நாகசாகி_நகர்ப்_புனித_மதலேன் (1610-1634)
அக்டோபர் 15
இவர் (#St_Magdelene_Of_Nagasaki) ஜப்பானில் உள்ள நாகசாகியில் பிறந்தவர். இவரது பெற்றோர் இவருக்கு ஒன்பது வயது நடக்கும்பொழுது, 1620 ஆம் ஆண்டு திருமறைக்காகக் கொல்லப்பட்டனர். இதனால் இவர் சிறுவயதிலேயே பெற்றோரை இழந்து அனாதையானார்.
இதன் பிறகு இவர் புனித அகுஸ்தின் துறவற சபையில் சேர்ந்து துறவியானார். அங்கு இவர் ஜப்பானிய மக்கள் நடுவில், கடவுளின் வார்த்தையை எடுத்துரைத்து வந்த அயல்நாட்டு மறைப்பணியாளர்களான பிரான்சிஸ், வின்சென்ட், மார்ட்டின், மெல்கியோர் ஆகியோருக்கு மொழிபெயர்ப்பாளராக இருந்து பெரும் உதவி செய்தார்.
இந்நிலையில் கிறிஸ்துவைப் பற்றிய நற்செய்தியை மேலே சொல்லப்பட்ட நான்கு மறைப்பணியாளும் மக்களுக்கு அறிவித்து வருகின்ற செய்தி ஜப்பானிய அரசுக்குத் தெரிய வர, அரசு அந்த நான்கு மறைப்பணியாளர்களையும் பிடித்துக் கொலை செய்தது.
இது நடந்து ஒருசில நாள்களிலேயே மதலேன், மறைப்பணியாளர்களுக்கு உதவிய செய்தி ஜப்பானிய அரசாங்கத்திற்குத் தெரிய வந்தது. இதனால் அரசாங்கம் இவரைப் பலவாறாகச் சித்திரவதை செய்து, இறுதியில் எரித்துக் கொன்றது.
இவரோ சாகும் தருவாயில்கூட கிறிஸ்துவின் மீது கொண்ட நம்பிக்கையில் மிக உறுதியாக இருந்தார்.
No comments:
Post a Comment