காரணத்தால், ஆபிரிக்காவில் அவரது மறைப்பணியில் இவருக்கு பெரும் சுதந்திரம் கிட்டியது. கார்டூம் (Khartoum), கெய்ரோ (Cairo) மற்றும் பிற நகரங்களில் தமது சபையின் கிளைகளை நிறுவ இவரால் இயன்றது.

பிறப்பும் குருத்துவமும்:
கி.பி. 1831ம ஆண்டு, மார்ச் மாதம், 15ம் தேதியன்று, “லொம்பார்டி-வேநீஷியா” அரசின் “ப்ரேசியா” (Brescia) பிரதேசத்தின் “லிமோன் சுல் கார்டா” (Limone sul Garda) நகரில் பிறந்த இவரது பெற்றோர், தோட்ட வேலை செய்து பிழைத்துவந்த ஏழைகளாவர். “லுய்கி கம்போனி” மற்றும் “டோமென்சியா பேஸ்” (Luigi Comboni and Domenica Pace) ஆகியோர் இவரது பெற்றோர் ஆவர். அக்காலத்தில், “லிமோன்” (Limone) நகரமானது, ஆஸ்திரிய-ஹங்கேரிய பேரரசின் (Austrian-Hungarian Empire) அதிகார எல்லைக்குள் இருந்தது.

தமது பன்னிரெண்டு வயதில், வெரோனா (Verona) நகரிலுள்ள “வணக்கத்துக்குரிய நிக்கோலா மஸ்ஸா” (Venerable Nicola Mazza) நிறுவிய ஆன்மீக கல்வி நிறுவனத்தில் கல்வி கற்க சென்றார். அங்கே, மருந்தியல் கல்வியையும் (Medicine), அத்துடன் ஃபிரெஞ்ச் (French), ஆங்கிலம் (English) மற்றும் அரபிக் (Arabic) ஆகிய மொழிகளையும் கற்று தேறினார். பின்னர், குருத்துவம் பெறுவதற்கான கல்வியையும் கற்க தொடங்கினார். ஜப்பான் மறைசாட்சிகளைப் (Japanese martyrs) பற்றி கற்றறிந்திருந்த அவர், 1846ம் ஆண்டு முதலே தாமும் ஒரு மிஷனரி மறைப்பணியாளராக வேண்டுமென்ற விருப்பம் கொண்டிருந்தார். 1849ம் ஆண்டு, ஜனவரி மாதம், 6ம் நாளன்று, தாமும் ஆபிரிக்க மிஷனரியாக உறுதிபூண்டார். 1854ம் ஆண்டு, டிசம்பர் மாதம், 31ம் தேதியன்று, அப்போதைய “ட்ரென்ட் ஆயர்” (Bishop of Trent), (தற்போது அருளாளர்) “ஜோஹன் நெபோமுக்” (Johann Nepomuk von Tschiderer zu Gleifheim) என்பவரால் குருத்துவ அருட்பொழிவு பெற்றார். கம்போனி, 1855ம் ஆண்டு, செப்டம்பர் மாதம், 29ம் தேதி முதல், அக்டோபர் மாதம், 14ம் தேதி வரை, புனித பூமிக்கு திரு யாத்திரை சென்றார். மஸ்ஸாவின் முன்னாள் மாணவர்களான ஐந்து மிஷனரிகளுடன் இணைந்து, தமது தாயாரின் ஆசீர்வாதங்களுடன் ஆபிரிக்கா பயணம் புறப்பட்டார். அவர்களனைவரையும் ஆசீர்வதித்த அவரது தாயார், டேனியல், உங்களனைவரையும் இறைவன் ஆசீர்வதிப்பாராக என்றார். 1857ம் ஆண்டு, செப்டம்பர் மாதம், 8ம் தேதியன்று, தமது ஐந்து நண்பர்களான “ஜியோவனி பெல்ட்ரேம்” (Giovanni Beltrame), “அலெஸ்ஸாண்ட்ரோ டல் போஸ்கோ” (Alessandro dal Bosco), “ஃபிரான்செஸ்கோ ஒலிபொனி” (Francesco Oliboni), “ஏஞ்சலோ மெலோட்டோ” (Angelo Melotto) மற்றும் “இசிடோரோ ஸில்லி” (Isidoro Zilli) ஆகியோருடன் வடகிழக்கு இத்தாலியிலுள்ள (Northeastern Italy) “உடின்” (Udine) எனும் நகரிலிருந்து தமது ஆபிரிக்க பயணத்தை தொடங்கினார்.

நான்கு மாதங்களின் பின்னர், 1858ம் ஆண்டு, ஜனவரி மாதம், 8ம் தேதி, வடகிழக்கு ஆப்பிரிக்காவிலுள்ள (Northeastern Africa) சூடான் (Sudan) நாட்டின் தலைநகரான “கார்ட்டூம்” (Khartoum) சென்றடைந்தார். அடிமைப்படுத்தப்பட்ட சிறுவர்கள் மற்றும் சிறுமிகளின் விடுதலையே அவருக்குத் தரப்பட்ட வேலையாக இருந்தது. தாங்க முடியாத காலநிலை, பஞ்சம், மற்றும் நோய்கள் போன்ற எண்ணற்ற சிரமங்களும் அங்கே இருந்தன. அவற்றின் காரணமாக, அவரது சக மிஷனரிகள் பலரும் மரணமும் அடைந்திருந்தனர்.

அவரது தோழர்களில் ஒருவரது மரணத்தை நேரில் கண்ட இவர், அவரைத் தடுப்பதற்குப் பதிலாக அவரே தொடரத் தீர்மானித்திருந்தார். 1859ம் ஆண்டின் இறுதிக்குள், இவரது ஐந்து சகாக்களுள் மூவர் மரித்துப் போக, மீதமுள்ள இருவரும் கெய்ரோ நகரில் இருந்தனர். கம்போனி, இவர்கூட நோயுற்றிருந்தார். மலேரியா எதிர்ப்பு காரணமாக வெரோனாவுக்குத் திரும்ப வேண்டிய கட்டாயம் இவருக்கு ஏற்பட்டது. 1861ம் ஆண்டு முதல், 1864ம் ஆண்டுவரை, மஸ்ஸாவின் கல்வி நிலையத்தில் கற்பிக்கும் பணியாற்றிய கம்போனி, 1864ம் ஆண்டில் தனது சொந்த நிலத்தில் பணியாற்றும் பணிக்காக புதிய திட்டங்களை அவர் விரைவில் அறிமுகப்படுத்தினார். 1864ம் ஆண்டு, செப்டம்பர் மாதம், 15ம் தேதி, ரோம் நகரில் புனிதர் பேதுருவின் கல்லறைக்கு விஜயம் செய்தார். "ஆபிரிக்கா வழியாக ஆபிரிக்கா காப்போம்" எனும் கோசங்களுடன், "ஆப்பிரிக்காவின் மறுபிறப்புக்கான திட்டம்" என்ற கருத்தின் அடிப்படையில் திட்டங்களை தயாரித்தார். நான்கு நாட்கள் கழித்து, செப்டம்பர் 19ம் தேதி, அவர் தனது திட்டத்தை விவாதிக்க திருத்தந்தை ஒன்பதாம் பயஸ் (Pope Pius IX) அவர்களை சந்தித்தார்.

ஐரோப்பிய கண்டம் மற்றும் அகில உலக கிறிஸ்தவ திருச்சபை ஆகியவை ஆபிரிக்க கண்டத்தில் அதிக அக்கறை காட்ட வேண்டும் என்று கம்போனி விரும்பினார். 1864ம் ஆண்டு, டிசம்பர் மாதம் முதல், 1865ம் ஆண்டு, ஜூன் மாதம் வரையிலான காலத்தில், ஆபிரிக்க நாடுகளின் மிஷனரிகளின் ஆன்மீக மற்றும் பொருளாதார உதவிக்காக அவர், முடியாட்சி குடும்பங்கள், ஆயர்கள் மற்றும் பிரபுக்கள் உள்ளிட்ட ஐரோப்பா முழுவதும் பயணித்து விண்ணப்ப்பித்தார். ஒரு ஆஸ்திரிய தூதரக விசாவில் (Austrian consular visa) பயணித்த இவர், பிரான்ஸ் (France), ஸ்பெயின் (Spain), இங்கிலாந்து (England), ஜெர்மனி (Germany), ஆஸ்திரியா (Austria) ஆகிய நாடுகளுக்கும் பயணித்தார். மனிதாபிமான "கொலோன் சங்கம்" (The humanitarian "Society of Cologne") அவருடைய பணிகளுக்கு முக்கிய ஆதரவாளராக ஆனது.

1867ம் ஆண்டு, ஜூன் மாதம், முதலாம் தேதி, கம்போனி ஆண்களுக்கான ஒரு சேவை நிறுவனத்தை நிறுவினார். 1872ம் ஆண்டு, பெண்களுக்கான ஒரு நிறுவனத்தை நிறுவினார். இரண்டுமே வெரோனா நகரில் நிறுவப்பட்டது. ஆண்களுக்கான சபையானது, “இயேசுவின் திருஇருதய கம்போனி மிஷனரிகள்” (Comboni Missionaries of the Heart of Jesus) என்றும், பெண்களுக்கான சபையானது, “கம்போனி மிஷனரி சகோதரிகள்” (Comboni Missionary Sisters) என்றும் பெயரிடப்பட்டது. 1867ம் ஆண்டு, மே மாதம், 7ம் தேதி, திருத்தந்தை ஒன்பதாம் பயஸ் (Pope Pius IX) அவர்களை சந்தித்த கம்போனி, தம்முடன் பன்னிரெண்டு ஆபிரிக்க சிறுமிகளையும் அழைத்து வந்திருந்தார். பின்னர், 1867ம் ஆண்டு இறுதியில் கெய்ரோ நகரில் தமது சபையின் இரண்டு கிளைகளை திறந்து வைத்தார். ஆபிரிக்காவில் இதுபோன்ற பணிகளில் பெண்களை முதன்முதலில் அழைத்து வந்தது கம்போனியே ஆவார். அவர், “எல் ஒபெய்ட்” (El Obeid) மற்றும் “டெலென்” (Delen) போன்ற பிற சூடான் நகரங்களில் புதிய மிஷனரி பணிகளைத் தொடங்கினார். கம்போனி அரபி மொழியை நன்கு அறிந்திருந்தார். பல ஆபிரிக்க மொழிகளில் (டின்கா, பாரி மற்றும் நுபியா) பேசும் திறன் பெற்றிருந்தார். அதேபோல் ஆறு ஐரோப்பிய மொழிகளிலும் பேசினார்.

1870ம் ஆண்டு, மார்ச் மாதம், கெய்ரோவிலிருந்து ரோம் நகர் சென்ற கம்போனி, அங்கே “முதலாம் வத்திக்கான் கவுன்சிலில்” (First Vatican Council) “வெரோனா பிஷப் இறையியலாளராக” (Theologian of the Bishop of Verona) பங்கேற்றார். ஆபிரிக்க மிஷனரி பணிகளுக்காய் அவருடைய விண்ணப்பம் எழுபது ஆயர்களின் ஒப்புதல்களை கையெழுத்துக்களை பெற்றுத் தந்தது. “ஃபிரான்கோ-ப்ரூசியன்” (Franco-Prussian War) போர் வெடித்த காரணத்தாலும், திருத்தந்தையர் மாநிலங்கள் (Papal States) கலைக்கப்பட்ட காரணத்தாலும் “முதலாம் வத்திக்கான் கவுன்சில்” (First Vatican Council) இடைநிறுத்தப்பட்டது.

1877ம் ஆண்டு, “மத்திய ஆபிரிக்காவின் விகார் அப்போஸ்தலிக்” (Vicar Apostolic of Central Africa) எனும் பட்டம் பெற்ற கம்போனியா, 1877ம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம், 12ம் நாளன்று, ஆயராக நியமனம் பெற்றார். 1877ம் ஆண்டிலும், மீண்டும் 1878ம் ஆண்டிலும் அவர்களுடைய மிஷனரி பிரதேசங்களில் பஞ்சம், பட்டினி உள்ளிட்ட வறட்சி ஏற்பட்டது. உள்ளூர் மக்கள் மிக மோசமாக பாதிப்படைந்தனர். மத ஊழியர்கள், மிஷனரிகள் மற்றும் அவர்களின் நடவடிக்கைகள் கிட்டத்தட்ட ஏறக்குறைய குறைந்து, இல்லாது போயின.

1880ம் ஆண்டு, நவம்பர் மாதம், 27ம் தேதி, நேபிள்ஸ் (Naples) நகரிலிருந்து சூடான் நாட்டின் தமது மிஷனரி நோக்கி எட்டாவது, மற்றும் கடைசி தடவையாக, அடிமை வியாபாரத்தை எதிர்க்க பயணித்த கம்போனி, இறுதியில் நோயுற்றார். 1881ம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம், ஒன்பதாம் தேதி, கார்ட்டும் (Khartoum) நகர் சென்றடைந்தார். அக்டோபர் மாதம் 5ம் தேதி முதல் அதிக காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த கம்போனி, காலரா நோயால் பாதிக்கப்பட்டு, அக்டோபர் மாதம் பத்தாம் தேதி மரணமடைந்தார்.

† Saint of the Day †
(October 10)

✠ St. Daniele Comboni ✠

Bishop, and Vicar Apostolic of Central Africa:

Born: March 15, 1831
Limone sul Garda, Brescia, Kingdom of Lombardy-Venetia

Died: October 10, 1881 (Aged 50)
Khartoum, Sudan

Venerated in: Roman Catholic Church

Beatified: March 17, 1996
Pope John Paul II

Canonized: October 5, 2003
Pope John Paul II

Feast: October 10

Patronage:
Missionaries
Aid workers
Comboni Missionary Sisters
Comboni Missionaries of the Heart of Jesus

Saint Daniele Comboni was an Italian Roman Catholic bishop who served in the missions in Africa and was the founder of both the Comboni Missionaries of the Heart of Jesus and the Comboni Missionary Sisters. Comboni studied under the Venerable Nicola Mazza in Verona where he became a multi-linguist and in 1849 vowed to join the missions in the African continent although this did not occur until 1857 when he travelled to Sudan. He continued to travel back and forth from his assignment to his native land in order to found his congregations and attend to other matters and returned in 1870 for the First Vatican Council in Rome until its premature closing due to conflict.

The life and death of missionary Daniel Comboni in Central Africa combined the ideal with the practical, drawing inspiration from the love of the Sacred Heart of Jesus. His missionaries, known as the Comboni Fathers or the Verona Missionaries, have 4,000 members working in countries all over the world.

Early life:
Daniel Comboni was born in 1831 to agricultural worker parents Luigi and Domenica, at Limone on Lake Garda in the diocese of Brescia, Italy. He was the only one of eight children to survive infancy. His parents sent him to the free school for the study of humanities founded by Fr. Nicola Mazza in Verona. Fr Mazza had a great love for Africa and often talked of it with his students, who called him “Father Congo”.

Missionary with the Mazza Institute:
In 1849 Daniel began his preparation for missionary priesthood with serious study of language, medicine, and theology. Ordained in 1854, he went two years later with five other missionaries of the Mazza Institute up the River Nile as far as Khartoum, capital of Sudan. He immediately recognized the difficulty of the task – disease, hot humid climate, and the distrust of Europeans because of the slave trade.

Return to Italy:
When all his companions died, Comboni returned home in 1859 to recover his own health and taught (1861-64) at the Mazza Institute in Verona. He also spent time writing a strategy for mission in Africa, aware that Africans would have to be their own evangelists. He also travelled around Europe on fund-raising missions.

Verona Fathers and Sisters:
In 1867, after the Mazza Institute abandoned its African project, Comboni founded two missionary institutes devoted to the mission in Africa. These came to be known as the Verona Fathers and Verona Sisters (or Comboni Missionaries). His spirituality drew its inspiration from the Sacred Heart of Jesus pierced for love of humanity. That was the source of his zeal for the salvation of souls and his strength in bearing trials and crosses for the sake of the Gospel. Returning to Africa, he opened a school in Cairo, which became an institute to prepare missionaries for Africa and educate Africans in the Christian faith.

Mission in Central Africa:
Back in Rome in 1870 Comboni appealed to the First Vatican Council for a strategy for the Church to be involved in the evangelization of Africa. Pope Pius IX appointed him Pro-vicar Apostolic of Central Africa (1872) and later Bishop of Khartoum (1877).

Combatting the Slave Trade:
Comboni made efforts (and had some small success) in combatting the slave trade in the region but, this was deeply embedded. He also wrote about the geography, ethnology, and languages of the region. He himself spoke six European languages, Arabic, and several central African dialects.

Working with African priests and catechists:
With him were two African priests, Fr Pius Hadrianus, who had been educated in Italy and had become a Benedictine of Subiaco and Fr Antonio Dubale who ran a model village for freed slaves in El Obeid. A trained Nubian catechist, a product of the Cairo Institute, also joined them here. The Nubians had a rich culture, were anti-Islamic, and were, therefore, a logical target for mission work.

Later years:
In 1878 Comboni met the explorer Henry M. Stanley in Cairo. However, a great drought, disease, and the death of many of his missionaries clouded his last years. Even after his death in 1881, the Mahdist insurrection threatened to destroy everything he had achieved. But Comboni’s view of his task was a long-term one. He wrote:

Missionaries will have to understand that they are stones hid under the earth, which will perhaps never come to light, but which will become part of the foundations of a vast, new building.

And so it turned out to be.

Death and influence:
Daniel Comboni died in 1881 in Khartoum. In later years Comboni missionaries spread from Egypt and Sudan to Uganda, Ethiopia, Mozambique, Congo, and Togo. They also work in Mexico, Brazil, and Ecuador and among African Americans in the USA, where their work has been chiefly with Blacks, Indians, and Mexicans. They have priests, brothers, and sisters ministering in hospitals, schools, and orphanages in 41 countries.

Canonization:
Pope John Paul II beatified Daniel Comboni in 1996 and canonized him in 2003.

No comments:

Post a Comment