இன்றைய புனிதர்:
(15-10-2020)
அவிலாவின் புனித தெரேசா
(கன்னியர், மறைவல்லுநர்)
St. TERESA OF AVILA (St. TERESA OF JESUS)
நினைவுத் திருவிழா : அக்டோபர் 15
பிறப்பு : 28 மார்ச், 1515 கோடரெண்டுரா, அவிலா, எசுப்பானியா
இறப்பு: 4 அக்டோபர், 1582(அகவை 67) அல்பாதே தொர்மஸ்,எசுப்பானியா
அருளாளர் பட்டம்: 24 ஏப்ரல்,1614, ரோம்(திருத்தந்தை ஐந்தாம் பவுல்)
புனிதர் பட்டம்: 12 மார்ச் ,1622, ரோம்(திருத்தந்தை பதினைந்தாம் கிரகோரி)
முக்கிய திருத்தலங்கள்: எசுப்பானியா நாட்டில் உள்ள மங்கள வார்த்தை மடம்.
பாதுகாவல் : எசுப்பானியா, உடல் நோய், தலைவலி, துறவிகள்
அவிலாவின் புனித தெரேசா, அல்லது Saint Teresa of Jesus, உரோமன் கத்தோலிக்க திருச்சபையின் மறுமலர்ச்சியில் பெரும் பங்கு வகித்தவர். எசுப்பானியா நாட்டினரான இவர் கார்மேல் சபைத்துறவி ஆவார். இவர் ஒரு மெய்யியலாளரும், இறையியலாளரும் ஆவார். சிலுவையின் புனித யோவானோடு இணைந்து பெண்களுக்கான கார்மேல் சபையை உண்டாக்கினார். இவரின் ஆழ் நிலைத் தியானம் மற்றும் கத்தோலிக்க திருச்சபையின் மறுமலர்ச்சி பற்றியும் பல நூல்கள் எழுதி உள்ளார். இவர் கத்தோலிக்க திருச்சபையின் மறைவல்லுனர்களுள் ஒருவர். இப்பட்டத்தைப் பெற்ற முதல் பெண் எனும் பெருமை இவரை சேரும்.
தெரசா, அல்போன்சோ சான்சேஸ் டீ சேப்பேடா ( Alfonso Sanchez de Cepeda) மற்றும் பெயாட்ரிஸ் டீ அகுமதா (Beatrix de Ahumada) ஆகியோரின் மகளாக பிறந்தார்.
சான் ஜூவான் (San Juan) என்ற ஆலயத்தில் ஞானஸ்நானத்தையும், புதுநன்மையையும்பெற்றார். இவரின் உடன் பிறந்தவர்கள் 11 பேர்கள். இவர்களில் தெரசாவே பெற்றோரின் செல்லப் பிள்ளையாக வளர்ந்தார். இவர் சிறுபிள்ளையாக இருந்தபோதே, திருக்காட்சியின் வழியாக, தான் துன்பப்பட்டுதான் இறப்பேன் என்பதை அறிந்து, அதை மற்றவர்களிடமும்கூறினார்.
இவர் தனது 7ம் வயதிலேயே, தன் பெற்றோருக்குத் தெரியாமல் வீட்டைவிட்டு வெளியேறி கடவுளுக்காக வாழ வேண்டுமென்று முடிவுசெய்தார். பின்னர் அவர் விரும்பியவாறே 1527ல் அவரின் 12ம் வயதில் விட்டு வெளியேறினார். இதையறிந்த அவரின் தந்தை மீண்டும் தெரசாவை கண்டுபிடித்து, இல்லத்திற்கு அழைத்து வந்தார். தெரசாவின் செயலால் கோபம் கொண்ட தந்தை, அவரை வன்மையாக கண்டித்தார். இதனால் அவர் மனமுடைந்து, மிகுந்த வேதனையை அனுபவித்தார். இவைகளை கண்ட அவரின் தந்தை 1531ல் தெரசாவை, அவிலாவில் இருந்த அகுஸ்தீன் சபையில் கொண்டு வந்து சேர்த்தார். பின்னர் 1535ம் ஆண்டில் துறவியாக முடிவு செய்து கார்மேல் துறவற மடத்திற்கு சென்றார்.
அப்போது தெரசா நோய்வாய்பட்டு 4 நாட்கள் சுயநினைவை இழந்து, கோமாவில் இருந்தார். அதன்பிறகு பக்கவாத நோயால் தாக்கப்பட்டார். அச்சமயத்தில் 1539ம் ஆண்டு, இயேசு சிலுவையில் துன்பப்படுவதை திருக்காட்சியாகக் கண்டார். இவைகளை உடனிருந்த அருட்சகோதரிகள் நம்பிக்கை கொள்ளாமல், அவருக்கு எதிராக செயல்பட்டனர்.
அவரை மிகவும் வேதனைக்குள்ளாக்கினர்.
1560ல் தனது 45ம் வயதில் மீண்டும் தான் மிக துன்பப்பட்டு உயிர்விடப்போவதாக மீண்டும் திருக்காட்சியை கண்டார். இதனால் 1562ல் தெரசா அம்மடத்தை விட்டு வெளியேறி, தனியாக மற்றொரு மடத்தில் வாழ அனுமதிக்கப்பட்டார். இவர் அம்மடத்தில் மிக கடுமையான ஒழுங்குகளோடு தன் வாழ்வை வாழ்ந்தார். செபம் ஒன்றையே தன் மூச்சாகக் கொண்டார். இவரின் செப வாழ்வால் 1568ல் மற்றொரு துறவற மடத்தையும் நிறுவினார். பின்னர் 1577ம் ஆண்டில் 17 பெண்கள் துறவற இல்லமும், 15 ஆண்டுகளுக்கான துறவற இல்லமும் காணப்பட்டது. இவ்வில்லங்கள் அனைத்துமே மௌனத்தையும் கடுமையான எளிமையையும், காலணிகள் அணியாமலும், மிக எளிமையான உணவையும் உண்டு, செபவாழ்விற்கு முக்கியத்துவம் கொடுத்தும் வாழ்ந்தனர்.
தெரசா பல முறை திருக்காட்சியைக் கண்டார். இவைகளை 400 க்கும் மேற்பட்ட கடிதங்களில் எழுதினார். இவர் ஸ்பெயின் நாட்டு மக்களால் திருக்காட்சியின் மறைவல்லுநர் என்றழைக்கப்பட்டார். தனது திருக்காட்சிகளின் வழியாக திருச்சபைக்கு பலவிதங்களில் உதவி செய்த தெரசா தனது 65ம் வயதில் உடல்நிலை குன்றி இறைவனடி சேர்ந்தார்.
செபம் :
அனைத்தையும் கடந்து, அருஞ்செயல் ஆற்றும் எம் இறைவா! புனித அவிலாவின் தெரசாவை எம் திருச்சபைக்கு நீர் கொடுமையாக தந்தமைக்காக நன்றி கூறுகின்றோம். அவரின் ஆன்மீக போதனைகளின்படி நாங்கள் வாழ்ந்து, அவரின் உதவியால், உம்மீது பற்றுக்கொண்டு வாழ வரம் அருள, இறைவா உம்மை மன்றாடுகின்றோம் ~ ஆமென்
---JDH---தெய்வீக குணமளிக்கும் இயேசு /திண்டுக்கல்.
Saint of the Day: (15-10-2020)
St. Teresa of Avila
She was born at Avila in Spain on March 28, 1515 at Avila, Spain and her original name was Teresa deCepeda y Ahumada. Her father was Alonso Sanchez de Cepeda and mother Beatriz. She ran away from home with her brother Rodrigo to get martyrdom among the Moors. But she and her brother were stopped by their uncle, when they were on their way. Again she left her house at the age of 15 years on November 2, 1535, to enter the Carmelite Convent of the Incarnation at Avila. She was a woman of compassion, prayer and discipline. She spent most of her life in the reformation of herself and the Carmelites. She always wrote and fought for reform in the monasteries. She founded more than six monasteries. She died on October 4, 1582 at Salamanca in Spain. She was beatified by Pope Paul-V on April 24, 1614 and canonized by Pope Gregory-XV on March 12, 1622. In 1970 the Church gave her the title of Doctor of the Church.
---JDH---Jesus the Divine Healer---
No comments:
Post a Comment