புனிதர்களை பெயர் வரிசையில் தேட

Translate

30 October 2020

புனித_டோரத்தி (1347-1394)அக்டோபர் 30

புனித_டோரத்தி (1347-1394)

அக்டோபர் 30

இவர் (#Dorothy_Of_Montau) ஜெர்மனியில் உள்ள ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர்.
இவருக்கு ஏழு வயது நடந்துகொண்டிருக்கும்போது ஏற்பட்ட இறையனுபவம், இவரை இறைவன்மீது பற்றுக் கொள்ளச் செய்தது. இதன்பிறகு இவர் இறைவேண்டலுக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுத்து வாழ்ந்து வந்தார்.

இவர் திருமண வயதை அடைந்தபொழுது ஆல்பிரக்ட் என்றொரு செல்வந்தருக்கு மணமுடித்துக் கொடுக்கப்பட்டார். அவர் இவரைக் கடுமையாகச் சித்திரவதை செய்தார். இதனால் இவருடைய இல்லற வாழ்க்கை மிகவும் துன்பம் நிறைந்ததாக இருந்தது.

ஒருபக்கம் தன் கணவர் தன்னைச் சித்திரவதை செய்து வந்தாலும், இன்னொரு பக்கம் இவர் அவருக்காக இறைவனிடம் தொடர்ந்து மன்றாடினார். ஒருகட்டத்தில் அவர் மனம்மாறி இவரை அன்பு செய்யத் தொடங்கினார். இதற்குப் பிறகு இவர்களுக்கு இறைவன் ஒன்பது குழந்தைகளைக் கொடுத்து, அருள்பாலித்தார்.

ஒருமுறை இவர் உரோமைக்குப் புனித பயணம் மேற்கொண்டார். அவ்வாறு இவர் உரோமைக்குச் சென்றுவிட்டுத் திரும்பி வந்தபொழுது இவரது கணவர் இறந்திருந்தார். எனவே இவர் பிள்ளைகளுக்குச் செய்யவேண்டியதைச் செய்துவிட்டு, மேரியன்வார்டர் என்ற இடத்தில் இருந்த துறவு மடத்தில் சேர்ந்து துறவியாக வாழ்ந்தார்.

துறவு மடத்தில் இருந்த நாள்களில் இவர் நிறைய காட்சிகளைக் கண்டார். அக்காட்சிகள் இவரை இறைவன் மீது ஆழமான நம்பிக்கை கொள்ள வைத்தன. 

இவர் 1394 ஆம் ஆண்டு இறையடி சேர்ந்தார். இவர் மணப்பெண்கள், கைம்பெண்கள் ஆகியோருக்குப் பாதுகாவலராக இருக்கின்றார்.

Widow and hermitess. She was born a peasant on February 6, 1347, in Montau, Prussia. After marrying a wealthy swordsmith, Albrecht of Danzig, Poland, she bore him nine children and changed his gruff character. He even accompanied her on pilgrimages. However, when she went to Rome in 1390, Albrecht remained at home and died during her absence. A year later Dorothy moved to Marienswerder, where she became a hermitess. She had visions and spiritual gifts. Dorothy died on June 25 and is the patroness of Prussia. She was never formally canonized.

Dorothea (or Dorothy) of Montau (German: Dorothea von Montau; Polish: Dorota z Mątowów) (6 February 1347 – 25 June 1394) was a hermit and visionary of 14th century Germany. After centuries of veneration in Central Europe, she was canonized in 1976.

No comments:

Post a Comment