புனிதர்களை பெயர் வரிசையில் தேட

Translate

21 October 2020

புனித_வென்டலின் (554-617)அக்டோபர் 21

புனித_வென்டலின் (554-617)

அக்டோபர் 21

இவர் ஸ்காட்லாந்து நாட்டின் இளவரசர். இவரது தந்தை ஸ்காட்லாந்தை ஆண்டு வந்த ஃபோர்சதோ, தாய் அயர்லினா என்பவர் ஆவர்.
தனக்கு மறைக்கல்வி கற்றுக்கொடுத்த ஆயர் வழியாக இறைவன்மீது மிகுந்த பற்றுக்கொண்டு வாழ்ந்த இவர், ஒருநாள் எல்லாவற்றையும் துறந்துவிட்டு, கால்நடையாகவே புனித நாடுகளுக்குச் சென்றார்‌. 

574 ஆம் ஆண்டு உரோமைக்கு வந்த இவர், அங்கிருந்த திருத்தந்தை முதலாம் பெனடிக்டைச் சந்தித்து அவரிடம் ஆலோசனை கேட்டார். அவர் சொன்ன ஆலோசனை பேரில் இவர் ஒரு துறவியாக வாழத் தொடங்கினார்.

இதற்குப் பிறகு இவர் மக்கள் கொடுத்த உணவை உண்டு, அவர்கள் நடுவில் போதித்தும், இறைவேண்டல் செய்தும் வந்தார். இப்படிப்பட்ட நேரத்தில் ஒருவர் இவரிடம், "கையும் காலும் நன்றாகத்தானே இருக்கின்றன, பிறகு எதற்கு அடுத்தவரிடம் இரந்து உண்கிறாய்?" என்று கேட்டார். இதனால் இவர் ஒரு பெரிய பணக்காரரின் தோட்டத்தில் தோட்ட வேலைகளைச் செய்து, அதிலிருந்து கிடைத்த ஊதியத்தில் உண்டு வந்தார்.

நாள்கள் மெல்ல நகர்கையில் தோட்ட வேலையிலேயே முழு நாளும் கழிந்ததால், இவரால் இறைவனிடம் வேண்டுவதற்கு நேரம் ஒதுக்க முடியாமல் போனது. இதனால் இவர் தோட்ட வேலையை விட்டுவிட்டு, ஒருவருடைய ஆடுகளை மேய்க்கத் தொடங்கினார். இப்பொழுது இவருக்கு இறைவனிடம் வேண்டுவதற்கு மிகுதியான நேரம் கிடைத்தது.

இவ்வாறு இவர் தான் செய்த இறைவேண்டலின் மூலம் இறைவனோடு ஒன்றித்திருக்க முடிந்ததால், இறைவார்த்தையை மக்களுக்கு நல்ல முறையில் எடுத்துரைக்க முடிந்தது. பலரும் இவருடைய போதனையைக் கேட்க ஆவலோடு வந்தார்.

இப்படி இறைவேண்டலுக்கும் இறைவார்த்தையை எடுத்துரைப்பதற்கும் சிறந்ததோர் எடுத்துக்காட்டாக விளங்கிய இவர் 617 ஆம் ஆண்டு இறையடி சேர்ந்தார்.

Holy shepherd and possible hermit, also called Wendelinus. According to tradition, Wendolinus came from Ireland. After years as a shepherd recluse, he may have served as abbot of a monastery near Trier. He has long been venerated at St. Wendel, in Germany.

No comments:

Post a Comment