புனிதர்களை பெயர் வரிசையில் தேட

Translate

13 October 2020

✠ ஒப்புரவாளர் புனிதர் எட்வர்ட் ✠(St. Edward the Confessor) அக்டோபர் 13

† இன்றைய புனிதர் †
(அக்டோபர் 13)

✠ ஒப்புரவாளர் புனிதர் எட்வர்ட் ✠
(St. Edward the Confessor)

இங்கிலாந்து அரசர்/ ஒப்புரவாளர்:
(King of England, Confessor)
ஏற்கும் சமயம்:
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)
ஆங்கிலேய திருச்சபை
(Church of England)
கிழக்கு மரபுவழி திருச்சபை
(Eastern Orthodox Church)
ஆங்கிலிக்கன் சமூகம்
(Anglican Communion)

பிறப்பு: கி.பி. 1003
இஸ்லிப், ஆக்ஸ்ஃபோர்ட்ஷைர், இங்கிலாந்து
(Islip, Oxfordshire, England)

இறப்பு: ஜனவரி 5, 1066 (வயது 63)
லண்டன், இங்கிலாந்து
(London, England)

புனிதர் பட்டம்: ஃபெப்ரவரி 7, 1161
திருத்தந்தை மூன்றாம் அலெக்சாண்டர்
(Pope Alexander III)

பாதுகாவல்:
கடினமான திருமணங்கள், இங்கிலாந்து, இங்கிலாந்து அரச குடும்பம், அரசர்கள்

நினைவுத் திருநாள்: அக்டோபர் 13

புனிதர் எட்வர்ட், கி.பி. 1042ம் ஆண்டு முதல், 1066ம் ஆண்டுகளுக்கிடையே இங்கிலாந்து நாட்டை ஆண்ட "ஆங்கிலோ-சாக்ஸன்" (Anglo-Saxon kings of England) அரச வம்சத்தைச் சேர்ந்த கடைசி அரசராவார்.

இவர், "ஈதல்ரெட்” மற்றும் “எம்மா" (Ethelred the Unready and Emma of Normandy) ஆகியோரின் புதல்வராவார். ஈதல்ரெட்'டின் ஏழாவது புதல்வரான இவர், ஈதல்ரெட்'டின் இரண்டாவது மனைவியான எம்மா'வின் தலைமகனாவார். 

இங்கிலாந்து நாட்டில் அரசராக முடிசூட்டப்பட்ட இவரது ஆட்சியில் மக்கள் மகிழ்ச்சியாகவும் அமைதியாகவும் வாழ்ந்தார்கள். இவர் இளமையில் மிகவும் துன்பப்பட்டவர். இங்கிலாந்திலிருந்து நாடு கடத்தப்பட்டு ஃபிரான்ஸ் நாட்டிற்கு போய் நார்மண்டி மாகாணத்தில் சுமார் இருபத்தைந்து ஆண்டு காலம் வாழ்ந்தார்.

அரசரான போது இவருக்கு வயது 40. செபித்து பிற சிநேகச் செயல்கள் செய்வார். மக்களை சாந்தத்துடனும் நீதியுடனும் விவேகத்துடனும் ஆண்டு வந்தார். கைவிடப்பட்டு சந்நியாச மடங்கள் திரும்பவும் தொடங்கப்பட்டன. மக்களுக்கு நல்ல கல்விப் பயிற்சி அளிக்கப்பட்டது. நியாயமான ஒரு அரசரை எதிரிகள் தாக்கியபோது முதன்முறை இவர் உதவிக்குச் சென்றார் 23 ஆண்டுகளாக நாட்டை ஆண்டார். நாடு செழித்தோங்கியது. அநியாயமாக யாரும் தண்டிக்கப் பட்டதில்லை. தேவையற்ற வரிகளைத் தள்ளிவிட்டார். மக்கள் இவரை தெய்வமாக போற்றினார்கள். தம் நாட்டுக்கு வர இருந்த தீமைகளை இவர் முன்னறிவித்தார். "நாட்டில் தீமை அதிகரித்து நிரம்பி வழியும் போது கடவுள் கோபத்துடன் தீய சக்திகளை நம் நாட்டு மக்களிடையே அனுப்புவார். அவை மக்களை கடுமையாக தண்டித்து உபாதிக்கும். பச்சைக்கிளை தாய் மரத்திலிருந்து பிரிந்து மூன்று பர்லாங்கு தூரம் கொண்டு செல்லும், என்றாலும் இறுதியில் இறக்கம் நிறைந்த கடவுள் மரத்துடன் அதை இணைத்து விடுவார். பின் அது செழித்து ஓங்கி கனி தரும்" என்று அவர் முன்னறிவித்தது பின்னர் நிறைவேறலாயிற்று.

இவரது ஆட்சிக்காலத்தில், இங்கிலாந்தின் "ரோமநீஸ்க் திருச்சபையின்" (Romanesque church in England) "வெஸ்ட்மின்ஸ்டர் மடாலய"த்தின் (Westminster Abbey) கட்டுமானப் பணிகளின் மீது அதீத அக்கறை இருந்தது வெளிப்படையாக தெரிந்தது. கி.பி. 1042ம் ஆண்டு முதல், 1052ம் ஆண்டுகளுக்கிடையே, "அரச அடக்க தேவாலயமாக" தொடங்கப்பட்ட இதன் கட்டுமானப் பணிகள், இவரது மரணத்தின் பின்பே, கி.பி. சுமார் 1090ம் ஆண்டு, நிறைவடைந்தன.

எட்வர்ட், இங்கிலாந்து நாட்டை ஆண்ட "ஆங்கிலோ-சாக்ஸன்" (Anglo-Saxon) வம்சத்தின் ஒரே புனிதர் ஆவார்.

*SAINT OF THE DAY* 

Feast Day: October 13

*St. Edward*

King St. Edward was one of the best loved of all the English kings. He lived in the eleventh century. Because of enemies in his own country, he had to live in Normandy, France, from the time he was ten until he was forty. However, when he came back to rule, all the people welcomed him with great joy.

St. Edward was a tall, well-built man, but he was never healthy. Still he was able to rule his country well and keep peace most of the time. This was because he trusted in God and held firm when necessary. King Edward went to daily Mass. He was a gentle, kind man who never spoke sternly. To poor people and foreigners, he showed special charity. He also helped monks in every way he could. It was his justice to everyone and his love for God's Church that made St. Edward so popular with the English people. They would cheer him as he rode out of the castle.

Although he was a king with great power, St. Edward showed his honesty by the way he kept his word-to God and to people. While he was still living in Normandy, he had made a promise to God. He said that if his family would see better times, he would go on a pilgrimage to St. Peter's tomb in Rome. After he was made king, he wanted to keep his vow. But the nobles knew that there would be no one to keep the peace among the warlike people in the land. So, although they admired his devotion, they did not want him to go. The whole matter was brought to the pope, St. Leo IX. He decided that the king could stay home. He said that King Edward was to give to the poor the money he would have spent on the trip. He also was to build or repair a monastery in honor of St. Peter. Obediently, the king carried out the pope's decision. He died in 1066 and was buried in the marvelous monastery he had rebuilt. He was proclaimed a saint by Pope Alexander III in 1161.

No comments:

Post a Comment