புனிதர்களை பெயர் வரிசையில் தேட

Translate

19 October 2020

சிலுவையின் புனித பவுல் (ஆதீன தலைவர், குரு)("கடவுள் சேவை புரிய நல்ல சொற்களும், நல்ல எண்ணங்களும் மட்டும் போதாது. இதனோடு, உழைப்பு, உற்சாகம் மற்றும் தைரியம் தேவை" - சிலுவையின் புனித பவுல்)நினைவுத் திருவிழா : 19 அக்டோபர்

இன்றைய புனிதர் : 
(19-10-2020)

சிலுவையின் புனித பவுல் (ஆதீன தலைவர், குரு)
("கடவுள் சேவை புரிய நல்ல சொற்களும், நல்ல எண்ணங்களும் மட்டும் போதாது. இதனோடு, உழைப்பு, உற்சாகம் மற்றும் தைரியம் தேவை" - சிலுவையின் புனித பவுல்)

நினைவுத் திருவிழா : 19 அக்டோபர் (விறுப்ப நிணைவு)

இயற்பெயர்: பவுலோ பிரான்செஸ்கோ தேனி
பிறப்பு: ஜனவரி 3, 1694 ஒ, டாவா, பியத்மாந்து,இத்தாலி

இறப்பு: அக்டோபர் 18, 1775(அகவை 81) சான்தா கோவானி இ பாலோ பசிலிக்கா, உரோமை

அருளாளர் பட்டம்: 1 மே 1853, உரோமை(ஒன்பதாம் பயஸ்)

புனிதர் பட்டம்: 29 ஜூன் 1867, உரோமை(ஒன்பதாம் பயஸ்)

சிலுவையின் புனித பவுல் (சனவரி 03 1694 - அக்டோபர் 18 1775) ஒரு இத்தாலிய கிறித்தவ புனிதரும், திருப்பாடுகள் சபையின் நிறுவனரும் ஆவார்.

சிலுவையின் புனித பவுலின் இயற்பெயர் பவுலோ பிரான்செஸ்கோ தேனி ஆகும். இவர் சனவரி 03, 1694அன்று பியத்மாந்து, இத்தாலியில் பிறந்தார். ஒரு பணக்கார வியபாரியின் மகனான இவர் தனது 19ஆம் அகவையில் மனம்மாற்றம் பெற்று பக்தி நிறைந்த வாழ்க்கை வாழலானார். பிரான்சிசு டி சேல்சின்புத்தகங்களும், கப்புச்சின் சபைக் குருக்களின் அன்பு குறித்தான போதனைகளும் இவரிடம் அதிக தாக்கத்தை ஏற்படுத்தின. இவர் தனது வாழ்நாளெல்லாம் கடவுளை இயேசுவின் பாடுகளின் மூலம் எளிதில் காணலாம் என்று நம்பினார்.
தனது 26ஆம் வயதில் தொடர்ச்சியான செப அனுபவங்களின் மூலம் ஒரு புதிய துறவற சபையினைத் துவங்க இறை அழைத்தலை உணர்ந்தார். இவ்வாறு இவர் ஆரம்பித்ததே திருப்பாடுகள் சபை. இச்சபையினரின் அங்கியின் மேல் இயேசுவின் இருதயமும், "இயேசு கிறித்துவின் பாடுகள்" என்னும் வசனமும் பொறிக்கப்பட்டிருக்கும். இந்த சபைக்கு இவர் அளித்த பெயர், இயேசுவின் வறியோர், ஆனாலும் திருப்பாடுகளுக்கு இச்சபை அளித்த முக்கியத்துவத்தினால் இவர்கள் பின் நாட்களில் திருப்பாடுகளின் சபையோர் என அறியப்பட்டனர்.
இவரின் ஆயரின் தூண்டுதலால், இவர் மட்டுமே இச்சபையில் இருக்கும் போதே இவர் இச்சபையின் சட்ட நூலினை நாற்பது நாள் தியானத்துக்குப் பின் 1720இல் இயற்றினார். இச்சபையில் இவரின் சகோதரரே இவருக்குப் பின் சேர்ந்த முதல் உறுப்பினர் ஆவார். இதற்குப் பின் இச்சபை மெதுவாக வளரத்துவங்கியது. இவர் தனது வாழ்நாளில் பிறரின் ஆன்ம வழிகாட்டலுக்கு எழுதிய இரண்டாயிரத்துக்கும் மேலான கடிதங்கள் இப்போதும் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இவர் 18 அக்டோபர் 1775இல் இறந்தார். அச்சமயத்தில் இவரின் சபையில் 180 குருக்கள் மற்றும் அருட்சகோதரர்கள் இருந்தனர்.
இவருக்கு 1 அக்டோபர் 1852இல் முக்திபேறு பட்டமும், 29 ஜூன் 1867இல் புனிதர் பட்டமும் அளிக்கப்பட்டது. இவரின் இறந்தநாளான 18 அக்டோபர், நற்செய்தியாளர் லூக்காவின் விழாவாக இருப்பதால் இவரின் விழாநாள் 19 அக்டோபர் ஆகும்.

---JDH---தெய்வீக குணமளிக்கும் இயேசு /திண்டுக்கல்.
Saint of the Day: (19-10-2020)

Saint Paul of the Cross

The son of Luca Daniel and Anna Maria Daneo; he was the second of sixteen children born to the couple, ten of whom died in infancy. Paolo was baptized at the age of 3 days, and was raised in a pious family; his father, a merchant, was known for his deep faith, and a brother and close uncle were both priests. Paolo was known as a pious child who attended daily Mass, but he wasn't confirmed until he was 25 years old, a common practice of the time. In 1701 the family moved from Ovada to Castellazo Bormida, and Paolo received his early education at a boy's school run by a priest in Cremolino, Italy. In 1713 he had what became known as a "conversion" experience, which convinced Paolo that he was called to religious life. He declined an arranged marriage, and when he received an inheritance from a rich uncle, a priest, he kept only the man's breviary and refused the wealth.

In 1715 he volunteered for the military service in the crusade against the Turks, but his call to religious life led him to return home in 1716. In 1720 he received a series of visions that confirmed his call, including one where he saw himself in what would become the habit of the Passionists. With his bishop's support, he went on a 40 day retreat and wrote the rule of a potential community, which he called The Poor of Jesus. His brother, Giovanni-Battista, became the second member of the community, and the two moved to Rome, Italy to help found a hospital and seek other members to help them care for the patients and staff.

While there, the Daneo brothers studied theology, and on 7 June 1727 were ordained to the priesthood by Pope Benedict XIII in Saint Peter's Basilica. The brothers became travelling preachers, leading parish missions around Italy. Father Paul was a preacher of such power that hardened soldiers and bandits were seen to weep at his words. He was known as a great spiritual teacher; over 2,000 of his letters survive, most devoted to spiritual direction.

Due to the ascetic lifestyle of a Passionist, the group attracted few members to begin with, but they were a dedicated lot, spending at least three hours in prayer each day. They established their first Retreat, as Passionist monasteries are known, in 1737 on Monte Argentario on the west coast of Italy. Pope Benedict XIV approved the Passionist Rule on 15 May 1741; Pope Clement XIV approved the congregation in 1769. Father Paul reluctantly served as the congregation's first superior-general, and by the time of his death there were 12 Retreats and 180 members. The Passionist fathers, brothers and sisters continue their good work around the world today.

Born : 
3 January 1694 at Ovada, Piedmont (northern Italy) as Paolo Francesco Danei

Died : 
18 October 1775 at Rome, Italy of natural causes
• interred in the chapel of the Basilica dei Santi Giovanni e Paolo in Rome

Beatified : 
1 October 1852 by Blessed Pope Pius IX

Canonized :
29 June 1867 by Blessed Pope Pius IX

Patronage : 
Castellazo Bormida, Italy
• Ovada, Italy

---JDH---Jesus the Divine Healer---

No comments:

Post a Comment