† இன்றைய புனிதர் †
(அக்டோபர் 24)
✠ புனிதர் அந்தோனி மரிய கிளாரட் ✠
(St. Anthony Mary Claret)
பேராயர், நிறுவனர்:
(Archbishop and Founder)
பிறப்பு: டிசம்பர் 23, 1807
சல்லேன்ட், பார்சிலோனா, ஸ்பெயின்
(Sallent, Barcelona, Spain)
இறப்பு: அக்டோபர் 24, 1870 (வயது 62)
ஃபொன்ட், நர்பொன், ஃபிரான்ஸ்
(Fontfroide, Narbonne, France)
ஏற்கும் சமயம்:
ரோமன் கத்தோலிக்கத் திருச்சபை
(Roman Catholic Church)
அருளாளர் பட்டம்: ஃபெப்ரவரி 25, 1934
திருத்தந்தை பதினோராம் பயஸ்
(Pope Pius XI)
புனிதர் பட்டம்: மே 7, 1950
திருத்தந்தை பன்னிரண்டாம் பயஸ்
(Pope Pius XII)
முக்கிய திருத்தலங்கள்:
விச், ஸ்பெயின்
(Vic, Barcelona, Spain)
நினைவுத் திருவிழா: அக்டோபர் 24
பாதுகாவல்:
ஜவுளி வியாபாரிகள், நெசவுத் தொழிலாளி, சேமிப்புகள், கத்தோலிக்க அச்சகம், அமல மரியின் மறைப்போத மைந்தர் சபையினர், “கனரி தீவுகளின் மறைமாவட்டங்கள்” (Canary Islands), அமல மரியின் மறைப்போத மைந்தர் சபையின் மாணவர்கள், அமல மரியின் மறைப்போத மைந்தர் சபையின் கல்வியாளர்கள், அமல மரியின் மறைப்போத மைந்தர் சபையின் கல்வி நிறுவனங்கள், நிறுவனங்கள்.
புனிதர் அந்தோனி மரிய கிளாரட், ஸ்பெய்ன் நாட்டின் ரோமன் கத்தோலிக்க பேராயரும், மறை போதகரும், நற்செய்தி பணியாளரும், ஆவார். இவர், ஸ்பெயின் நாட்டின் அரசியான “இரண்டாம் இஸபெல்லாவின்” (Isabella II) ஒப்புரவாளருமாவார் (Confessor). இறையன்பை, முக்கியமாக ஏழைகளுக்கும் ஒடுக்கப்பட்டவர்களுக்கும் வெளிப்படுத்தியவர். கி.பி. 1849ம் ஆண்டு, ஜூலை மாதம், 16ம் நாள் அன்று “கிளரீஷியன்ஸ்” (Claretians) என்று அழைக்கப்படும் “மரியாளின் அமலோற்பவ திருஇருதயத்தின் மறைபோதக மைந்தர்கள்” (Missionary Sons of the Immaculate Heart of Mary) என்ற சபையை நிறுவினார்.
வாழ்க்கைச் சுருக்கம்:
புனித அந்தோனி மரிய கிளாரட், ஸ்பெயினின் “சல்லேன்ட்” (Sallent) நகரில் ஒரு கம்பளி உற்பத்தியாளருக்கு (Woollen manufacturer) மகனாகப் பிறந்தார். இவரது தந்தையின் பெயர், “ஜுவான்” (Juan) ஆகும். தாயாரின் பெயர், “ஜோசெஃபா கிளாரெட்” (Josefa Claret) ஆகும். தமது பெற்றோரின் பதினோரு குழந்தைகளில் ஐந்தாவது குழந்தையான இவர், தாம் பிறந்த கிராமத்திலேயே ஆரம்பக் கல்வியைக் கற்றார். தனது 12வது வயதில் நெசவுத் தொழிலைக் கற்றுக் கொண்டார். பதினெட்டு வயதில் தமது வர்த்தகத்தில் நிபுணத்துவம் பெறுவதற்காக பார்சிலோனா (Barcelona) சென்றார். 20 வயது வரை அங்கேயே தங்கியிருந்த அந்தோணி, தமது ஓய்வு நேரத்தில் இலத்தீன், (Latin) இலத்தீன், மற்றும் பிரெஞ்சு (French) மொழிகளைக் கற்று தேர்ச்சி பெற்றார். அத்துடன் சிற்பங்கள் செதுக்கும் (Engraving) பணியும் கற்றார்.
ஆன்மீக வாழ்க்கைக்கு தாம் அழைக்கப்படுவதை உணர்ந்த அந்தோணி, அதில் பெரிதும் நாட்டம் கொண்டவராய், பார்சிலோனாவை விட்டுப் புறப்பட்டார். “கார்தூசியன்” துறவியாவதற்கு முனைந்த இவர், இறுதியில் கி.பி. 1829ம் ஆண்டு, “விக்” (Vic) எனுமிடத்திலுள்ள மறைமாவட்ட குருத்துவ கல்லூரியில் சேர்ந்தார்.
கி.பி. 1835ம் ஆண்டு, ஜூன் மாதம், 13ம் தேதி, பதுவைப் புனிதர் அந்தோனியார் (St. Anthony of Padua) நினைவுத் திருவிழாவன்று குருத்துவ அருட்பொழிவு பெற்றார். தொடர்ந்து கி.பி. 1839 வரை இறையியல் கற்றுத் தேர்ந்தார். மறைபோதக பணியின்பால் கொண்ட ஆர்வத்தால் ரோம் பயணமானார். அங்கே, இயேசு சபை புகுமுக பயிற்சியில் (Jesuit novitiate) இணைந்தார். ஆனால் திடீரென நோயுற்ற காரணத்தால் அங்கிருந்து வெளியேறினார். பின்னர் ஸ்பெயின் திரும்பிய இவர், “விலட்று” மற்றும் கிரோனா” (Viladrau and Girona) ஆகிய இடங்களில் தமது மறைப்பணியாற்றினார்.
அவருடைய உயர் துறவியரால் திரும்ப அழைக்கப்பட்ட அந்தோனி, ஃபிரெஞ்ச் படையெடுப்பால் பாதிக்கப்பட்டிருந்த “கட்டலோனியா” (Catalonia) பிராந்தியங்களில் திருத்தூது பணிகளுக்காக அனுப்பப்பட்டார். கட்டலோனியா பிராந்தியம் முழுதும் மறைப்போதகப் பணிப் பயணங்களை கால்நடையாகவே மேற்கொண்டார். ஒரு மறை போதகர் “கேட்டலன்” (Catalan) மொழியில் சரளமாக சொற்பொழிவாற்றுகிறார் என்பதை அறிந்த மக்கள், தொலை தூர இடங்களிலிருந்து வந்து அவரது மறையுரைகளை கேட்டனர்.
ஊடகத்துறையின் முக்கியத்துவத்தை உணர்ந்த அவர் கி.பி. 1847ம் ஆண்டு ஒரு சில குருக்களோடு சேர்ந்து கத்தோலிக்க அச்சகம் ஒன்றை நிறுவினார். அவர் எண்ணில்லாத புத்தகங்களையும் துண்டுப் பிரசுரங்களையும் எழுதி வெளியிட்டார்.
கி.பி. 1848ம் ஆண்டு, ஸ்பெயினில் அரசியல் வன்முறைகள் அதிகரிக்க அதிகரிக்க மத குருக்களின் எதிரிகளால் கிளாரெட்டின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டது. அதனால் அவர் “கனரி தீவுகளுக்கு” (Canary Islands) அனுப்பப்பட்டார். அங்கே பதினைந்து மாதங்கள் தியானங்களைப் போதித்தார். கனேரிய தீவுகளில் அவரின் பணி சிறந்த பயனை அளித்தது. இருந்தும் அவர் ஸ்பெயினுக்கே மீண்டும் சென்று தனது பணியைத் தொடர விரும்பினார்.
மீண்டும் ஸ்பெயின் திரும்பிய கிளரெட், 1949ம் ஆண்டு, ஜூலை மாதம், 16ம் நாள், கார்மேல் அன்னையின் திருவிழா தினத்தன்று, ஐந்து குருக்களோடு சேர்ந்து, இன்று “கிளரீஷியன்ஸ்” (Claretians) என்று அழைக்கப்படும் “மரியாளின் அமலோற்பவ திருஇருதயத்தின் மறைபோதக மைந்தர்கள்” (Missionary Sons of the Immaculate Heart of Mary) என்ற சபையை நிறுவினார். 1865ம் ஆண்டு, டிசம்பர் மாதம், 22ம் நாள், திருத்தந்தை “ஒன்பதாம் பயஸ்” (Pope Pius IX) இச்சபைக்கு அங்கீகாரமளித்தார்.
“பார்சிலோனாவில்” (Barcelona) மிகப் பெரும் சமய நூலகம் ஒன்றை நிறுவினார். “Librería Religiosa” என்று அழைக்கப்பட்ட இந்நூலகம், இன்று “கிளாரட் நூலகம்” (Llibreria Claret) என அழைக்கப்படுகிறது. இதன் மூலம் பழைய கத்தோலிக்க நூல்கள் பலவற்றை மிகக் குறைந்த விலையில் அச்சிட்டு வெளியிட்டார்.
பல ஆண்டுகள் கட்டலோனியாப் பகுதி (Cathlonia) எங்கும் சென்று மறைப்பணியாளராக பணியாற்றினார். கி.பி. 1849ம் ஆண்டு, ஸ்பெயின் அரசின் வேண்டுகோளின்படி, திருத்தந்தை ஒன்பதாம் பயஸ், இவரை “கியூபாவிலுள்ள” (Cuba) “சந்தியாகு” (Santiago) உயர்மறைமாவட்டத்தின் பேராயராக நியமித்தார்.
கி.பி. 1857ம் ஆண்டு, ஸ்பெயின் அரசி “இரண்டாம் இஸபெல்லாவின்” (Isabella II) ஒப்புரவு அருட்சாதன குருவாக நியமிக்கப்பட்டார். இவர் மக்களின் மீட்புக்காக மிக திறம்பட உழைத்தவர் என்னும் பாராட்டுக்கு உரியவரானார். ஸ்பெயின் நாட்டின் துறவுப்பள்ளியின் (Escorial monastic school) அதிபராக ஒன்பது வருடங்கள் பணியாற்றிய கிளாரெட், அங்கே ஒரு அறிவியல் ஆய்வுக்கூடம், இயற்கை வரலாற்றின் அருங்காட்சியகம், ஒரு வாசகசாலை, கல்லூரிகள் மற்றும் சங்கீத பள்ளிகள் ஆகியவற்றை நிறுவினார்.
கி.பி. 1868ம் வருடம், அங்கே நடந்த ஒரு புதிய புரட்சி, அரசி இரண்டாம் இஸபெல்லாவின் ஆட்சியை கவிழ்த்தது. அரசியும் அவரது குடும்பத்தினரும் நாடு கடத்தப்பட்டனர். கிளாரேட்டின் வாழ்க்கையும் ஆபத்துக்குள்ளானது. அவரும் அரசியின் குடும்பத்துடன் இணைந்து ஃபிரான்ஸ் சென்றார். இது, பாரிஸ் நகரில் மறை போதனைகளையும் நற்செய்திகளையும் பிரசங்கிக்க அவருக்கு ஒரு நல்ல சந்தர்ப்பமாக அமைந்தது. சிறிது காலம் அங்கேயே இருந்த கிளாரெட், ரோம் சென்றார்.
ஸ்பெயின் நாட்டிற்கு திரும்ப வந்தபோது, தொடர்ந்து திருச்சபைக்காக பல துன்பங்களை பொறுமையுடன் ஏற்றார். கி.பி. 1869ம் ஆண்டு, இவர் முதலாம் வத்திக்கான் பொதுச்சங்க கூட்டத்திற்கு செல்லும்போது இறந்தார். இவரின் உடல் ஸ்பெயின் நாட்டில் உள்ள “விக்” (Vic) என்ற ஊரிலுள்ள பேராலயத்தில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.
Saint of the Day: (24-10-2020)
Saint Anthony Mary Claret
Saint Name: St Anthony Mary Claret
Place: Sallent, Barcelona, Spain
Birth: December 23, 1807
Death: October 24, 1870
Feast: October 24
St Anthony Mary Claret who was born on December 23, 1807 was a Spanish Roman Catholic archbishop and missionary, and was confessor of Isabella II of Spain. He founded the congregation of Missionary Sons of the Immaculate Heart of Mary, commonly called the Claretians.
Antoni Maria Claret i Clarà was born in Sallent, in the county of Bages in the Province of Barcelona, on December 23, 1807, the fifth of the eleven children of Juan and Josefa Claret. His father was a woollen manufacturer. As a child he enjoyed pilgrimages to the nearby Shrine of Our Lady of Fussimanya.
Claret received an elementary education in his native village, and at the age of twelve became a weaver. At the age of eighteen, he went to Barcelona to specialize in his trade, and remained there until he was 20 years old. Meanwhile, he devoted his spare time to study and became proficient in Latin, French and engraving.
Recognizing a call to religious life, he left Barcelona. He wished to become a Carthusian monk but finally entered the diocesan seminary at Vic in 1829, and was ordained on June 13, 1835, on the feast of St. Anthony of Padua. He received a benefice in his native parish, where he continued to study theology until 1839; but as missionary work strongly appealed to him, he proceeded to Rome. There he entered the Jesuit novitiate but had to leave due to ill health. He then returned to Spain and exercised his pastoral ministry in Viladrau and Girona, attracting notice by his efforts on behalf of the poor. In an area despoiled by the Carlist civil war, he added the practice of rustic medicine to his other endeavors.
From 1850 to 1857, Anthony served as the archbishop of Santiago de Cuba, Cuba. He returned to the court of Queen Isabella II as confessor, and went into exile with her in 1868. In 1869 and 1870, Anthony participated in the First Vatican Council. He died in the Cistercian monastery of Fontfroide in southern France on October 24, 1870. Anthony Mary Claret had the gift of prophecy and performed many miracles. He was opposed by the liberal forces of Spain and Cuba and endured many trials.
In 1869 he went to Rome to prepare for the First Vatican Council. Owing to failing health he withdrew to Prada de Conflent in the French Pyrenees, where he was still harassed by his Spanish enemies; shortly afterwards he retired to the Cistercian abbey at Fontfroide, Narbonne, southern France, where he died on October 24, 1870, aged 62.
His remains were buried in the Catalan city of Vic, in the Country of Osona.
---JDH---Jesus the Divine Healer---
No comments:
Post a Comment