புனிதர்களை பெயர் வரிசையில் தேட

Translate

30 October 2020

✠ புனிதர் ஏஞ்செலோ ✠(St. Angelo of Acri)அக்டோபர் 30

† இன்றைய புனிதர் †
(அக்டோபர் 30)

✠ புனிதர் ஏஞ்செலோ ✠
(St. Angelo of Acri)

தென் இத்தாலியின் அப்போஸ்தலர்:
(Apostle of South Italy)
பிறப்பு: அக்டோபர் 19, 1669
அக்ரி, கலாப்ரியா, தென் இத்தாலி
(Acri, Calabria, Southern Italy)

இறப்பு: அக்டோபர் 30, 1739
அக்ரி, கலாப்ரியா, தென் இத்தாலி
(Acri, Calabria, Southern Italy)

ஏற்கும் சமயம்:
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)

முக்திபேறு பட்டம்: டிசம்பர் 18, 1825
திருத்தந்தை பன்னிரெண்டாம் லியோ
(Pope Leo XII)

புனிதர் பட்டம்: அக்டோபர் 15, 2017
திருத்தந்தை ஃபிரான்சிஸ்
(Pope Francis)

நினைவுத் திருவிழா: அக்டோபர் 30

புனிதர் ஏஞ்செலோ, தமது நாற்பது வருட குருத்துவ வாழ்க்கையில், தமது ஓய்வற்ற மறைபோதனைகளால், “கலாப்ரியா” (Calabria) மற்றும் தென் இத்தாலியின் (Southern Italy) அப்போஸ்தலர் (Apostle) என அறியப்படும் கபுச்சின் (Capuchin) சபையைச் சேர்ந்த கத்தோலிக்க குரு ஆவார். நல்ல மேய்ப்பனைப் போலவே, பாவிகளையும், ஏழைகளையும், மிகச் சிறியோரையும் தேடிச்செல்ல அவர் தயங்கியதே கிடையாது. எப்போதும் தம்மையே வெளிப்படுத்தாமல், ஆண்டவரிடமிருந்து கிடைக்கும் நற்செய்திகளையே அவர் பிறருக்கும் வெளிப்படுத்தினார்.

“லூக்கா அன்டோனியோ ஃபால்கொன்” (Luca Antonio Falcone) எனும் இயற்பெயர் கொண்ட இப்புனிதர், கி.பி. 1669ம் ஆண்டு, அக்டோபர் மாதம், 19ம் தேதியன்று, தென் இத்தாலியின் “ஓல்ட் கசலிச்சியோ” (Old Casalicchio) பிராந்தியத்தின் அருகாமையிலுள்ள “சிலா” (Sila mountainous plateau) மழைப் தொடரிலுள்ள அக்ரி (Acri) எனும் சிறு நகரின், ஒரு தாழ்ச்சியான ஏழைத் தொழிலாளியின் மகனைப் பிறந்தார். இதில் எப்பொழுதும் பெருமிதம் அடைந்த அவர், பின்னர் ஒரு ரொட்டி சுட்டு விற்கும் மற்றும் ஒரு ஆடு மேய்ப்பவரின் மகனாகவும் தனது உரையாடல்களில் நினைவுகூருவார். அவர் பிறந்த மறுநாளன்று, செயின்ட் நிக்கோலஸின் (Church of St. Nicholas) தேவாலயத்தில் ஞானஸ்நானம் பெற்றார்.

ஒரு வகையான ஆரம்பநிலை பள்ளி திறக்கப்பட்திருந்த ஒரு அயலூரில் படிக்கவும் எழுதவும் கற்றுக் கொண்ட அவர், செயின்ட் நிக்கோலஸ் பங்கிலும் (Parish of St. Nicholas) மற்றும் கபுச்சின் துறவற சபையின் (Friary Church of the Capuchins) தேவ அன்னை மரியாளின் (St. Mary of the Angels) தேவாலயத்திலும் அடிக்கடி கிறிஸ்து கோட்பாடுகளின் அடிப்படைகளை கற்றுக்கொண்டார்.

அவர் வளரும் பருவத்திலே, அவரது தாய் மாமனும் கத்தோலிக்க குருவுமான “அருட்தந்தை டோமினிக்கோ எர்ரிகோ” (Fr. Domenico Errico) என்பவர், இவரது இளம் விதவைத் தாயாருக்கு இவர் உதவுவார் என்ற நம்பிக்கையில், இவரை படிக்க வைத்தார்.

கி.பி. 1689ம் ஆண்டு, கபுச்சின் துறவியான “அன்டோனியோ” (Capuchin Antonio of Olivadi) என்பவரது கவர்ச்சியான பிரசங்கத்தைக் கேட்ட இருபது வயதான லூக்கா அன்டோனியோ, தமது துறவு வாழ்க்கையின் சுருக்கமான அனுபவத்தைத் தொடர்ந்து, கபுச்சின் சபையில் அர்ப்பணிக்க எண்ணி இணைந்தார். ஆனால், இவ்விளைஞன் விரைவிலேயே தடைகளை சந்தித்தார். கபுச்சின் வாழ்க்கையின் எளிமைகளால் உற்சாகமற்று, இரண்டு முறை துறவற சீருடைகளை கழற்றிவிட்டு, புகுமுக  பயிற்சியை விட்டு ஓடிப்போனார். அவருக்கு, கண்ணீருடன் நின்றிருந்த தமது விதவைத் தாயாரின் முகமே கண்களில் நின்றது. ஆனால், மூன்றாம் முறை, கி.பி. கி.பி. 1690ம் ஆண்டு, நவம்பர் மாதம், 12ம் தேதி முதல், கலாப்ரியா (Calabria) பிராந்தியத்திலுள்ள “பெல்வேடர் மரிட்டிமோ” (Belvedere Marittimo) எனுமிடத்திலுள்ள துறவு மடத்தில், ஏஞ்செலோ (Angelo of Acri) எனும் பெயருடன் புகுமுக பயிற்சியை (Novitiate) தொடங்கினார்.

இந்த நேரத்தில் கூட, இரண்டாவது எண்ணங்களும் சோதனைகளும் குறைவாக இல்லை. ஆனால், “சகோதரர் பெர்னார்ட்” (Br. Bernard of Corleone) என்பவரின் முக்திபேறு நிலைக்கான ஆய்வுப் பணிகள் நடந்துகொண்டிருந்த அச்சமயத்தில், அவரது தீரங்களைப் பற்றி படிக்க நேர்ந்தது. சகோதரர் ஏஞ்செலோ, தமது போராட்டத்தில் உதவி கேட்டு ஆண்டவரில் ஆழ்ந்த ஜெபத்தை உயர்த்தினார். சகோதரர் பெர்னார்டின் அடிச்சுவடிகளைப் பின்பற்றி, அவரைப் போலவே நர்டந்துகொள்ளுமாறு, இவ்விளம் புகுமுக துறவி ஆண்டவரால் ஊக்குவிக்கப்பட்டார் என்றும், இதுவே எதிர்பார்க்கப்பட்ட சரியான அடையாளம் என்று ஆண்டவர் கூறியதாகவும் கூறப்படுகிறது.

கி.பி. 1691ம் ஆண்டு, நவம்பர் மாதம், 12ம் நாளன்று, தமது சத்தியப் பிரமாணங்களை ஏற்றுக்கொண்டார். ஏஞ்செலோ, பரிபூரண நற்செய்தி வழியில் தன்னை அமைத்தார். அத்துடன், குருத்துவ அருட்பொழிவுக்காக தம்மைத் தயார் படுத்தவும் தொடங்கினார். கி.பி. 1700ம் ஆண்டு, ஏப்ரல் மாதம், 10ம் நாள், உயிர்த்த ஞாயிறன்று, “கஸ்சானோ ஆல்இயோனியோ தேவாலயத்தில்” (Cathedral of Cassano all’Ionio) குருத்துவ அருட்பொழிவு பெற்றார். பின்னர், அவர் ஒரு பிரசங்கியாக தன்னை தயார்படுத்தும்படி கீழ்ப்படிதலைக் கேட்டுக்கொண்டார். கி.பி. 1702ம் ஆண்டு முதல் 1739ம் ஆண்டு, தாம் மரிக்கும் வரை, கலாபிரியா (Calabria) பிரதேசம் முழுதும் மற்றும் மத்திய இத்தாலியின் அநேக இடங்களுக்கும் ஓய்வொழிச்சலின்றி பயணங்கள் மேற்கொண்டு, தவக்கால நற்செய்திகளையும் (Lenten Sermons), தியானங்களையும் (Retreats), பிரபல மறைப்பணிகளையும் (Popular Missions) பிரசங்கித்தார்.

பிரசங்கப் பணிகளின் ஆரம்பம் மிகவும் மகிமையானதாகவோ, போற்றத்தக்கதாகவோ இருக்கவில்லை. “கொரிஜிலியானோ கலாப்ரோ” (Corigliano Calabro) அருகே “சான் ஜியோர்ஜியோ அல்பானீஸின்” (San Giorgio Albanese) அவரது அறிமுக பிரசங்கம், ஒரு உண்மையான தோல்வியாகவே அமைந்தது. தொடர்ச்சியான மூன்று மாலை நேரங்கள், அவர் வாசித்து, ஞாபகம் வைத்திருந்த உரைகளை நினைகூர முடியவில்லை. பிரசங்கத்தை தொடர முடியாது என்பதை கண்டுகொண்ட அவர், வேறு வழியின்றி, ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றார்.

தமது அறையில், சிலுவையில் அறையுண்ட கிறிஸ்துவின் திருச்சொரூபத்தின் முன்பு கண்ணீர் விட்டழுத ஏஞ்சலோ, மாற்றவியலாத ஒரு முடிவுக்கு வந்தார். கிறிஸ்து நிர்வாணப்படுத்தப்பட்டு சிலுவையில் அறையப்பட்டதை மட்டுமே தாம் பிரசங்கிக்கப் போவதாயும், தாய்மொழியில் மட்டுமே பிரசங்கிக்கப் போவதாயும் முடிவெடுத்தார். பரிசுத்த ஆவியானவரின் வழிகாட்டுதலின்படியே தாம் இனி படிப்படியாக முன்னேறப்போவதாகவும் முடிவெடுத்தார். அவருடைய இதயம் வைராக்கியமும் பரிசுத்த ஆவிக்குரிய ஐக்கியமும் நிறைந்ததாக இருந்தது. இதனால்தான் அவர் வெற்றி பெற்றார், தங்களை தாங்களே சிந்தித்துக்கொண்டிருந்த எதிர்ப்பை சந்தித்தபோதும், அறிவொளியின் அறிவையும் அடைந்தார்.

மக்களிடம் அவர்களின் பாவங்களை கருணையுள்ளத்துடன் கேட்டு, அவர்களுக்கு ஒப்புரவு அருட்சாதனம் வழங்காத மறைபோதகர், அறுவடையைப் பற்றின சிந்தனையில்லாத விதைப்பவனைப் போன்றவர் ஆவார் என்பதனை ஏன்ஜெலோ நன்கு உணர்ந்திருந்தார். பாவிகளிடம் அவர்களின்  பாவசங்கீர்த்தனங்களை மணிக்கணக்கில் கேட்பதில் அவர் என்றுமே களைப்புற்றதேயில்லை. அவர்களை கருணையுடனும் அன்புடனும் கையாண்டார். அன்புடன் பேசியே அவர்களுக்கு ஒப்புரவு அருட்சாதனம் வழங்கினார். மிகக் கடினமான சூழ்நிலைகளைக் கூட கருணையாலும் இரக்கத்தாலும் தீர்க்கப் முடியும் என்பதில் அவர் உறுதியாக இருந்தார். கருணையும் இறை இரக்கமுமே பாவிகளை மீண்டும் கடவுளிடம் கொண்டு செல்லும் மார்க்கம் என்பதனை அறிந்திருந்தார். அது மட்டுமே அவர்களை பாவசங்கீர்த்தனம் என்ற பெயரில் அவர்களை முழந்தாள்படியிட வைத்திருந்தது. ஆனால் அவர் அவர்களுக்காக காத்திருக்கவில்லை; அநேக முறை கடவுளின் அன்பை அவர் சமாதானத் தேவைக்காக பாவிகளைத் தேட தாமே முன்வந்தார். நோயாளிகளுக்கு அவர்கள் கேட்காமலேயே ஆன்மீக உதவிகளை செய்து கொடுத்தார். ஏழை எளியோர் மீது ஏஞ்செலோ கொண்டிருந்த அன்பானது, அவர்களுக்கு துன்பங்கள் வரும்போதும், அவர்களுக்கு அநீதிகள் இழைக்கப்படும் போதும் பலமுறை, "சேன்செவேரினோ குடும்பங்களை" (Sanseverino families) உதவிக்கு அழைக்க தூண்டியிருக்கின்றன. பல நூற்றாண்டுகளாக "அக்ரியின்" (Acri) ஒரு பெரிய பிரமுகர்கள், மக்களின் நியாயமான கூற்றுக்களை செவி கொடுத்து வந்திருக்கின்றனர். அவர்களின் அடிப்படை உரிமைகளை மதிக்க வேண்டும் என்பதிலும் கருத்தை இருந்திருக்கின்றனர்.

("சேன்செவேரினோ குடும்பங்கள்" (Sanseverino families) என்பது, நேப்பில்ஸ் (Naples) இராச்சியத்திலும், இத்தாலி முழுவதிலும் மிகவும் புகழ்பெற்ற, வரலாற்று சிறப்புமிக்க மற்றும் சக்தி வாய்ந்த குடும்பங்களில் ஒன்றாகும்).

எங்கெல்லாம் அவர் இறை இரக்கத்தை பிரசங்கிக்கிறாரோ, எங்கெல்லாம் பாவிகளுக்கு ஒப்புரவு அருட்சாதனம் வழங்குகிறாரோ, அங்கெல்லாம் ஓரிரு அறிகுறிகளையாவது விட்டுச் செல்லாமல் இருந்ததில்லை. கல்வாரி காட்சிகளைக் கொண்ட ஒரு படமும், துன்புற்று, தம்மைத் தாமே ஈந்த கடவுளின் அன்பின் உறுதியான நினைவூட்டல்களாக, வியாகுல அன்னை மரியாளின் திருச்சொரூபமும் விட்டுச் செல்லும் வழக்கம் கொண்டிருந்தார்.

ஏஞ்செலோ கபுச்சின் சபையின் மாகான தலைமை (Provincial Minister) அதிகார பதவிகளிலும் இருந்திருக்கிறார். அவர் துறவியர்களை ஒரு உண்மையான கபுச்சின் வாழ்க்கையை நினைவுபடுத்த தவறவில்லை. அவர், அவர்களுக்கு “கடின வாழ்க்கை” (Austerity), “எளிமை” (Simplicity), “அரசியலமைப்பு மற்றும் விதிகளை சரியானபடி அனுசரித்தல்” (The exact observance of the Constitutions and the Rule), “குற்றமற்ற வாழ்க்கை” (Innocence of life) மற்றும் “எல்லையற்ற தொண்டு” (Boundless charity) ஆகிய ஐந்து விலைமதிப்பற்ற இரத்தினங்களை கொடுப்பதை வழக்கமாய் கொண்டிருந்தார்.

அக்ரி மற்றும் முழு கலாபிரியா மக்களின் நல்வாழ்வு மற்றும் சமாதானத்திற்காக தமது வாழ்வையை அர்ப்பணித்திருந்த ஏஞ்செலோ, தமது எழுபது வயதில், அக்ரி நகரிலுள்ள கபுச்சின் துறவு மடத்தில் மரித்தார்.
† Saint of the Day †
(October 30)

✠ St. Angelo of Acri ✠

Apostle of South Italy:

Born: October 19, 1669
Acri, Calabria, Southern Italy

Died: October 30, 1739
Acri, Calabria, Southern Italy

Venerated in: Roman Catholic Church

Beatified: December 18, 1825
Pope Leo XII

Canonized: October 15, 2017
Pope Francis

Patronage: Acri, and Missionaries

St. Angelo of Acri, known by all as the Apostle of Calabria for his tireless preaching during the thirty-eight years of his priestly life. In imitation of the Good Shepherd, he did not hesitate to go out in search of the sinner, the poor, and the least, holding back nothing of himself but rather returning to the Lord what he had received that the message of Life might be brought to all.

Biographical selection:
Angelo, who would be the great apostle of South Italy, was born in 1669 in Acri, Calabria. He was the son of a manual worker. He entered the Capuchins and was a missionary for 40 years until his death in 1739.

His sermons attracted thousands and the number of conversions he worked was impressive. He received a special grace to combat the evil of the errors of the philosophy of that century. His first sermon was supposed to be preached in Lent, and Angelo spent much time studying and preparing for it, planning its delivery in the florid oratorical style fashionable at the time. When he mounted the pulpit to give it, he forgot the text completely. It was a complete failure.

He returned to his home monastery and prayed to God to help him know what was expected of him. Then he heard a voice that told him: “I am He Who is. Do not be afraid. I will give you the gift of words, and your works will not be futile. From now on, preach in a simple and colloquial style so that all can understand you.” Angelo burned the sermons he had prepared and made new ones following this directive.

His life was filled with fruitful works and miracles. He used to cross rivers and creeks without getting his feet wet; other times he would travel long distances in a miraculously short time to hear confessions of sick persons or to preach in faraway villages. He became blind six months before his death but would recover his sight to celebrate Mass and pray the Divine Office.

On October 30, 1739, at age 70, he delivered his soul to the Creator, Whom he had served tirelessly.

Comments:
The life of St. Angelo of Acri offers us the profile of the Capuchin missionary that became famous because that Order gave the Church many preachers like him. The Capuchin Order was one of the more avant-garde and efficient armies of the Counter-Revolution in the Church during the 18th century.

To understand the vocation of St. Angelo, it seems useful to summarize the qualities and the defects of the 18th century and see how the Capuchin Order had a special mission in those times.

At the end of the 18th century, in 1789, the French Revolution took place in France and it went on until the defeat of Napoleon in 1815. There were, therefore, around 25 years of continuous revolution, one of the more important revolutions in History. But even before it erupted, the germs of that revolution had been present for a long time. Those germs came from Protestantism in the 16th century, developed for the next two centuries, exploding at the end of the 18th. Those germs contaminated principally the upper social classes.

On one hand, the 18th century reached a high point in some aspects of Christian Civilization. It was the century of elegance, distinction, good taste, and fine manners; it boasted great writers and artists; it attained a splendorous court life and perfected the art of conversation. To achieve all this was, in many ways, a work of asceticism, since it demanded an extraordinary prior preparation, discipline, and self-mastery; it was also a work of charity because one’s neighbour was treated with the highest consideration.

On the other hand, in the 18th century, the chasm widened between the more distinguished society and the Church. So, those good qualities born from Catholic Civilization were often corrupted by the impiety of the century. From this came the paradoxes: the century of delicacy was par excellence the century of the hardness of heart and egotism. The century of elegance was also the century of softness and sentimentalism. It was the century of distinction of manners, but also the century of sensuality. In that century both the good qualities and the vices of Europe reached an apogee. Naturally, the vices surpassed the qualities, and we had the French Revolution.

The revolutionary tendencies promoted by the Secret Forces targeted principally the highest classes in society, that is, the clergy, the nobility, and the high bourgeoisie. It is painful to say, but the clergy was so influenced by the Enlightenment that it was not rare to find openly atheist and libertine priests and Bishops. They were persons who received ecclesiastic benefices and titles because they were prestigious and profitable. After receiving them, they continued to lead worldly and debauched lives. The convents were a little more moral than the monasteries, but even some of the former were also liberal. Some of these convents became a kind of hotel for noblewomen who did not marry. Noble families with numerous children often did not have the financial means to sustain them all, so they pressured the single daughters to enter the convents. Thus, many convents were filled with persons without religious vocations who received all kinds of worldly visits.

The nobility still maintained its old courage. They were very good fighters. They were brilliant gentlemen, but profoundly alienated from the practice of religion and given to the sensuality and intrigues of court. The ladies followed the same path.

The high and rich bourgeoisie tried to imitate the nobility. They were always looking for marriages with impoverished nobles to raise their social rank. The bourgeoisie, who had been very moral in the 17th century, also became contaminated by the defects of the nobility in the 18th century.

But the little people, the simple manual workers, and peasants were still preserved in their morals. Their milieu was not penetrated by the Enlightenment of the 18th century. At that time, there were not great cities we have today. Paris, if I am not mistaken, had around 300,000 inhabitants, and was perhaps the largest city in the West. Rome was smaller, and Naples, the capital of the Kingdom of the Two Sicilies, was smaller yet. Blessed Angelo of Acri carried out his apostolate in Calabria and Sicily, parts of the Kingdom of Two Sicilies. At the time, the majority of the population lived either in small cities or in the countryside and was very preserved.

For the cause of the Counter-Revolution, it was very important to work with the little people to keep them practising the Faith and far away from the errors of the elites. To that effect, God made use of an old order in the 18th century, the Order of the Capuchin Friars.

The Capuchins were the most severe branch of the Franciscan family. Its preachers were missionaries who worked with the village folk. Therefore, they spoke simply and clearly. They used to tell the whole truth to the people, without cloaking their words in the ornate language. They were called to represent the virtues that the century denied: simplicity, honesty, frankness, the courage to stand against the fashions, and public opinion. In effect, the Capuchin Order shone in the 18th century for these qualities and helped to prevent the lower classes from adhering to the Revolution.

You heard that St. Angelo, who was himself a man of the people, tried to make a grand, complicated sermon. But Divine Providence gave him a lesson. His well-prepared sermon was a complete failure. After he prayed, God told him what he should do. God did not want elaborate, flowery sermons, but simple sermons saying exactly what should be said. He told Blessed Angelo to address the people and say things that they could follow, that is to say, based more on piety than on complex reasoning. God made the apostolate of Blessed Angelo fruitful and many conversions were worked through him. These conversions most probably came more from the example of his sanctity than from his arguments.

God also gave him the gift of miracles, and he worked extraordinary ones. The world considers it a great miracle – and rightfully so – that the Jews crossed the Red Sea without wetting their feet. Here you see that Blessed Angelo crossed rivers, torrents, and creeks many times without getting wet. You can imagine the impression this made on the little people in the villages and towns. They did not understand his apologetic arguments very well, but seeing him cross the river without getting wet, they would applaud and cry out in admiration: “God is among us!” Then, numerous conversions would take place.

Other times he would travel enormous distances on difficult roads in a short period of time. That is, he was transported in some miraculous way, probably by the action of Angels. The little people knew that no man on foot or horseback could make that trip in such a time. Again, they were strongly impressed and the word of his sanctity spread. His prestige grew and conversions followed.

You can imagine the man wearing his simple Capuchin habit, representing his lack of any earthly pretension; on his belt around the waist was the rosary with a small skull to indicate that the Capuchin must always have death before his eyes; on his feet the simply worn sandals. His life followed the severe Capuchin rule that requires fasting and mortifications. He had a long beard and tonsure, both considered ridiculous by the sophisticated men of the 18th century.

This unpretentious friar enters a town to preach a mission. The people gather in a small church on top of a mountain in a village of Calabria or Sicily. The Mass is being said; there is beautiful singing. Then, at the Gospel, Friar Angelo goes to the pulpit. Before reaching the top of the stairs, he kneels and prays to God to illuminate him. Then he stands up without any airs and starts to speak.

His words, the selection says, had the strong, virile language that characterized the Capuchins, that is, they did not preach about the good, but attacked the evil: the evil that was infiltrating the customs of the little people. At times, they would stop in the middle of a sermon and say: “You there, my lady, you should not wear that kind of dress showing so much of your neck. Don’t you realize that this is an offence to God?” Or, by a special grace of God, they would read the thoughts of a person in the audience and say: “You, Mr X, you are thinking this and this, but you are wrong because it is against the will of God. You cannot hide anything from God, Who is showing me your thoughts even now.”

After having attacked the defects of the listeners, then a second part of the sermon would follow where they would describe the mercy of God, how He is good and has compassion for us. “Do not despair but confide in Him through the intercession of Our Lady.” This was the great tradition of the Capuchin sermons.

You can imagine the impact of this kind of sermon over the vivacious southern Italian people: Great contrition, tears, confessions, penances, and absolutions. After three or four days of a Capuchin preacher giving a mission in a village, the parish was regenerated. For months or even years, those words would be remembered. The people would also recount the miracles of St. Angelo. One man who was feeble since he was a boy was blessed by Friar Angelo and was cured. Today he is a strong man capable of heavy work. Another man had been a bad husband for a long time, but Blessed Angelo spoke to him and from then on, he became an exemplary husband and father. The presence of the Capuchin remained in the locale for a long time, like a perfume, often for a whole generation.

The result was that among the people in southern Italy, a valorous counter-revolutionary movement was born, the Sanfedistas. The name comes from the title, “Defenders of the Santa Fede (Holy Faith).” This movement fought against the Revolution until recently. It was in Italy what the movement of the Vendée, the Vendeans, was in France. It represents the true right in Italy. The true right is not Fascism; this is the false right. The true right is represented by the Sanfedistas. The sermons and the sanctity of men like Blessed Angelo of Acri were what produced that movement, like the apostolate of St. Louis Grignion de Monfort produced the Counter-Revolution of the Vendée.

We should take the example of St. Angelo of Acri and the great Capuchin tradition as models so that we will have the courage to face and fight the revolutionary ideas and fashions of our century. We should ask Blessed Angelo to help us to say what should be said for the glory of God and the exaltation of Holy Mother Church, and to be the opposite of the Revolution in our manners and way of living.
~ Late Prof. Plinio Corrêa de Oliveira

No comments:

Post a Comment