புனிதர்களை பெயர் வரிசையில் தேட

Translate

21 October 2020

✠ புனிதர் லாரா ✠(St. Laura of Saint Catherine of Siena)அக்டோபர் 21

† இன்றைய புனிதர் †
(அக்டோபர் 21)

✠ புனிதர் லாரா ✠
(St. Laura of Saint Catherine of Siena)

மறைப்பணியாளர்/ நிறுவனர்:
(Religious and Founder)
பிறப்பு: மே 26, 1874
ஜெரிகோ, அன்டியோகுயியா, ஐக்கிய கொலம்பியாவின் மாகாணங்கள்
(Jericó, Antioquía, United States of Colombia)

இறப்பு: அக்டோபர் 21, 1949 (வயது 75)
பெலென்சிடோ, மெடெல்லின், அன்டியோகுயியா, கொலம்பியா
(Belencito, Medellín, Antioquía, Colombia)

ஏற்கும் சமயம்:
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)

முக்திபேறு பட்டம்: ஏப்ரல் 25, 2004
திருத்தந்தை ஜான் பவுல்
(Pope John Paul II)

புனிதர் பட்டம்: மே 12, 2013
திருத்தந்தை ஃபிரான்சிஸ்
(Pope Francis)

நினைவுத் திருநாள்: அக்டோபர் 21

பாதுகாவல்:
இன பாகுபாடு காரணமாக பாதிக்கப்பட்டவர்கள்
அனாதைகள்
மரியாவின் மாசற்ற இருதயம் சபை (Congregation of Missionary Sisters of Immaculate Mary)
புனித சியன்னா நகர கேதரீனாவின் மறைபணியாளர் சகோதரிகள் சபை (Congregation of  Saint Catherine of Siena)

புனிதர் சியன்னா நகர கத்ரீனாவின் லாரா, ஒரு கத்தோலிக்க அருட்சகோதரி ஆவார். 1914ம் ஆண்டு, இவர் மரியாவின் மாசற்ற இதயம் (Congregation of Missionary Sisters of Immaculate Mary), மற்றும் புனித சியன்னா நகர கேதரீனாவின் மறைபணியாளர் சகோதரிகள் (Congregation of  Saint Catherine of Siena) என்னும் துறவற சபைகளை நிறுவினார். இவர் பழங்குடி இனத்தவர்களின் உரிமைக்காக பாடுபட்டார். தென் அமெரிக்க பெண்களுக்கு இவர் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக கருதப்படுகின்றார். 

“மரிய லாரா டி ஜீசஸ் மொன்டோயா யி உபெகுயி” (María Laura de Jesús Montoya Upegui) எனும் இயற்பெயர் கொண்ட இவர், கொலொம்பியாவின் (Colombia) “ஜெரிகோ” (Jericó) நகரில் பிறந்தார். இவரது தந்தையாரின் பெயர், "ஜுவான் டி லா க்ரூஸ் மோன்டோயா" (Juan de la Cruz Montoya) ஆகும். தாயாரின் பெயர், "டோலோரெஸ் ஊபேகுய்" (Dolores Upegui) ஆகும். இவரது பெற்றோருக்குப் பிறந்த மூன்று குழந்தைகளில் இவர் இரண்டாம் குழந்தை ஆவார்.

கி.பி. 1876ம் ஆண்டு நடந்த கொலம்பிய உள்நாட்டுப் (Colombian Civil War) போரின்போது, அவரது தந்தை கொல்லப்பட்டார். அதன் விளைவாக குடும்பத்தினர் ஏழ்மை நிலைக்குத் தள்ளப்பட்டனர். இதன் காரணமாக அவர் தாய்வழி தாத்தா பாட்டியுடன் வாழ அனுப்பப்பட்டார். கி.பி. 1881ம் ஆண்டு, நிலையற்ற பொருளாதார நிலை காரணமாக, அருட்சகோதரியான அவருடைய சித்தி "மரியா டி ஜீஸஸ் உபேகுய்" (María de Jesús Upegui) நிர்வகித்து வந்த அனாதை இல்லத்திற்கு அனுப்பப்பட்டார்.

கி.பி. 1890ம் ஆண்டு, தமது பதினாறு வயதில், ஆசிரியர் பயிற்சி பள்ளியில் சேர்த்து விடப்பட்டார். "அமால்ஃபி" (Amalfi) மற்றும் "மெடேல்லின்" (Medellín) ஆகிய நகரங்களில் கல்வி கற்றார். கி.பி. 1886ம் ஆண்டு, நோயுற்ற அத்தை ஒருவரைப் பராமரிப்பதற்காக அவரது பண்ணையொன்றில் வந்து வசிக்க ஆரம்பித்தார். அங்கேதான், தாம் ஒரு மறைப்பணியாளராக வேண்டிய விருப்பம் இவருக்கு தோன்ற ஆரம்பித்தது. கி.பி. 1893ம் ஆண்டு, மொண்டோயோ, ஆசிரியர் பயிற்சி பட்டம் பெற்றார்.

கி.பி. 1908ம் ஆண்டு, அவர் “உராபா” (Uraba) மற்றும் “சரார்” (Sarare) பிராந்தியங்களில் உள்ள மக்களுடன் இணைந்து பணியாற்றினார், அங்கே, "இந்தியர்களின் படைப்புகள்" (Works of the Indians) எனும் அமைப்பு நிறுவப்பட்டது. மொண்டோயோ, கார்மேல் சபை கன்னியாஸ்திரியாக ஆக விரும்பினார். ஆனால், கிறிஸ்துவின் அன்பை இதுவரை சந்தித்திராத மக்களுக்கு கிறிஸ்துவின் நற்செய்தியை அறிவிக்கும் ஆசையும் ஆர்வமும் அவருள் எழுந்ததை உணர்ந்தார். மொண்டோயோ, தற்போதுள்ள இனப் பாகுபாடுகளை நீக்கி, கிறிஸ்துவின் அன்பையும் போதனைகளையும் அவர்களிடம் கொண்டு வர தம்மையே அர்ப்பணிக்க விரும்பினார்.

கி.பி. 1917ம் ஆண்டு, மே மாதம், 14ம் நாளன்று, “மரியாளின் மாசற்ற இருதயம் சபை” (Congregation of Missionary Sisters of Immaculate Mary) மற்றும் “புனித சியன்னா நகர கேதரீனாவின் மறைபணியாளர் சகோதரிகள் சபை” (Congregation of  Saint Catherine of Siena) ஆகிய இரண்டு சபைகளை நிறுவினார். நான்கு சக பெண்களுடன் “மெடல்லின்” (Medellín) நகரை விட்டு கிளம்பி, “டபெய்பா” (Dabeiba) நகரில் ஆதிவாசி இந்தியர்களுடன் வாழ சென்றார்.

இவர்களது புதிய சபைகளுக்கு “சாண்டா ஃபே டி அன்டோனியா” (Bishop of Santa Fe de Antioquia) மறைமாவட்ட ஆயரின் ஆதரவு இருந்தபோதிலும் பிற கிறிஸ்தவ குழுக்களின் விமர்சனங்களுக்கு உள்ளானது.

நீண்டகாலம் நோயால் பாதிக்கப்பட்டிருந்த மோண்டோயா, 1949ம் ஆண்டு, அக்டோபர் மாதம், 21ம் தேதியன்று, கொலம்பியாவில் உள்ள “மெடல்லின்” (Medellín) நகரில் இறந்தார். நோய் காரணமாக, இவரது வாழ்க்கையின் கடைசி பத்து வருடங்கள், சக்கர நாற்காலியிலேயே கழிந்தது. தற்போது அவரது சபைகள், மொத்தம் பத்தொன்பது அமெரிக்கா, ஆப்பிரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் செயல்படுகிறது.

திருத்தந்தை இரண்டாம் ஜான் பவுல் 2004ம் ஆண்டு, இவருக்கு அருளாளர் பட்டம் அளித்தார். 2013ம் ஆண்டு, மே மாதம், 12ம் நாளன்று, திருத்தந்தை ஃபிரான்சிஸ் இவருக்கு புனிதர் பட்டம் அளித்தார்.
† Saint of the Day †
(October 21)

✠ St. Laura of Saint Catherine of Siena ✠

Religious and Founder:

Born: May 26, 1874
Jericó, Antioquía, United States of Colombia

Died: October 21, 1949 (Aged 75)
Belencito, Medellín, Antioquía, Colombia

Venerated in: Roman Catholic Church

Beatified: April 25, 2004
Pope John Paul II

Canonized: May 12, 2013
Pope Francis

Feast: October 21

Patronage:
People suffering from racial discrimination
Orphans
Congregation of Missionary Sisters of Immaculate Mary and Saint Catherine of Siena

Saint Laura of Saint Catherine of Siena born María Laura de Jesús Montoya Upegui - was a Colombian Roman Catholic professed religious and the founder of the Congregation of the Missionary Sisters of the Immaculate Virgin Mary and Saint Catherine of Siena (1914). She was well known for her work with Indigenous peoples and for acting as a strong role model for South American girls.

Laura Montoya Upegui was born on 26 May 1874 in Jericó, Antioquia, Colombia, the second of three children to Juan de la Crux Montoya and Dolores Upegui.

When Laura was only 2 years old, her father was killed defending his Country, and the family was left in extreme poverty after all their goods were confiscated. At such a time of deep misery and loss, Laura's mother gave an example of Christian forgiveness and fortitude that would remain impressed in her young daughter's mind and heart forever.

Childhood suffering, divine help:
Following her father's death, Laura was sent to live with her grandmother. She suffered greatly from misunderstandings and the lack of affection, feeling she had been left "orphaned". However, she accepted with love the sacrifices and loneliness she experienced and sought refuge in God.

As she grew older, she was especially sustained by meditation on Sacred Scripture and the strength she received from the Eucharist.

When Laura was 16, her mother decided that her daughter needed to help the family in its financial difficulties and told her to apply to become a teacher. Although Laura was culturally and academically "ignorant", having grown up without a formal education, she asked to enter the "Normale de Institutoras" of Medellín to receive training to become an elementary school teacher. She was accepted and stood out for her high marks among the students.

Called to "teach Christ':
Laura began teaching in different parts of Antioquia. She did not limit herself to educating the students simply in academic knowledge but sought to diffuse Gospel teaching and values. She also felt called to the religious life, her heart set on God alone, and dreamed of one day becoming a cloistered Carmelite nun; at the same time, though, she felt growing within her the desire to spread the Gospel to the farthest corners of the earth, to those who had never met Jesus Christ. She was ready to renounce her own "dream" of Carmel to be open to God's project if his will was otherwise.

"An Indian with the Indians':
At one time during her teaching career, Laura felt decidedly drawn to helping the Indian population in South America and wished to insert herself into their culture, to "become an Indian with the Indians to win them all for Christ". Recognizing their dignity as human beings in an epoch when they were considered by many as "wild beasts", Laura wanted to destroy this racial discrimination and to personally sacrifice herself in order to bring them Christ's love and teaching.

On 14 May 1914, she left Medellín together with four other young women and headed to Dabeiba to live among the native Indians. This new religious family, assisted by the Bishop of Santa Fe de Antioquia and known as the "Missionaries of Mary Immaculate and St Catherine of Siena", was thought by some to be nothing more than a family of "religious goats", who were heading off into the wilderness to give the "beasts" a living Gospel catechism.

Laura, however, cared little for public opinion, even if some of the comments made came right from within the Christian community itself.

Pedagogy of love:
Mother Laura composed for her "daughters" a directory and other writings (her Autobiography among them) to help them understand better their call to serve God among the Indians and to live a balance between apostolic and contemplative life. She taught by example the "pedagogy of love" as the only way to teach the Indians, the way which allowed access into their heart and culture to bring them, Jesus Christ.

Mother Laura died on 21 October 1949 in Medellín, after a long and painful illness. The last nine years of her life were lived in a wheelchair, where she continued to teach by example, word and writing.

Today her Missionary Sisters work in 19 countries throughout America, Africa and Europe.

No comments:

Post a Comment