புனிதர்களை பெயர் வரிசையில் தேட

Translate

19 October 2020

இன்றைய புனிதர் †(அக்டோபர் 19)✠ புனிதர் ஐசாக் ஜோகுஸ் ✠(St. Isaac Jogues)

† இன்றைய புனிதர் †
(அக்டோபர் 19)

✠ புனிதர் ஐசாக் ஜோகுஸ் ✠
(St. Isaac Jogues)

குரு, மறைப்பணியாளர், மறைசாட்சி:
(Priest, Missionary and Martyr)
பிறப்பு: ஜனவரி 10, 1607
ஓர்லியன்ஸ், ஒர்லியனைஸ், ஃபிரான்ஸ் அரசு
(Orléans, Orléanais, Kingdom of France)

இறப்பு: அக்டோபர் 18, 1646 (வயது 39)
ஒஸ்செர்னேனோன், கனடா, நியூ ஃபிரான்ஸ்
(Ossernenon, Canada, New France)

ஏற்கும் சமயம்:
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)

முக்திபேறு பட்டம்: ஜூன் 21, 1925
திருத்தந்தை பதினோராம் பயஸ்
(Pope Pius XI)

புனிதர் பட்டம்: ஜூன் 29, 1930
திருத்தந்தை பதினோராம் பயஸ்
(Pope Pius XI)

முக்கிய திருத்தலங்கள்:
வட அமெரிக்க மறைசாட்சியரின் தேசிய திருத்தலம், ஒரிஸ்வில், ஐக்கிய அமெரிக்கா
(National Shrine of the North American Martyrs, Auriesville, New York, United States)

நினைவுத் திருநாள்: அக்டோபர் 19

புனிதர் ஐசாக் ஜோகுஸ், வடக்கு அமெரிக்காவின் “இரோகுயிஸ்” (Iroquois), “ஹுரன்” (Huron) மற்றும் பிற பூர்வீக மக்கள் மத்தியில் பயணித்து, பணியாற்றிய இயேசுசபை குருவும் (Jesuit Priest), மறைப்பணியாளரும், மறைசாட்சியுமாவார். இவர், 1646ம் ஆண்டு, “மோஹாவ்க்” நதியின் (Mohawk River) தெற்கேயுள்ள “ஒஸ்செர்னேனோன்” (Ossernenon) கிராமத்தில் “மோஹாவ்க்” (Mohawk) குடியினரால் மறைசாட்சியாக கொல்லப்பட்டார்.

புனிதர் “ஐசாக் ஜோகுஸ்” (Saint Isaac Jogues), புனிதர் “ரெனி கௌபில்” (Saint René Goupil), புனிதர் “ஜீன் டி லலென்ட்” (Saint Jean de Lalande) மற்றும் ஐந்து பிற “பொது நிலையினர்” (Laymen) மற்றும் இயேசு சபை குருக்கள் (Jesuit Priests) உள்ளிட்ட எட்டு மறைப்பணியாளர்கள் அனைவரும் ரோமன் கத்தோலிக்க திருச்சபையால் கி.பி. 1930ம் ஆண்டு, புனிதர்களாக அருட்பொழிவு செய்விக்கப்பட்டனர். வடக்கு அமெரிக்க கண்டத்தின் (North American continent) முதல் மறைசாட்சியர்களான இவர்களனைவரும் “வட அமெரிக்க மறைசாட்சியர்” (The North American Martyrs) என்று அழைக்கப்படுகின்றனர். இவர்களை கௌரவிக்கும் விதமாக, அக்காலத்தைய “மோஹாவ்க்” (Mohawk) குடியினரின் “ஒஸ்செர்னேனோன்” (Ossernenon) கிராமம் இருந்த இடம் என்று நம்பப்படும் “நியூ யார்க்” (New York) நகரின் “ஓரிஸ்வில்” (Auriesville) எனப்படும் இடத்தில் ஒரு திருத்தலம் கட்டப்பட்டுள்ளது. இவர்களது நினைவுத் திருநாள் கனடா நாட்டில் செப்டம்பர் மாதம் 26ம் தேதியும், அமெரிக்காவில் அக்டோபர் மாதம், 19ம் தேதியும் கொண்டாடப்படுகிறது.

கி.பி. 1607ம் ஆண்டு, ஜனவரி மாதம், பத்தாம் தேதி, ஃபிரான்ஸ் நாட்டின் வடக்கு மத்திய பிராந்தியமான “ஓர்லியான்ஸ்” (Orléans) எனுமிடத்தில் பிறந்த ஐசாக், தமது பத்து வயதுவரை வீட்டிலிருந்தே கல்வி கற்றார். கி.பி. 1624ம் ஆண்டு, தமது பதினேழு வயதில், வடக்கு ஃபிரான்ஸின் “ரோவன்” (Rouen) எனுமிடத்திலுள்ள இயேசு சபை துறவு மடத்தில் புகுநிலை துறவியாக (Jesuit Novitiate) இணைந்த இவர், கி.பி. 1629ம் ஆண்டிலிருந்து, ரோவன் நகரிலுள்ள இளைஞர்களுக்கு மனிதநேயம் (Humanities) கற்பிக்க சென்றார். கி.பி. 1633ம் ஆண்டு, பாரிஸ் நகரின் “கிலேர்மொன்ட்” (Collège de Clermont) கல்லூரியில் இறையியல் (Theology) கற்க அனுப்பப்பட்ட இவர், கி.பி. 1636ம் ஆண்டு, “கிலேர்மொன்ட்” நகரிலேயே குருத்துவ அருட்பொழிவு செய்விக்கப்பட்டார்.

ஆரம்பத்திலிருந்தே கனடாவிலுள்ள புதிய ஃபிரான்ஸின் (New France) பழங்குடி மக்களான “ஹூரன் இந்தியர்கள்” (Huron Indians) மத்தியில் மறைப்பணியாற்றும் ஆவலிலிருந்த ஐசாக், குருத்துவம் பெற்ற அதே கி.பி. 1636ம் ஆண்டு, தமது மறைப்பணி தோழர்களுடன் அருட்தந்தை “ஜீன் டி ப்ரெபியுஃப்” (Jean de Brébeuf) தலைமையில் ஏப்ரல் கி.பி. 1636ல் தமது கடல் பயணத்தைத் தொடங்கினார். எட்டு வார கடல் பயணத்தின் பின்னர், ஜூலை மாதம் இரண்டாம் தேதி “கியுபெக்” (Quebec) சென்றடைந்தார். மறைப்பணியாளர்களனைவரும் ஹூரன்ஸ் இன மக்களின் சடங்குகளுக்கும், பழக்கவழக்கங்களுக்கும், உணவு வகைகளுக்கும் தங்களைத் தயார்படுத்திக்கொண்டார்கள். முதலில் இவர்களை மறுத்த பழங்குடி மக்கள், மெதுவாக அவர்களை ஏற்றுக்கொள்ள ஆரம்பித்தனர்.

“ஹூரன்ஸ்” (Hurons) இன மக்கள், எப்போதும் தொடர்ந்து “இரோகுயிஸ்” (Iroquois) மீது போர் தொடுத்தவண்ணமிருந்தனர். சில வருடங்களிலேயே “இரோகுயிஸ்” (Iroquois) இனத்தவரால் பிடிக்கப்பட்ட ஐசாக், பதின்மூன்று மாதகாலம் சிறையில் அடைக்கப்பட்டார். அவர் எழுதிய கடிதங்களும், பத்திரிகைகளும், அவரும் அவரது தோழர்களும் கிராமம் கிராமமாக எங்ஙனம் இழுத்துச் செல்லப்பட்டனர் என்றும், எப்படியெல்லாம் அடித்து நொறுக்கப்பட்டனர் என்றும், சித்திரவதை செய்யப்பட்டனர் என்றும், அவர்கள் கிறிஸ்தவர்களாக மனம் மாற்றிய ஹூரன்ஸ் இன மக்களை அவர்கள் எவ்வாறெல்லாம் சிதைத்து கொல்கின்றனர் என்பதை பார்க்க வற்புறுத்தினர் என்றும் சொல்கின்றன.

ஒருநாள், எதிர்பாராத விதமாக, சில டச்சுக் காரர்கள் (Dutch) மூலமாக தப்பித்துச் செல்லும் சந்தர்ப்பம் ஐசக்குக்கு கிட்டியது. “இரோகுயிஸ்” (Iroquois) இனத்தவரால் ஏற்பட்ட காயங்களையும் தழும்புகளையும் தாங்கியபடி ஃபிரான்ஸ் திரும்பினார். அவரது கை விரல்கள் பல, வெட்டப்பட்டும், கடிக்கப்பட்டும், எரிக்கப்பட்டுமிருந்தன. சிதைந்த கைகளுடன் திருப்பலி நிறைவேற்ற, திருத்தந்தை எட்டாம் அர்பன் (Pope Urban VIII) ஐசக்குக்கு அனுமதியளித்தார். கிறிஸ்துவின் திரு இரத்தத்தை அருந்த கிறிஸ்துவின் மறைசாட்சியரை அனுமதிக்காவிடில், அது பெருத்த அவமானமாகும் என்றார்.

ஒரு நாயகனாக வீடு திரும்பிய அருட்தந்தை ஐசக், ஓய்வாக அமர்ந்து விட்டிருக்கலாம். அவரது பாதுகாப்பான வருகைக்காக கடவுளுக்கு நன்றி தெரிவித்த அவர், அவரது தாய்நாட்டில் அமைதியாக வாழ்ந்து, இறந்திருக்கலாம். ஆனால் அவர் கொண்டிருந்த பெரும் ஆர்வமானது, அவரது கனவுகளை நிறைவேற்றுவதற்காக மீண்டும் ஒருமுறை அவரை கொண்டு சென்றது. ஒரு சில மாதங்களிலேயே ஹூரன்களின் மத்தியில் அவர் தனது பயணத்தை மேற்கொண்டார்.

“இரோகுயிஸ்” (Iroquois) இனத்தவரின் பிரதேசமான “மொஹாவ்க்” (Mohawk) எனுமிடத்தில், கி.பி. 1645ம் ஆண்டு கையெழுத்தான சமாதான ஒப்பந்தம் கடைபிடிக்கப்படுவதை மேற்பார்வையிடுவதற்காக ஃபிரெஞ்ச் தூதர்களாக ஐசக் மற்றும் பொது நிலையினரான புனிதர் “ஜீன் டி லலென்ட்” (Saint Jean de Lalande) ஆகிய இருவரும் கி.பி. 1646ம் ஆண்டின் வசந்தகாலத்தில் வந்திருந்தனர். அவர்களிருவரும் “மொஹாவ்க்” போர்க்குழு ஒன்றினால் பிடிக்கப்பட்டனர். அருட்தந்தை ஐசாக், தலை வெட்டப்பட்டு கொல்லப்பட்டார். “ஜீன் டி லலென்ட்”, மறுநாள் “ஒஸ்செர்நேனன்” (Ossernenon) கிராமத்தில் கொல்லப்பட்டார். இருவரது உடல்களும் “மொஹாவ்க்” நதியில் (Mohawk Rive) எறியப்பட்டன.

† Saint of the Day †
(October 19)

✠ St. Isaac Jogues ✠

Priest, Missionary and Martyr:

Born: January 10, 1607
Orléans, Orléanais, Kingdom of France

Died: October 18, 1646 (Aged 39)
Ossernenon, Canada, New France

Venerated in: Catholic Church
(Canada and the United States)

Beatified: June 21, 1925
Pope Pius XI

Canonized: June 29, 1930
Pope Pius XI

Major shrine:
National Shrine of the North American Martyrs, Auriesville, New York, United States

Feast: October 19

Saint Isaac Jogues was a missionary and martyr who travelled and worked among the Iroquois, Huron, and other Native populations in North America. He was the first European to name Lake George, calling it Lac du Saint Sacrement (Lake of the Blessed Sacrament). In 1646, Jogues was martyred by the Mohawk at their village of Ossernenon, south of the Mohawk River.

One of the eight North American Martyrs, St. Isaac Jogues, SJ, was inspired to become a missionary after reading The Jesuit Relations. 

Europe in the 17th century received its first detailed information of the expanding world through The Jesuit Relations, the record sent back by Jesuit missionaries from their distant outposts. 

As a Jesuit novice, Isaac Jogues read these enthralling letters from the missionaries in Ethiopia and the Indies. He was especially moved by the account of the martyrdom by the fire of Carlo Spinola, SJ, in Japan in 1622. Thereafter Isaac Jogues always carried Spinola’s picture with him. This also inspired Isaac’s own desire to be sent to the missions. After his ordination in 1636, Isaac Jogues was assigned to be a missionary to the native peoples of New France (Canada). 

Isaac entered a world of perpetual conflict and a few of the amenities of Europe. Especially violent were the wars between the Hurons and the Mohawks. In the eight years of his initial ministry, Jogues spent six with the Hurons and had considerable success with many conversions. Then in 1642 he was captured by the Mohawks and was brutally tortured. Jogues lost two of his fingers in the torture and spent 13 months as a slave. Isaac Jogues was finally ransomed by Dutch merchants in Albany. He was given passage to New Amsterdam (New York) and then to France, where he landed absolutely destitute. 

Through The Jesuit Relations, all of France had heard of Jogues’ capture. Expecting to hear of his death, France instead witnessed the return of a living martyr. He was courted by royalty and could have remained and continued to be celebrated as a hero. But Jogues’ principal concern was to receive canonical permission to celebrate the Mass in spite of his mutilated hands. This permission was given to him by Pope Urban VIII. At his first opportunity, Jogues returned to continue his work with the Mohawks. 

At first Isaac Jogues was able to establish peaceful relations with the Mohawks; the Mohawks, however, considered him a sorcerer and blamed Jogues for the famine and disease that struck their homes in 1646. They invited Jogues to visit them and crushed his skull with a tomahawk as he entered the chief’s cabin. His head and that of his companion John de la Lande were placed on poles facing the trails on which they came. 

Isaac Jogues was canonized as one of the eight North American Martyrs in 1930.

No comments:

Post a Comment