புனிதர்களை பெயர் வரிசையில் தேட

Translate

30 October 2020

✠ புனிதர் அல்ஃபோன்ஸஸ் ரொட்ரிகஸ் ✠(St. Alphonsus Rodriguez)அக்டோபர் 30

† இன்றைய புனிதர் †
(அக்டோபர் 30)

✠ புனிதர் அல்ஃபோன்ஸஸ் ரொட்ரிகஸ் ✠
(St. Alphonsus Rodriguez)

ஸ்பேனிஷ் இயேசுசபை பொதுநிலை சகோதரர்:
(Spanish Jesuit Lay Brother)
பிறப்பு: ஜூலை 25, 1532
செகோவியா, ஸ்பெயின்
(Segovia, Spain)

இறப்பு: அக்டோபர் 31, 1617 (வயது 85)
பல்மா, மஜோர்கா, ஸ்பெயின்
(Palma, Majorca, Spain)

ஏற்கும் சமயம்:
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)

முக்திபேறு பட்டம்: கி.பி. 1825
திருத்தந்தை பன்னிரெண்டாம் லியோ
(Pope Leo XII)

புனிதர் பட்டம்: செப்டம்பர் 1888
திருத்தந்தை பதின்மூன்றாம் லியோ
(Pope Leo XIII)

முக்கிய திருத்தலம்:
இயேசுசபை கல்லூரி, பல்மா, மஜோர்கா, ஸ்பெயின்
(Jesuit College, Palma, Majorca, Spain)

நினைவுத் திருநாள்: அக்டோபர் 30

புனிதர் அல்ஃபோன்ஸஸ் ரொட்ரிகஸ், ஒரு “ஸ்பேனிஷ் இயேசுசபை பொதுநிலை சகோதரர்” (Spanish Jesuit Lay Brother) ஆவார். இவர், ஸ்பெயின் நாட்டின் “செகொவியா” (Segovia) பிராந்தியத்தைச் சேர்ந்தவர்.

அல்ஃபோன்ஸஸ், ஒரு கம்பளி வியாபாரியின் மகன் ஆவார். ஒருமுறை, இயேசு சபையின் இணை நிறுவனரும், போதகர்களில் ஒருவரான புனிதர் “பீட்டர் ஃபாபெர்” (St. Peter Faber) அந்நகரத்துக்கு போதனை செய்ய வந்திருந்தபோது, அல்ஃபோன்ஸஸின் குடும்பத்தினர் அவருக்கு விருந்தோம்பல் செய்தனர். மனம் மகிழ்ந்த “பீட்டர் ஃபாபெர்”, அல்ஃபோன்ஸஸை புதுநன்மை வாங்க தயாரித்தார். அல்ஃபோன்ஸஸுக்கு பதினான்கு வயதாகையில், அவரது தந்தை மரித்துப் போனதால், இவர் தமது குடும்பத்தினருக்கு உதவுவதற்காக கல்வியை விட்டுவிட்டு, தந்தையின் கம்பளி வியாபாரத்தை கவனிக்கப் போனார்.

தமது இருபத்தாறு வயதினிலே, அவர் தமது சொந்த ஊரைச் சேர்ந்த “மரியா ஸுவாரெஸ்” (María Suarez) என்ற பெண்ணை திருமணம் புரிந்தார். அவர்களுக்கு மூன்று குழந்தைகள் பிறந்தனர். இவரது முப்பத்தொரு வயதினிலேயே மனைவியும் இரண்டு குழந்தைகளும் மரித்துப் போயினர். அதன்பிறகு பெரும் அவமானமுற்ற இவர், தம்மைச் சுற்றியிருந்த உலகத்திலிருந்து விலகி, தனிமையில் செப வாழ்வு வாழ்ந்தார். அவரது மூன்றாவது குழந்தையும் மரித்தபோது, முற்றிலும் மனம் சோர்ந்துபோன அல்ஃபோன்ஸஸின் மனம், ஆன்மீக துறவற சபைகளின்பால் திரும்பியது.

ஆரம்பத்தில், தமது பதினான்கு வயதில் தமக்கு புதுநன்மை வாங்க தயாரித்து உதவிய இயேசுசபை துறவி “பீட்டர் ஃபாபெரை” தொடர்பு கொண்டார். அவர்மூலம் இயேசுசபையில் சேர முயற்சித்தார். ஆனால், அவரது முழுமையற்ற கல்வியினால் அவரால் இயேசுசபையில் சேர்ந்து குருத்துவம் பெற இயலாமல் போனது. தமது 39 வயதில், “பார்சிலோனா” (Barcelona) கல்லூரியில் சேர்ந்து இடைவிட்டுப் போன கல்வியை பூர்த்தி செய்ய முயற்சித்தார். ஆனால் அதிலும் ஜெயிக்க இயலவில்லை. அவரது தவ வாழ்க்கை, அவரது உடல் ஆரோக்கியத்தை பாதித்தது.

கணிசமான கால் தாமதத்தின் பிறகு, கி.பி. 1571ம் ஆண்டு, ஜனவரி மாதம், 31ம் நாள், தமது நாற்பது வயதில், இவர் இயேசுசபை திருத்தொண்டராக சேர்த்துக்கொள்ளப்பட்டார். அக்காலத்தில், ஸ்பெயின் நாட்டில் “தனித்துவ புகுநிலை பயிற்சி மடங்கள்” (Distinct Novitiates) இல்லாத காரணத்தால், “வலென்சியா” அல்லது “காண்டியா” (Valencia or Gandia) எனும் இடங்களில் திருத்தொண்டராக பயிற்சி மேற்கொண்ட அல்ஃபோன்ஸஸ், பின்னர் “மஜோர்கா” (Majorca) என்னுமிடத்தில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட கல்லூரியில் பணி செய்ய அனுப்பப்பட்டார். அங்கே சுமார் நாற்பத்தாறு வருடங்கள் சுமை துாக்குபவராகவும், வாயில் காப்பவராகவும் தாழ்ச்சியுடன் பணி புரிந்தார்.

கல்லூரியின் உறுப்பினர்கள் மட்டுமல்லாது, அங்கே வருகை தருபவர்களின் சுமைகளையும் தூக்கி உதவுவது அவரது பணியாக இருந்தது. வாயில் காப்போனாக, கல்லூரிக்கு வருகை தருபவர்களை வரவேற்று, அவர்கள் சந்திக்க வந்திருக்கும் தந்தையர் மற்றும் மாணவர்களிடம் அழைத்துச் செல்வது போன்றவை அவரது பணியாக இருந்தது. மற்றும், செய்திகளை ஓரிடத்திலிருந்து மற்றோரிடத்திற்கு கொண்டு செல்வது, நோயாளிகளை கவனித்து சேவை செய்வது போன்ற பணிகளும் அவருடைய பணிகளாம். ஒவ்வொருமுறையும் வாயில் அழைப்பு மணி அடிக்கும்போதெல்லாம், ஆண்டவரே வெளியே இவருக்காக காத்திருப்பதாக இவர் எண்ணிக்கொள்வார் என்று இவர் கூறுவார்.

புகழ் பெற்ற இயேசுசபை குருக்களில் ஒருவரான “புனிதர் பீட்டர் கிளாவர்” (St. Peter Claver) இவருடன் மஜார்கா கல்லூரியில் தங்கியிருந்தார். அவர்கூட தாம் தென் அமெரிக்க நாடுகளில் செய்யவிருக்கும் மறைப்பணிகளுக்காக அல்ஃபோன்ஸஸின் அறிவுரைகளை பெற்றதாக கூறுவர்.

புனிதர் அல்ஃபோன்ஸஸ் ரொட்ரிகஸ், பணிக்காலத்தில் தாமாக ஏற்றுக்கொண்ட பணிச்சுமைகளாலும், அவமானங்களாலும், அவரது உடல் தீராத பாதிப்புகளுக்குள்ளானது. தீராத மன உளைச்சல்களுக்கும் ஆளானார்.

அருட்சகோதரர் அல்ஃபோன்ஸஸ், தமது இறுதி நாட்களில் மிகவும் வலுவற்றுப் போனார். அவரது ஞாபகச் சக்தி தவறிப்போனது. அவர் மிகவும் விரும்பிய செபங்களைக் கூட மறந்துபோன அல்ஃபோன்ஸஸ், கி.பி. 1617ம் ஆண்டு, அக்டோபர் மாதம், 31ம் நாள் மரித்துப் போனார்.
† Saint of the Day †
(October 30)

✠ St. Alphonsus Rodriguez ✠

Confessor:

Born: July 25, 1532
Segovia, Spain

Died: October 31, 1617 (Aged 85)
Palma, Majorca, Spain

Venerated in:
Catholic Church
(Society of Jesus)

Beatified: 1825 AD
Pope Leo XII

Canonized: September 1888
Pope Leo XIII

Major shrine:
Jesuit College, Palma, Majorca, Spain

Feast: October 30

St. Alfonso Rodriguez was born at Segovia, Spain in 1531, son of a pious wool merchant. He received the good influence of the first Jesuits to come to Spain, in particular Blessed Peter Faber, who lived for a time with his family, and later that of St. Francisco de Villanueva. After his father’s death, Alfonso took over the family business. However, because of his lack of aptitude, the business entered into bankruptcy. At around the same time, he lost his wife and three children, as well as his mother.

“In failure,” he said afterwards, “I saw the majesty of God. I recognized the wickedness of my life. I had not been concerned about God, and in that state, I was on the verge of my eternal perdition. I saw the sublime grandeur of God from the dust of my misery. I imagined myself as a second David, and the Miserere was the expression of my state of the soul.”

At age 40, he entered the Society of Jesus as a lay brother, and after a six-month novitiate, he was sent to the Jesuit College of Mount Zion on the Island of Palma de Majorca to be the doorkeeper at the adjoining monastery. He was the doorkeeper there for 45 years. His saintly behaviour led many to hold him in high regard and numerous people began to ask for his spiritual advice. St. Alfonso had a special gift for spiritual conversation. His superior affirmed that no spiritual treatise produced as much spiritual good as contact with that lay brother. He always responded to every request in his large correspondence. His fame spread and he became known as the Doctor of Majorca.

By bearing the enormous and multiple spiritual difficulties he experienced in his own life, he learned the spiritual science. Thanks to his good response to grace, he said, “insofar as the consciousness of my own debility became keen in me, I felt the grandeur of the Lord.”

For three days before his death, after his last Communion, St. Alfonso remained in ecstasy. “What happiness!” exclaimed an eyewitness. It was just a fragment of his internal joy. Witnesses decided to call for a painter to draw a faithful picture of him. He died on October 31, 1617.

Comments:
This is a magnificent life that has three very important points:
First, in an extremely humble position, St. Alfonso did enormous good for the island of Majorca, Spain, and the entire world. He was the doorkeeper of a monastery on the island of Palma de Majorca. In that time, communication from the island to the continent was difficult. It was much more isolated than it is today. There he spent 45 years of his existence; nothing less than 45 years! He had the most humble position possible. Notwithstanding, the exquisite perfume of Our Lord Jesus Christ exhaling from his soul spread out over the island of Palma de Majorca, Spain, and the entire world.

The figure of that old doorkeeper, amiable, hospitable, always accessible to everyone, available for every consultation, made the poor chair of this doorkeeper a venerable throne of wisdom. Everyone would go there to see him, to listen to him. This is the magnificence appropriate to even a very humble life when such a life is dedicated to the service of Our Lord and the Holy Catholic Church.

Why? Because both sanctity and wisdom have an incomparable power of irradiation. A saint does not need to be in a strategic place. Wherever he is, he attracts admiration and affection. It is enough for a man to have a sanctity that is “victa et not picta” – lived and not faked.

Second, the way St. Alfonso was called to contemplate and serve God Our Lord is magnificent. It is a way that speaks deeply to my soul. He considered the grandeur of God, infinitely great, infinitely majestic, infinitely wise, transcendent, excellent, sublime, radiant, absolute, and mysterious. When we consider everything in this world that we can see and analyze, we realize that all is insufficient and futile unless it is a reflection of God. If it were not for God, everything is empty, faded, and tasteless.

Since we have faith, we know that everything in creation, beyond its material being, is a symbol, a veil that permits us to see the Absolute Being - Perfect, Eternal, Most Wise, and Sublime - reflected in the visible reality. Only in considering that superior reality can our weary eyes marvel and rest. Finally, we found something that is worthy to see, contemplate and love, which rouses our complete dedication. To the measure that we consider that He is not like us, that He is perfect and we are just dust, mere creatures conceived in original sin, then our existence acquires meaning.

We see that St. Alfonso Rodriguez made this consideration and insofar as he ascended in his spiritual life, he repented of his sins and increasingly desired to know more about the grandeur of God. Today many persons are afraid to think about the grandeur of God. It is not my case, I feel a great joy to contemplate such grandeur, and I imagine that this was the source of the overwhelming happiness that St. Alfonso felt in his last three days. He was experiencing a pre-taste of his coming encounter with Our Lord Jesus Christ.

Third, it is interesting to note that St. Alfonso had a special gift for conversation. We know well that many saints are called to be silent and in this path they sanctify themselves. But it is also true that other saints are called to speak and talk in different types of conversations.

What is the gift or the charisma of conversation? It is a communicative form of the love of God, the Holy Church, and the Catholic cause that overflows from the heart of the one who speaks. A conversation can be a grace, and such a conversation can be the fruit of a charisma that comes from Our Lady to make a relationship a means for persons to sanctify themselves.

Let us ask St. Alfonso Rodriguez to help us follow his example of humility, his sense of the grandeur of God, and his fruitful conversations.
~ Late Prof. Plinio Corrêa de Oliveira

No comments:

Post a Comment